ன்மிக அகிலம் மறக்கமுடியாத- மறக்கக்கூடாத ஒப்பற்ற திருநாமம்தான் கவிமாமணி பூவை செங்குட்டுவன் அவர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மை நிறைந்த நம்முடைய சமய சரித்திரம் காவியங்களாலும் இசைப் பாடல்களாலும் நிரம்பியது. இயற்றமிழ், நாடகத் தமிழைவிட இசைத்தமிழே செல்வாக்கு செலுத்துகிறது. இசைத் தமிழே உயிரோட்டமாக விளங்குகிறது.

Advertisment

தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்படுத்திய பக்கவிளைவுகளால் நமது மன ஆரோக்கியத்திற்கும் வாழ்வின் செம்மைச் சிறப்புக்கும் தேவையில்லாத செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம். குப்பைத் தொட்டிபோல நமது விழிகளிலும் இதயத்திலும் ஏராளமான செய்திகளும் விளம்பரங்களும் கொட்டப்படுகின்றன. ஆனால் தேவையான செய்திகளைத் தெரிந்துகொள்வதற்கும் தேடுவதற்கும் தெளிவும் தேர்ச்சியும் வேண்டும். விழிப்புணர்வும் வேண்டும்.

Advertisment

அமரர் பெருவிருந்தாகிவிட்டார் பண்ணிசைக் கவிஞர் பூவை செங்குட்டுவன். பாடல் உலகில் பட்டொளி வீசிப் பறந்தவருக்கு "ஓம் சரவணபவ' இதழின் சார்பாக அஞ்சலி செலுத்துகிறோம்.

"தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை
அன்னை தந்தையே அன்பின் எல்லை.'

Advertisment

இது பாடப் புத்தகத்தில் இடம்பெற வேண்டிய பாடல் அல்லவா! அழியாத செல்வமல்லவா! எம்.ஜி.ஆருக்காக அவர் எழுதிய புகழ் பெற்ற பாடலான "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை, பேரறிஞர் காட்டும் பாதை' என்ற பாடலில்கூட கோவில், கோபுரம், தெய்வம் போன்ற புனிதமான இறையம்சமுள்ள சொற்களையும் கருத்துகளையும் இசை யோடும் தமிழோடும் பின்னிப் பிணைந்து நெய்திருப்பார்.

"கோவில் என்றால் கோபுரம் காட்டும்
தெய்வம் உண்டு அங்கே
உள்ளம் என்றால் உயர்ந்து காட்டும்
எண்ணம் வேண்டும் இங்கே
பிறந்த நாடே சிறந்த கோவில்
பேசும் மொழியே தெய்வம்- இதை
அறிந்துகொண்டால் உயர்ந்து நிற்கும்
கோபுரமாகும் கொள்கை.'

தேவாரம், திருவாசகம் என்பது பாடல்கள்தான்- நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் என்பது பாடல்கள்தான்- நம்முடைய இதிகாசங்கள், புராணங்கள், காவியங்கள் அனைத்துமே பாடல்கள் என்ற தத்துவத் தடாகமாகத்தான் ததும்புகின்றன.

புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் அனைவருமே பக்திப் பாடல்களுக்கு என்று தனியாக இசைப் பேழைகளை  உருவாக்கியிருக்கிறார்கள். பேர்பெற்ற பாடல்கள்- பாடலாசிரியர்கள் எல்லாருமே ஆன்மிக அலைவரிசைக்காக பிரத்யேகமாக ஒலிப்பேழைகளை ஓவியத் தமிழாக தீட்டித் தந்திருக்கிறார்கள்.

டி.எம். சௌந்திரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் சகோதரிகள் போன்ற புகழ் பூத்த பண்ணிசைக் கலைஞர்கள் பலர் பூவை செங்குட்டுவனின் மறைத்தமிழ் பாடல்களால் இசைத்தமிழ் உலகை ஆண்டிருக்கிறார்கள். அறியப்படாத ஆளுமையான பூவை செங்குட்டுவனின் பாடல்கள் பற்றி பல நூறு பக்கங்கள் எழுதலாம்.

"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால், முருகா
திருத்தணி மலைமீது எதிரொலிக்கும்,
என்ற "கந்தன் கருணை' பாடலும்
"ஆடுகின்றானடி தில்லையிலே''

என்ற நடிகர்திலகத்தின் "ராஜராஜசோழன்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வாழும்வரையில் பூவை செங்குட்டுவன் புகழ் நீடித்து நிலைத்திருக்கும்.