நவகிரகங்களில் வல்லமைபெற்ற கேது பகவான் ஒருவரின் வாழ்க்கை முத்திக்கு காரணமாக இருக்கிறார்.
ஒருவன் அறிந்தும் அறியாமலும் நிதானமில்லாத ஆசையில் எவ்வளவு தவறு செய்தாலும் முடிவில் சரணாகதியை அடைய வேண்டும் என்று உணர்த்துபவர். மனதிற்கு அதிபதியான சந்திரனின் பிம்பம் கேது என்பதால் கேதுவை ஒருவரின் மனசாட்சி என்று கூறலாம். பாம்பின் தலையும் மனித உடலும் கொண்ட கேது உலக மாயையில் சிக்கி அலைபாயும் ஆன்மாவை ஆழ்நிலை தியானம், ஆன்மிக நாட்டத்தின்மூலம் பக்குவப்படுத்தி அடக்கி முக்தி அடையச் செய்கிறார். உருவம் இல்லாத நிழல் கிரகமாக மனிதனின் ஆழ் மனிதில் நின்று அவரவர் செய்யும் நன்மை- தீமையை உணர்த்துவார். சட்டம் நீதி, நேர்மை, நியாயம் இவற்றின் தொகுப்பான கேது ஒருவர் அநீதியான செயலில் ஈடுபட்டால் அவர் செல்லும் பாதை தவறு என்பதை மனசாட்சியாக நின்று உணர்த்துவார்.
அதேபோல் ஒருவர் மனசாட்சிக்கு பயந்து தனது வாழ்க்கை நடந்து கொள்ளும்போது அவர் ஜாதகத்தில் எவ்வளவு விதமான பாவங்கள் இருந்தாலும் அதை குறைத்து வாழ்க்கை சுகமாக இருக்க உதவுகிறார். உறவுகளில் தாய்வழிப் பாட்டன்- பாட்டிகளைக் குறிக்கும் கேதுவுக்கு சொந்த வீடு இல்லாததால் தான் நிற்கும் வீட்டையை சொந்த வீடாக எடுத்துக்கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார். ஒருவரின் ஜாதகத்தில் கேது எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந்து இருக்கிறாரோ, அந்த கிரக காரக உறவுகளுக்கு ஜாதகர் சென்ற ஜென்மத்தில் நிறைவேற்றத் தவறிய கடமைகள் இருக்கும். அந்த பாவக கிரக காரகத்துவங்கள் மூலம் நிறைவேற்ற தவறிய கடமைகளை, நிறைவேற்ற முடியாத கடமைகளை நிறைவேற்றி முடிக்க கேது உதவுவார். கேது நின்ற பாவக காரக உறவுகளுக்கு உழைத்தால், உதவி செய்வதால் பாவச் சுமை கூடி புண்ணிய பலன் அதிகமாகும். மனிதன் தன் வாழ்நாள் கடமைகளை நிறைவேற்றும் மனப்பக்குவத்தை தந்து முக்தியை ஆன்மா நாடும்வரை அனுபவப் பாடத்தை கற்றுக் கொடுத்துக் ஆன்மாவின் முக்திக்கு உதவுவார்.
