சித்தர்கள் அருளிய வாசி யோகம்!

/idhalgal/om/yoga-siddhars

பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!

சித்தர்தாசன் சுந்தர்ஜி

14

வேதப்பொருள் இன்னதென்றும் வேதங்கடந்தமெய்ப்பொருளைக் கண்டு மனமே விரும்பிப்போதப்பொருள் இன்னதென்று போதனைசெய்யும்பூரணசற்குரு தாள்கண்டு ஆடாய்பாம்பே. (குரு வணக்கம்)மனிதன் தான் நினைத்த ஒன்றை, தன் லட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது, அவன் கவனம்

அந்தப் புள்ளியில்,

அந்தப் பொருளிலேயே இருக்கவேண்டும். இல்லையேல், கவனச்சிதறல் உண்டாகும். சித்தர்கள், காற்றினைக் கடவுளாக வணங்கும்போது, எந்தப் புள்ளியில் கவனம் வைத்து வழிபட்டார்கள் என்பதை அறிவோம்.

அகத்தியரிடம் புலத்தியர் கேட்டார்:

""அமுதத்தமிழ் ஓதிய அகத்தியரே, இந்த பூமியில் ரிஷிகள், குருமார்கள், மடாதிபதிகள், பாமர மக்கள் என அனைவரும் மண், கல், மரம், உலோகம் போன்ற ஏதாவது ஒரு பொருளில், அவரவர் மனம் விரும்பிய உருவங்களை செய்து வைத்து, யந்திரங்களை வைத்து மந்திர சொற்களைக் கூறி பூஜை செய்து, இந்த சிலைகளே தெய்வம் என பெயர் சூட்டி கோவில்களைக் கட்டி வைத்து, இந்த உருவச்சிலைகளை வணங்கினால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும் என புராணக் கதைகள்மூலம் கூறுகிறார்கள்.

சைவத் தமிழர்களான நீங்கள் உருவச்சிலைகளை வணங்காமல் உருவமற்ற காற்றை வணங்கி சகலசக்திகளையும் அடைந்தோம் என்று கூறுகிறீர்கள். அந்த விதத்தை எனக்கு விளக்கமாகக் கூறுங்கள்.''

""புலத்திய முனிவரே, கடவுளை நாங்கள் எங்கேயும் தேடிச்சென்று வணங்கவில்லை. நாங்கள் வணங்கிய கடவுள் எங்கள் உடம்பின் உள்ளேயே உள்ளது. அது லிங்க வடிவாகவும், அதன்கீழ் ஆவுடையாரும், அர்த்தநாரீஸ்வர ரூபமாகவும் இருக்கிறது. எங்கள் உடம்பில் மட்டும் அல்ல; இந்த பூமியில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் உடம்பிலும் உள்ளது.

புலத்தியனே, ஒரு மனிதன் நேராக நின்றுகொண்டு தன் உடல் உறுப்புகளை நேர்பார்வையாகத் தன் கண்களால் பார்க்கும்போது, அவன் உடலில் எந்த உறுப்பினைப் பார்க்க முடிகிறதோ, அதுவே அவன் சகல சக்திகளையும் அடைய வழிபட வேண்டிய கடவுளாகும். இதுவே கடவுள் தரிசனம். இதுவே சிவசக்தி தரிசனம்.

இந்த கடவுள் சக்திதான் மனிதனின் மனதை அலையவிடுவதும், அலையும் மனதை அடக்கி ஒருநி

பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!

சித்தர்தாசன் சுந்தர்ஜி

14

வேதப்பொருள் இன்னதென்றும் வேதங்கடந்தமெய்ப்பொருளைக் கண்டு மனமே விரும்பிப்போதப்பொருள் இன்னதென்று போதனைசெய்யும்பூரணசற்குரு தாள்கண்டு ஆடாய்பாம்பே. (குரு வணக்கம்)மனிதன் தான் நினைத்த ஒன்றை, தன் லட்சியத்தை அடைய முயற்சிக்கும்போது, அவன் கவனம்

அந்தப் புள்ளியில்,

அந்தப் பொருளிலேயே இருக்கவேண்டும். இல்லையேல், கவனச்சிதறல் உண்டாகும். சித்தர்கள், காற்றினைக் கடவுளாக வணங்கும்போது, எந்தப் புள்ளியில் கவனம் வைத்து வழிபட்டார்கள் என்பதை அறிவோம்.

