ஜடத்தினாலான உடம்பை எவ்வாறு கடவுள் இயக்குகிறார்..?

உச்சியைப் பிளந்துகொண்டு, கடவுள் அந்த வாசல் வழியே உள்ளே புகுந்தார். அந்த வாசல் மகிழ்ச்சியின் உறைவிடம். பிளக்கப்பட்டதால் அதற்கு "வித்ருதி' என்ற பெயர். இதற்கு பிரம்ம ரந்திரம் எனப்பெயர். 
யோகிகளின் பிராணன் இந்த வழியே வெளியேச் செல்லும். இது யஜமானன் செல்லும் ராஜவழி! மற்ற துவாரங்கள் வேலையாட்கள் செல்லும் வாயில்கள் (உதாரணமாக துறவிகளின் மோட்ச காலத்தில் 
அவர்களை குழியினுள் இறக்கி, அவர்களின் தலையில் தேங்காய் உடைப்பதால் ஏற்படும் "பிளவு' பிரம்மரந்திரமாக இப்போது கருதப்படுகிறது.

Advertisment

இது எவ்வளவு தூரம் உண்மை என்பதைச் சாத்திரம் அறிந்தவர்கள் உணரலாம்) அவருக்கு உறைவிடம் மூன்று, கனவுகள் மூன்று.

Advertisment

உறைவிடம்: உடம்பு உயிர்த் தொகுதியான ஜடப் பொருளில் இறைவனாகிற உணர்வுப் பொருள் சேரும்பொழுதுதான் வாழ்க்கை நடைபெறும். உடம்பினுள் உயிர்த் தொகுதியை உச்சந்தலை வழியாக உள்ளே  இறைவன் இறங்கினார்.

(அதனால் இப்பொழுதும்கூடப் பிறந்த குழந்தையின் உச்சந்தலையைத் தொடும்பொழுது, அது 

Advertisment

எத்தனை மென்மையாக இருக்கும் தெரியுமா?

கொஞ்சம் அழுந்தத் தொட்டால் கைவிரல்கள் உள்ளே போய்விடுமோ என்ற அச்சமும் ஏற்படும். அதனால் அதனைக் குறிப்பிட்ட மாதங்கள்வரை தொட வேண்டாம் என்று பெரியவர்கள் அனுபவஸ்தர்கள் சொல்வார்கள். இதுதான் பிரம்ம ரந்திரம்) 

இந்த உடம்பு 11, வாசல்கள் உடைய நகரம் 2, கண்கள் 2,  காதுகள் 2, நாசித்துவாரங்கள் 1, வாய் 1, தொப்புள் 1, குறி 1, குதம் 1, பிரம்மரந்திரம் ஆகிய 11 வாசல்கள், பிரம்ம ரந்திரத்தை இறைவழி என்பார்கள். அதுவே 
மீண்டும் பிறப்பதற்கான வழியும்கூட,  இதயத்தின் நாடிகள் 101, அவற்றுள் ஒன்று உச்சந்தலையை பிளந்து செல்கிறது. அதன் வழியே மேலே செல்பவர்கள் மரணமற்ற நிலையை அடைகிறார்கள். மற்றவைகள் வழியே பிரியும் பிராணனால் மறுபிறவியை அடைகிறார்கள்.

இதயத்தின் நாடிகள்மூலமே கட்டளைகள் இடப்படுகின்றன. அனுபவங்கள் பெறப்படுகின்றன. நாடிகள் சாதாரண கண்களுக்குத் தெரியாது. அதனை அறிய தெய்வீகமான ஆற்றல், மனத்தூய்மை அவசியம், சாத்திரங்கள் ஆசையற்ற யோகியால் மட்டுமே பிரம்மரந்திரத்தின் வழியே உயிரை வெளியேற்ற முடியும் என்று கூறுகின்றன. 

உயிர்த் தொகுதியில், அந்த ஜடப் பொருளில் எப்போது உணர்வு புகுந்து கொள்கிறது?

அது தாயின் கருவில் இருக்கும்பொழுது தந்தையின் உடலில் விந்துவாக இருக்கின்ற உயிர் தாயின் உடம்பை அடைகிறது. பிறகு சொந்த உடலில் தாங்குகிறது, தந்தையின் உடம்பு, தாயின் உடம்பு, சொந்த உடம்பு, இந்த மூன்றும்தான் மூன்று உறைவிடங்கள் என்று கூறப்படுகின்றன.

கனவுகள் மூன்று

மூன்று கனவுகள் என்றால், மூன்று நிலைகள் மனிதனின் 1, விழிப்பு 2, கனவு 3, ஆழ்ந்த தூக்கம் என்ற மூன்று நிலைகளில் மனிதன் வாழ்கிறான். இந்த மூன்று நிலைகளுமே கனவுதான் கனவுகள் கலையும் பொழுது? 

