ராசிக்கு 3-ஆமிடத்தில் அமர்ந்த சனி
உங்கள் ராசி எதுவாக இருந்தாலும், சனி உங்கள் ராசிக்கு 3-ஆமிடத்தில் அமர்ந்தால், அது தைரிய, வீர்ய சனி எனப்படுவார்.
3-ஆமிடத்தில் அமர்ந்த சனி, உங்கள் ராசியின் 5-ஆமிடம், 9-ஆமிடம், 12-ஆமிடம் இவற்றை பார்வையிடுவார்.
சனி 5-ஆமிடத்தைப் பார்க்கும் காலம் நீங்கள் கலைத்துறையில் கால் பதிக்க வேண்டும் என நினைத்தால், அந்த யோசனையை சற்று தள்ளிவைக்கவும். ஏற்கெனவே கலைத்துறையில் இருப்பவர்கள் வந்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வாய்ப்புகள் வருவது ரொம்ப தடைப்படும். அதுபோல் பங்கு வர்த்தகம் ரொம்ப சுருக்கமாக இருத்தல் அவசியம். விளையாட்டு சம்பந்தம் கொண்டோர், இந்த சனி 3-ஆமிடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, உங்கள் விளையாட்டு வாய்ப்பு ஸ்தானத்தை உறுதிபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள். வாரிசு வேண்டி, மருத்துவ ஆலோசனை, நடவடிக்கை எடுக்க ஆவல் உள்ளவர்கள். இந்த சனியின் 2 1/2 வருட காலத்திற்குமுன் அல்லது பின் மாதங்களில் ஏற்பாடு பண்ணுங்கள். உங்கள் வாரிசுகளுடன் நெருக்கம் இராது. அதனால் அவர்கள் கல்வி, வேலை, பயிற்சியின் பொருட்டு வெளி இடங்கள் சென்றால் தடுக்க வேண்டாம். உங்கள் உடல்நிலையை முன்கூட்டியே முழு பரிசோதனை செய்வது அவசியம். காதல் விஷயம் வேண்டவே வேண்டாம். குலதெய்வக் கோவிலுக்கு வாய்ப்பு கிடைத்தால் உடனே சென்றுவிடுங்கள். இந்த கால கட்டத்தில், அறிவு, புத்தி இவை மங்கி, ஞாபக மறதியும் அதிகரிக்கும். இது சனிபகவான், உங்களின் 5-ஆமிடத்தைப் பார்க்கும் பலன். எனவே எதையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இதேபோல் சனிபகவான் உங்களின் 9-ஆமிடத்தையும் பார்ப்பதால், அதனாலும் சற்று சுறுசுறுப்பு குறையும். நம்பிக்கை பலமிழக்கும். கோவில் தரிசனம் குறையும். ஆராய்ச்சி மாணவர்கள், சனி 3-ல் அமரும்முன், ஆய்வுக் கட்டுரையை முடிக்க முயற்சி எடுங்கள். அவ்வாறு இயலாது போனால், சனி 3-ஆமிடத்தில் இருந்து நகரும் வரை, தள்ளிப்போடுங்கள். இதுபோல் வேள்வி, யாகம் செய்யும் அந்தண பெருமக்கள், எந்த வாய்ப்பையும் விட்டுவிடாதீர்கள். வாய்ப்புகள் வர
ராசிக்கு 3-ஆமிடத்தில் அமர்ந்த சனி
உங்கள் ராசி எதுவாக இருந்தாலும், சனி உங்கள் ராசிக்கு 3-ஆமிடத்தில் அமர்ந்தால், அது தைரிய, வீர்ய சனி எனப்படுவார்.
3-ஆமிடத்தில் அமர்ந்த சனி, உங்கள் ராசியின் 5-ஆமிடம், 9-ஆமிடம், 12-ஆமிடம் இவற்றை பார்வையிடுவார்.
