நாடி ஜோதிட விதிகள் (ஓலைச்சுவடி ஜோதிடம் அல்ல) என்பது ஒரு கிரகம் (அ) பாவாதிபதி நின்ற நட்சத்திராதிபதியை வைத்து பலன் கூறும்முறை எனப் பொதுவில் கூறினாலும், பராசரரின் ஜோதிட விதிகளையும் உள்ளடக்கியதுதான் என உறுதியாகக் கூறமுடியும்.

Advertisment

ப் எந்த லக்னமாயினும், குருவும், சுக்கிரனும் சஷ்டாஷ்டகமாக (6, 8 இடங்களில்) இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின், இரண்டு கிரகங்களின் காரகத்துவமும் கெடும்.

Advertisment

ப் சாயா கிரகத்துடன் முன் (அல்லது) பின் இரண்டு பாகைக்குள் இருக்கும் கிரகத்தின் காரகத்துவம் கெடும்.

ப் சாயா கிரகத்திற்கு 6 (அல்லது) 8-ல் ஒரு கிரகம் இருந்தாலும், (அல்லது) அவ்வாறு உள்ள கிரகத்தின் நட்சத்திராதிபதி மறைந் தாலும், அந்தக் கிரகத்தின் காரகத்துவம் பாதிக்கப்படும்.

Advertisment

ப் ஒரு கிரகம், ராசி சந்தியில் முன் (அல்லது) பின் இரண்டு பாகைக்குள் இருப்பின், அந்தக் கிரகம் பலமிழக்கும்.

ப் ஒரு கிரகம் பகை (அல்லது) நீசம் பெற்று மறைவு ஸ்தானங்களில் (6, 8, 12) இருப்பின் பலமிழக்கும்.

ப் ஒரு கிரகம் நின்ற நட்சத்திராதிபதி, பகை, நீசம் பெற்றாலும், (அல்லது) மறைவு ஸ்தானங்களில் இருந்தாலும் பலமிழக்கும்.

ப் கேது நட்சத்திரத்தின் முதல் பாதத் திலும் புதன் நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தில் இருந்தாலும், அந்தக் கிரகம் பலமிழக்கும்.

ப் நீச ராகுவுக்கு, 6 (அல்லது) 8-ல் எந்தக்கிரகம் இருந்தாலும், அந்தக் கிரகத்தின் காரகத்துவம் பாதிக்கப்படும்.

ப் லக்னப் புள்ளி அமைந்த நட்சத் திராதிபதி நீசம் பெறக்கூடாது. 11 லக்னாதிபதி நின்ற நட்சத்திராதிபதிகளாக, சூரியன், சந்திரன், குரு, சுக்கிரன் அமைந்து, ஆட்சி, உச்சம் பெற்றால், மிகச் சிறப்பான யோகம்.

ப் நீசம்பெற்ற கிரகத்தின் சாரத்திலுள்ள கிரகமும் பலன் இழக்கும்.

ப் லக்னம் நின்ற நட்சத்திராதிபதி. லக்னாதிபதி நின்ற நட்சத்திராதிபதி, ஜென்ம நட்சத்திராதிபதி, மூவரில் இருவர் கேந்திர, கோணத்தில் இருப்பினும் (அல்லது) ஆட்சி, உச்சம் பெற்றாலும் சிறப்பான யோகம்.

ப் ராகு நின்ற ராசியாதிபதி, பகை, நீசம் (அல்லது) மறைந்தாலோ, வாழ்வில் கஷ்டம் உண்டு. கடுமையான போராட்டங்கள் இருக்கும்.

ப் சாயா கிரகத்திற்கு சஷ்டாஷ்டகமாக 6 இடங்களில் சூரியனோ (அல்லது) சந்திரனோ இருப்பின், புத்திர தோஷமே புத்திர பாக்கியம் இல்லை என கருதக்கூடாது புத்திர தோஷம் என எடுத்துக்கொள்ள வேண்டும்.

ப் ராசி சந்தியில் லக்னப் புள்ளி (அல்லது) லக்னாதிபதி (அல்லது) ராசியாதிபதி (அல்லது) ஜென்ம நட்சத்திராதிபதி அமைவது தகாது (தவறு).

ப் சூரியன், சந்திரன், செவ்வாய், இவர்களில் இருவர் ஒருவருக்கொருவர் திரிகோணத்தில் (1, 5, 9) இருப்பின் யோகமே.

ப் சூரியன், செவ்வாய், சனி, லக்னாதிபதி யாகி, 3, 6, 10, 11-ல் இருப்பின் வாழ்க்கையில் தடுமாற்றம் இருப்பினும், தடைகளையும் விலக்கி, யோகமாக்குவதாகவே இருக்கும்.

