சூரியன்
சூரியன் எல்லா வருடமும், சூரியன் பங்குனி மாதத்தில் மீன ராசியில்தான் இருப்பார். இந்த வருடத்தில், சூரியன் கூடவே சனியும் இருக்கிறார். உடன் உச்ச சுக்கிரனும் உள்ளார். சூரியன் அரசாங்கத்தைக் குறிப்பார். அவர் காலபுருசனின் 12-ஆமிடத்தில் அமர்ந் துள்ளார். இதனால் அரசாங்கத்திற்கு அதிக செலவும், அரசு அதிகாரிகளுக்கு அதிக அலைச்சலும் உண்டாகும். உடனிருக்கும் சனி, காலபுருசனின் 11-ஆம் அதிபதி. அவரும் அரசியலை குறிப்பவர். மேலும் கூட்டணி கட்சிகளை குறிக்கும் சுக்கிரன் உச்ச தன்மையுடன் உள்ளார். எனவே, கூட்டணி கட்சிகளின் தலையீடும், ஆர்ப்பாட்டமும் மிக அதிகமாகவே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்கு, அரசு அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் ஓட்டம் பிடிக்க வேண்டிவரும். சனி, சூரியன் சேர்ந்திருப்பதால், அரசு அதிகாரிகள் மிக சோர்ந்து போவர். ஏதும் செய்ய இயலா நிலைக்கு தள்ளப்படுவர். சனி எனும் கிரகம் உழைக்கும் வர்க்கத்தினரை குறிக்கும். எனவே உழைப்பாளி மக்கள், அரசை, அரசாங்கத்தை எதிர்த்து கடுமையாக போராடுவார். இந்த சண்டையை மிக அதிகமாக்கி, சனிபகவான் மிக மகிழ்வார். சூரியன் சிரமப்பட்டால் சனிபகவான் குஷியாகிவிடுவார். இந்த இரண்டு கிரகங்களும் சேர்ந்து ஒரே ராசியில் இருக்கும்போது, அரசாங்கமும், அரசு அதிகாரிகளும் நொந்துபோவது நிஜம்.
செவ்வாய்
இவர் ஆளும் கட்சியைக் குறிப்பார். இந்த பங்குனி மாதம் 18-ஆம் தேதிவரை, ஏப்ரல் 1-ஆம் தேதிவரை கும்ப ராசியில் உள்ளார். இவர் அங்கு ராகு எனும் எதிர்மறை கிரகத்தோடும், புதன் எனும் எதிர்கட்சி கிரகத்தோடு அமர்ந்துள்ளார். இருப்பினும் குரு பார்வை கிடைக்கிறது. எனவே, ஒரு கட்டுக்குள் இவர்களது திட்டம் இருக்கும். உள்ளுக்குள் ஆயிரம் தில்லாலங்கடி பண்ண ஆசை இருந்தாலும், குரு பார்வை அதனை ஒரு -மிட்டுக்குள் வைத்திருக்கும். எதிர் கட்சியோடு, யுத்தம் செய்வதிலேயே இந்த பங்குனியின் பாதி மாதம் சரியாகிவிடும். இதில் கூட்டணி கட்சிகள் மலை உச்சியில் உட்கார்ந்திருக்கும். அவர்களையும் சமாளிப்பதில் ஆளுங்கட்சி சோர்ந்து போய்விடும்.
புதன்
இவர் எதிர்கட்சிகளைக் குறிப்பார். இவரும் பங்குனி 23 வரை, கும்ப ராசியில் செவ்வாய்+ராகு எனும் இரு பெரும் பாவர்களோடு குப்பை கொட்ட வேண்டியிருக்கும். எனினும் குரு பார்வை இருப்பதால் சமாளித்துக்கொள்ளலாம்.
