சித்தர்கள் அருளிய வாசி யோகம்!

/idhalgal/om/yoga-siddhars-2

"யிரத்தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்

அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன்

காயமில்லாதோங்கி வளர் காரண சித்தன்

கண்ணொளியாயினா னென்று ஆடாய் பாம்பே.'

(குரு வணக்கம்)

புலத்தியர்: சித்தர்களில் தலைமையானவரே, அனைத்து உயிரினங்களுக்கும் ஆன்மாவின் செயல்பாடு மாற்றமின்றி ஒன்றுபோலவே செயல்படும் என்ற உண்மையை அறிந்துகொண்டேன்.

பூமியில் உயிரினங்கள் தங்கள் வாழ்வின் தேவை களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக்கொண்டு, குறைகள் தீர்ந்து, உயர்வான வாழ்வை அடைந்து மகிழ்ச்சியாக வாழ ஆதார சக்தியாக உள்ளது எது?

ஆன்மாவின் நிலை பாமர மக்களுக்கும், பாராளும் மன்னருக்கும் ஒன்றுபோலவே அமைந்துள்ளதா அல்லது பேதமாக உள்ளதா? இந்த சந்தேகங்களுக்கு இன்று எனக்கு விளக்கம் கூறுங்கள்.

அகத்தியர்: புலத்தியனே, கேள். இந்த பூமியில் பல தேசங்கள் உள்ளன. அவற்றில் பலவிதமான மொழி, நாகரிகம், பண்பாடு, உணவு, வழிபாட்டுமுறைகளைக் கொண்டு வாழ்கிறார்கள். இந்த பூமி தன் பரிணாம வளர்ச்சியால் மனிதன் மற்றும் உயிரினங்களை உருவாக்கிய படைப்புக்காலத்தில், முதன்முதலில் இந்த நிலப்பகுதியின் தென்புலத்தில், பழம்பதியான பாண்டிய நாட்டில்தான் உயிரினங்கள் படைக்கப் பட்டன. என் தாய்நாட்டில் வாழும் என் மக்களுக்கு, தமிழ்மொழி, ஐம்பெரும் வழிபாடு, நாகரிகம், பண்பாடு, இல்லற வாழ்வுநெறி, ஆண்கள், பெண்கள் வாழ்வுமுறை, கற்புநிலை, கர்ப்பம், சரீர கவனம், அரசநெறி, ஆட்சிநெறிமுறை போன்று இன்னும் அனைத்தையும், யான் வகுத்தளித்த "புறத்திய'லில் தொகுத்துக் கூறியுள்ளேன்.

இந்த பூமியில் வாழும் மனிதன் முதலான அனைத்து உயிரினங்களின் பிறப்பு, உணர்ச்சிகள், மரணம் ஒன்று போலவே அமைந்துள்ளன. ஆனால் மனித இனத்தைத் தவிர, அனைத்து உயிரினங்களும் உலகமெங்கும் தங்கள் இனத்திற்கென்று உருவான ஒரே மொழி, ஒரே உணவு என்ற முறையில் சிறிதும் மாற்றமின்றி வாழ்கின்றன. தனது வாழ்விற்குத் தேவையானவற்றைத் தானே தன் உழைப்பால் தேடியடைந்து, இயற்கையோடிணைந்து வாழ்கின்றன. இந்த நிலை பூமியில் உயிரினங்கள் தோன்றியதுமுதல் எக்காலத்திலும் மாறியதுமில்லை; மாறப் போவதுமில்லை. இயற்கை நிர்ணய

"யிரத்தெட்டிதழ் வீட்டில் அமர்ந்த சித்தன்

அண்டமெல்லாம் நிறைந்திடும் அற்புத சித்தன்

காயமில்லாதோங்கி வளர் காரண சித்தன்

கண்ணொளியாயினா னென்று ஆடாய் பாம்பே.'

(குரு வணக்கம்)

புலத்தியர்: சித்தர்களில் தலைமையானவரே, அனைத்து உயிரினங்களுக்கும் ஆன்மாவின் செயல்பாடு மாற்றமின்றி ஒன்றுபோலவே செயல்படும் என்ற உண்மையை அறிந்துகொண்டேன்.