ப் லக்னம் (அல்லது) ராசி, வர்கோத்தமமாகி சுப கிரகப் பார்வை பெற்றால், தசா புக்திக்கு ஏற்ப மிகப்பெரிய பொருளாதார உயர்வு உண்டு.

ப் சாயா கிரகத்திற்கு. 8 (அல்லது) 12-ல் குரு இருப்பின், தசாபுத்திக்கு ஏற்ப செல்வ இழப்பு ஏற்படும் இறுதிக் காலம் கடினமானதாகவே இருக்கும்.

ப் சிறைவாசமோ (அல்லது) விடுத லையோ காண 1, 3, 6, 8, 12-ஆம் பாவங்களின் சீரிய ஆய்வும், தசாபுக்தி, கோட்சாரமும் (Planetary Transits) தேவை. 

ப் மேஷ லக்னமாகி களத்திர ஸ்தானத்தில் (7-ஆம் வீடு) சுக்கிரன் இருந்து, அந்த சுக்கிரனுக்கு 6 (அ) 8-ல் சாயா கிரகம் இருப்பின், குடும்பப் பிரிவு (அ) விவாகரத்து ஏற்பட அதிக சாத்தியம் உண்டு.

ப் மேஷ லக்னமாகி, சூரியன், சந்திரன், செவ்வாய், குரு. இவர்களில் இருவர் கேந்திர, கோணத்தில் இருப்பின், அரசு, அரசியலால் ஆதாயம் உண்டு. ஆயினும், இவர்களுடன், புதன், சனி, சாயா கிரகச் சேர்க்கை பார்வைக் கூடாது

ப் மேஷ லக்னமாகி, சூரியன்ஆட்சி பெற்று, அதற்கு சம சப்தமமாக (7-ஆமிடத் தில்) சந்திரன் (அல்லது) குரு இருப்பினும் (அல்லது) சந்திரன் குரு இணைவு இருப்பினும், பொருளாதாரத்தில் மிகுந்த உயர்வு உண்டு.

ப் மேஷ லக்னமாகி, சுக்கிரன், மிருகசீரிட (மிருகசீரிஷம்) நட்சத்திரத்தின் இரண் டாம் பாதத்தில் இருப்பின் இருதார யோகம் நிச்சயம்.

ப் ரிஷப லக்னமாகி, சூரியன், புதன், சுக்கிரன், சனி, இவர்களில் இருவர் கேந்திர, கோணத்தில் இருப்பின், பொருளாதார உயர்வு நிச்சயம் ஆயினும், சாயா கிரகச் சேர்க்கையோ (அல்லது) பார்வையோக் கூடாது.

ப் மிதுன லக்னமாகி, புதன், சுக்கிரன், சனி இவர்களில் இருவர் உயர் கேந்திர, கோணத்தில் இருப்பின், பொருளாதார உயர்வு உண்டு. ஆயினும், இவர்களுக்கு சூரியன், குரு, செவ்வாய், சாயா கிரகத்தின் பார் வையோ (அல்லது) சேர்க்கையோ கூடாது.

ப் மிதுன லக்னமாகி, குரு, சனி சேர்க்கை எங்கு இருப்பினும் வாழ்க்கைத் துணையால் அவமானம் உண்டு.

ப் கடக லக்னமாகி, குரு, செவ்வாய், சந்திரன் இவர்களில் இருவர், கேந்திர கோணத்தில் இருப்பின், அரசு- அரசியல் ஆதாயம் உண்டு. ஆயினும், புதன், சுக்கிரன், சனி, சாயா கிரகச் சேர்க்கை (அல்லது) பார்வை தகாது (கூடாது).

ப் கடக லக்னமாகி. அஷ்டமத்தில் (8-ஆம் வீடு) (அல்லது) விரையத்தில் (12-ஆம் வீடு) சூரியனுடன் சந்திரன் இணைவு இருப்பின், அது ஏழ்மையைக் குறிக்கும்

ப் கடக லக்னமாகி, மூன்றாம் இடத்தில், செவ்வாயுடன் ராகு இணைவு இருந்து, இவர்கள் எந்த நட்சத்திர சாரம் பெற்றாலும் திருமணம் இல்லை.

ப் சிம்ம லக்னமாகி, சனிபகவான், லக்னத்தையோ (அல்லது) லக்னாதிபதியையோ பார்த்தால், நீடித்த காலமான வியாதி  (CHRONIC DISEASE) உண்டு. 

ப் சிம்ம லக்னமாகி, சூரியன், புதன், குரு, சுக்கிரன், இவர்களில் இருவர், கேந்திர, கோணத்தில் இருப்பின், பொருளாதாரம் மற்றும் அதிகாரம் இவற்றில் உயர்வு உண்டு. ஆயினும், சனி மற்றும் சாயா கிரகச் சேர்க்கை (அல்லது) பார்வை கூடாது.