கிர

கிரகச் சேர்க்கை என்பது ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களின் இணைவுகளாகும். ஒரே ராசி கட்டத்தில் இரண்டு கிரகங்கள் 13 டிகிரி வித்தியாசத்தில் இருந்தால் கிரக இணைவுகளாக செயல்படும். அதைபோல் ஒரு ராசி கட்டத்தின் முடிவிலுள்ள கிரகத்திற்கும் அடுத்த ராசி கட்டத்தின் ஆரம்பத்திலுள்ள கிரகத்திற்கும் 13 டிகிரி வித்தியாசம் இருந்தால் அதுவும் கிரகச் சேர்க்கையாக ஜாதகருக்கு பலனை வழங்கும். ஒரு ராசி கட்டத்தின் ஆரம்பத்தில் உள்ள கிரகத்திற்கும் முடிவிலுள்ள கிரகத்திற்கும் பாகை முறையில் அதிக இடைவெளி இருந்தாலும் ஒரு 25 சதவிகிதம் அது கிரகச் சேர்க்கையாக ஜாதகருக்கு பலனை வழங்கும். ஒரு கிரகத்திற்கு 1, 5, 9 எனும் திரிகோணத்திலுள்ள கிரகங்களும் கிரகச் சேர்க்கையாகவே பலன் தரும். சுய சாரம் பெற்ற கேது வழங்கக்கூடிய நன்மை- தீமைகள் கேதுவிற்கு வீடு கொடுத்த கிரகத்திற்கு தன்மையை பொருத்ததாகும்.ஒரு ஜாதகப் பலனை நிர்ணயிப்பதில் கிரகச் சேர்க்கையின் பங்கு அளப்பரியது. அந்த வகையில் தடை, தாமதத்தை வழங்கக்கூடிய கிரகமான கேதுடன் சேர்ந்த கிரகங்கள் ஜாதகருக்கு ஒருவிதமான அசவுகரியத்தை வழங்கிக்கொண்டு உள்ளது. இந்தக் கட்டுரையில் கேதுடன் சேர்ந்த கிரகங்கள் ஜாதகருக்கு வழங்கும் பலன்களை பார்க்கலாம்.
சூரியன்+கேது
நவகிரகங்களில் தலைமை கிரகமான சூரிய பகவான் கேதுவுடன் இணைந்து பலம் பெற்றால் நிர்வாகத்திறன், தெளிந்த சிந்தனை, நுண்ணறிவு உள்ளவர்கள். எதையும் எளிதில் புரிந்துகொள்ளும் தன்மை ஆர்வம் அதிகம் நிறைந்தவர்கள். தீர்க்கமான ஆயுள், ஆரோக்கியம் உண்டு. மற்றவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுப்பார்கள். பிரசித்திபெற்ற சங்கங் கள், இயக்கங்களில் நிர்வாகியாக இருப்பார்கள். ஆரம்ப கால வாழ்க்கை வறுமையாகவும் 50 வயதுக்குமேல் திடீர் தனலாபமும் அடைவார்கள். சொந்தத் தொழில் செய்யவே இவர்கள் விரும்புவார்கள். சூரியன் என்றால் அரசியல் அரசாங்கம். கேது என்றால் கொடி. வாழ்க்கையில் ஒரு முறையாவது கொடிவைத்த காரில் செல்வார்கள்.
அரசியல் ஞானம் சாணக்கியத்தனம் உள்ளவர்கள். சூரியன்- கேது பலம் பொருந்திய நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் கொடிவைத்த காரில் செல்லக்கூடிய யோகம் பெற்றவர்களாக இருப்பார்கள்.
சூரியன் பலம் குறைந்து கேது பலம் பெற்றால் மனதில் வெறுமையையும் வெறுப்பும் நிரம்பி இருக்கும். கண் பாதிப்பு, இதயக் கோளாறு, எலும்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். அரசாங்கத்தாலும் தந்தையாலும் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். சிலர் தந்தையை பிரிந்து வாழ்கிறார்
கள். அல்லது ஜாதகர் பிறந்த பிறகு தந்தை பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அல்லது ஜாதகர் பிறந்தவுடன் தந்தையின் குடும்பம் பூர்வீக சொத்தை இழக்கிறார்கள் அல்லது கடன் காரணமாக பூர்வீகத்தை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது கிரகண தோஷ பாதிப்பால் வாழ்க்கையில் முன்னேற முடிவதில்லை.
பரிகாரம்: சூரிய ஓரையில் விநாயகருக்கு கோதுமை உணவு படைத்து வழிபடவேண்டும்.