அகத்தியரிடம் புலத்தியர் கேட்டார்:

""அமுதத்தமிழ் ஓதிய அகத்தியரே, இந்த பூமியில் ரிஷிகள், குருமார்கள், மடாதிபதிகள், பாமர மக்கள் என அனைவரும் மண், கல், மரம், உலோகம் போன்ற ஏதாவது ஒரு பொருளில், அவரவர் மனம் விரும்பிய உருவங்களை செய்து வைத்து, யந்திரங்களை வைத்து மந்திர சொற்களைக் கூறி பூஜை செய்து, இந்த சிலைகளே தெய்வம் என பெயர் சூட்டி கோவில்களைக் கட்டி வைத்து, இந்த உருவச்சிலைகளை வணங்கினால் வாழ்வில் நன்மைகள் உண்டாகும் என புராணக் கதைகள்மூலம் கூறுகிறார்கள்.

சைவத் தமிழர்களான நீங்கள் உருவச்சிலைகளை வணங்காமல் உருவமற்ற காற்றை வணங்கி சகலசக்திகளையும் அடைந்தோம் என்று கூறுகிறீர்கள். அந்த விதத்தை எனக்கு விளக்கமாகக் கூறுங்கள்.''

""புலத்திய முனிவரே, கடவுளை நாங்கள் எங்கேயும் தேடிச்சென்று வணங்கவில்லை. நாங்கள் வணங்கிய கடவுள் எங்கள் உடம்பின் உள்ளேயே உள்ளது. அது லிங்க வடிவாகவும், அதன்கீழ் ஆவுடையாரும், அர்த்தநாரீஸ்வர ரூபமாகவும் இருக்கிறது. எங்கள் உடம்பில் மட்டும் அல்ல; இந்த பூமியில் பிறக்கும் அனைத்து ஜீவராசிகளின் உடம்பிலும் உள்ளது.

புலத்தியனே, ஒரு மனிதன் நேராக நின்றுகொண்டு தன் உடல் உறுப்புகளை நேர்பார்வையாகத் தன் கண்களால் பார்க்கும்போது, அவன் உடலில் எந்த உறுப்பினைப் பார்க்க முடிகிறதோ, அதுவே அவன் சகல சக்திகளையும் அடைய வழிபட வேண்டிய கடவுளாகும். இதுவே கடவுள் தரிசனம். இதுவே சிவசக்தி தரிசனம்.

இந்த கடவுள் சக்திதான் மனிதனின் மனதை அலையவிடுவதும், அலையும் மனதை அடக்கி ஒருநிலைப்படுத்துவதும், மனிதன் மரணமடையாமல் காப்பாற்றுவதுமாகும். ஜீவராசிகளின் பிறப்புமுதல் இறப்புவரை ஒரு வினாடிகூட ஓய்வில்லாமல் இயங்கிக்கொண்டு விழிப்புடன் இருந்து, உடலின் உள்ளுறுப்புகளைத் தூண்டி இயக்கிக்கொண்டிருப்பது அந்த சக்தியே'' என்றார் அகத்தியர்.

குரு அகத்தியர் கூறுவதுபோன்று, ஒரு மனிதன் நேராக நின்று கொண்டோ அல்லது படுத்துக்கொண்டோ தன் உடலுறுப்புகளைப் பார்த்தால், அவனது கைகள், கால்கள், நெஞ்சு, வயிறு, இடுப்பு, தொடை, மூட்டு, பாதம் என எந்த உறுப்புகளும் தெரியாது. அவரவரின் மூக்கின் நுனியை மட்டுமே தன் கண்களால் காணமுடியுமே தவிர, உடலின் மற்ற உறுப்புகளை குனிந்து, வளைந்து பார்த்தால்தான் தெரியும்.