பூமியில் உயிரினங்கள் தங்கள் வாழ்வின் தேவை களையும், ஆசைகளையும் நிறைவேற்றிக்கொண்டு, குறைகள் தீர்ந்து, உயர்வான வாழ்வை அடைந்து மகிழ்ச்சியாக வாழ ஆதார சக்தியாக உள்ளது எது?

ஆன்மாவின் நிலை பாமர மக்களுக்கும், பாராளும் மன்னருக்கும் ஒன்றுபோலவே அமைந்துள்ளதா அல்லது பேதமாக உள்ளதா? இந்த சந்தேகங்களுக்கு இன்று எனக்கு விளக்கம் கூறுங்கள்.

அகத்தியர்: புலத்தியனே, கேள். இந்த பூமியில் பல தேசங்கள் உள்ளன. அவற்றில் பலவிதமான மொழி, நாகரிகம், பண்பாடு, உணவு, வழிபாட்டுமுறைகளைக் கொண்டு வாழ்கிறார்கள். இந்த பூமி தன் பரிணாம வளர்ச்சியால் மனிதன் மற்றும் உயிரினங்களை உருவாக்கிய படைப்புக்காலத்தில், முதன்முதலில் இந்த நிலப்பகுதியின் தென்புலத்தில், பழம்பதியான பாண்டிய நாட்டில்தான் உயிரினங்கள் படைக்கப் பட்டன. என் தாய்நாட்டில் வாழும் என் மக்களுக்கு, தமிழ்மொழி, ஐம்பெரும் வழிபாடு, நாகரிகம், பண்பாடு, இல்லற வாழ்வுநெறி, ஆண்கள், பெண்கள் வாழ்வுமுறை, கற்புநிலை, கர்ப்பம், சரீர கவனம், அரசநெறி, ஆட்சிநெறிமுறை போன்று இன்னும் அனைத்தையும், யான் வகுத்தளித்த "புறத்திய'லில் தொகுத்துக் கூறியுள்ளேன்.

இந்த பூமியில் வாழும் மனிதன் முதலான அனைத்து உயிரினங்களின் பிறப்பு, உணர்ச்சிகள், மரணம் ஒன்று போலவே அமைந்துள்ளன. ஆனால் மனித இனத்தைத் தவிர, அனைத்து உயிரினங்களும் உலகமெங்கும் தங்கள் இனத்திற்கென்று உருவான ஒரே மொழி, ஒரே உணவு என்ற முறையில் சிறிதும் மாற்றமின்றி வாழ்கின்றன. தனது வாழ்விற்குத் தேவையானவற்றைத் தானே தன் உழைப்பால் தேடியடைந்து, இயற்கையோடிணைந்து வாழ்கின்றன. இந்த நிலை பூமியில் உயிரினங்கள் தோன்றியதுமுதல் எக்காலத்திலும் மாறியதுமில்லை; மாறப் போவதுமில்லை. இயற்கை நிர்ணயித்த விதிப்பாட்டை எந்த சக்தியாலும் மாற்றியமைக்க முடியாது என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாமல், மனிதன் மட்டும் வேறு சக்திகள் நம்மைக் காப்பாற்றும்- கஷ்டங்களைத் தீர்க்கும் என்று கற்பனையில் வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

மனிதர்கள், உயிரினங்களின் ஆசைகள், வாழ்வின் தேவைகளை, இந்த பூமியில் வாழும் மற்றொரு ஆத்மாவின் ஆதரவாலும், உதவி யாலும்தான் அடைந்து கொள்ள முடியும். அதேபோல் ஒரு ஆன்மா வின் செயலால்தான் மற்றொரு ஆன்மா, தன் வாழ்வில் சிரமங்களை அடைகிறது. ஒரு ஆன்மாவின் வாழ் வில் உண்டாகும் நன்மையும் தீமையும் இந்த பூமியிலேதான் தீர்மானித்து செயல்படுத்தப்படுகிறது.