குரு
குரு இந்த மாதம் மிதுன ராசியில் உள்ளார். அவர் தனது ஒன்பதாம் பார்வையால், ராகு, செவ்வாய், புதன் இவர்களை பார்க்கிறார். பங்குனி 23, ஏப்ரல் 6-ஆம் தேதி, புதன் மீன ராசிக்கு சென்று அமர்வார். அப்போது புதன் நீசமாகிவிடுவார். ஆனால், இங்கு மிக கவனிக்க வேண்டியது, குரு- புதன் பரிவர்த்தனை. குரு வீட்டில், புதனும், புதன் வீட்டில் குருவுமாக பரிவர்த்தனையில் மாறி நிற்கிறார்கள். இதனால் எதிர் கட்சிகளின் நிறைய வழக்குகள் வெற்றி தேடிவரும்.
சுக்கிரன்
இது கூட்டணி கட்சிகளைக் குறிக்கும். பங்குனி 13-ஆம் தேதி மார்ச் 27 அன்று இவர் தனது உச்ச நிலையில் இருந்து விலகி, மேஷ ராசிக்கு சென்று அமர்வார். எனவே இந்த மாதம் பாதி நாட்கள் வரை, கூட்டணி கட்சிகளின் சத்தம் அதிகமாகி கேட்கும். அவர்களின் டிமாண்ட் மிக அதிகமாகும். ரொம்ப அடம் பிடிப்பார். பின் மேஷ ராசிக்கு சுக்கிரன் சென்று அமர்ந்தவுடன், ரொம்ப அமைதியாகி விடுவார்கள்.
சனி
இவர் காலபுருசனின் 11-ஆம் அதிபதி. எனவே அரசியல் ஸ்தான அதிபதி எனலாம். இவர் 12-ஆமிடத்தில் உள்ளார். 12-ஆமிடம் விரய, அயன சயன ஸ்தானம். எனவே முழு அரசியல்வாதிகளையும், அலைச்ச-ல

இவர் காலபுருசனின் 11-ஆம் அதிபதி. எனவே அரசியல் ஸ்தான அதிபதி எனலாம். இவர் 12-ஆமிடத்தில் உள்ளார். 12-ஆமிடம் விரய, அயன சயன ஸ்தானம். எனவே முழு அரசியல்வாதிகளையும், அலைச்ச-ல் சுற்ற-ல் விட்டுவிடுவார். மேலும் இவர் அரசு கிரகம் சூரியன்+ ஆளும் கட்சி கிரகம் செவ்வாய்+எதிர் கட்சி கிரகம் புதன்+ கூட்டணி கட்சி கிரகம் சுக்கிரன் என இத்தனை கிரக கூட்டணியில் உள்ளார்.உண்மையில் இது ரொம்ப மோசமான கோட்சாரம் ஆகும். இது பங்குனி மாத பாதிவரை ரொம்ப கிரக கூட்டணி இருக்கும். மார்ச் 27 அன்று சுக்கிரன் மட்டும் இந்த கூட்டத்தி-ருந்து விலகுவார். மற்றபடி, மாதம் முழுவதும் இந்த ஐந்து கிரகமும் சேர்ந்தே நின்று, கிரக யுத்தம்பெற்று, எவ்வித பலனும் கொடுக்க முடியாமல் போவர்.
ராகு
பங்குனி 18 வரை, செவ்வாய்+ராகு+புதன் கூட்டணி கூடி நிற்கும். இதுவும் ஒரு நல்ல கோட்சாரம் கிடையாது. ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் சேர்ந்து எதிர்மறை விஷயங் களை கையிலெடுப்பர். இதனால் நிகழ்வுகள் பயங்கரமாக இருப்பினும், குரு பார்வை ஒரு கட்டுக்குள் நிற்கச் செய்யும்.
கேது
இவர் காலபுருசனின் 5-ஆம் வீடான சிம்மத்தில் சுய சாரத்தில் செல்கிறார். மாதத்தின் பாதிவரை செவ்வாயின் கொடுர பார்வை பெற்றாலும் பின் அதனைவிட்டு நீங்கமுடியும். எனவே கேதுவும், சிம்மத்தில் இருந்து, உலக அரசிய-ல், மந்திரிகளிடையே சண்டை இழுத்துவிடுவார். மேலும் நீர் மற்றும் கிருமிகள் சார்ந்த நோய் பரவலுக்கும் காரணமாக இருப்பார்.