இந்த பூமியில் பிறக்கும் மனிதன், விலங்கு, பறவை என அனைத்து உயிரினங்களும், மூக்குத் துவாரங்களின் வழியாகத்தான் காற்றினை சுவாசித்து உயிர்வாழ்கின்றன. வேறு எந்த உடலுறுப்பு வழியாகவும் உயிர்க்காற்று உடம்பினுள் சென்று வரமுடியாது.

siddhar

""புலத்தியனே, மனிதனின் கண், காது, வாய், கை, கால்கள் என எல்லா சரீர உறுப்புகளையும் துணி, கயிற்றால் கட்டிவிட்டால்கூட, அவன் உயிர் போகாது. கண் தெரியாமல், காது கேளாமல், கை, கால் இல்லாமல் ஒருவன் உயிர் வாழலாம்.

ஆனால் மூக்கைக் கட்டிவிட்டு மூச்சுக்காற்று செல்லமுடியாமல் தடுத்துவிட்டால், உயிரினங்கள் சிறிது நேரத்தில் மரணம் அடைந்துவிடும்.

இந்த பூமியில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் எங்களைப்போன்ற சித்தர்களுக்கும் காற்றுதான் உயிர்; காற்றுதான் கடவுள். அவரவரின் மூக்கும், மூக்கின் துவாரங்களும்தான் நம்முள் கடவுள் வரும் பாதை என்பதை அறிந்துகொள்'' என்றார்.

உருவ வழிபாடு செய்து வாழ்பவர்களுக்கும்கூட, அவர்களைக் காப்பாற்றும் கடவுள் காற்றுதான்.

ஒரு உயிரினம் தூங்கும்போதும் அல்லது உணர்வற்ற மயக்கநிலையில் அனைத்து உறுப்புகளும் செயல்படாமல் இருந்தாலும், அவன் மூக்கின் இரண்டு துவாரங்கள் வழியாக மூச்சுக்காற்று உடம்பினுள்ளே சென்று வந்து அவன் மரணமடையாமல் காப்பாற்றிக்கொண்டிருக்கும்.

"உடலுயிரும் பூரணமும் அயன்மாலீசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார்.'

உடல், உயிர், காற்று (பூரணம்) ஆகிய மூன்றும்தான் காக்கும் கடவுள் விஷ்ணு, ஆக்கும் கடவுள் பிரம்மா, அழிக்கும் கடவுள் சிவன் என்று கூறுகிறார் அகத்தியர். இன்று மக்கள் கடவுள் எங்குள்ளார் என்று தெரியாமல் மாயையில் மயங்கி, கடவுளைத் தேடி அலைந்துகொண்டுள்ளார்கள்.

""புலத்திய முனியே, ஒரு மனிதன் மல்லாந்த நிலையில் படுத்துக்கொண்டிருக்கும்போது, அவன் மூக்குமட்டும் மேல்நோக்கி உயர்ந்திருக்கும். அப்போது அந்த மூக்குத்தண்டின் தோற்றம் "லிங்கம்' போன்ற வடிவிலிருக்கும். மனிதன் "சீவன்' ஆவான்; அவன் மூக்கு "லிங்கம்' ஆகும். உயிர்களைக் காப்பாற்றுவதால் இதனை "சீவன் லிங்கம்' என்று சித்தர்கள் அழைத்தார்கள். காலப்போக்கில் இது சிவலிங்கம் என மருவி அழைக்கப்பட்டு வருகிறது.

மூக்கு லிங்கம் என்றால் நமது வாய்தான் "ஆவுடையார்' எனக்கூறப்படும் பீடமாகும். மூக்கின் வழியாக காற்று செல்லும் சுவாசக் குழாய்க்கும், வாய் வழியாகச் செல்லும் உணவுக் குழாய்க்கும் ஒரு தொடர்புண்டு. மனிதனின் மூக்கும் வாயும் இணைந்த நிலையே லிங்கம், ஆவுடையார் என்பதாகும்.

மூச்சுக்காற்று உடலுக்கு உயிரைத் தந்து நம்மை வாழவைக்கும் கடவுளாகும். நாம் உண்ணும் உணவு நோய் தீர்க்கும் மருந்து. அதன்மூலமே உடம்பினை வலுவானதாக வைத்துக்கொள்கிறோம். மூக்கு சீவனைத் தருகின்றது; வாய் சக்தியைத் தருகின்றது. கோவில்களில் நாம் வணங்கும் லிங்கம் ஆவுடையார் என்பது நமது மூக்கும் வாயும்தான்.

