சுமார் 55 வயதுடைய ஒருவர் நாடியில் பலன் காணவந்தார். அவரை அமர வைத்து "என்ன காரியமாகப் பலனறிய வந்துள்ளீர்கள்' என்றேன்.

Advertisment

ஒரு பிரசித்தமான கோவிலில் குருக்களாக பணி செய்வதாக கூறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆறு மாதங்களுக்குமுன்பு எனது மகனுக்கு திருமணம் செய்துவைத்தேன். ஆனால் திருமணம் முடிந்த மூன்றாவது நாளிலேயே மருமகள் எனது மகனுடன் வாழ மறுத்து தனது பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள். அவள் எங்கள் வீட்டிற்கு திரும்பவந்து என் மகனுடன் சேர்ந்துவாழ வழி கேட்டுத்தான் தங்களை நாடிவந்தேன்'' என்றார்.

உங்கள் மகன் திருமண சமயத்தில் இருவரின் ஜாதகப் பொருத்தம், பத்துப் பொருத்தம், நட்சத்திரப் பொருத்தம் சரியாகப் பார்த்து தானே திருமணம் செய்துவைத்தீர்கள். மேலும் உங்களின் இந்தப் பிரச்சினைக்கு ஜோதிடர்களைப் பார்த்து ஏதாவது பரிகாரங்களை கேட்டு செய்திர்களா என்றேன்.

ஒரு பிரபலமான பெரிய ஜோதிடரிடம் இருவர் ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம் பார்த்தேன். இருவருக்கும் ராகு- கேது தோஷமுள்ளது. பத்துப் பொருத்தத்தில் ஏழு பொருத்தமுள்ளது. நட்சத்திர தோஷமில்லை என்று கூறி அந்த ஜோதிடரே திருமண முகூர்த்த நாளையும் கூறி விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் செய்யச் சொன்னார். 

Advertisment

அவர் கூறிய நாள், நேரத்திலேயே திருமணம் செய்துவைத்தேன். ஆனால் திருமணம் முடிந்த மூன்றாவது நாளிலேயே அவள் தன் பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள். முகூர்த்த நாளும், நேரமும் ஜோதிடர்கள் கூறிய பரிகாரங்களும் பலன் தரவில்லை என்றார்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இவன் தன் மருமகள், மகனுடன் சேர்ந்து வாழாமல் பிறந்த வீட்டிற்கு சென்றுவிட்டாள் என்று கூறி மருமகள், மகனுடன் சேர்ந்துவாழ வழி கேட்கின்றான். இந்த நிலைக்கு காரணத்தை கூறுகின்றேன் இவன் அறிந்துகொள்ளட்டும்.

Advertisment

இவன் திருமணம் செய்தபின்பு இவன் தாய்- தந்தையுடன் சேர்ந்து வாழ்ந்தானா? பெற்றவர்களை காப்பாற்றினானா என்று கேள். இவன் திருமணம் முடிந்தபின்பு தாய்- தந்தையை பிரிந்து சென்று தன் மனைவி வீட்டில்தானே வசித்தான். இப்போது இவன் பணி செய்யும் குருக்கள் வேலையும் இவன் மாமனார் பார்த்து, அவன் தான் செய்த வேலையை இவனுக்கு வாங்கிக் கொடுத்தான்.

தாய்- தந்தையை இவன் தம்பி, தங்கைதான் காப்பாற்றினார்கள். தன் உழைப்பில் சம்பாதித்த பணத்தால் பெற்றவர்களைக் காப்பாற்றாதவன் இவன். அவர்கள் இறந்தபோதுகூட இவன் உடன் இருக்கவில்லை. பெற்றவர்கள் இவனின் செயலை நினைத்து மனம் வெறுத்துதான் வாழ்ந்தார்கள்.

பெற்று வளர்த்த எங்களை மூத்த மகனும், அவன் மனைவியும் காப்பாற்றவில்லை. திருமணத் திற்குப்பின்பு தன் மனைவியுடன் எங்களைவிட்டு பிரிந்து சென்றுவிட்டான். ஒரு தந்தைக்கு மகன் செய்யவேண்டிய பித்ரு கடனை தீர்க்கவில்லை. முதுமையில் நாங்கள் படும் சிரமங்களையும், மனக்கஷ்டத்தையும் இவர்களும் தாங்கள் பெற்ற பிள்ளைகளால் இதேபோன்று அனுபவித்து வாழவேண்டும் என்று சாபமிட்டு இறந்தார்கள். தாய்- தந்தைவிட்ட சாபம் இவன் சந்ததியின் வாழ்வில் செயல்பட்டு அனுபவிக்கச் செய்கின்றது.

அகத்தியர் கூறியது உண்மைதான். என் திருமணத்திற்குப்பின்பு பெற்றவர்களைப் பிரிந்து என் மனைவி வீட்டில்தான் சென்று வசித்தேன். தாய்- தந்தையை காப்பாற்றவில்லை. அவர்கள் விட்ட சாபம் நீங்கி பாதிப்புவிலகி, எங்கள் மருமகள் என் மகனுடன் சேர்ந்து வாழ அகத்தியர் என்ன பரிகாரங்கள் சொல்கின்றாரோ அதைச் செய்கின்றேன் என்றார்.

பெற்ற தாய்- தந்தையை காப்பாற்றாமல் அவர்கள் விட்ட பித்ரு சாபம் இவன் மகன் வாழ்க்கையில் புத்திர தோஷமாக செயல்பட்டு, பாட்டன் விட்ட சாபம், இப்போது பேரனின் வாழ்வில் பாதிப்பைத் தருகின்றது. பெற்ற தந்தைக்கு சோறு போடாத இவனுக்கு தன் மகன் சம்பாத்தியத்தில் சாப்பிடமுடியாமல் சேர்ந்து வாழமுடியாமல் தடுக்கின்றது.

பித்ரு சாபம் நீங்க பலன் தராத பரிகாரங்களை திதி, தர்ப்பணம் எவ்வளவு பணம் செலவழித்து எங்கெங்கோ அலைந்து செய்தாலும் சாபம் தீராது. பித்ரு சாபம் ஐந்து தலைமுறைக்கு பலவிதமான முறைகளில் தீமையான பலன்களைத் தந்து அனுபவிக்கச் செய்துவிடும் நடைமுறையில் ஒருவருக்கு செய்த பாவத்தையும் அதனால் உண்டான சாபத்தையும் அதேபோன்று நடைமுறை வாழ்வில் அனுபவித்துதான் நிவர்த்தி செய்ய வேண்டும்.

இவன் மகனுடன் மனைவி சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றால் மனைவி கூறியபடி இவன் மகனை அவள் வீட்டிற்குச் சென்று அவளுடன் சேர்ந்து வாழ்ச்சொல். வாழ மறுத்தாள், மகனைவிட்டு அவள் விலகிச் சென்றுவிடுவாள். மகனுக்கு எத்தனை திருமணம் செய்து வைத்தாலும் இதே நிலைதான். 

மனைவி, குடும்பம் வேண்டுமென்றால் தாய்- தந்தையைப் பிரிந்து வாழவேண்டும். பெற்றவர்கள்தான் முக்கியம் என்றால் மனைவியைப் பிரிந்து வாழவேண்டும். சாப நிவர்த்திக்கு இதுதான் வழி என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.                            

செல்: 99441 13267