குரு+கேது
ஒரு ஜாதகத்தில் குருவும் கேதுவும் சேர்ந்து நின்று பலம் பெற்றால் ஆன்மிக மார்க்கத்தில் அதிக ஈடுபாடு உள்ளவர்களாக இருக்கிறார்கள். பல கலைகளும் கற்றுத் தேர்ந்தவர்கள் திடமான மனம் தன்னம்பிக்கை உடையவர். நினைத்ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும். தலைமைப் பதவி, புகழ் அந்தஸ்து எளிதாக தேடிவரும். தர்ம ஸ்தாபனங்கள், கோவில் நிர்வாகம், ஊர்த்தலைமை போன்றவற்றில் கௌரவப் பதவி. நிர்வாக பதவி வகிப்பார்கள் அரசியல், அரசு சார்ந்த செயல்களில் தனித் திறமை யுடன் பிரகாசிப்பார்கள். நன்மக்கட்பேறு உண்டாகும். எல்லாவித வியாபாரமும் ப-தமாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். இவர்களுக்கு அதிர்ஷ்டம், பொதுஜன ஆதரவு உண்டு. வாக்கு சொல்லுதல், குறி சொல்லுதல், மத போதனை செய்தல், சமூக சீர்திருத்தம் செய்தல் போன்ற பணியில் தமக்கென்று தனி முத்திரை பதிக்கிறார்கள். இவர்கள் எந்தத் துறையில் ஈடுபட்டாலும் முன்னேற்றம் அடைவார்கள். எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் விசேஷமாக தொடங்கிய வாழ்க்கை போகப் போகச் சுமாரான நிலைக்கு வரும். புகழ் மட்டும் மிஞ்சும். இவர்களது வாழ்வில் பெருமளவிற்கு பொருளாதாரம் தங்காது. வாழ்வில் குறிப்பிட்ட காலத்திற்குமேல் கடனால் அவஸ்தை உண்டு. அதிக பணத்திற்கு ஆசைப்பட்டுத் தாங்கள் செய்யும் தொழிலை அடிக்கடி மாற்றிக்கொள் வார்கள். ஆன்மிக போர்வையில் சுய நலவாதியாக, மதவாதிகளாக அதிகம் சம்பாதித்து அதிகம் இழக்கிறார்கள். குரு- கேது சம்பந்தம் கோடீஸ்வரர் போர்வையில் வாழும் கடனாளிகள். சிலருக்கு வைத்தியத்தின் மூலம் புத்திரப்பேறு கிடைக்கும். பிள்ளைகளால் மனவேதனை மிகும்.
பரிகாரம்: அரச மரத்தடி விநாயகருக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட நல்ல மாற்றம் தெரியும்.
சுக்ரன்+கேது
ஒரு ஜாதகத்தில் சுக்கிரனும் கேதுவும் சேர்ந்திருந்தால் அனைவரையும் பகைத்துக் கொள்ளும் குணம் உள்ளவர்கள். முறையற்ற வாழ்க்கையை ஏற்படுத்திக் கொள்வார். கஞ்சத்தனம் நிறைந்தவர். அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுக்கமுடியாது. உண்மையான அன்பை அனுபவிக்க முடியாமல் ஏமாற்றமடைகிறார்கள். பல ஆண்களுக்கு திருமணத் தையே நடத்தி தராத கிரகச் சேர்க்கை, திருமணத்திற்கு முன்பு பெண் தேடியே திருமணத்தில் வெறுப்பை ஏற்படுத்தும். திருமணம் நடந்தபிறகு குடும்ப பிரச்சினைக்காக பஞ்சாயத்திற்கு நடந்தே வாழ்க்கை முடிந்துவிடும். எப்படி பொருத்தம் பார்த்தாலும் மண வாழ்க்கை மன வருத் தத்தை தராமல் போகாது.இந்த அமைப்பு பல கணவன்- மனைவியை விரோதியாகவே வாழ வைக்கிறது. ஆண்களுக்கு எத்தனை திருமணம் செய்தாலும் திருமணத்தில் நிம்மதி இல்லாத நிலை. சிலருக்கு முதல் திருமணம் மாறுபட்டதாக அமைந்தாலும், இரண்டாவது திருமணம் நல்ல நிம்மதியைத் தருகிறது. பலர் சுக்கிரனின் பலவீனத்தால் தாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில், இந்த கிரகச் சேர்க்கையால் ஆண்மைக் குறைவு அல்லது சிலர் போதைப் பழக்கங்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்
பரிகாரம்: விநாயகருக்கு மாதுளைச் சாறால் அபிஷேகம் செய்து வழிபடவேண் டும்.