ப் கன்னி லக்னமாகி, களத்திர ஸ்தானத்தில் (7-ஆம் வீடு) செவ்வாயுடன் சுக்கிரன் இணைவு இருப்பின், எத்தனை திருமணம் செய்தாலும் சுகம் இல்லை. இவர்களுடன், சனி எவ்விதத்தில் தொடர்பில் இருப்பினும், இது மேலும் உறுதியாகும்.

ப் கன்னி லக்னமாகி, புதன், சுக்கிரன், சனி, இவர்களில் இருவர் கேந்திர, கோணத்தில் இருப்பின், பொதுஜனத் தொடர்பு, வியா பாரம் போன்றவற்றினால் உயர்வு உண்டு. ஆயினும், சூரியன், செவ்வாய், குரு, சாயா கிரகப் பார்வை- சேர்க்கைக்கூடாது.

ப் கன்னி லக்னமாகி, களத்திர ஸ்தானத்தில் சுக்கிரனுடன் சனி (அல்லது) செவ்வாய் இணைவு களத்திர தோஷமே.

ப் கன்னி லக்னத்திற்கு, மீனத்தில் புதன், குருவினுடைய சாரம் பெற்றால், இது மிகவும் தீது. திருமணத்தைத் தவிர்ப்பது நலம்.

ப் துலா லக்னமாகி, புதன், சுக்கிரன், சனி, இவர்களில் இருவர் கேந்திர, கோணத்தில் இருப்பின், நான்காம் பாவகக் காரகத்துவத்தில் உயர்வு உண்டு. ஆயினும், சூரியன், செவ்வாய், குரு, சாயா கிரகப் பார்வை (அல்லது) சேர்க்கைகூடாது.

ப் விருச்சிக லக்னமாகி, களத்திர ஸ்தானத்தில் (7-ஆம் வீடு), சுக்கிரன் இருந்து, அந்த சுக்கிரனுக்கு. 6 (அல்லது) 8-ல் சாயா கிரகம் இருப்பின், குடும்பப் பிரிவினை (அல்லது) விவாகரத்து உண்டு.

ப் விருச்சிக லக்னமாகி, சூரியன், சந்திரன், செவ்வாய், குரு இவர்களில் இருவர், கேந்திர கோணத்தில் இருப்பின், பொருளாதார உயர்வு உண்டு. ஆயினும், புதன், சுக்கிரன், சனி, சாயா கிரகப் பார்வையோ (அல்லது) சேர்க்கையோக் கூடாது.

ப் தனுசு லக்னமாகி, சூரியன், செவ்வாய், குரு இவர்களில் இருவர் கேந்திர, கோணத்தில் இருப்பின், அரசு, அரசிய-னால் லாபம் உண்டு. ஆயினும், புதன், சுக்கிரன், சனி சாயா கிரகப் பார்வை (அல்லது) சேர்க்கைக்கூடாது.

ப் மகர லக்னமாகி, புதன் சுக்கிரன், சனி, இவர்களில் இருவர் கேந்திர, கோணங்களில் இருப்பின், பொருளாதார முன்னேற்றம் உண்டு. ஆயினும், சூரியன், சந்திரன், செவ் (செவ்வாய்), குரு, சாயா கிரகப் பார்வை (அல்லது) சேர்க்கைக்கூடாது.

ப் கும்ப லக்னமாகி, களத்திர ஸ்தானத்தில் (7-ஆம் வீடு) செவ்வாயுடன் சுக்கிரன் இணைவு இருப்பின், ஏற்கெனவே திருமணமான பெண்ணை மணமுடிக்க வாய்ப்பு உண்டு.

ப் கும்ப லக்னமாகி, புதன், சுக்கிரன், சனி, இவர்களில் இருவர். கேந்திர கோணத்தில் இருப்பின், பொருளாதார முன்னேற்றம் உண்டு. ஆயினும், சந்திரன், செவ்வாய், சாயா கிரகச் சேர்க்கை (அல்லது)பார்வை கூடாது.

ப் மீன லக்னமாகி, சந்திரன், செவ்வாய், குரு இவர்களில் இருவர் கேந்திர, கோணத்தில் இருப்பின், பொருளாதார உயர்வும், அயல் தேசப் பிரயாணமும் (வெளிநாட்டுப் பயணம்) 

அமையும். ஆயினும், சூரியன், புதன், சுக்கிரன் சனி, இவர்களின் பார்வை (அல்லது) சேர்க்கைகூடாது.

செல்: 63824 12545