மனிதன் முதலான அனைத்து ஆண் உயிரினங்களும், தன் உடல் இச்சையை தன் இனத்தைச் சேர்ந்த மற்றொரு பெண் இனத்தின் உதவி யால்தான் தீர்த்துக்கொள்கின்றன. இந்த ஆண்- பெண், இரண்டு ஆன்மாக்களின் உடல் இணைவு, மோகச்செயல் மூலம் தன் இனத் தையும் வம்சத்தையும் பூமியில் விருத்தி செய்து கொள்கின்றன.

பசி என்ற உணர்வினை, மற்றொரு ஆத்மாவான தாவரம் தரும் தானியங் கள் மூலம்தான் நிவர்த்திசெய்து கொள்ளமுடியும். வேறெந்த வழி களாலும் பசியைத் தீர்க்கமுடியாது. உடலுக்குண்டாகும் நோயினை, தாவர மூலிலிகைகள்மூலம்தான் நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.

புலத்தியர்: ஒரு ஆன்மா, மற்றொரு ஆன்மாவிற்கு உதவி செய்து காப்பாற்றுகிறது என்றால், அதற்கு ஆதாரமாக இருப்பது எது? ஒரு ஆன்மாவிற்கு பாதிப்பும் சிரமும் மற்றொரு ஆன்மாவால் உண்டாகிறதென்றால் அதற்கும் ஆதாரமானது எது?

அகத்தியர்: ஒரு ஆன்மா தன் வாழ்வில் நன்மை, மகிழ்ச்சியை அடைய, மற்றொரு ஆன்மாவிடமிருந்து கிடைக்கும் "அன்பு' தான் ஆதார நிலையாகும். இந்த அன்பின் நிலை யும், மனித இனத்தில் ஒவ்வொரு உறவிலும் வேறுபட்டுள்ளது. அன்பு ஒருநிலை கொண்ட தல்ல.

ஒரு மனிதன் தன்னைவிட கீழ்நிலை யிலுள்ள தனது வேலைக்காரர்கள், பாமர மக்களிடம் செலுத்தும் அன்பு- இரக்கம், தயை என்ற வகையாகும்.

பாமர மக்கள், வேலைக்காரர்கள், கீழ்நிலை யில் உள்ளவர்களை அவமரியாதை செய்து, மனம் புண்படும்படி பேசி, செய்த வேலைக்கு சரியான கூலி கொடுக்காமல் ஏமாற்றி தன் வாழ்வை உயர்த்திக் கொள்பவர்களுக்கு பாமர சாபம் உண்டாகும். அதனால் வாரிசு களின் வாழ்வில் சரியான தொழில் அமையா மலும், முன்னோர்கள் சேர்த்த சொத்துகளை அனுபவிக்க முடியாமலும் போய்விடும். வம்ச வாரிசுகள் வாழ்க்கை வறுமை நிலையாகும்.

நண்பர்களிடம் செலுத்தும் அன்பு- நட்பு அல்லது நேயம் என்ற வகைப்பாடாகும்.

இந்த அன்பின் ஆதாரத்தால், ஒருவர் வாழ்வில் சிரமம் ஏற்படும்போது, உண்மை யான நண்பர்களின் உதவிகிடைக்கும். "உயிர் காப்பான் தோழன்' என்ற வாக்கியம் உறுதிப் படுத்துவது இந்த நேய உணர்வுதான். எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாது- நல்ல அறிவுரை கூறி, நாம் தவறு செய்யும் நிலையில் நம்மைத் திருத்துபவர்கள்தான் உண்மையான நண்பர்கள் என்பதைப் புரிந்து, நண்பர்களை கவனமாகத் தேர்வு செய்து பழகவேண்டும்.

நம்மைப்பெற்ற தாய், தந்தையிடம் செலுத்தும் அன்பு- நயப்பு அல்லது பேணுதல் என்ற வகையாகும். நயப்பு என்பது நயந்து வாங்குதல்; பேணுதல் என்பது நாம் பேணிக் காப்பாற்றுவது.