பங்குனி மாத பயங்கர கோட்சாரம்
2026 பங்குனி மாத கோட்சாரம் ரொம்ப பயமூட்டுகிறது; அச்சம் கொள்ளச் செய்கிறது. ஒரே ராசியில் நிறைய கிரக கூட்டணி இருப்பது உலகிற்கே இயற்கை பேரிடரை செயல்படுத்தும். சனி செவ்வாய் இவை மிக பெரும் பாபக் கிரகங்கள். கூடவே சூரியனும், சுக்கிரனும், புதனும் சேர்ந்துள்ளனர். இதில் சந்திரன் மீன ராசியில் பயணிக்கும்போது ஆறு கிரக கூட்டணி ஆகிவிடும்.
இந்த அழகில், எல்லா கிரகங்களும் ராகு- கேதுக்குள் அடைந்து நிற்கிறார்கள். எனவே காலசர்ப்ப தோஷமும் பெறுகிறார்கள்.
காலசர்ப்ப தோஷம் மற்றும் கிரக யுத்தமும் பெற்ற கோட்சாரம் நகர்ந்துகொண்டி ருக்கிறது.
பங்குனி 4, 5, 6-ஆம் தேதிகளில், மார்ச் 18, 19, 20 சந்திரன் மீனத்தில் கடந்து செல்வார். அப்போது மீனத்தில் சனி, சூரியன், சுக்கிரன் இருப்பார்கள். (பிறகுதான் செவ்வாயும், புதனும் மீனத்துக்கு போவார்கள்).
அந்த காலகட்டத்தில், நீர் ராசியான மீனத்தில், நீர் கிரகமான உச்ச சுக்கிரனுடன், நீர் கிரகமான சந்திரன் பவனிவருவார். இது கடல் சார்ந்த நீர் தாக்கத்தை உண்டாக்கும்.
இந்த பங்குனி மாதம், அதி கிரக கூட்டணி இருப்பதால், அனைவரும் கோளறு பதிகம் பாராயணம் செய்யவேண்டும்.
----------------------------------------------------
பங்குனி மாத எண்ணியல் பலன்கள் - ஆர் மகாலட்சுமி
1, 10, 19, 28
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சூரியன் ஆதிக்கம் பெற்றவர்கள். ஆதிக்க குணம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்களின் புகழ், ஈகோ, கெத்து என இவையெல்லாம் காணாமல், மறைந்துபோன மாதிரியான சூழ்நிலை ஏற்படும். அதற்கு உங்கள் இளைய சகோதரி வலுப்பெறுவது அல்லது ஒரு பெண் பணியாளரின் அடாவடி குற்றச்சாட்டு காரணமாகலாம். மறைமுக பணவரவு அல்லது உங்கள் வாழ்க்கைத்துணைமூலம் வெளிநாட்டு பணவரவு உண்டாகும். உங்கள் வாழ்க்கைத் துணையின் வேலை, தொழி-ல் வெளிநாட்டு சம்பந்தம் ஏற்படும். சிலர் மருமகன்- மருமகள் கிடைக்கப்பெறுவர். பங்குவர்த்தகம் பலன் தரும். கலைஞர்கள் சட்டபுறம்பான பணம் பெறுவார்கள். இந்த மாதம் உங்களுக்கு வரக்கூடிய பெரிய இன்னல், ஒன்று பயம் காட்டிவிட்டு சரியாகும். இது உங்களின் மண வாழ்வில் சற்று இம்சையைத் தரும். சொந்த ஊரில் மனை வாங்கும் யோகமுண்டு. திருமண விஷயங்களில், வார்த்தைகளில் கவனமாக இருக்கவும். தொழி-ல், மறைமுக வெற்றி கிடைக்கும். உங்களுக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கு மிடையே, ஒரு இளம் பெண்மூலம் யுத்தம் வர வாய்ப்புண்டு; கவனம் தேவை. அருகிலுள்ள கோவி-ல், சூரிய பகவானுக்கு, தீபமேற்றி வணங்கவும். சனிக்கிழமை மகாலட்சுமிக்கு நெய்தீபமேற்றவும். உங்கள் ஊரிலுள்ள கடல் அல்லது நதியிலுள்ள மீன்களுக்கு கோதுமை வாங்கி தூவி விடுங்கள்.
