ராமநவமி 14-4-2019
விகாரி வருடம் ராமநவமியுடன் தொடங்குகிறது. "நவம்' என்றால் புதியது. "ராம' என்ற பெயருக்கு என்ன பொருள்? (ரமயதி இதி ராம:) ரமிக்க, ரசிக்க, ஆனந்திக்க வைப்பவன். ஆக, வருட ஆரம்பமே ஆனந்தமாக விளங்குகிறது.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் வினோதமானது. மகா சிவபக்த இராவணேஸ்வரனை அழிக்க மகாவிஷ்ணு மனித உருவில் வந்த அவதாரம்.
எனவே அவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது. அம்பு, வில்லுடன்தான் காணலாம். (ஆந்திர பத்ராசலத்தில் சங்கு, சக்கரத்துடன் காணலாம்.) கண்ணன்போல் வினோத லீலைகள் நடத்திய தில்லை. சத்ய தர்ம சம்பன்னன்; ஏகபத்தினி விரதன் ராமன்.
ஒன்றுமறியா வேடனுக்கு நாரதர் ராமநாம உபதேசம் செய்தார். அவனால் கூற இயலவில்லை. "மராமரா' என்று கூறு என்றார். அவ்வாறே சொல்லி அவன் தவத்தில் ஆழ, அவனை புற்றே மூடியது. குருபக்தியாலும் ராமநாம மகிமை யாலும் அந்த வேடன் வால்மீகி மகரிஷி ஆனார். ராமர் சரிதத்தை 24,000 துதிகளில், வடமொழியில் இயற்றினார். இறுதியில் வால்மீகி மகரிஷி சென்னை திருவான்மியூர் சிவன் கோவில் பின்புறம் (சாலை நடுவே காணலாம்) சமாதியானார்.
சென்னை செய்த தவம் போலும்.
வால்மீகி மகரிஷியின் இராமா யணமும், வியாசரின் மகா பாரதமும் இதிகாசங்களா கின. பின்னர் கம்பர் அழகுத் தமிழில் இராமாயணம் எழுதி னார். துளசிதாசர் இந்தியில் "ராம சரித மானஸ்' என்று செய்துள்ளார். பலமொழிகளில் பல புலவர்கள் இராமாயணத்தை எழுதியுள்ளனர். தேசத்தந்தை மகாத்மா காந்தி ராமநாமப் பிரியர். அவர் இறுதி நேரத்திலும் "ஹே ராம்' என்று கூறியபடியே உயிரை விட்டார். சங்கீத தியாகராஜர், வடநாட்டு துளசிதாசர், கபீர்தாசர், ஆந்திர பத்ராசல ராமதாசர், மகாராஷ்டிர சமர்த்த ராமதாசர், கன்னட ஸ்வாமி ராமதாஸ் என யாவரும் ஆழ்ந்த ராமபக்தர்களே.
இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தார். அந்த சிவன் காசியில் மரிப்போரின் காதுகளில் ராமநாமம் ஓதி முக்தியடையச் செய்கிறார். ஆக, முக்தியளிக்கும் நாமம் ராமநாமம்!
பார்வதி தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் ஜபிப்பவளாம். ஒருநாள் நேரமின்மை காரணமாக அது முடியாமல்போக, என்ன செய்வதென்று சிவபெருமானிடம் கேட்டாளாம் பார்வதி தேவி. அதற்கு அவர், "ஸ்ரீராம ராமேதி ர
ராமநவமி 14-4-2019
விகாரி வருடம் ராமநவமியுடன் தொடங்குகிறது. "நவம்' என்றால் புதியது. "ராம' என்ற பெயருக்கு என்ன பொருள்? (ரமயதி இதி ராம:) ரமிக்க, ரசிக்க, ஆனந்திக்க வைப்பவன். ஆக, வருட ஆரம்பமே ஆனந்தமாக விளங்குகிறது.
மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் வினோதமானது. மகா சிவபக்த இராவணேஸ்வரனை அழிக்க மகாவிஷ்ணு மனித உருவில் வந்த அவதாரம்.
எனவே அவரிடம் சங்கு, சக்கரம் கிடையாது. அம்பு, வில்லுடன்தான் காணலாம். (ஆந்திர பத்ராசலத்தில் சங்கு, சக்கரத்துடன் காணலாம்.) கண்ணன்போல் வினோத லீலைகள் நடத்திய தில்லை. சத்ய தர்ம சம்பன்னன்; ஏகபத்தினி விரதன் ராமன்.