நிலையாமை என்ற பண்பே கனவை நிர்ணயிக்கிறது. கனவிலிருந்து விழித்தால் கனவில் கண்டவை அனைத்தும் இல்லாமல் போய்விடுகிறது. தூக்கத்திலிருந்து விழிக்கும் பொழுது கனவின் இன்பமும் மறந்து விடுகிறது. அல்லது காணாமல் போய் விடுகிறது. அதுபோலவே இறையனுபூதி நம்முள் ஏற்படும்பொழுது விழிப்பு நிலையும் மறந்துவிடுகிறது. 

உதாரணமாக- ஒரு உண்மையான பக்தன் கோவிலுக்குச் செல்கிறான். முதலில் கோவிலின் தெப்பக்குளம். அப்புறம் கோவிலின் கொடிமரம். அப்புறம் அர்த்த மண்டபம். பிறகு மகாமண்டபம். அப்புறம் கர்ப்பகிரகம். கடைசியாக இறைவனின் அர்ச்சாவதாரச் சிலை வடிவம்.

அதனைப் பார்க்கும்பொழுது அந்த இறை உணர்வில் அவன் தன்னை மறந்து தன்னுள் இறைவனைப் பார்க்கும் முயற்சியில் ஈடுபடுகிறான். அப்போது அவன் விழிப்பு நிலை மறைந்துவிடுகிறது.

மனிதனாக பிறந்த அவன், மற்ற உயிரினங்களைப் பற்றி ஆலோசிக்கத் தொடங்கினான. உடலில் உறைந்திருக்கும் ஆன்மாவில் இறைவன் இருப்பதை எல்லா உயிரினங்களிலும் காண்கிறான். சத் சித் ஆனந்த மயமான பரம்பொருள் ஒன்றே. இதையே வன் நான் காண்டுகொண்டேன் என்ற பேரானந்த மகிழ்ச்சியில்  திளைக்கிறான். திகைப்புடன் உலகைப் பார்க்கிறான்.

____________


திசங்கரர், கடவுளைப் "பரிபூரண பரப்பிரம்மம்' என்கிறார். 

அதாவது- ஒரு பொருளில் இருந்து கொஞ்சம் விண்டு எடுத்துவிட்டால். அந்தப் பொருளில் குறை ஏற்படும். அதுவும் முழுமையிராது. இதுவும் முழுமையிராது. ஆனால் வெறுமையை அப்படி பிரிக்க முடியுமா..? பிரித்தாலும் அது முழுமையாகத் தான் இருக்கும். 

எனவேதான் ஆதிசங்கரர் கூறுகையில் பூரணத்திலிருந்து பூரணத்தைப் பிரித்தால் எஞ்சி நிற்பது பூரணமே என்கிறார்

கடந்த 70, ஆண்டுகளில்தான் விண்வெளி. இயற்பியல் ஆகியவை வியக்கத்தக்க வளர்ச்சி கண்டுள்ளன அதன்பின்னரே, விஞ்ஞானிகள் ஒருவாறாக முயன்று பிரபஞ்சம் எப்படி உருவாகியிருக்கக் கூடும் என்று விவரிக்க முனைந்துள்ளனர். 

விஞ்ஞானிகள் கூறியதை முன்பே பார்த்தோம். அவர்கள் கூற்றுப்படி- 

ஆதியில் எங்கும் வெறுமை இருந்தது பலகோடி பலகோடி கோடி.. கோடி மைல்கள் தூரம் எங்கும் வெறுமை தான் (எந்தப் பொருளும் இல்லாத எந்த அளவு கோல் கொண்டும் அளக்க முடியாத அந்த வெட்ட வெளியை முடிவற்றது என்ற பொருளில் "அனந்தம்' என்கிறது வேதம். 

அதனை உருவகித்து அனந்த பத்மநாபன். அனந்த கிருஷ்ணன், அனந்த ராமன் என்றெல்லாம் பெயரிட்டு அழைக்கின்றனர்.) 

இப்படி எங்கும் வெறுமை பரவியிருந்த நிலையில் எல்லா இடத்திலும் ஒரு மெல்லிய அழுத்தம் பரவியது. பின்னர் இது வலுப் பெற்றது ஒருநாளில் அல்ல. அதற்கும்கூட எத்தனையோ ஆண்டுகள் ஆயின. அதன் பின்னர் அந்த அழுத்தம் காரணமாக ஒரு பிரம்மாண்டமான வெடிப்பு ஏற்பட்டது.
 
