மும்மூர்த்திகள் ஒன்றிணைந்த யோகீஸ்வரர்!

/idhalgal/om/yogiswarar-united-by-trinity

"மாங்கல்யம் தந்துனானே

மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே

த்வம் சஞ்சீவ சரத சதம்'

என்னும் இந்த மந்திரத்தை திருமணத்தின் போது கெட்டிமேள சப்தத்திற்கிடையே மாங்கல்ய தாரணத்தின்போது (தாலிலிகட்டுதல்) ஓதுவார்கள். மணமகன்- மணமகளை வாழ்த்தும் வண்ணமுள்ள இந்த மந்திரத்தை அனைவரும் கேட்டிருப் போம். திரைப்படங்களிலும் இந்த மந்திரத்தைதான் தாலிலிகட்டும் காட்சியின் போது சொல்வார்கள். இதற்குப் பின்பு அம்மி மிதித்தல், வானில் அருந்ததி நட்சத்திரம் பார்த்தல் போன்ற சடங்குகள் நடைபெறும்.

y

வடதிசை வானில், சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததியின் பெயரிலான நட்சத்திரம் தோன்றும். கற்புக்கரசியான அருந்ததிபோல வாழவேண்டுமென்பதற்காக அந்த நட்சத்திரத்தை வணங்குவது வழக்கம். "கற்பு' என்பதை ஆங்கிலத்தில் "சாஸ்டிடி' (ஈட்ஹள்ற்ண்ற்ஹ்) என்பார்கள். இந்த கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கவேண்டிய ஒரு ஒழுக்கநெறியே! இதைத்தான் பாரதியார்-

"ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறுசெய்தால்

அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?' என வினவினார். நம் கலாச்சாரத்தில் கற்பென்பது பெண்களுக்கு இருக்கவேண்டிய ஒரு நற்குணமாகக் கருதப்படுகிறது.

"ஒப்பு முருவும் வெறுப்பு மென்றா

கற்பு மேரு மெழிலு மென்றா...'

என்னும் இந்த வரி தொல் காப்பியத்தில் பொருளியலிலில் (1191) வருகிறது. இதற்கு விளக்கம் எழுதிய 14-ஆம் நூற்றாண் டைச் சார்ந்த நச்சினார்க் கினியர் என்ற புலவர், "கற்பு' என்பதற்கு தன் கணவரை தெய்வமென்று உணர்வது என விளக்கமளித்துள்ளார்.

"மாங்கல்யம் தந்துனானே

மம ஜீவன ஹேதுனா

கண்டே பத்னாமி சுபாகே

த்வம் சஞ்சீவ சரத சதம்'

என்னும் இந்த மந்திரத்தை திருமணத்தின் போது கெட்டிமேள சப்தத்திற்கிடையே மாங்கல்ய தாரணத்தின்போது (தாலிலிகட்டுதல்) ஓதுவார்கள். மணமகன்- மணமகளை வாழ்த்தும் வண்ணமுள்ள இந்த மந்திரத்தை அனைவரும் கேட்டிருப் போம். திரைப்படங்களிலும் இந்த மந்திரத்தைதான் தாலிலிகட்டும் காட்சியின் போது சொல்வார்கள். இதற்குப் பின்பு அம்மி மிதித்தல், வானில் அருந்ததி நட்சத்திரம் பார்த்தல் போன்ற சடங்குகள் நடைபெறும்.

y

வடதிசை வானில், சப்தரிஷிகளில் ஒருவரான வசிஷ்டரின் மனைவி அருந்ததியின் பெயரிலான நட்சத்திரம் தோன்றும். கற்புக்கரசியான அருந்ததிபோல வாழவேண்டுமென்பதற்காக அந்த நட்சத்திரத்தை வணங்குவது வழக்கம். "கற்பு' என்பதை ஆங்கிலத்தில் "சாஸ்டிடி' (ஈட்ஹள்ற்ண்ற்ஹ்) என்பார்கள். இந்த கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கவேண்டிய ஒரு ஒழுக்கநெறியே! இதைத்தான் பாரதியார்-

"ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறுசெய்தால்

அப்போது பெண்மையும் கற்பு அழிந் திடாதோ?' என வினவினார். நம் கலாச்சாரத்தில் கற்பென்பது பெண்களுக்கு இருக்கவேண்டிய ஒரு நற்குணமாகக் கருதப்படுகிறது.

"ஒப்பு முருவும் வெறுப்பு மென்றா

கற்பு மேரு மெழிலு மென்றா...'

என்னும் இந்த வரி தொல் காப்பியத்தில் பொருளியலிலில் (1191) வருகிறது. இதற்கு விளக்கம் எழுதிய 14-ஆம் நூற்றாண் டைச் சார்ந்த நச்சினார்க் கினியர் என்ற புலவர், "கற்பு' என்பதற்கு தன் கணவரை தெய்வமென்று உணர்வது என விளக்கமளித்துள்ளார்.