ஒன்றுமறியா வேடனுக்கு நாரதர் ராமநாம உபதேசம் செய்தார். அவனால் கூற இயலவில்லை. "மராமரா' என்று கூறு என்றார். அவ்வாறே சொல்லி அவன் தவத்தில் ஆழ, அவனை புற்றே மூடியது. குருபக்தியாலும் ராமநாம மகிமை யாலும் அந்த வேடன் வால்மீகி மகரிஷி ஆனார். ராமர் சரிதத்தை 24,000 துதிகளில், வடமொழியில் இயற்றினார். இறுதியில் வால்மீகி மகரிஷி சென்னை திருவான்மியூர் சிவன் கோவில் பின்புறம் (சாலை நடுவே காணலாம்) சமாதியானார்.
சென்னை செய்த தவம் போலும்.
வால்மீகி மகரிஷியின் இராமா யணமும், வியாசரின் மகா பாரதமும் இதிகாசங்களா கின. பின்னர் கம்பர் அழகுத் தமிழில் இராமாயணம் எழுதி னார். துளசிதாசர் இந்தியில் "ராம சரித மானஸ்' என்று செய்துள்ளார். பலமொழிகளில் பல புலவர்கள் இராமாயணத்தை எழுதியுள்ளனர். தேசத்தந்தை மகாத்மா காந்தி ராமநாமப் பிரியர். அவர் இறுதி நேரத்திலும் "ஹே ராம்' என்று கூறியபடியே உயிரை விட்டார். சங்கீத தியாகராஜர், வடநாட்டு துளசிதாசர், கபீர்தாசர், ஆந்திர பத்ராசல ராமதாசர், மகாராஷ்டிர சமர்த்த ராமதாசர், கன்னட ஸ்வாமி ராமதாஸ் என யாவரும் ஆழ்ந்த ராமபக்தர்களே.
இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க ராமபிரான் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்தார். அந்த சிவன் காசியில் மரிப்போரின் காதுகளில் ராமநாமம் ஓதி முக்தியடையச் செய்கிறார். ஆக, முக்தியளிக்கும் நாமம் ராமநாமம்!
பார்வதி தினமும் விஷ்ணு சகஸ்ரநாமம் ஜபிப்பவளாம். ஒருநாள் நேரமின்மை காரணமாக அது முடியாமல்போக, என்ன செய்வதென்று சிவபெருமானிடம் கேட்டாளாம் பார்வதி தேவி. அதற்கு அவர், "ஸ்ரீராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர ராம தத்துல்யம் ராமநாம வரானனே!'
என்றாராம். அதாவது ஒரு ராம நாமம் விஷ்ணுவின் 1008 சகஸ்ர நாமங்களுக்கு ஈடு என்றாராம்.
ஸ்ரீகிருஷ்ண சைதன்ய மகா பிரபு 500 வருடங்களுக்கு முன்பே கலிஸந்தரண உப நிஷத் என்று-
"ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஹரே க்ருஷ்ண ஹரே க்ருஷ்ண
க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே'
என்று பரப்பினார். நாமம் சொல்ல எந்த நியமமும் இல்லை. எல்லாரும் சொல்லி நலம்பெறலாம்.
59-ஆவது காஞ்சி காமகோடி பீடாதிபதி யாக முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர் பகவந்நாம போதேந்திர சுவாமிகள். அவரது குரு கூறியபடி பூரி ஜெகந் நாத க்ஷேத்திரத்துக்கு லக்ஷ்மீதர கவியிடம் "பகவந்நாம கௌமுதி' பெறச் சென்றார். இரவானதால் ஒரு வீட்டுத் திண்ணையில் தங்கினார். அதுதான் லக்ஷ்மீதர கவியின் வீடென்பது அவருக்குத் தெரியாது. நள்ளிரவு நேரம். ஒரு அந்தணரும், முகம் மூடிய ஒரு பெண்ணும் அங்கு வந்தனர். அந்தணர் கதவைத் தட்டி அழைக்க, கவியின் புதல்வர் கதவைத் திறந்து, ""என்ன விஷயம்'' என்று கேட்டார்.