2, 11, 20, 29
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரன் ஆதிக்கம் கொண்டவர்கள். இரக்கம், கருணை குணம் கொண்டவர்கள். இந்த மாதம் உங்கள் தந்தை அல்லது அரசுமூலம் பணம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால், இதுவரை உள்ள கடன்களை அடைத்துவிடுவீர்கள். சிலருக்கு பெற்றோர்களே, ஒரு அடுக்குமாடி வீட்டை உங்கள் பெயருக்கு மாற்றி தருவார்கள். உங்கள் இளைய சகோதரன் அல்லது உங்கள் வாரிசால் சற்று அவமானப்பட வேண்டிய நிகழ்வு ஏற்படும். அல்லது இவர்களில் யாராவது ஒருவர், வீட்டைவிட்டு ஓடும் நிலை தடுக்கப்படும். உங்களுக்கு வயிறு சம்பந்தமான ஜீரணக் கோளாறு வந்து சரியாகும். திருமண விஷயங்கள் சார்ந்த பேச்சு சுறுசுறுப்பாகும். சொந்தத் தொழில் செய்வோர், ஒரு புரளி, வீண் வதந்தியால் பாதிப்பு அடைவர். அரசியல்வாதிகள், நல்ல மேன்மையும் அதிர்ஷ்டமும் காண்பர். எனினும் சிலசமயம் உங்கள் சொல் எதிர்மறை அர்த்தம் கொடுத்துவிடும். கலைஞர்கள் உச்சமான வசதி, வாய்ப்பு பெற்றாலும், எதிர்மறை செய்திகளால் அல்லாட நேரிடும். மாணவிகள் கல்வியில் சிறப்பு அடைவர். உங்கள் குடும்பத்துக்கும், உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் இடையே, உங்கள் மூத்த சகோதரியால் மனக்கசப்பு நேரிடும். சூரியனுக்கு அபிஷேகப் பொருளும், மகாலட்சுமி தாயாருக்கு நெய் விளக்கும் ஏற்றவும். மீன்களுக்கு அரிசிப் பொறி போடுங்கள்.
3, 12, 21, 30
இந்த எண்ணில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள். பணிவாக, பக்தியாக, நேர்மையாக இவர்களின் குணமிருக்கும். இந்த மாதம் கண்டிப்பாக திருமணம் நடக்கும். வேலை கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு உண்டு. அடுக்குமாடி வீடு வாங்குவீர்கள். அதனால் இடமாற்றம், வீடு மாற்றம் உண்டு. உங்களில் சிலர் தொழில் செய்யும் இடத்தில் கவர்ச்சிகரமான மாற்றம் செய்வீர்கள். பங்குவர்த்தக முறையைக் கண்டிப்பாக மாற்றுவீர்கள். கலைஞர்கள், சினிமாவில் நடிப்பவர்கள், தங்களின் தகவல் தொடர்பு மேனேஜர்களை மாற்றுவர். பழைய கைபேசியை மாற்றுவீர்கள். பிற மொழி பேசும் பணியாள், அவர் சொந்த ஊருக்கு கிளம்பி விடுவார்கள். வாரிசுகள் இடம் பெயர்வர். பலர் அரசு பணிக்கு முயல்வீர்கள். எனினும் அதில் தடை ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு அதிலும் பெண் அரசியல்வாதிகளுக்கு அதிர்ஷ்டமான மாதமாகும். அரசியல் சார்ந்த முக்கியமான பதவி கிடைக்கும். அது, உங்களின் சேவையின் பரிசாக இருக்கும். இதனால், செய்திகளில் உங்கள் பெயர் முதன்மையும், அடிக்கடியும் வெளியிடப்படும். நீங்கள் லைம் லைட்டில் இருப்பீர்கள். சில செய்திகள், பெண் அரசியல்வாதிகளையும், நடிகைகளையும் பற்றி அவதூறாகவும் வரும் வாய்ப்புள்ளது. சூரியனுக்கு விளக்கேற்றவும், மகா லட்சுமிக்கு, மஞ்சள் நிற வஸ்திரம் வாங்கி கொடுத்தும் வணங்கவும். மீனகளுக்கு வெள்ளை கொண்டை கடலையை ஊறவைத்து தூவவும்.