கற்புடைய பெண்கள் வாழும் நாட்டில் வானம் பொய்யாது பெய்யும்; அவர் களை தேவர்களும் முனிவர் களும் போற்றுவார்கள். இதுவே பெண்மைக்கு நம் கலாசாரம் தரும் மரியாதை! அதனால்தான் கற்புடைய பெண்ணான அருந்ததியை பத்தினிக் கடவுளாக மதித்து திருமணத்தின்போது வணங்கும் வழக்கம் ஏற்பட்டது.

அருந்ததி நட்சத்திரத்தைப் பற்றிய தகவலை நம் பழந் தமிழர்கள் அறிந்திருந்தனர் என்பதற்குச் சான்றாக சங்க இலக்கியமான "புறநானூறு' நூலிலில் கபிலர்-

"கடல் கொளப்படா அது உடலுநர் ஊக்கார்...' எனத் தொடங்கும் பாடலிலில், "வடமீன் புரையும் கற்பின்...' (122) எனும் வரியில், வடதிசையில் தோன்றும் அருந்ததி மீனைப் (நட்சத்திரம்) பற்றிப் பாடியுள்ளார்.

"பதிற்றுப் பத்து' நூலிலில் காப்பியாற்றுக் காப்பியனார் என்ற புலவர், "குன்றுதலை மணந்து குழூ உக்கடல்...' எனத் தொடங்கும் பாடலில்-

"விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த

செம்மீன் அணையள்நின் தொன்னகர்ச் செல்வி...' (31)

என்னும் வரி வருகிறது. வானுலகில் இயங்கும் மகளிருள் சிறந்த விண்மீன் அருந்ததி என்கிற பொருளில் பாடப்பட்டுள்ளது.

வாக்காலும், மனத்தாலும், பார்வையாலும், உடலாலும் பரிசுத்தமாக (தூய்மை) இருந்ததால்தான் சீதாதேவி அக்னிப் பிரவேசத்தில் தான் கற்பில் பரிசுத்தமானவள் எனபதை உலகுக்கு நிரூபித்தாள். அதேபோன்று, செய்யாத குற்றத்திற்கு ஆளாகி கோவலன் உயிரைவிட்டதால், கணவனை இழந்த கண்ணகி மதுரை மாநகரை தன் கற்பின் வலிலிமையால் சீற்றம்கொண்டு எரித்தாள்.

அருந்ததி, சீதை போன்று கற்பில் சிறந்து விளங்கிய அத்திரி மகரிஷியின் மனைவி யான அனுசூயையின் (அனசூயா கற்பின் வலிமையால் தத்தாத் ரேய அவதாரம் கிருதயுகத்தில் நிகழ்ந்தது.

எப்பொழுதும் சஞ்சாரம் (பயணம்) செய்துகொண்டே இருக்கும் நாரத முனிவர் ஒருநாள் பிரம்மதேவரின் மகனான அத்திரி மகரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்றார்.

அவரை அத்திரி மகரிஷியும், அவரது மனைவி அனுசூயையும் முறைப்படி வரவேற்று விருந்தளித்தனர். அந்த சமயத்தில், அனுசூயை தன் கணவனே கண்கண்ட தெய்வ மெனப் போற்றி, கற்புநெறி தவறாது வாழ்ந்து வருவதையறிந்து நாரத முனிவர் மகிழ்ந்தார்.

y

அதன்பிறகு பிரம்மலோகம் சென்ற சமயத்தில், பிரம்ம தேவரிடம் அத்திரி மகரிஷி பற்றியும், அனுசூயை யின் கற்புநெறியைப் பற்றியும் புகழ்ந்து எடுத்துரைத்தார். இதனால் பிரம்மதேவனும், சரஸ்வதி தேவியும் மகிழ்ச்சியடைந்த னர். தன் மருமகளான அனு சூயையின் கற்புநெறியை உலகுக்கு எடுத்துக்காட்ட வேண்டு மென சரஸ்வதிதேவி விரும்பி, முப்பெரும் தேவிகளில் மற்றவர்களான பார்வதி தேவி, லட்சுமி தேவியிடம் ஆலோசனை செய்தாள். தங்களின் கணவர்மூலம் இந்தத் திருவிளையாடலை நடத்த முடிவு செய்து, அத்திரி மகரிஷியின் ஆசிரமத்திற்கு மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் துறவி வேடத்தில் சென்று, அனுசூயையின் கற்புத் தன்மை யைப் பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொண்டனர்.

அத்திரி மகரிஷி யோகநிஷ்டைக் காக வெளியே சென்ற சமயத்தில், துறவி வேடத்தில் மும்மூர்த்திகளும் அவரது ஆசிரமத்திற்குச் சென்றனர். அதிதி (விருந்தாளி) வந்ததைக்கண்டு மகிழ்ந்த அனுசூயை, அவர்களை ஆசிரமத்திற்குள் அழைத்து விருந்தளிக்கத் தயாராளாள். அப்போது துறவி வேடத்திலிருந்த மும்மூர்த்திகள் அனுசூயையிடம், தங்களுக்கு பிறந்த மேனியுடன்தான் உணவளிக்க வேண்டுமென கூறினார்கள்.