சந்திரன் + கேது
ஒரு ஜாதகத்தில் சந்திரனுக்கு கேது சம்பந்தம் இருந்தால் நேர்மை, நியாயம் நிறைந்தவர்கள்.தான் வாழ பிறரை கெடுக்க விரும்பாதவர்கள். அமானுஷ்ய சக்தி நிறைந் தவர்கள். உள்ளுணர்வால் அனைவரின் எதிர்கால பலனையும் அருள்வாக்கில் கூறுபவர்கள். திக்குவாய் கோளாறு உள்ளவர். அசட்டுத்தனம் நிரம்பியவர்கள்.தனித்து வாழ்வதை விரும்புவார்கள். ஜாதகரிடம் யாரும் அன்பு காட்ட மாட்டார்கள். அன்பு பாசத்திற்கு ஏங்குவார்கள். மனக் கவலையை பகிர்ந்து கொள்ளக்கூடிய நட்பை எதிர் பார்ப்பார்கள்.
சிலர் போதைப் பொருட்களுக்கு அடிமைப்படுவார்கள். வருமானக் குறைபாடு இருந்துகொண்டே இருக்கும். திறமை இருந்தாலும் முன்னேற முடியாது. தவறான வாக்கு கொடுத்து மாட்டுவார்கள்.
குடும்பத்துடன் ஒட்டாத வாழ்க்கை வாழ்வார்கள். குடும்ப பிரச்சினைக்கு பஞ்சாயத்து, கோர்ட், கேஸ்வரை செல்லும்.
எளிதில் காதல் வலையில் சிக்க கூடியவர்கள். மனதில் நிம்மதி குறைந்தவர்கள். குடும்ப வாழ்க்கை சுகம் தராது. கற்பனை பயம் அதிகமுண்டு. இதனால் மன அமைதியின்மை மற்றும் அச்சம் அதிகமாக இருக்கும். தீயவழியில் சென்று தனக்கு தானே ஆபத்தையும் அசிங்கம் அவமானங்களையும் தேடிக்கொள்வார்கள். அனைத்து காரியங்களும் தடை, தாமதத்துடன்தான் நடக்கும். வாழ்வதற்காக உழைக்கலாம்.
ஆனால் உழைப்பே வாழ்க்கையாக இருக்கக் கூடாது என்ற எண்ணம் உடையவர்கள். இரவில் வேலை செய்து பகலில் உறங்கு வார்கள். கிடைத்த வேலையைச் செய்து இருப்பதை உண்டு படுத்த இடத்தில் நிம்மதியாக தூங்கவேண்டும் என்று நினைப் பார்கள். துக்கம், சோம்பல் நிறைந்தவர்கள்.
பரிகாரம்: திங்கட்கிழமை புனித நீரால் அபிசேகம் செய்து விநாயகரை வழிபட வெற்றிமேல் வெற்றி வந்துசேரும்.
செவ்வாய்+கேது
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் கேது சேர்ந்திருந்தால் ஜாதகர் முரட்டுத்தனம், பிடிவாத குணமுள்ளவர். முயற்சியில் தோல்வியடைவார்கள். எடுத்த காரியங்கள் தடை, தாமதம் தரும். ரத்தம் கெடும். கீமோகுளோபின் குறைவால் ரத்த சோகை உண்டாகும். உடன்பிறப்புகளுடன் தீராத தீர்க்க முடியாத வம்பு, வழக்கு இருக்கும்.
அல்லது இளைய சகோதரம் இல்லை. சகோதர தோஷம் உண்டு.
ஆபரணங்கள் தொலையும். அதீத கவலை உண்டு. சொத்தில் வில்லங்கம், எல்லைத் தகராறு, பட்டா, பத்திரத்தில் குழப்பம் இருக்கும். பாகப்பிரிவினை சுமூகமாகாது.