""இவள் எனது முந்தைய மனைவியே; பதிவிரதையே. ஒரு முகம்மதியன் இவளைக் கவர்ந்து சென்று மணந்துகொண்டான். இன்று தற்செயலாக என்னைக் கண்டாள். "நடந்தது அசம்பா விதம். நான் அவனிடமிருந்து தப்பி வந்துவிட் டேன். தாங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்' என்கிறாள். இதற்கு சாஸ்திர சம்மதம் உண்டா?'' என்று கேட்டார் அந்த ணர். அதற்கு அவர், ""மூன்றுமுறை ராம நாமம் சொல்லி சேர்த்துக் கொள்ள லாம்'' என்றார்.
அவரது தாயாரோ, ""ஒருமுறை ராம நாமம் சொன் னாலே போதும் என உன் தந்தை சொல்வாரே'' என்றாள்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த போதேந்தி ராள், "நாளை இதன் உண்மையை அறிவோம்' என்றெண்ணிக்கொண்டார்.
மறுநாள் அந்தப் பெண் பூரி ஜெகந்நாதர் கோவில் குளத்தில் முக்காடு போட்ட முகம்மதிய உடையுடன் மூழ்கி ராம நாமம் சொல்லி, நம் உடையுடன் சுமங்கலியாக எழுந்தாள். அதுவே ஏகபத்தினிவிரத- சத்ய தர்ம ராமநாம புனித மகிமை.
பின்னர் போதேந்திர சுவாமிகள் லக்ஷ்மீதர கவியிடம் "பகவந்நாம கௌமுதி' பெற்று, ராம மகிமைக்கு "பகவந்நாம பூஷணம்', "பகவந்நாம ரஸாயனம்', "நாமாம்ருத ரஸோதயம்', "ராமாம்ருத ரஸார்ணவம்', "ஹரிஹர பேத திக்காரம்' போன்ற பல கிரந்தங்களை எழுதி நாமப்பிரச்சாரம் செய்தார். கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில் புரட்டாசி பௌர்ணமியன்று ஜீவசமாதி எய்தினார். இன்றும் ஆழ்ந்த பக்தர்கள் ஸ்வாமிகளின் ராமநாம ஜபம் உணரலாம். புரட்டாசி பௌர்ணமியில் ஆராதனை நடக்கும்.
ராம நாமத்தில் சிவ- விஷ்ணு ஐக்கிய தத்துவம் எவ்வாறு? "ஓம் நமோ நாராய ணாய' என்னும் எட்டெ ழுத்து மந்திரத்திலிருந்து "ரா'; "நம: சிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்திலிருந்து "ம'. ஆக ராமநாமம் ஒரு வினோத ஹரி- ஹர நாமம்! ஒருமுறை அனு மனுக்கும் ராமருக்குமே தெரியாமல் போர். அனுமன் ஒரு ஆயுதமும் எடுக்கவில்லை. கண் மூடி ராமநாமம் ஜபித் தார். ராமர் எய்த அம்பு கள் அனுமன் பாதங் களில் வீழ்ந்தன. நாமம்- நாமியைவிட (பெயரு டையவனைவிட) மகிமை வாய்ந் தது என்பதற்கு இதுவொரு சாட்சி. கோவிந்த தீக்ஷிதர் வம்சாவளி யான ஸ்ரீராமகவி, "ஸ்ரீராமாஷ்ட பதி' என்று 24 பாக்களில் (வட மொழி) இராமாயணம் முழுவ தும் செய்துள்ளார். கம்பர் இராமாயணத்தை பத்தாயிரத் துக்கும் மேற்பட்ட பாடல்களால் செய்தார் என்றால், 258 நளின தமிழ்ப்பாக்களால் பாட, நடனமாடப் புனைந்தவர் சீர்காழி அருணாசலக் கவிராயர். அவர் மகிமையும் சிறிது உணரலாமே.
புரந்தரதாசரை கர்நாடக இசைப்பிதாமகர் என்பர். அவர் கன்னடத்தில் பாடினார். அவர் காலம் கி.பி. 1480- 1564 என்பர்.
தெலுங்கில் ராமனைப் பாடிய தியாகராஜர் காலம் கி.பி. 1767- 1847.
தெலுங்கில் தேவியைப் பாடிய சியாமா சாஸ்திரிகளின் காலம் 1762-1827.
வடமொழியில் பாடிய முத்துஸ்வாமி தீட்சிதர் காலம் 1775-1834.
நமது அருணாசலக் கவிராயரின் காலம் 1711-1789.
