புராண கதாபாத்திரங்களில் ஓஷோவிற்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் பகவான் கிருஷ்ணர்தான். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
எனினும், கிருஷ்ணரை ஓஷோ தலையில் வைத்து கொண்டாடுவதற்கு ஒரு மிகப்பெரிய காரணம் இருக்கிறது.
அது என்ன?
கிருஷ்ணருக்கென இருக்கக் கூடிய தனித்துவ குணம் அது. "அந்த குணத்தை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு, உலகத்திலுள்ள மனிதர் கள் அனைவரும் வாழ வேண்டும்'' என்று கூறுகிறார் ஓஷோ.
கிருஷ்ணரின் அந்த தனித்துவ குணம் என்ன?
பொதுவாகவே கிருஷ்ணரை ஒரு வரையறைக்குள் வைத்து அடக்கிவிட முடியாது. அவர் ஒரு சிமிழுக்குள் அடங்கியிருப்பவர் அல்ல. அவர் காற்றைப் போன்றவர். சுதந்திர மனம் கொண்டவர். கட்டுப்பாடற்றவர். சிறகடித்துப் பறக்கும் வேட்கை கொண்டவர். வாழ்க்கையை அனுபவித்து வாழ நினைப்பவர். இப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை எந்த புராணத்திலும் நம்மால் பார்க்க முடியாது.
"இப்படித்தான் வாழ வேண்டும். வேறு மாதிரி வாழக்கூடாது'' என்ற சிந்தனை கொண்டவர் அல்ல கிருஷ்ணர். எப்படி வேண்டு மானாலும் வாழ்ந்து, வாழ்க்கையின் பல பரிமாணங்களைக் கண்டவர் கிருஷ்ணர். அவரைப்போன்ற ஒரு காதலனை எந்த புராணத்திலாவது நாம் பார்த்திருக்கிறோமா?
பல பெண்கள் இதயத்தில் உயிரென நேசிக்கும் ஒரு காதல் சின்னமாக கிருஷ்ணரைத் தவிர, வேறு யாரையாவது எந்த புராண கதையிலாவது நாம் படித்திருக்கிறோமா? இல்லவே இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். ஆனால், அதே நேரத்தில்.... இளம்பெண்கள் விரும்பும் காதலனாகவோ, மனைவி விரும்பும் கணவனாகவோ மட்டும் அவர் நின்று விடவில்லை.
அதையும் தாண்டி அவர் ஒரு போர் வீரராகவும் இருந்தார். போர்க்களத்தில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருந்தார்.
எப்படி போர்புரிந்தால், வெற்றிக் கனியைச் சுவைக்க முடியும் என்பதைச் சிந்தித்து, மற்றவர்களை அதற்கேற்றவண்ணம் செயல்பட வைக்கும் குருநாதராக இருந்தார்.
எந்த நேரத்தில் கூரிய அம்பை அர்ச்சுனன் எய்தால், கர்ணன் உயிர் துறப்பான் என்பதைத் தெளிவாகக் கணிக்கக்கூடிய மகத்தான ஆற்றல் படைத்த தீர்க்கதரிசியாக இருந்தார்.
அனைத்திற்கும் அப்பால்.... எந்த விஷயத்தின்மீதும் பற்றற்ற ஞானியைப்போல கிருஷ்ணர் இருந்தார்.
எதனுடனும் இறுக ஒட்டிக்கொள்ளாத ஒரு பிறவியாக அவர் இருந்தார். வெற்றிகள் அவரை ஆணவம் கொள்ள வைக்கவில்லை. தன் அறிவை நினைத்து அவர் அகங்காரம் அடையவில்லை.
அனைத்தையும் அறிந்திருந் தாலும்... அவர் ஒரு பற்றற்ற முனிவருக்கு நிகராகவே நமக்கு முன்னால் காட்சியளித்தார்.
அதனால்தான் அவரை "கர்மயோகி' என்று ஓஷோ கூறுகிறார். பெண்களுக்கு மத்தியில் அவர் காதலன்...
வெற்றிக்கான சூத்திரத்தைக் கற்றுத் தரும் இடத்தில் அவர் ஒரு குருநாதர்... போர்புரியும் இடத்தில் அவர் ஒரு போர் வீரர்....
அனைத்து ஆற்றல்களும் இருந் தாலும், தன்னை வெற்று மனிதனாக காட்டிக்கொள்ளும் இடத்தில் அவர் ஒரு ஞானி...
மொத்தத்தில்...
"கர்மத்தைச் செய்துகொண்டிருக் கும் யோகி''.
கிருஷ்ணரைப் பற்றிய ஓஷோ வின் கணிப்பு இதுதான்.
"இந்த உயர் பண்புகள் படைத்த பகவான் கிருஷ்ணரைப் பின்பற்றி நடந்தால், வாழ்க்கை இனியதாக இருக்கும்...'' என்று ஓஷோ கூறுகிறார்
உறுதியான குர-ல்.
அது உண்மைதானே?