சனி 5-ஆமிடத்தைப் பார்க்கும் காலம் நீங்கள் கலைத்துறையில் கால் பதிக்க வேண்டும் என நினைத்தால், அந்த யோசனையை சற்று தள்ளிவைக்கவும். ஏற்கெனவே கலைத்துறையில் இருப்பவர்கள் வந்த வாய்ப்புகளை கெட்டியாக பிடித்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் வாய்ப்புகள் வருவது ரொம்ப தடைப்படும். அதுபோல் பங்கு வர்த்தகம் ரொம்ப சுருக்கமாக இருத்தல் அவசியம். விளையாட்டு சம்பந்தம் கொண்டோர், இந்த சனி 3-ஆமிடத்திற்கு வருவதற்கு முன்பாகவே, உங்கள் விளையாட்டு வாய்ப்பு ஸ்தானத்தை உறுதிபடுத்தி வைத்துக்கொள்ளுங்கள். வாரிசு வேண்டி, மருத்துவ ஆலோசனை, நடவடிக்கை எடுக்க ஆவல் உள்ளவர்கள். இந்த சனியின் 2 1/2 வருட காலத்திற்குமுன் அல்லது பின் மாதங்களில் ஏற்பாடு பண்ணுங்கள். உங்கள் வாரிசுகளுடன் நெருக்கம் இராது. அதனால் அவர்கள் கல்வி, வேலை, பயிற்சியின் பொருட்டு வெளி இடங்கள் சென்றால் தடுக்க வேண்டாம். உங்கள் உடல்நிலையை முன்கூட்டியே முழு பரிசோதனை செய்வது அவசியம். காதல் விஷயம் வேண்டவே வேண்டாம். குலதெய்வக் கோவிலுக்கு வாய்ப்பு கிடைத்தால் உடனே சென்றுவிடுங்கள். இந்த கால கட்டத்தில், அறிவு, புத்தி இவை மங்கி, ஞாபக மறதியும் அதிகரிக்கும். இது சனிபகவான், உங்களின் 5-ஆமிடத்தைப் பார்க்கும் பலன். எனவே எதையும் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.
இதேபோல் சனிபகவான் உங்களின் 9-ஆமிடத்தையும் பார்ப்பதால், அதனாலும் சற்று சுறுசுறுப்பு குறையும். நம்பிக்கை பலமிழக்கும். கோவில் தரிசனம் குறையும். ஆராய்ச்சி மாணவர்கள், சனி 3-ல் அமரும்முன், ஆய்வுக் கட்டுரையை முடிக்க முயற்சி எடுங்கள். அவ்வாறு இயலாது போனால், சனி 3-ஆமிடத்தில் இருந்து நகரும் வரை, தள்ளிப்போடுங்கள். இதுபோல் வேள்வி, யாகம் செய்யும் அந்தண பெருமக்கள், எந்த வாய்ப்பையும் விட்டுவிடாதீர்கள். வாய்ப்புகள் வர தடை உண்டு. வெகுதூரப் பயணங்களில் சரியாக திட்டமிட வேண்டும். உயர் கல்வி சார்ந்து வெளிநாடு செல்லும் மாணவர்கள், மனதளவில் மற்றும் தரவுகள் அளவில் மிக சரியான ஏற்பாட்டுடன் இருத்தல் அவசியம். ஏனெனில் சனிக்கு ரொம்ப அலைச்சல் பிடிக்காது. ஒரு இடத்தில் சோம்பி இருப்பது அவர் மிக விரும்பக் கூடியதாகும். உங்கள் தொழிலில் வெளிநாட்டு பண பரிவர்த்தனை இருப்பின், அது சரியான நேரத்தில் கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். தாமதமாகக் கிடைத்தால் அதற்குரிய மாற்று வழியை தயாராக வைத்திருக்க வேண்டும்.
சனி உங்கள் ராசியின் 3-ஆமிடத்தில் அமர்ந்து, ராசியின் 12-ஆமிடத்தைப் பார்ப்பார். இதன்மூலம் உங்கள் செலவைக் குறைப்பார். இதனால் உங்கள் வீட்டு விசேஷங்களை மிக ஆடம்பரமாக, நன்கு செலவு செய்யலாம் என்ற திட்டமே வேண்டாம். சனி பண்ணவிட மாட்டார். அதுபோல் நாலு இடத்துக்கு போவோம். ஊர், கோவிலை சுற்றி பார்த்து நல்லா என்ஜாய் பண்ணுவோம் என்று யோசனை திட்டம் போட்டீர்கள் என்றால், எல்லாம் அம்பேல்தான். ஒரு பக்கம் போக வேண்டாம்.
