தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ச்சி அடைந்துவரும் நிலையில், சமீப காலத்தில் ஜோதிடர்கள் கூறும் தகவல்கள் ஏராளமாக வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
அத்தகைய பதிவுகளைப் பார்த்தால் அவையாவும் முன்னோர்கள் எழுதிவைத்துள்ள பொதுப் பலன்கள்தான்! புதியன என்று ஏதுமில்லை!
ஒருவருடைய வாழ்வில் அவருடைய ஜாதக நிலைப்படி கிரகங்கள் என்னவெல்லாம் செய்யும்? அவருடைய வாழ்க்கையை எந்தப் பாதையில் கொண்டுசெல்லும்? அவருடைய வாழ்வில் யோகம் உண்டா? எப்போதும் சங்கடம்தானா? சுய வாழ்க்கையில் அவர் எப்படி இருப்பார்? படிப்பு எப்படி இருக்கும்? வேலையா? சொந்தத் தொழிலா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? ஏதாகிலும் பிரச்சினைகள் ஏற்படுமா? வாழ்க்கைத் துணையால் நிம்மதி இருக்குமா? அவமானப்பட நேருமா? குழந்தை பாக்கியம் உண்டா? குழந்தைகளால் பெருமை கிடைக்குமா? சோதனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்குமா? சொந்த வீடு, வாகனம் உண்டா? உறவுமுறையினர் ஆதரவாக இருப்பார்களா? எதிரிகளாக வாழ்வார்களா? யோகங்கள் இருக்கிறதா? என்ன வகையான யோகம்? தோஷங்கள் இருக்கிறதா? எந்த வகையான தோஷம்? என்பதையெல்லால் நம் முன்னோர்கள் ஓலைச்சுவடிகளில் நமக்காக எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அவையாவும் இப்போது நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்தே ஜாதகமும் கற்றுத்தரப்படுகிறது.
ஒரு மனிதனின் வாழ்க்கையை அவனுடைய பிறப்பு ஜாதகத்தைவைத்து மிகத்துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் நம் முன்னோர்கள் நமக்கு எழுதி வைத் துள்ளனர்.
லக்னம் தொடங்கி பன்னிரண்டு பாவக ங்களில் ஒரு கிரகம் சஞ்சரிக்கும் நிலை, அந்த கிரகத்துடன் இணைந்துள்ள கிரகம் அல்லது கிரகங்கள்! அந்த கிரகத்தை பார்வை செய்யும் கிரகம் அல்லது கிரகங்கள்! நடைபெறுகின்ற தசா புக்தி, தசா நடத்த
தகவல் தொடர்பு சாதனங்கள் வளர்ச்சி அடைந்துவரும் நிலையில், சமீப காலத்தில் ஜோதிடர்கள் கூறும் தகவல்கள் ஏராளமாக வந்து குவிந்து கொண்டிருக்கிறது.
அத்தகைய பதிவுகளைப் பார்த்தால் அவையாவும் முன்னோர்கள் எழுதிவைத்துள்ள பொதுப் பலன்கள்தான்! புதியன என்று ஏதுமில்லை!
ஒருவருடைய வாழ்வில் அவருடைய ஜாதக நிலைப்படி கிரகங்கள் என்னவெல்லாம் செய்யும்? அவருடைய வாழ்க்கையை எந்தப் பாதையில் கொண்டுசெல்லும்? அவருடைய வாழ்வில் யோகம் உண்டா? எப்போதும் சங்கடம்தானா? சுய வாழ்க்கையில் அவர் எப்படி இருப்பார்? படிப்பு எப்படி இருக்கும்? வேலையா? சொந்தத் தொழிலா? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? ஏதாகிலும் பிரச்சினைகள் ஏற்படுமா? வாழ்க்கைத் துணையால் நிம்மதி இருக்குமா? அவமானப்பட நேருமா? குழந்தை பாக்கியம் உண்டா? குழந்தைகளால் பெருமை கிடைக்குமா? சோதனைகளை சந்திக்க வேண்டியதாக இருக்குமா? சொந்த வீடு, வாகனம் உண்டா? உறவுமுறையினர் ஆதரவாக இருப்பார்களா? எதிரிகளாக வாழ்வார்களா? யோகங்கள் இருக்கிறதா? என்ன வகையான யோகம்? தோஷங்கள் இருக்கிறதா? எந்த வகையான தோஷம்? என்பதையெல்லால் நம் முன்னோர்கள் ஓலைச்சுவடிகளில் நமக்காக எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அவையாவும் இப்போது நூல்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அவற்றையெல்லாம் அடிப்படையாக வைத்தே ஜாதகமும் கற்றுத்தரப்படுகிறது.