துறவிகளின் நிபந்தனையைக் கேட்டவுடன் முதலில் கற்று தயங்கிய அனுசூயை, பின்னர் விருந்தாளிகளின் மனது வேதனைப் படக்கூடாது என்பதற்காக, தன் கணவர் அத்திரி மகரிஷியை மனதால் நினைத்து, அவர் உபயோகப்படுத்தும் கமண்டலத்லிலிலிதிலிருந்து நீரையெடுத்து துறவிகள்மீது தெளித்தாள். பதிவிரதையான அனுசூயை யின் கற்பின் வலிலிமையால் மூவரும் பச்சிளங் குழந்தைகளாக மாறிவிட்டனர். பின்னர் குழந்தைகளுக்கு பிறந்த மேனியுடன் பாலூட்டினாள். சில நாட்கள் அக் குழந்தைகள் ஆசிரமத்திலேயே வளரத் தொடங்கினர். யோகநிஷ்டை கலைந்தவுடன் ஆசிரமத்திற்கு வந்த அத்திரி மகரிஷி, ஆசிரமத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு வியந்தார். தன் ஞான திருஷ்டியால் நடந்த சம்பங்களை முற்றிலும் அறிந்தார். குழந்தைகளாக இருப்பவர்கள் மும்மூர்த்திகளே என அனுசூயையிடம் அவர் கூற, அவளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் குழந்தைகளை செல்லமாக வளர்ந்து வந்தாள்.

தங்கள் கணவர்கள் குழந்தை உருவில் ஆசிரமத்திலேயே இருந்ததால், அவர்களை மீட்க மூன்றுதேவிகளும் நாரதருடன் அத்திரி மகரிஷியின் ஆசிரமத்திற்கு வந்தனர்.

அனுசூயையிடம் தங்கள் கணவர்களை பழைய உருவில் ஒப்படைக்க வேண்டுமெனக் கேட்க, அனுசூயை மூன்று குழந்தைகளையும் தேவிகளின் முன்பு கொண்டு வந்தாள்.

உருவ ஒற்றுமையிலும், சாயலிலிலும், செயல்களிலும் மூவரும் ஒன்றுபோலவே இருந்ததால், யார் தமது கணவர் என்ப தைத் தீர்மானிக்கமுடியாமல் தேவியர் களே திகைத்தனர். அனுசூயை அவர்களின் குழப்பத்தைத் தீர்க்க தன் கணவரின் கமண்டலப் பாத்திரத்திலிலிருந்து நீரை யெடுத்து குழந்தைகளின்மீது தெளிக்க, மூன்று குழந்தைகளும் மீண்டும் மும்மூர்த்தி களாகி விட்டனர். இதனால் முப்பெரும் தேவியர்களும் மிகுந்த மகிழ்ச்சியடைந்து அனுசூயையை வாழ்த்தினார்கள். "உன் கற்பின் பெருமையை அனைவரும் அறிந்து கொள்ளவே இந்த நாடகத்தை நடத்தினோம்' எனக்கூறி, விரும்பிய வரத்தைக் கேட்குமாறு கூறினார்கள்.

அத்திரி மகரிஷியும் அனுசூயையும் மும்மூர்த்திகளை பக்தியுடன் வணங்கினர். ""சில நாட்கள் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருந்த எனக்கு மீண்டும் குழந்தைகளுடன் இருக்கும் வரம் தரவேண்டும்'' என அனுசூயை வேண்டிக் கேட்டாள்.

மும்மூர்த்திகளும் அனுசூயையிடம், ""நாங்களே மீண்டும் உனக்குக் குழந்தை களாகப் பிறப்போம்'' எனக் கூறி ஆசிர்வாதம் செய்தனர்.

அவர்களின் திருவுளப்படி சிவபெருமான் துர்வாசர் என்ற பெயரிலும், மகாவிஷ்ணு தத்தர் என்ற பெயரிலும், பிரம்மா சந்திரன் என்ற பெயரிலும் அடுத்தடுத்துப் பிறந்தனர்.

பிற்காலத்தில இம்மூவரும் ஒரே அம்சமாகி, தத்தாத்ரேயர் என்ற பெயரில் அழைக்கப்பட்டார்.

யோகீஸ்வரரான தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளை வழிபட்ட பலன்கிட்டும். என்றும் சிரஞ்சீவியான தத்தாத்ரேயரை கீழுள்ள தியான சுலோகத்தின்மூலம் வியாழக்கிழமைதோறும் வழிபடலாம்.

"ஓம் திகம்பராய வித்மஹே

யோகரூபாய தீமஹி

தந்நோ தத்தஹ ப்ரசோதயாத்.'

om011020
இதையும் படியுங்கள்
Subscribe