4, 13, 22, 31
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர் களுக்கு எதையும் சுருக்கமாக செய்யத் தெரியாதவர்கள். பெரும்போக்கான குணம் கொண்டவர்கள். இந்த மாதம், தொழில் சார்ந்த தகவல்களில் பெறுவதில் பரபரப்பாக இருப்பீர்கள். அதில் சிலவற்றை மாற்றி, உங்களுக்கு தோதாக அமைத்துவிடுவீர்கள். இந்த மாதம், உங்கள் மூளை ரொம்ப அநியாயத்துக்கு வேலை செய்யும். இதோ இப்போது மந்திரி ஆகிவிட்டுத்தான் மறுவேலை என்பீர்கள். இந்த நிமிடம், ஐயா ஒரு படத்தில் கதாநாயகன் என்று புளுருவீர்கள். பங்குவர்த்தகத்தில், பெரும் லாபம் கிடைத்துவிட்டது என பிறரை வயிறெய செய்வீர்கள். அரசிய-ல் சேர்ந்தாச்சு தேர்த-ல் ஒரு சீட் கன்ஃபார்ம் என ரீல் சுற்றுவீர்கள். இந்த எண் பெண்களும், கொஞ்சமும் சளைக்காமல், பங்களா வாங்கிட்டோம். கார் புக் பண்ணி யாச்சு. ஆன்தி வே, ஒரு ஆகாய விமானம் புக் பண்ணிட்டோம் என்பர். இதனை எல்லாரும் நம்புகிற மாதிரி, இவர்களுக்கு பணவரவு அதிகம் வரும் என்பது நிஜம்தான். இன்னும் சிலருக்கு, பெரிய இடத்தில் அல்லது வெளிநாட்டு வரனுடன் திருமணம் நிச்சயம் நடப்பதால், இந்தமாதிரி மானாவாரியாக தம்பட்டம் அடிப்பர். சூரியனுக்கு விளக்கேற்றுவது, மகாலட்சுமி சன்னதியில் மஞ்சள் சரகு விநியோகம் மற்றும் மீன்களுக்கு உளுந்து சாதம் தூவுவது நல்லது.
5, 14, 23
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதன் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்கள் அறிவார்ந்த, புத்திசா-யான குணம் கொண்டவர்கள். இந்த மாதம் திருமணம் நடக்கும். அதில் காதல் திருமணம் அதிகமிருக்கும். இந்த திருமணம் இடப்பெயர்ச்சி கொடுக்கும். நிறைய செலவுசெய்து, ஒரு அரசு பதவி, வேறு இடத்தில் வாங்கி விடுவீர்கள். இந்த மாதம் பணவரவு அதிகமாகும். அதே அளவு பண செலவும் உண்டு. அனேகர் வேலையில் இடமாற்றம் பெறுவர். உங்களிடம் வேலை பார்க்கும், பிறமொழி பேசும் பணியாளர்களால் ஒரு இன்னல் உண்டாகும். கைபேசியை எங்காவது தவறவிட்டு விடுவீர்கள். சிலரது தொழி-ல், உங்கள் வாழ்க்கைத்துணையும், பங்கேற்றுக் கொள்வார்கள். வீடு வாங்கும் கடன் முயற்சியில் இறங்குவீர்கள். மாணவர்கள் தொழில் கல்வி அல்லது கம்யூனிகேஷன்ஸ் பரிவில் மிக சிறப்பாக மிளிர்வார்கள். வாழ்வில், மனைவியுடன், இந்த மாதம் சண்டை, செலவு வந்தாலும், மனைவிமூலம் பெரும் அதிர்ஷ்டம் ஒன்று வரப்போகிறது. அதனால் கூடியமட்டும். இந்த எண்ணில் பிறந்த வர்கள் இந்த மாதமாவது சண்டையை குறைத்துக் கொள்ளவும். உங்களில் சிலர் வெளிநாட்டு யோகம் பெறுவீர்கள். அரசியல்வாதிகள், தங்கள் அலைச்சல் மற்றும் குடும்பத்தினர் மூலம் வெகுஜன சந்திப்பு பெறுவர்.சூரியனுக்கு விளக்கேற்றி வணங்குவது, மகாலட்சுமி தாயாருக்கு பச்சை தளம் காணிக்கை நல்லது. மீன்களுக்கு பச்சை நிறம் கொண்ட உணவுகளை தூவிவிடவும்.