இவர் காலத்தில் சங்கீத மும்மணிகள் சிறுவயதினரே. ஆக அவர்கள் சந்திப்பு நிகழ வில்லை. அவர்கள் பாடல்களில் தாக்கமும் இவர் பாடல்களில் இருக்க வாய்ப்பில்லை.
சிதம்பரத்திற்கு அருகே தில்லையாடியில் நல்லதம்பி பிள்ளை- வள்ளியம்மாள் தம்பதி யருக்கு பகவான் அருளால் நான்காவது குழந்தையாகப் பிறந்தவர் அருணாசலம். நல்லதம்பி முதலில் ஜைன மதத்திலிருந்து, பின்பு சைவ மதம் மாறி சிவபக்தரானார்.
குழந்தையின் பெயரும் முக்தியளிக்கும் அருணாசல நாமம்!
அருணாசலம் ஐந்து வருடம், ஐந்து மாதம், ஐந்து நாட்களுக்குப் பிறகு வழக்க மாக பாடங்களைப் பள்ளியில் வாசித்தார். 12-ஆவது வயதில் தந்தையை இழந்தார். தர்மபுர ஆதீனத்தில் தமிழ் சிவாகமங்கள், சமஸ்கிருதம் கற்பதற்காகச் சேர்ந்தார். 18 வயதிலேயே ஆழ்ந்த, பரந்த ஞானம் பெற்றார்.
அதனால் ஆதீனத்தில் தலைமைப் பொறுப்பேற் கும்படி கேட்டுக்கொள்ளப் பட்டார். அவரோ திருவள்ளு வர், கம்பரின் ராமாயணத்தை அனுசரித்து இல்லறம் ஏற்க விரும்பினார். 30 வயதுவரை அவரது ஆழ்ந்த கல்வித்தேடல் தொடர்ந்தது. பாட்டுகள், சங்கீதம் இவற்றிலும் ஆவல் எழுந்து கற்றார்.
பின்பு மணம்புரிந்துகொண்டு தங்க நகை வியாபாரக்கடை நடத்தினார்.
ஒருசமயம் புதுச்சேரிக்கு தங்கம் வாங்கச் சென்றபோது, சட்டநாதபுர கோதண்ட ராமய்யர், வெங்கட ராமய்யர் ஆகிய இரு சங்கீத வித்வான்களைச் சந்தித்தார். அப்போது அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பம் நிகழ்ந்தது. புதுச்சேரிக்குப் போகுமுன் சீர்காழி தர்மபுர மடத்தில் தங்கினார். அவரது முந்தைய சக மாணாக்கர் சிதம்பரப் பிள்ளையைச் சந்தித்தார். அவரோ சீர்காழியைப் பற்றி "கட்டளை மாலை' என்று எழுதத் தொடங்கி, முடிக்க இயலாமல் இருந்தார். அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்கி அன்றிரவே அதை முடித்துக் கொடுத்தார். பின்னர் புதுச்சேரி சென்றார்.
அங்கு சங்கீத வெங்கட, கோதண்ட ராமய்யர், அருணாசலத்திடம் கம்ப ராமாயணத்தில் சில சந்தேகங்கள் எழுப்பினர்.
அதற்கு அருணாசலம் அளித்த அழகான தமிழ் விரிவுரையில் நெகிழ்ந்த அவர்கள், ""இராமாயணத்தை பல்லவி- அனுபல்லவி- சரணம் என்னும் முறையில் பாக்களாகப் புனைந்து தந்தால், நாங்கள் அவற்றுக்கு ராகதாளங்கள் அமைக்கலாம். கச்சேரி, நடனம், நாடகம் இவற்றிலும் பயன்படுத்த லாமே'' என்றனர்.
வால்மீகிக்கு வந்த நாரதர்போல் எனலாம். அவரும் இசைந்து, யுத்தகாண்ட பாடல் ஒன்றை "அடாடா வெளியே புறப் படடா' என்று எழுதினார். அவ்விருவரும் சென்னையில் அதனைப் பாட, ரசிகர்கள் பெரிதும் அதை வரவேற்றனர். அதனால் அவர்கள் அருணாசலத்திடம் இராமாயணம் முழுவதையும் பாடல்களாக்கித் தரும்படிக் கேட்டனர்.