உடன்பிறந்தவர்களால் ஏதேனும் மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கிறது. மிகக் குறிப்பாக சொத்தால் பிரிவினை உண்டாகுகிறது. சிலருக்கு வில்லங்கமான சொத்தால் பண முடக்கம் ஏற்படும். சொத்து வாங்கி ஏமாறுவது அல்லது புறம்போக்கு நிலங்களை பட்டா போட்டு விற்பவர்களிடம் நிலம் வாங்கி ஏமாறுவார்கள். சொத்து தொடர்பான வழக்கு, தொடர் சட்ட சிக்கல் இருந்துகொண்டே இருக்கும். பெண்களுக்கு இந்த கிரக சேர்க்கை 27 வயதிற்குமேல்தான் திருமணத்தை நடத்துகிறது. திருமணம் ஆன பிறகு ஏன் திருமணம் நடந்தது என்று வருந்தும் வகையில்தான் வாழ்க்கை இருக்கும். கணவனை கடும் பகையாளியாக்கி நீதிமன்ற படி ஏறிய பெண்களே அதிகம். வெகுசில பெண்கள் குடும்பம், குழந்தைகள், மானம், மரியாதைக்கு அஞ்சி அனுசரித்து வாழ்கிறார்கள். வெகுசில தம்பதிகள் விதிவிலக்காக கருத்து வேறுபாடு இன்றி தொழில் நிமித்தம் அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் வாழ்நாளின் பெரும் பகுதியில் பிரிந்தே வாழ்கிறார்கள்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை எமகண்ட நேரத்தில் விநாயகருக்கு சிவப்பு நிற திரியிட்டு நல்லெண்ணையில் ஜோடி தீபமேற்றவும்.
புதன்+கேது
சுய ஜாதகத்தில் கேதுவும் புதனும் பலம் பெற்றால் தெளிவான ஞானத் தையும் வாழ்க்கை தத்துவத்தை, ஆன்மிக நாட்டத்தையும் அடைகிறார்கள். தேவர்களில் அறிவுக்கும், புத்திக்கும், பெயர் பெற்ற விஷ்ணுபகவானின் முழுக்கடாட்சமும் பொருந்திய புதனுடன் சம்பந்தம் பெறுவது சிறப்பு. வலை கிரகமான கேதுவும், காதல் கிரகமான புதனும் சேருவதால் மக்களைக் கவர்வதில் இவர்களுக்கு நிகர் எவரும் இல்லை. எழுத்தாளர் பணியில் இவர்கள் நன்கு பிரகாசிப்பார்கள். பேனா நண்பர்கள் அதிகமுடையவர்கள். அரசியல் துறையிலும், அதிர்ஷ்டம் உடையவர்கள். இவர்கள் எந்த வியாபாரமும் செய்யலாம். பொதுஜன ஆதரவு உண்டு. இவர்கள் இருக்கும் இடத்திற்குக் கூட்டம் அதிகம் வரும். தகவல் தொடர்பு சாதனங்களான யூ டியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலமாக உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருபவர்கள். இந்தத் துறையின் மூலமாக அதிக வருமானம் சம்பாதிப்பார்கள். முயற்சிகளில் தளர்ச்சி இல்லாத வெற்றி உண்டு. எடுத்த காரியம் ஜெயமாகும். உடன்பிறந்த சகோதரர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். காது, முக்குத் தொண்டை நரம்பு சார்ந்த உபாதைகள் உண்டு. சுய ஜாதகத்தில் கேது மற்றும் புதன் பலம் குறைந்தால் சுயநலம், வஞ்சகம் பொறாமை ஆகியவற்றால் எதிரி களை வீழ்த்துவார்கள். இதுவே இவர்களுக்கு பெரும்பாலான எதிரிகளை உருவாக்கி விடும். கூட்டுத் தொழில் செய்யக்கூடாது. தீராத கடன், நோயை தந்து வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது.
பலர் தரங்கெட்ட காதல் வாழ்க்கையில் சிக்குகிறார்கள்.
தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளக்கூடிய அன்பிற்கு ஆசைப்பட்டு தவறான காதலில் மாட்டுகிறார்கள்.
பரிகாரம்: புதன் கிழமை விரதமிருந்து விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபடவும்.
-வரும் இதழிலும் தொடர்கிறது! செல்: 98652 20406
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us