ஒரு மனிதனின் வாழ்க்கையை அவனுடைய பிறப்பு ஜாதகத்தைவைத்து மிகத்துல்லியமாக அறிந்து கொள்ளும் வகையில் நம் முன்னோர்கள் நமக்கு எழுதி வைத் துள்ளனர்.
லக்னம் தொடங்கி பன்னிரண்டு பாவக ங்களில் ஒரு கிரகம் சஞ்சரிக்கும் நிலை, அந்த கிரகத்துடன் இணைந்துள்ள கிரகம் அல்லது கிரகங்கள்! அந்த கிரகத்தை பார்வை செய்யும் கிரகம் அல்லது கிரகங்கள்! நடைபெறுகின்ற தசா புக்தி, தசா நடத்துபவன் சஞ்சரித்த ராசி, அந்த ராசிக்குள் எந்த சாரத்தில், அதேபோல் புக்திநாதன் சஞ்சரித்த ராசி, அந்த ராசிக்குள் எந்த சாரத்தில்? காரணம், சாரம் பார்க்காமல்... கிரகம் அமர்ந்த நட்சத்திரத்தைப் பார்க்காமல் சொல்லும் பலன்கள் சோரம்போகும் என்பதுதான்!
இப்படி, ஜோதிடவியல் என்பது, மருத்துவம், சட்டம், கணிதம், பொறியியல் போன்று வாழ்க்கைக்குரிய கல்வியாகும். இந்தக் கல்வியிலும் அடிப்படையில் இருந்து முதுகலைவரை உண்டு. மேலும் மேலும் ஆய்வுகளையும் பலர் தொடர்ந்து கொண்டிருக்கின்றனர்.
முறையாக ஜோதிடம் கற்றவர்களால் ஒரு மனிதனின் வாழ்க்கை நிலையை... அவர்களின் இரண்டு பக்கங்களையும் தெளிவாக அறிய முடியும்! ஆனால், சிலவற்றைச் சொல்வதால் பாதகம் உண்டாகும் என்பதால் மறைக்க வேண்டியதை மறைக்க வேண்டிய பொறுப்பும் ஜோதிடர்களுக்கு உண்டு.
இதுதான் எதார்த்தம்! இவை எதையும் கணக்கில் கொள்ளாமல், தங்களின் மேதாவித்தனத்தை வெளிக்காட்டும் வகையில், ஒரு கிரகம், உதாரணத்திற்கு சூரியன் என்று வைத்துக்கொள்வோம், அந்த சூரியன் 12 பாவகங்களில் எந்த எந்த பாவகங்களில் சஞ்சரிக்கிறாரோ அந்த அந்த பாவகத்திற்கு அவர் எத்தகைய பலன்களை வழங்குவார் என்கிற தகவலை வழங்குகின்றனர்!
சரி, ஜாதகத்தில் சூரியன் மட்டும்தானா கிரகம்? மற்ற எட்டு கிரகங்கள் இருக்கிறார்களே? மேலும், மாந்தியும் இருக்கிறாரே! இவர்களுக்கெல்லாம் பார்வைகள் இருக்கிறதே?
இந்த ஒன்பது கிரகங்களின் பார்வைகளோ, இணைவோ சூரியனுக்கு உண்டாகும்போது பலன்கள் எத்தகையதாக இருக்கும்?
அதை விட்டுவிட்டு சூரியனைப் பற்றி பேசுபவர்கள் சூரியனின் காரகத்துவத்தையும்... ஒன்றுமுதல் பன்னிரண்டு பாவகங்களிலும் அவர் சஞ்சரிக்கும்போது அந்த அந்த பாவகத்தின் நிலையினையும் கொண்டு மட்டுமே பேசிவருகின்றனர்.
இதனால் பொதுமக்களுக்கு என்ன நன்மை?