அதாவது- வெற்றிடத்தில் அளவிட முடியாத அழுத்தம் ஏற்பட்டு கோடானு கோடி அணுகுண்டுகள் வெடித்ததுபோல பிரம்மாண்டமாக அது வெடித்து சிதறியது. அந்த வெடிப்பில் இருந்து கிளம்பிய அனல் பிழம்புகள் எட்டு திசைகளிலும் கோடானு கோடி மைல்கள் தொலைவிற்கு  கண்டபடி சிதறின. 

அப்படி சிதறியவை காலப் போக்கில் இதற்கும் கோடானுகோடி ஆண்டுகள் பிடித்தன. குளிர்ந்து இறுகின. இவையே சூரியனாகவும் நட்சத்திரங்களாகவும் ஆயின.

இதிலிருந்துதான் படிப்படியாக பிரபஞ்சம் உருவாக ஆரம்பித்தது என்கிறது விஞ்ஞானம். 

இது அறிவியல் பெருவெடிப்பு கொள்கை, படைப்பின் எல்லா நிலைகளையும் இந்த கோட்பாட்டால் விளக்க முடியவில்லை என்றாலும் ஒரு வெளிப்பூச்சு கொடுத்துள்ளது. இது ஓரளவு ஏற்கத்தக்க சித்தாந்தம் என்ப தால் இதற்கு அறிவியல் "பெரு வெடிப்பு கொள்கை' என்று பெயரிட்டுள்ளது.

சிருஷ்டி, (படைப்பு) பற்றி வேதங்கள் என்ன சொல்கின்றன..?ஆதியில் எங்கும் வெறுமை இருந்தது. இருள் இருந்தது. பிறகு எல்லா இடங்களிலும் ஒரு மெல்லிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டது.

(இதனை "பிரஞ்ஞை' என்ற சொல்லால் வேதம் குறிப்பிடுகிறது) கற்பனைக்கு எட்டாத கோடி கோடி கோடிமைல்கள் தூர பிரஞ்ஞைக்கு தன் தனிமையைக் கண்டு உள்ளூர ஓர் உறுத்தல் ஏற்பட்டது. 

அதனால் தன்னிலிருந்தே எல்லாவற்றையும் அது உண்டாக்கியது. இவ்வாறு விவரிக்க முற்படுகிறது வேதம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இறைத்தன்மை உண்டு என்கின்றனர் ஆன்மிகவாதிகள். ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு சிறு இம்மி (துணுக்கு) வெட்டவெளி உள்ளது. என்கிறது வேதம். இதனை பிரம்மம் என்கிறார். ஆதிசங்கரர் அனாதியானதை பரப்பிரம்மம் என்றும் ஜீவராசிகளை திருப்பிரம்மம் என்றும் கூறுகிறார். இவர் இதனை ஜீவாத்மா, பரமாத்மா என்கின்றனர் வேதாந்திகள். 

"சர்வம் பிரம்ம மயம் ஜெகத்' என்கின்றனர் அத்வைதிகள். மரணம் அடையும்போது இந்த வெட்டவெளி உடலிலிருந்து வெளியேறி எல்லையற்ற பெருவெளியுடன் கலந்து விடுகிறது. உயிருடன் உள்ள போதே உள்ளே இதனை உணர்ந்தவர்கள் பிரம்மஞானிகள் ஆகிறார்கள். புத்தர் இதனை உணர்ந்தவர் மகாவீரர். இதனை உணர்ந்தவர் ஆதிசங்கரர் ஏசுநாதர் மோசஸ் நபிகள் நாயகம் ஜாரதுஷ்டிரர் போன்றவர்களும் இதனை உணர்ந்தவர் களே, அவர்கள் கண்டதை விளக்கிச் சொல்ல அவர்களிடம் வார்த்தைகள் இல்லை.

எனினும் அவர்கள் எதையோ கண்டுள்ள னர் என உணர்ந்து மக்கள் கூட்டம் இனிப்பை மொய்க்கும் எறும்புகள்போல் இவர்களை மொய்த்தனர். இதை "பரிபூரண பரப்பிரம்மம்' என்கிறார் ஆதிசங்கரர். கைவல்யம் என்கிறார் மகாவீரர். பரலோக சாம்ராஜ்ஜியம் என்கிறார் இயேசு பிரஞ்ஞை என்கிறார் புத்தர்.  

அதாவது- புத்தர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். அவரது முகத்தை கண்டு பரவசமாகி அந்த வழியாக வந்த ஒருவர் அப்படியே அவர் காலில் விழுகிறார். அப்போது புத்தர் மெல்ல கண் திறந்து பார்க்கிறார்.

-தொடர்ந்து பார்ப்போம்!
செல்: 96599 69723