வீட்ல இரு என்று சனி கடுப்படித்து விடுவார். சனி, 5, 9, 12-ஆம் இடங்களைப் பார்ப்பதால், கண்டிப்பாக கல்வி சம்பந்த பயணங்களையும், பக்தி சார்ந்த யாத்திரைகளையும் மட்டுப்படுத்துவார். அதனால் இந்த திட்டமுள்ளவர்கள் சனி 3-ஆமிடத்திற்கு வருவதற்குமுன் அல்லது பின் நேரத்தில் நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். அதனால் முதலீடு விஷயங்களிலும் இதையே பின்பற்றுங்கள். இதேமாதிரி பங்களா கட்டுவது, நல்ல கட்டில் மெத்தை வாங்குவது, இரகசிய நடவடிக்கைகள் என இதெல்லாம் தவிர்த்துவிடுங்கள். சனிக்கு புடிக்கவே பிடிக்காது.
3-ல் சனி இருந்து, மூளையை சுருக்கி, தர்ம சிந்தனையை குறுக்கி, பயணத்தைத் தடுத்து, ஒருமாதிரி லூசுப்பயல் மாதிரி ஆக்கிவிடுவார். அதனால் எதையும் சரியான திட்டத்தோடு, குறுகிய வட்டத்துக்குள் இருக்கிற மாதிரி வாழ்வை வடிவமைத்துக்கொள்ளுங்கள். ஒப்பேற்றி விடலாம்.
திருநாறையூர் சனிபகவானை வணங்கவும்.
ராசிக்கு 4-ஆமிடத்தில் சனி தரும் பலன்
நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும், உங்கள் ராசிக்கு, 4-ல் சனி வந்து அமரும்போது, நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள். 4-ஆமிட சனி அர்த்தாஷ்டமச் சனி எனப்படும்.
உங்கள் ராசிக்கு 4-ல் அமர்ந்த சனி, உங்களின் 6, 10-ஆமிடங்களைப் பார்ப்பார்.
இதில் 6-ஆமிடம் எனும் ருண, ரோக, எதிரி ஸ்தானத்தைப் பார்ப்பது நல்லதுதான். இதனால், சனிபகவான் 4-ல் அமர்ந்தவுடன் உங்களின் வெகுகால கடன்கள் அடைந்துவிடும். இதுபோல், ரொம்ப நாளாக கஷ்டப்பட்டு வந்த நோய் குணமாகும். எனவே யாருக்கெல்லாம், வெகு காலமாக இம்சித்துக்கொண்டிருந்த நோய் இருக்கிறதோ, அவர்கள், உங்கள் ராசிக்கு 4-ல் சனி அமர்ந்தால், சின்னதாக வைத்தியம் பார்த்தாலும், முழுமையாக நோய் குணமாகிவிடும். இதனை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. சனி கர்மகாரகர். அவர் அவரின் காரக வீடுகளான 6, 10-ஆமிடத்தைப் பார்ப்பதால், செமத்தியாக வேலை வாங்குவார். அந்த கடுமையான உழைப்பே, உங்கள் நோயை போக்கிவிடும். அவ்வளவு ஏன் நோயை பற்றி யோசிக்க நேரமிருக்காது. இதுபோல் எதிரிகளிடம் எதிர்ப்பு காட்டவோ, சண்டையிடவோ நேரம் இருக்காது. அதனால் எதிரிகளும் இருக்க மாட்டார்கள்.
10-ஆமிடத்தைப் பார்க்கும் சனி, தொழிலை, தன் சொந்த காரக ஸ்தானத்தை கெடுக்க மாட்டார். ஆனால் சுருக்குவார். பெரிய பரப்பளவில் தொழில் செய்தவர்கள் சின்ன இடத்துக்கு மாற்ற வேண்டிவரும். தொழில் கெடாது. ஆனால் கௌரவம் கெடும்.