6, 15, 24
இந்த எண்ணில் பிறந்தவர்கள், சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். எந்த விஷயத்தையும் அழகாக, பார்க்க ரசிக்கும்விதமாக மாற்றும் குணமுடையவர்கள். இந்த மாதம் நிறைய பேருக்கு அரசு உத்தியோகம் கிடைக்கும். அதிலும் இன்னும் குறிப்பாக, அரசுப் பணியில் தண்டணை பெற்று, பதவி உயர்வு கிடைக் காமல் தவித்துக்கொண்டு இருந்தவர்களுக்கு, இந்த மாதம், கண்டிப்பாக பதவி உயர்வு, அதிக சம்பளம், சம்பள நிலுவைத் தொகை என எல்லாம் கிடைக்கும். உங்களின் அவமானங்கள் தவிடு பொடியாகும். பிற இன கலப்பு விருப்பத் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அப்போது சற்று கைகலப்பு ஏற்படும். லஞ்சம் கொடுக்கவும், கிடைக்கவும் வாய்ப்புண்டு. வார்த்தைகளில் வன்மை இருக்கும். வீடு சம்பந்தமான, ஒரு பிரச்சினை சுமூகமாக தீர்வதோடு மட்டுமல்ல, அதில் ஒரு நிறைவும் கிடைக்கும். அரசியல்வாதிகள், தங்கள் மீதுள்ள களங்கம், வழக்கு, சண்டை இவை நீங்கப் பெற்று, புத்தாக்கம் பெறுவர். உங்களில் சிலருக்கு வெளியூர், வெளிநாட்டில் வசிக்கும் வாரிசுகள்மூலம் பேரன்- பேத்தி பெறுவீர்கள். சமையல் கலைஞர்கள் நிறைய நன்மையும், கொஞ்சம் சொதப்பலும் பெறுவர். சூரியனுக்கு விளக்கேற்றுவது, மகாலட்சுமி தாயாருக்கு இனிப்பு மற்றும் வெள்ளை மலர்கொண்டு வணங்குவது, மீன்களுக்கு மொச்சைப்பயறு கலந்த சாதம் தூவுவது நலம்.
7, 16, 25
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்களுடைய குணம் ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியாக இருப்பது ஆகும். பிற மதம் சார்ந்த திருமணம் நடக்கும். மறுமணம் நடக்கும். இந்த மாதம் நீங்கள் யாரிடம் பேசினாலும், முடிவில் சின்ன சண்டையிலாவது முடியும். எனவே பேச்சை குறையுங்கள். வியாபாரம் சம்பந்த சந்திப்புக்களுக்கு கூடியமட்டும், வேறு யாரையாவது அனுப்பிவைக்கவும். இந்த மாதம் மட்டும் இதில் கவனமாக இருக்கவும். இதனால் தொழி-ல் ஏற்படபோகும். சில சிக்கல்களைத் தவிர்க்கலாம். தம்பதிகள், சந்தேகத்தின் பேரில் சண்டையிட்டுக் கொள்வர். அரசு கட்டணங்களில் கவனமாக இருக்கவும். இந்த மாதம் அனைத்து விஷயங்களிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பைரவருக்கு விளக்கேற்றுவதும், மீன்களுக்கு கொள்ளு தானியத்தை தூவுவதும் நல்லது.