சனி+கேது
சனி என்றால் தொழில் மற்றும் கர்மா. கேது என்றால் பல ஜென்மத் தொடர் கர்மா. இந்த அமைப்பு இருந்தால் பலமுறை திருமணம் தள்ளிப் போகும். அன்னிய உறவில் தாரம் அமையும். இருதார யோகமுண்டு. திருமண வாழ்க்கை ச-ப்பை ஏற்படுத்தும். இல்லறத் துறவிபோல் வாழ நேரும்.சிலருக்கு வாழ்நாள் முழுவதும் திருமணமாகாமல் சன்னியாசியாக இருப்பார்கள். பல சன்னியாசிகள் ஜாதகத்தில் 2, 7-ஆமிடங்களில் சனி கேது சம்பந்தம் இருக்கும். திருமணம் நடந்தாலும் வெகு விரைவில் சிற்றின்பத்தி-ருந்து விடுபட்டு பேரின்பத்தை நோக்கி செல்வார்கள். சிலருக்கு நோயாளி வாழ்க்கைத்துணை கிடைக்கும். ஒரு ஜாதகத்தில் சனியும் கேதுவும் சேர்ந்திருந்தால் மிகுதியான கர்ம வினைப்பதிவினை அனுபவிப்பார்கள். கேது தடை, தாமதம். சனி கர்ம வினை, தொழில். திருமணத்தடை அதிகமுண்டு.வியாபாரம், சுய தொழில் சிந்தனை அதிகம் இருக்கும். பெரிய முதலீட்டில் தொழில் செய்து வாழ்வாதாரத்தை இழந்த பலருக்கு இதுபோன்ற சம்பந்தம் இருக்கும். இவர்களுக்கு தொழி-ல் நிதானமற்ற நிலையை ஏற்படுத்திவிடுகிறது. தொழி-ல் இவர்களுக்கு வராக்கடனே அதிகம். முதலாளி- தொழிலாளி கருத்து வேறுபாடு அதிகமிருக்கும்.இந்த யோகம் உள்ளவர்கள் தனிபட்ட வாழ்க்கை அல்லது பொருளாதாரத்தில் தோற்றுப் போனாலும் நிச்சயம் புகழை அடைவார்கள். சிலர் 6 மாதம் தொழில், 6 மாதம் உத்தியோகம் என்ற நிலைப்பாட்டில் இருப்பார்கள் அல்லது ஒரு வருடத்திற்கு தேவையான பொருளாதாரத்தை 6 மாதத்தில் சம்பாதித்துவிட்டு மீதமுள்ள ஆறுமாதம் ஓய்வு எடுப்பார்கள். தொழில் சார்ந்த நல்ல வாய்ப்புகள் இவர்களுக்கு வரும்போது அந்த வாய்ப்புகளை இவர்கள் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள். தொழி-ல் இவர்களுக்கு நிரந்தரமான வருமானம் எப்போதும் இருக்காது. வருமானம் வரும். ஆனால் வராது என்பதுபோல்தான் இவர்களுடைய வாழ்க்கை இருக்கும். முதலீடு இல்லாத தொழி-ல் கொடி கட்டி பறப்பார்கள்.
பரிகாரம்: சனி ஓரையில் வன்னி மரத்தை 108 முறைவலம் வரவேண்டும். வாழும் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக வாழ வேண்டும் என்ற வாழ்வியல் தத்துவத்தை புரிய வைப்பவர் கேது. வாழ்க்கையில் வெற்றிபெற வழிபாடு மிக அவசியம். கேதுவினால் இன்னல்களை அனுபவிப்பவர்கள் மேலே கூறிய பரிகாரங்களை பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துகள்.
செல்: 98652 20406
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/22/kethu-2026-01-22-11-55-20.jpg)