நாம் குழந்தையாக இருக்கும்போது, நம் தாய்- தந்தை இளமையாக இருப்பார்கள். தங்கள் உழைப்பால் பணம் சம்பாதித்து, நமக்குத் தேவையான உணவு, உடை, கல்வி என அனைத்தையும் தந்து, திருமணம் செய் வித்து, நமக்கு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்வரை தங்கள் சுகத்தை இழந்து பெற்ற கடனைத் தீர்த்து வாழ்வார்கள்.

sivan

நாம் வாலிலிபமாக இருக்கும்போது, நம்மை மனிதனாக வாழச்செய்த நம் பெற்றோர் கள் வயது முதிர்ந்து, உடல்தளர்ந்து ஓய்ந்து விடுவார்கள். அவர்கள் வாலிபமாக இருக்கும் போது, நாம் செயல்பட முடியாத சிறுவர்கள். நாம் வாலிபமாக இருக்கும்போது அவர்கள் செயல்பட முடியாத முதியவர்கள். வயது முதிர்ந்த நம் தாய்- தந்தையர் நமக்கு குழந்தை களாகிவிடுவார்கள். நம்மை நம்பி வாழ வேண்டிய நிலை.

இந்நிலையில் நாம் அவர்களைவிட்டு ஒதுங்கிப்போகாமல், ஒதுக்கிவைக்காமல், நாம் சிறுவர்களாக இருக்கும்போது அவர் கள் நமக்குக் கொடுத்த பாசத்தைத் தந்து, அவர் கள் மனம்குளிர உணவு, உடை, இடம் தந்து, மனவருத்தம் அடையாவண்ணம் ஆயுள்வரை பேணிக்காப்பாற்ற வேண்டும். பெற்றவர்கள் உயிருடன் இருக்கும் காலத்திலேயே அவர் களுக்குச் செய்யவேண்டிய நன்மைகளைச் செய்து, பெற்றோர் கடனைத் தீர்த்து அவர் களிடம் நல்லாசி பெற்றுக்கொள்ள வேண்டும்.

பெற்றவர்களின் வயது முதிர்ந்த காலத்தில், அவர்களை கவனியாமல் அலட்சியப்படுத்தி, தனிமையில் பசியும், பட்டினியுமாய் வறுமையுடன் வாழச்செய்தால், நம்மைப் பெற்றவர்களே மனம் கலங்கி விட்டசாபம் காற்றில் கலந்து, அண்டவெளியெங்கும் உலாவும். இந்த பூமியில் நாம் எங்கு சென்று வாழ்ந்தாலும், அங்கெல்லாம் காற்றாய் வந்து குடும்பத்தில் கலக்கத்தையும் கலகத்தையும் தந்து நிம்மதியில்லாமல் வாழச் செய்துவிடும்.

பெற்றவர்களைப் பிரித்து வைத்து வாழும் பிள்ளைகளின் வாழ்வில் பித்ரு சாபம், பித்ரு சோகம், பித்ரு துவேஷம் என்ற தோஷ நிலைப்பாடு உண்டாகி, வம்சத்தை உருக்குலைக்கும். தாய்- தந்தை உயிருடன் இருக்கும்போது ஊன், உடை, இடம் தராதவர்கள், இறந்தபின்பு இந்த சாபதோஷம் தீர எத்தனை தானம், தர்மம், திதி என எதைச் செய்தாலும் நிவர்த்தி காணமுடியாது.

நாம் பெற்ற குழந்தைகளிடம் செலுத்தும் அன்பு- ஆதாரம், பாசம் என்ற வகைப்பாடாகும்.

ஒருவன் தான் பெற்ற குழந்தைகளுக்கு ஆதாரமாக இருந்து, அவர்களின் கல்வி, உணவு, உடை, எதிர்கால நல்வாழ்விற்காக தன் சிரமம் பாராமல் உழைத்து, பொருள் சேமித்து வைக்கவேண்டும். அவர்கள்மீது பாசம் காட்டி வளர்க்கவேண்டும்.

எந்த நிலையிலும் தன் குழந்தைகள்மீது வெறுப்பைக் காட்டக்கூடாது. பிள்ளை களுக்கு நல்வாழ்வை அமைத்துத் தருவதே பெற்றவர்களின் கடமை என புரிந்து வாழவேண்டும்.