அவரும் "ராமநாடக கீர்த்தனம்' என்று 258 பாக்களில் புனைந்தார். இரு ஐயர்களும் ராகதாளங்கள் அமைத்தனர்.
அருணாசலம், கம்பர் போன்று ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பி னார். முன்னோடியாக இதர தெய்வங்கள் மீதும் கம்பர்போல் அமைத்தார். ரங்கநாதர் மீது "ஏன் பள்ளிக்கொண்டீரையா' என்ற பாட்டு, அன்றும் இன்றும் யாவரையும் கவர்கிறது.
புதுச்சேரி மந்திரி ஆனந்த ரங்கம் பிள்ளை இவர் பாடல் களுக்கு ஆதரவு கொடுத்தார். சென்னை மணலி முத்துக் கிருஷ்ண முதலியாருக்கு அவர் சிபாரிசு செய்ய, அவர் முன்னரே இவரது சில பாடல்களைக் கேட்டுள்ள தால் அவரும் வரவேற்று பரவச் செய்தார். பின்பு தஞ்சாவூர் துல்ஜா மகாராஜாவின் அழைப்பையும் பெற்று பாடல்கள் பரவின; ரசிகர்கள் ரசித்தனர்.
பாடல் துதிகள் யாவும் நளினமான தமிழில் அமைந்த தால், சாதாரண பழகுத் தமிழ் அறிந்தவர்களும் இவரது பாக்களைப் புரிந்து ரசிக்கலாம்.
சீர்காழி சிதம்பரப்பிள்ளை, தர்மபுர ஆதீனம் அவர் பாக்களை ரசித்து சீர்காழி யிலேயே தங்க வசதி செய்து கொடுத்தனர்.
எனவே இவரது பெயரும் சீர்காழி அருணா சலக் கவிராயர் எனப் புகழ்பெற்றது.
ராமநாடகம் அல்லாது, "அஜாமுகி நாடகம்', "அனுமன் பிள்ளைத்தமிழ்', "சீர்காழித் தலபுராணம்', "சீர்காழிக்கோவை', "சீர்காழி அந்தாதி', "தியாகேசர் வண்ணம்' போன்றவையும் இயற்றினார்.
1779-ல் அவர் இறைவனடி எய்தினார். ஆயினும் ராமபக்தர்கள், தமிழ் ஆர்வம் உடையவர்கள், பஜனைப் பிரியர்கள், சங்கீத விற்பன்னர்கள், நாட்டியக்காரர்கள், ரசிகர்கள் அவருடைய பாக்களை இன்றும் வரவேற்கிறார்கள். சில வரிகள் சிந்திப்போமா...
✷ "எனக்கு உன் இருபதம் நினைக்க வரம் அருள்வாய் ஸ்ரீராமசந்திரா' என்பது, ஒன்பது சரணங்களில் ராகமாலிகையாய் அமைந்த ராமாயண சுருக்கப் பாடல்!
✷ "அன்னை ஜானகி வந்தாளே ராஜாதி ராஜா- அனைவருக்கும் காட்சி தந்தாளே' என்பது ஸாவேரி ராகம்.
✷ "அந்த ராம சௌந்தர்யம் என்னால் அறிந்து சொல்லப் போமோ அம்மா' என்பது கேதாரகௌள ராகம்.
✷ "கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையைக் கண் டேன் ராகவ' (அனுமன் கூறு வது) பாடல் முகாரி ராகம்.
✷ "சரணம் சரணம் ரகுராமா நீ என்னைக் காத்தருள்' (விபீஷண சரணாகதி) என்பது அஸாவேரி ராகம்.
✷ "அனுமானே நீயே கனவானே- எங்கட்கு பிராண தாரை வார்த்தாயே' (ராமர் அனுமனைப் புகழ்தல்) என்பது ப்யாக் ராகம்.
✷ "வந்தான் வந்தான் பரதா ரகுராமன் வந்தான் பரதா' (அனுமன் கூறுதல்) என்பது மத்யமாவதி ராகம்.
✷ "மகுடாபிஷேகம் கொண்டானே ஸ்ரீராமச்சந்திரன்' (பட்டாபிஷேகப் பாடல்) சுருட்டி / சௌராஷ்டிரம்.
✷ "ஸ்ரீராமச்சந்திரனுக்கு ஜயமங்களம் நல்ல திவ்யமுக சுந்தரனுக்கு சுபமங்களம்!' (மங்களப் பாடல்).