கவுதம புத்தரால் பெரிதும் கவரப் பட்டவர் ஓஷோ.
அவருடைய அருமைகளையும், பெருமைகளையும் பல இடங்கüலும் ஓஷோ பேசியிருக்கிறார்.
புத்தரின் ஒரு மகத்தான செயல் ஓஷோவைப் பெரிதும் கவர்ந்தது.
அது என்ன?
ஆடம்பர வாழ்க்கையை விட்டு புத்தர் வெüயே வந்ததுதான்...
அரண்மனை வாழ்க்கையைத் துறந்து விட்டு ஓடி வந்ததுதான்...
தன் தலையிலிருந்த மகுடத்தைக் கழற்றி வைத்து விட்டு வந்த உயர் செயல் தான்...
அரச வாழ்க்கையை வேண்டாமென விட்டெறிந்து விட்டு வருவது என்றால், அது சாதாரண விஷயமா?
கவுதம புத்தரைப் போன்ற ஞான நிலையை அடைந்த ஒரு மனிதரைத் தவிர, வேறு யாரால் அப்படிச் செய்ய முடியும்?
செல்வச்செழிப்பைத் துறப்பது என்பதை சாதாரண ஒரு மனிதனால் செய்ய முடியுமா?
கவுதம புத்தர்
அத்தகைய ஒரு காரியத் தைச் செய்ததால்தான் அவரை மகத்தான மனிதர் என்று நாம் நினைக்கிறோம்.
புத்தரின் அந்தச் செயலின் மூலம் மக்களுக்கு ஒரு மிகப் பெரிய உண்மையைக் கூறுகிறார் ஓஷோ.
அது என்ன?
"மகுடம் என்பது ஆணவத்தின் அடையாளம்... கவுரவத்தின் அடையாளம்... ஆடம்பரத்தின் ஆடையாளம்... பணத் திமிரின் அடையாளம்....
அதைக் கழற்றி வைத்து விட்டு, சாதாரண மனிதனாக புத்தர் வருகிறார் என்றால், அவர் ஞானத்தின் அடையாளம் என்று அர்த்தம்.
அவர் மகுடத்தை நீக்குவதன் மூலம், ஆணவத்தை நீக்குகிறார்... ஆடம்பரத்தின் சின்னத்தை நீக்குகிறார்... கவுரவத்தை நீக்குகிறார்...
எப்போது அவர் மகுடத்தைத் தன் தலையிலிருந்து கழற்றினாரோ, அப்போதே அவர் புதிய மனிதராக பிறப் பெடுத்து விட்டார்... கர்வமற்ற மனிதராக ஆகிவிட்டார்... தலைக்கனமற்ற மனிதராக ஆகிவிட்டார்... பகட்டான போக்குகüலிருந்து விடுதலை பெற்ற மனிதராக மாறி விட்டார்... பளபளப்பான வாழ்க்கையை விட்டெறிந்த ஞானியாக உருமாற்றம் பெற்றவராக ஆகி விட்டார்.
இப்போது நாம் காணும் கவுதம புத்தர் சாதாரணமானவர்... எüயவர்.... பணிவானவர்... பிறரிடம் யாசிப்பவர்... ஆணவ குணம் சிறிதும் இல்லாதவர்.... ஞானத்தின் உறைவிடமாக இருப்பவர்... ஆன்மீக உலகத்தில் வாழ்பவர்.... மக்கüன் கஷ்டங்களைத் தன் கஷ்டங்கள் என நினைப்பவர்....
தனக்குக் கிடைத்த செல்வச் செழிப்பில் மிதக்கக் கூடிய வாழ்க்கையை ஒரு இரவு வேளையில் வேண்டவே வேண்டாம் என்று ஒதுக்கி விட்டு, சாதாரண மனித வாழ்க்கையை வாழ்ந்ததால்தான் கவுதம புத்தர் காலத்தைக் கடந்து உலக மக்கüன் உள்ளங்கüல் நிரந்தரமாக உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
காவி ஆடைகள் அணிந்தவரெல்லாம் ஞானிகள் அல்ல.
நீளமாக தாடியை வளர்த்து விட்டாலே அவர்கள் ஞானிகள் அல்ல.
ருத்திராட்ச மாலையை அணிந்தவரெல்லாம் ஞானிகள் அல்ல.
வசதி நிறைந்த வாழ்க்கையை உதறிய... மகுடத்தை நீக்கி விட்டு வீதிக்கு வந்த... அதிசயப்
பிறவியான கவுதம புத்தர்தான் ஞானி... அவர் தான் உண்மையான துறவி... "
புத்தரைப் பற்றிய ஓஷோவின் இந்த கூற்றில் நூறு சதவிகிதம் உண்மை நிறைந் திருப்பதை நம்மால் உணர முடியும்.
அதனால்தான் கவுதம புத்தர் உலக மக்களால் மதிக்கப்படுகிறார்...கொண்டாடப் படுகிறார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/03/osho-2026-01-03-18-42-01.jpg)