பெற்ற பிள்ளைகளுக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யத் தவறிய பெற்றோர்கள், தான் பெற்ற பிள்ளைகள் மனம் நொந்து கைம்மண் வாரிவிட்ட சாபம் மலைபோல் வந்து வாட்டும். இந்த சாபம் வம்சத்தைத் தொடர்ந்து வந்து, வம்சவிருத்தியில் தடை, வாரிசு அடையத் தடை, வம்சம் முடிதல் போன்றவற்றைத் தரும்.

குடும்பத்தில் கணவன், மனைவி ஒருவர்மீது ஒருவர் செலுத்தும் அன்பு- பற்று, காமம் என்ற வகை அன்பாகும்.

ஒரு ஆண், ஒரு பெண்ணை மணந்த பின்தான் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு மரியாதை, அங்கீகாரம் கிடைக்கிறது. எங்கோ ஓரிடத்தில் பிறந்து வளர்ந்து, திருமணம் முடிந்த பின்பு, அவள் தன் தாய், தந்தை, உறவு என அனைத்தையும் துறந்து, கணவனே இனி நமக்கு அனைத்தும் என்ற நம்பிக்கை கொண்டு, தன் வாழ்வின் இறுதிவரை துணையாக இருப்பவள்தான் மனைவி. கட்டிய கணவன் இறந்தபின், வாழ்வின் அனைத்து சுகங்களையும் துறந்து, ஒரு துறவி நிலையில் வாழும் ஒரே உறவு மனைவிதான்.

ஒரு ஆணுக்கு அனைத்துத் தேவைகளையும் செய்து, ஆலிலிங்கன சுகத்தையும், வாரிசு களையும் தந்து, வம்சவிருத்தியைத் தருபவள் மனைவிதான். குடும்ப வாழ்வில் ஒரு கணவன் தன் மனைவியிடம், எந்த எதிர்பார்ப்புமில்லாத பற்றினைக் கொண்டு வாழ்தல் வேண்டும். இதேபோன்று மனைவி கணவன்மீது பற்றுகொண்டு, அவனை ஆதாரத்துணையாகக் கொண்டு வாழ்தல்வேண்டும். கணவன்- மனைவி இருவரும் ஒரே நிலையில் பற்றுதலும், காமமும், மாறாத ஈர்ப்புடனும் வாழ்தல் வேண்டும்.

ஒரு ஆண் தன் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யாமல் பற்று, பாசம் இல்லாமல், அவளை பசியும் பட்டினியுமாய் வாழச்செய்தால் தன்னை மணந்த மனைவியே மனம் வெறுத்துவிட்ட சாபத்தை அடைவான். மனைவி சாபத்தால், அந்தக் குடும்பத்தில் பிறக்கும் ஆண்- பெண் குழந்தைகளுக்குத் திருமணத் தடை, திருமணமே நடக்காமல் போவது, கணவன்- மனைவி இடையே பிரிவு, விவாகரத்து, தாம்பத்திய உறவுக் குறைபாடுகளை உண்டாக்கி வைத்து, களத்திர தோஷம், களத்திர சோகம், களத்திர துவேஷ நிலை பெற்று, குடும்பத்தில் வளர்ச்சியைத் தடுக்கும்.

புலத்தியனே, நான் உனக்குக் கூறிய இரக்கம், தயை, நட்பு, நேயம், நயப்பு, பேணுதல், ஆதாரம், பாசம், பற்று, காமம், காதல் இவை அன்பின் பல்வேறுபட்ட நிலைகளாகும். அன்பினால் பற்றப்படும் பொருள்களும், உறவுகளும் பலவாயினும், அந்தந்த உறவுகளுக்குக் கூறப்பட்டுள்ள முறையில் முறையாக இருக்குமாயின், இது ஒருநிலைப்பட்டு இறைநிலையில் அன்பைச் சேர்க்கக்கூடியதாக இருக்கும். ஆன்மாக்களின்மீது அன்பு என்பது, இறைநிலைக்கு வேறாகாதது என்பதால் தான் "அன்பே சிவம்', "அன்பே கடவுள்' என்று ஞானிகளும், மகான்களும் கொண்டாடுகி றார்கள்.

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.

(மேலும் சித்தம் தெளிவோம்)

om010119
இதையும் படியுங்கள்
Subscribe