நேற்று ஒரு பெண்ணின் ஜாதகம் என்னிடம் வருகிறது. அந்தப் பெண்ணுக்கு முப்பது வயதாகிறது. திருமணமும் ஆகவில்லை. வேலையும் நிலையில்லை. ஜாதகத்தை ஒரு நிமிடம் பார்த்தேன். வழக்கம்போல் அந்த ஜாதகியிடம் என்னுடைய கேள்வியைக் கேட்டேன்.
அதற்கு காரணம் அவர் இதற்குமுன் பலரிடம் ஜாதகம் பார்த்திருக்கிறார் என்பதால்தான்! "உங்கள் ஜாதகத்தில் இருக்கும் தோஷம்பற்றி யாராவது உங்களுக்கு சொல்லி இருக்கிறார்களா?'' என்று கேட்டேன். "ஒரே ஒருவர் மட்டும் என்னுடைய ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருக்கிறது! அதற்கு பரிகாரம் செய்து கொள்ளுங்கள்! நானே பரிகாரம் செய்கிறேன் என்றார்!'' என்று அந்த ஜாதகி சொன்னார்.
அப்போதுதான் அந்த ஜாதகி ஏமாற்றப் பட்டிருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்!
"உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷமே இல்லை. பித்ரு தோஷம் ஒருவருக்கு இருக்கிறது என்றால் அவருடைய ஜாதகத்தில் கிரகங்கள் இந்த இந்த நிலையில் இருக்கவேண்டும்! சூரியன், சந்திரனுடன் ராகு - கேது தொடர்பு இருக்கவேண்டும். மூன்றாம் இடத்தையும் ஐந்தாம் இடத்தையும் பார்க்கவேண்டும்.. உங்கள் ஜாதகத்தில் பித்ரு தோஷம் இல்லவே இல்லை'' என்று விளக்கம் சொல்லிவிட்டு, அவருடைய ஜாதகத்தை அவரிடமே காட்டி. "உங்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் இருக்கிறது... அதற்கு குரு, சனி உங்கள் ஜாதகத்தில் அமர்ந்துள்ள நிலைதான்'' என்பதை அவருக்கே புரியும்வகையில் சொல்லிவிட்டு, "அடுத்து, புனர்ப்பூ தோஷமும் உங்களுக்கு இருக்கிறது'' என்பதை சந்திரன், சனியின் சஞ்சார நிலையை வைத்து விளக்கினேன்.
அதற்குரிய பரிகார ஸ்தலங்கள் பற்றி சொல்லி அனுப்பி வைத்தேன்.
பிரம்மஹத்தி தோஷமும், புனர்பூ தோஷமும் அந்த ஜாதகிக்கு இருக்கும் காரணத்தினால்தான் வேலையில் நிலையற்ற நிலை, முன்னேற்றத்தில் தடை, திருமணம் தள்ளிப்போவது என்பதெல்லாம்.
இங்கு ஜோதிடர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலர், எந்த கிரகம் எந்த கிரகத்துடன் இணைந்தால் அல்லது பார்த்தால் அந்த ஜாதகருக்கு எத்தகைய தோஷம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் எத்தகைய யோகம் இருக்கிறது என்பதை அறியாதவர் களாகவே உள்ளனர்.
ஒரு கிரகத்தைப் பற்றி மட்டுமே பேசுபவர்கள் அந்த கிரகத்தின் தசை நடக்கின்றபோது அந்த ஜாதகரின் லக்னம் என்ன என்பதை முதலில் கவனிக்கவேண்டும்!
அந்த ஜாதகரின் லக்னத்திற்கு தசை நடத்துபவர் சுபரா? அசுபரா? பாதகரா? மாரகரா என்பதைப் பார்க்கவேண்டும். அதற்கும் மேலாக தசை நடத்துபவர் அந்த ஜாதகரின் பிறப்பு ஜாதகத்தில் எந்த இடத்தில் சஞ்சரிக்கி றார். யாருடைய சாரத்தில் சஞ்சரிக்கிறார் என்பதையும் பார்க்கவேண்டும்!