தொழிலின் நிலை வேக வேகமாகயின்றி, மெதுவாக நடக்கும்.
இதனால், உங்களுக்கு மனச்சோர்வு ஏற்படுவதைத் தடுக்க இயலாது. இது உங்கள் சொந்த, ஜென்ம ராசியை சனி பார்ப்பதனால் வந்த விளைவாகவும் இருக்கலாம். தொழில் சுணக்கம், மன சுருக்கம் தரும். அதனால் எப்போதும் சோம்பேறி பயலாக, மன இறுக்கத்துடன் திரிவீர்கள். எப்படி இருந்த ஆளு, இப்படி ஆகிட்டாரே என பார்ப்பவர் அங்கலாய்ப்பர். மேலும் அதிக வேலைப்பளுவால், சரியாக குளிக்கவும் முடியாது. இது ஏனெனில், சனி பார்த்த இடத்தை அழுக்கு மூட்டையாக்கிவிடுவார். முகத்தில் பொலிவும் போய்விடும்.
சனி 4-ஆமிடத்தில் அமர்ந்து, உங்களை ஒரு வழியாக்கிவிடுவாரே தவிர, உங்கள் வேலை, தொழிலுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படுத்த மாட்டார். வேலை சரியாக அமையாதவர்கள், தொழில் கைவிட்டு போய்விடுமோ என அச்சம்கொண்டு உள்ளவர்கள், இந்த சனி 4-ல் அமர்ந்தால் அதைப்பற்றி பயப்படாதீர்கள். நீங்கள் பெரிய ஆளாக, கௌரவமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்துவிடுங்கள். அதெல்லாம் சனி தரமாட்டார். நல்ல உழைப்பாளியாக மட்டுமே இருக்கவிடுவார். சனி ராசியை பார்ப்பதால், உழவாரப் பணி செய்தால், நன்றாக இருக்கும்.
ஏரிக்குப்பம் சனீஸ்வரரை வணங்குவது நல்லது.
ராசிக்கு 5-ஆமிடத்தில் சனி அமர்வு
உங்கள் ராசி எதுவாக இருந்தாலும், ராசிக்கு 5-ஆமிடத்தில் அமர்வது, பூர்வபுண்ணிய சனியாகும். 5-ஆமிடத்தில் அமர்ந்த சனி, உங்கள் ராசியின் 7, 11, 2-ஆமிடங்களைப் பார்வையிடுவார்.
7, 11, 2-ஆமிடம் இது மூன்றுமே, உங்களின் குடும்ப வாழ்க்கையை குறிக்கிறது. மேலும் 11, 2-ஆம் பணவசதியைக் குறிக்கிறது.
ஆக, உங்கள் ராசியின் 5-ஆமிடத்திற்கு சனி வருவதற்கு முன், திருமணத்தை நடத்தி முடிக்க முயற்சி எடுத்துவிடுங்கள். இல்லையெனில், அந்த 21/2 வருடமும் திருமண விஷயம் தாமதமாகி, குடும்பம் எனும் அமைப்பு உண்டாக தடை ஏற்படும். அதுபோல் உங்கள் வியாபார எண்ணத்தையும், சனி 5-ல் அமர்வதற்கு முன்னே நடைமுறை படுத்துங்கள். கூடவே உங்கள் வணிக பங்குதாரர் தேவையெனில், முன்கூட்டியே ஏற்பாடு பண்ணிவிடுங்கள். இதுபோல் வழக்குங்கள் இருப்பின், கூடியமட்டும் சமாதானமாக பேசி, முடிவு கட்டுங்கள். இல்லையெனில், சனி பார்வை, வழக்கை இழுத்துக்கொண்டே போய் முடிக்கவிடாது. இதுபோல் நீங்கள் அரசியலில் இருந்தாலும், உங்கள் கூட்டணி ஆட்களை பற்றி நன்கு விசாரித்து, தீர்க்கமான முடிவுஎடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 7-ஆமிடம் என்பது ஒரு கூட்டாளி ஸ்தானம்.