8, 17, 26
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனி ஆதிக்கம் பெற்றவர்கள். மிக நிதானமாக, ஸ்திரமாக இருப்பது இவர்களின் குணமாகும். இந்த மாதம் பணவரவுக்கு குறைச்சலே கிடையாது. பங்கு வர்த்தகம்மூலம் பணவரவு உண்டு. கைபேசி அது பாட்டுக்கு பணத்தை தொடர்ந்து கொட்டிக்கொண்டே இருக்கும். தொழி-ல் நேர் வருமானம் தவிர, உபரி வருமானமும் கிடைக்கும். வீட்டு வாடகையை அதிகமாக்கி, அதன்முலம் உபரி பணம் அடைவீர்கள். கலைஞர்கள், நிறைய விளம்பரங்களில் பங்குபெற்று, அதன்மூலம் சைடு பணம் பெறுவர். அரசு சம்பந்தம் கொண்டவர்கள், கையூட்டு பணம் அதிகம் பெறுவர். இவ்வளவு பணவரவு இருக்கும்போது, கடன் என்பது தன்னிச்சையாக அடைந்துவிடும். சிலர் சீருடை பணி பெறுவர். உங்கள் தொழில் மேன்மைக்கு, சில சினிமா நடிகைகள்மூலம் விளம்பர படம் வெளியீடுவீர்கள். அரசியல்வாதிகள், பொதுவாக செலவு செய்வார்கள். ஆனால் இந்த மாதம், இந்த எண் அரசியல்வாதிகள் நல்ல பணவரவு காண்பார்கள். வேலையில் சிலர் மாற்றம் பெறுவர். சிலர் வேலையில் பதவி உயர்வு பெறுவர். சிலருக்கு கைபேசியில் உங்களைப் பற்றிய மோசமான தரவுகள் வெளியாகும். இது உங்கள் புகழ் நிலையில் சற்று டேமேஜ் உண்டாக்கும்.சூரியனை விளக்கேற்றியும், மகாலட்சுமிக்கு நெய் விளக்கு ஏற்றியும், மீனுக்கு எள் மிட்டாய் தூவியும் வணங்கவும்.
9, 18, 27
இந்த எண்ணில் பிறந்தவர்கள் செவ்வாய் ஆதிக்கம் பெற்றவர்கள். இவர்களின் வீரமும், தைரியமுமே இவர்களின் குணமாகும். இந்த மாதம் வீடு விஷயமாக ஒரு நன்மையும்- தீமையும் கலந்து கிடைக்கும் எனில் வீடு கட்ட கடன் கிடைக்கும். ஆனால் வட்டி மிக அதிகமாக இருக்கும். தாயார் உடல்நிலையில் கவனம் தேவை. பயணங்கள் நன்மையும், சிறு சிராய்ப்பும் தரும். வாக்கினால் அவமானம் வரும். உங்கள் வீட்டில் காதல் கல்யாண கலாட்டா உண்டாகும். உங்களில் சிலர், உங்கள் மருமகனோடு, யுத்தம்செய்து, காவல் நிலையத்தில் நிற்கும்படி ஆகிவிடும். பெண் கலைஞர்களின் காதல் திருமணம் பற்றிய செய்தி, வெளிவந்து, சற்று பேசு பொருள் ஆகிவிடும். சில அரசியல்வாதிகளின் வெளிநாட்டு வீடுகள், வாகனங்கள் மற்றும் அவர்களின் தாயார் சார்ந்த செய்திகள் வெளிவந்து, சற்று மன உளைச்சல் தரும். சில மந்திரிகள், சில கலைஞர்கள் வெளிநாட்டுக்கு சென்றுவிடும் நிலை ஏற்படும்.சூரியனை விளக்கேற்றி வணங்கவும். பைரவரை வணங்கவும். மீன்களுக்கு துவரை வாங்கி போடவும்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us