மூக்கின் வலப்புற துவாரம் சிவம் என்றும், இடப்புறத் துவாரம் சக்தி என்றும் கூறப்படுகிறது. மூக்குத் துவாரங்கள் இரண்டும் "ய' வடிவில்- சிவன், சக்தி இணைந்த வடிவமாகும். இந்த அமைப்பே ஆண் பாதி, பெண் பாதி கொண்ட "அர்த்தநாரீஸ்வரர்' வடிவமாகும். "சிவாய' என்ற சொல்லை மந்திரம் என்பர்.

இதில் "சி' என்ற எழுத்து சிவனைக் குறிக்கிறது; "வ' என்ற எழுத்து சக்தியைக் குறிக்கிறது. சிவன் உயிரானது; சக்தி சரீர வலிமையானது. "சி' உயிர்சக்தி; "வ' உடல்சக்தி; "ய' இவை இரண்டும் இணைந்த சிவசக்தி.

உண்மையான கடவுளைப் பற்றித் தெரியாத சிலர் சிவலிங்கம் ஆணின் உயிர் உறுப்பென்றும், ஆவுடையார் பெண்ணின் பிறப்புறுப்பென்றும் தவறாகக் கூறுகிறார்கள்.

அகத்தியர் கூறிய உண்மையைப் பற்றி மற்ற சித்தர்கள் கூறியதையும் அறிவோம்.

"நாசிநுனி யதனில்சிவத்தைக் கண்டோர்

நான்முகன் திருமாலும் சிவனுமாமே.'

"கேளப்பா முலமடாலிங்கந் தன்னில்

கிருபையுடன் தண்டுக்குக்கீழ் மேலாக...'

"பார்க்குஞ் சுழுமனைக் காணாரேயது

மூக்குநுனி யென்றறி யாரே.'

"காணரிதே யெவராலு மிரு சுவாசம்

காண்பவனே சிவனாகி சித்தனாவான்.'

"மூக்குமுனையை முழித்திருந்து பாராமல்

ஆக்கைகெட்டு நானு மறிவழிந்தேன் பூரணமே.'

"வாசலில் இரைந்து மயங்கிய வாயுவை

ஈசன்றன் வாசலி லேற்று.'

"தேடுகின்ற மூவருமே வணங்கும் வாசல்

அரகரா சிவசிவா வாசிவாசல்.'

"காணரிது சிவசக்தி மூச்சதாகும்.'

"நாசிநுனியின் மீதுநடமே செய்யும்தேசி

வாசிவாசியென்று யுன்னுள் வாங்கியே

நாசிமா நதியுந் தில்லைகன தலம் பலவும்கண்டு.'

"சாட்சாதி பிரம்மத்தால் பூர்வகன்மம்

தத்வாதி வாசனைகள் தாமேபோகும்

சூட்சாதி பிராந்தியென்னும் மாயாசக்தி

தொடராமற் சேர்வதுவே பிரம்மஞானம்.'

வாசி யோகம்

"தாயென்றும் தந்தையென்றும் பாரியென்றும்

பிள்ளையென் றும்உழைக்கத் தானேசொன்னேன்.'

ஒரு மனிதன் தன் தாய், தந்தை,

மனைவி, குழந்தைகளை உழைத்து சம்பாதித்துதான் காப்பாற்ற முடியும். "உழைப்பே உயர்வு தரும்' என்று அகத்தியர் கூறுகிறார்.

இதுபோன்று, ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு தொழில் செய்தோ அல்லது பிறரிடம் சம்பளத்திற்கு வேலை பார்த்தோதான் வாழவேண்டும். வேலைகளில் பிரச்சினைகள், தடைகள் ஏற்பட்டால் அதிலிருந்து எப்படி மீளலாம்- காரியங்களில் வெற்றிடையலாம் என்பதை அறிவோம்.