எனவே வாழ்க்கையின் கூட்டாளியான கணவன்- மனைவியிடையே எந்த பிரச்சினை மனதிற்குள் ஓடினாலும், சனி 5-ஆமிடத்திற்கு வருவதற்குள் பேசி, சரி செய்துகொள்ளுங்கள். இல்லாவிட்டால் திருமண வாழ்க்கை ஓட்டம் இன்றி, ஸ்தம்பித்துவிடும். இதனை சனி செவ்வனே செய்வார்.
உங்கள் ராசியின் 5-ல் அமர்ந்த சனி, உங்களின் 11-ஆமிடத்தைப் பார்க்கிறார்.
எனவே நீங்கள் ஆசைப்படாமல் இருந்தால் பிழைத்தீர்கள். அசத்து மறந்து ஆசைப்பட்டால் சனி, உங்களை பிழிந்து எடுத்துவிடுவார். இருக்கிறதை வைத்து திருப்தியாக வாழக் கற்றுக்கொள்ளுங்கள். இது வாழ்வின் எல்லா தளத்திலும் இருப்பவர்களுக்கும் பொருந்தும். நீங்கள் அரசியல்வாதியாக இருக்கலாம். மாபெரும் சமையல் வல்லுனராக இருக்கலாம். பகுதி தலைவராக அல்லது கம்பெனிகளின் நிர்வாக பொறுப்பு என எதில் வேண்டுமானாலும் உயரிய பொறுப்பில் இருக்கலாம். ஆனாலும், லட்சியத்தை அடைந்தே தீருவேன் என ஒத்தைக்காலில் அடம் பிடித்தால், சனிபகவான் வெறுப்பாகி காலை உடைத்துவிடுவார்; ஜாக்கிரதை.
அடுத்து 11-ஆமிடத்தைப் பார்த்து, 2-ஆமிடத்தையும் பார்க்கிறார். 11-ஆமிடம் லாபஸ்தானம். 2-ஆமிடம் பண ஸ்தானம்.
ஆக, சனி இரண்டு இடங்களையும் பார்த்து, அதனை குறுக்குகிறார். எனவே பண புழக்கம் என்பது ரொம்ப லிமிட்டாகவே இருக்கும். எனவே சனி, உங்கள் ராசிக்கு 5-ல் வரும் முன்னாலேயே, பணம் வரும் வழிகளை, நிரந்தரமாக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதனால் பண வரவு சீராக வந்துகொண்டிருக்கும்.
சனி, 2 மற்றும் 7-ஆமிடத்தைப் பார்க்கிறார்.
இரண்டும் குடும்பம், திருமணம் சம்பந்தப்பட்டது. எனவே இந்த காலத்தில் திருமண வாழ்வு, குடும்பம் இரண்டையும் சேதாரம் இல்லாமல் பேலன்ஸ்ட்டாக பார்த்துக்கொள்ளுங்கள். சனி 11, 7-ஆமிடத்தையும் பார்ப்பதால், சனி 5-ஆம் வீட்டிற்கு வருவதற்குமுன் திருமணம் மற்றும் மறுமணத்தை நடத்தி விடுங்கள். அல்லது சனி விலகியவுடன் நடத்த முடிவு எடுங்கள். 5-ல் அமர்ந்த சனி, தனது பார்வைமூலம் இவ்விஷயங்களில் நிறைய தடைகளை உண்டாக்கிவிடுவார்.இந்த காலகட்டத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்.
5-ல் அமர்ந்த சனி, வணிகத்தை சுருக்கு வதால், லாபத்தை மட்டுபடுத்தி, பண வரவை குறைப்பார். அதனால் 5-ல் சனி வந்து அமர்வதற்கு முன்னால், முடிந்தால் வியாபாரம், தொழிலை உங்கள் குடும்ப உறுப்பினர்களை வைத்து நடத்தி, நீங்கள் மேற்பார்வை செய்யுங்கள். இவ்வாறாக சனியை சமாளித்துவிடலாம்.
வழுவூர் சனீஸ்வரரை வணங்கலாம்.
(தொடர்ச்சி வரும் இதழில்...)