அதை விட்டுவிட்டு, ஒவ்வொரு ராசிக்குள்ளும் ஒரு கிரகம் சஞ்சரிக்கும் நிலையை வைத்தும், அந்த கிரகத்தின் காரகத்துவத்தையும் மட்டுமே சொல்வதும், இங்கிருந்தால் அதைச்செய்வார்! அங்கிருந்தால் இதைச்செய்வார் என்பதும் எந்த வகையிலும் அந்த ஜாதகனுக்கு பயன் தரப்போவதில்லை.
சுக்கிரன் ஒன்றாம் இடத்தில் இருந்தால் இந்தப் பலனைத் தருவார். ராகு நான்காம் இடத்தில் இருந்தால் இந்தப் பலனைத் தருவார். சனி எட்டாம் இடத்தில் இருந்தால் இந்தப் பலனைத் தருவார் என்பதுபோன்ற தகவல்கள் எல்லாம் மேலோட்டமான பலன்களாக இருக்குமே ஒழிய எந்தவொரு ஜாதகருக்கும் அது முழுமையான பலன்களாக இருப்பதற்கு துளியளவும் வாய்ப் பில்லை என்பதை முதலில் அனைவரும் உணரவேண்டும்!
உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால் ஒரு ஜாதகரின் அல்லது ஜாதகியின் கற்பு ஸ்தானத்தை பார்த்து அங்கு இந்த கிரகம் சஞ்சரித்தால் அவர் சோரம் போகக் கூடியவராக என்று கூறுபவர்கள் அதற்குமுன் அந்த இடத்தை சுப கிரகம் பார்க்கிறதா?
குரு பார்க்கிறாரா? என்பதையும் அறிந்தால் தானே அங்கு சஞ்சரித்த பாப கிரகத்தினால் உண்டாகும் பலன்கள் ஜாதகிக்கோ- ஜாத கருக்கோ நடக்குமா? நடக்காமல் போகுமா என்பதை அறியமுடியும்!
ஒரு கிரகத்தின் நிலையைப் பற்றி அறிய வேண்டும் என்றால் ஒருவர் ஜாதகத்தில் அந்த கிரகம் அமர்ந்த நிலை எந்த ராசியில்? அந்த ராசியில் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் என்பதைப் பார்க்க வேண்டும்! அடுத்து அந்த கிரகத்தின் தசை நடக்கும்போது அந்த ஜாதகரின் லக்னத்தையும், லக்னாதிபதியின் நிலையையும் ஆராய வேண்டும்!
அந்த ஜாதகரின் லக்னத்திற்கு தசை நடத்தும் அந்த கிரகம் சுபரா? அசுபரா என்று பார்க்கவேண்டும்! அதன்பிறகுதான், அந்த கிரகம் அந்த ஜாதகருக்கு வழங்கும் பலன் எத்தகைய தாக இருக்கும் என்பதைக் கூறமுடியும்!
கர்மாதான் ஒருவனை ஜோதிடனாக மாற்றுகிறது! ஒருசிலருக்கு வார்த்தைப் பலிதத்தைக் கொடுக்கிறது!
ஜோதிடன் என்பவன் ஒரு வழிகாட்டியாக மட்டுமே இருக்கவேண்டும்! அதிலும் சரியான வழிகாட்டியாக இருக்கவேண்டும்! இல்லையென்றால் அந்த கர்மாவே அந்த ஜோதிடனையும் அவனுடைய வம்சத்தையும் எழ முடியாத அளவிற்கு சோதனைகளுக்கு ஆளாக்கிவிடும்.
அதனால், ஜாதகம் என்றால் என்ன? ஒன்பது கிரகங்களின் காரகத்துவம் என்ன? கூடுதலாக மாந்தியின் நிலை என்ன? எந்த கிரகம் எங்கே சஞ்சரித்தால்... அந்த கிரகத்துடன் எந்த கிரகம் இணைந்தால்... பார்த்தால் பலன்கள் எத்தகையதாக இருக்கும்? பிறக்கும்போது நடந்த தசை, தற்போது நடக்கும் தசை இந்த தசா நாதனின் காரகத்துவம் என்ன? யாருடைய வீட்டில் சஞ்சரிக்கிறார்? எந்த நிலையில் இருக்கிறார்? யாரால் பார்க்கப்படுகிறார் என்பதையெல்லாம் அறியும் போதுதான், அதை ஜாதகனுக்கு தெரிவிக்கும்போதுதான் எந்தவொரு ஜோதிடனும் முழுமை அடைகிறான்.