உங்கள் தொழில், வேலை சம்பந்தமாக முதலாளி, உயரதிகாரிகள், அரசியல் தலைவர்களை சந்திக்கச் செல்லும் நாளன்று உங்கள் மூச்சுக்காற்று வலப்பக்கத் துவாரத்தில் ஓடும்படி செய்துகொள்ளுங்கள். (மூச்சுக்காற்றின் நிலையை எவ்வாறு அறிவது- எப்படி சாதகமாக மாற்றுவது என்பதை கடந்த இதழ்களில் விளக்கியுள்ளோம்.) சுவாசக்காற்றின் நிலையை மாற்ற முடியவில்லை என்றாலும் அல்லது அவசரத்தில் சுவாச நிலையை கவனிக்காமல் கிளம்பிவிட்டாலும் பரவாயில்லை. நீங்கள் சந்திக்கச் சென்றவரைப் பார்க்கும்போது உங்கள் மூச்சுக்காற்று வலப்பக்கத் துவாரத்தில் ஓடுகின்றதா என்பதை அந்த சமயத்திலாவது கவனித்து சரிசெய்துகொள்ளுங்கள். மூச்சுக்காற்று எப்போதும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை இடது, வலது என மாறிமாறி ஓடும். மூச்சுக்காற்று ஓடும் பக்கம் பூரணம் என்றும், ஓடாத பக்கம் சூனியம் என்றும் கூறப்படும்.

நீங்கள் பார்க்க வேண்டியவரைப் பார்க்கும் சமயத்தில் உங்கள் இடப்பக்கத் துவாரத்தில் காற்று ஓடினால், காற்று ஓடாத சூனியப் பக்கமான வலப்பக்கம் அவர் இருக்குமாறு பார்த்து அமர்ந்துகொள்ளுங்கள்.

அதேபோன்று, உங்கள் மூச்சுக்காற்று வலப்பக்கம் ஓடினால், அதிகாரி காற்று ஓடாத இடப்பக்கம் இருக்குமாறு பார்த்து அமர்ந்துகொள்ளுங்கள்.

உதாரணமாக, நீங்கள் காணவேண்டிய நபர் கிழக்கு நோக்கி அமர்ந்திருந்தால், அவருக்கு எதிர்திசையில் நீங்கள் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பீர்கள். உங்களின் இடக்கைப் பக்கம் அவருக்கு வலக்கைப் பக்கமாகவும், உங்களின் வலக்கைப் பக்கம் அவருக்கு இடக்கைப் பக்கமாகவும் இருக்கும்.

உங்களின் இடப்பக்கம் மூச்சுக்காற்று ஓடும்போது, நீங்கள் அவரின் வலக்கைப் பக்கம் அமர்ந்துகொள்ளுங்கள். இப்போது அவர் காற்று ஓடாத சூனியமான பக்கம் இருப்பார்.

இதேபோன்று மூச்சுக்காற்று உங்களின் வலக்கைப் பக்கம் பூரணத்தில் ஓடும்போது, நீங்கள் அவரின் இடக்கைப் பக்கம் அமர்ந்து பேசுங்கள். இப்போது அவர் காற்று ஓடாத சூனியப் பக்கம் இருப்பார்.

இவ்வாறு நீங்கள் காணவேண்டியவர் உங்களின் காற்று ஓடாத சூனியப் பக்கம் இருக்கும் நிலையில் வைத்துப் பேசும்போது உங்கள் கோரிக்கை, குறை, தேவைகளை கவனமாகக் கேட்டு நன்மைகளைச் செய்வார். உங்கள் காரியம் வெற்றியாக முடியும்.

ஒரு காரியமாக பிறரைக் காணும்போது உங்கள் மூக்கின் வலது, இடது என இரண்டு துவாரங்களிலும் ஒரே சமயத்தில் "சுழுமுனை' என்ற நிலையில் சுவாசக் காற்று ஓடினால், அந்த சமயத்தில் ஈடுபட்டுத் தொடங்கிச் செய்யும் காரியங்கள் நன்மை தராது; வெற்றியடைய முடியாது. எனவே காற்றின் நிலையறிந்து செயல்பட்டால் எதிலும் வெற்றியடையலாம்.

சித்தரைப் பற்றி வாழுங்கள்;

வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)

இதையும் படியுங்கள்
Subscribe