பாவ- சாப- தோஷங்கள் தீர்க்கும் மார்க்கம்!
23
எள்ளளவும் அன்புஅகத்தில் இல்லாதார் முக்தி
எய்துவது தொல்லுலகில் இல்லை யெனவே
கள்ளப்புலனைக் கட்டறுத்து சித்தக் காலனைக்
கண்டுதொழுதே களித்துநின் றாடாய்ப் பாம்பே.
(சித்தஞானம்)
புலத்தியர்: அகத்தி யரே, இல்லறத்தில் உள்ளவர்கள் கடைப் பிடிக்க வேண்டிய நெறி களை விளக்கமாகக் கூறினீர்கள். இனி நாட்டு மக்களைக் காப்பாற்றும் அரசனின் நிலைப்பாடு, ஆட்சி நிர்வாக நெறிமுறை எப்படி இருக்க வேண்டும் என்பதையும் விளக்கமாகக் கூறுங்கள்.
அகத்தியர்: புலத்தி யனே, நாம் வசிக்கும் இந்த தீபகற்பப் பகுதியானது வடபுலம், தென்புலம், மலை நாடு என பல பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. இன்னும் இந்த பூமிப்பகுதிகளில் பல நாடுகள் உண்டு. மனிதர்கள் ஒன்றுபோலவே பிறந்து, உண்டு, உறங்கி, சுவாசித்து வாழ்ந்தாலும், ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்கள் அனைவரும், அவரவர் களுக்கென்று தனித்தனி மொழி, உணவு, வாழ்க்கை முறை என அமைத்துக் கொண்டு, தனித்தனிக் கூட்டமாகவும், அதில் தங்க ளுக்கென்று ஒரு தலை வனை உருவாக்கி ஏற்றுக் கொண்டு, அவனின் அதிகார ஆளுமைக்குட் பட்டு, அவன் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.
நாம் வசிக்கும் இந்த தீபகற்பப் பகுதியின் தென்புலம் தென்பாண்டி நாடாகும். சகல ஞானமும் பாண்டித்யமும் பெற்ற மன்னர்கள் ஆட்சி செய்வதால் பாண்டிய நாடு என்றும், சித்தர்களாகிய நாம் இங்கு வசிப்பதால் சித்தர்பூமி என்றும், இந் நாட்டு மக்கள் அறிவின் துணைக்கொண்டு வாழ்வ தால் சைவபூமி என்றும் (சைவம்- அறிவு), மக்களை சைவர்கள் என்றும், தமிழ் மொழி பேசுவதால் தமிழர்கள் என்றும் மற்றவர்கள் அழைக்கிறார்கள்.
இந்த தீபகற்ப பூமிப் பகுதியில் பலவிதமான குணம், செயல்களைக் கொண்ட அரசர்களின் ஆட்சி, நிர்வாகம் உண்டு. இவர்களின் ஆட்சிமுறை ஒன்றுபோல இராது. நான் நமது தமிழ் மக்களின் தலைவனாக இருந்து ஆட்சிசெய்யும் பாண்டிய மன்னர்கள், தமிழ் மக்க ளுக்கு ஆதாரமாக இருந்து எப்படி ஆட்சிசெய்ய வேண்டும் என அரசனின் கடமைகளையும், நல்ல ஆட்சிக்கான நிர்வாக நெறி முறைகளையும் வகுத்துக் கொடுத்துள்ளேன்.
அவரவர் பிறவி குணத் தையும், இனத்தின் குணத் தையும் கொண்டே ஆட்சி நிர்வாகம் இருக்கும். இவர்களில் ஆன்மிக அரசு, ஆஸ்திக அரசு, ஞாத்தீக அரசு என்ற மூன்றுவித முறைகளில் மன்னர்கள் ஆட்சி புரிவார்கள். புலத்தியர்: அரசர் களின் ஆட்சிமுறை ஒன்று போல்தானே இருக்கும்? ஆனால் தாங்கள் மூன்றுவிதமாகக் கூறுகிறீர்களே?
ஆன்மிக அரசு (அரசன்)
அகத்தியர்: புலத்தியனே, ஆட்சிக்கு ஒரு இலக்கண நெறி முறை உண்டு. இதில் ஆன்மிக அரசனின

அகத்தியர்: புலத்தியனே, ஆட்சிக்கு ஒரு இலக்கண நெறி முறை உண்டு. இதில் ஆன்மிக அரசனின் நிர்வாகம் எப்படி யிருக்கும் என்பதைத் தெரிந்து கொள். இதுவே தமிழ் மன்னர் களின் ஆட்சிமுறை.
இந்த பூமியில், அமைதியான வாழ்வுக்கு அன்பே ஆதாரமானது.
ஒரு மன்னன் தன் நாட்டு மக்களுக்கு தாய், தந்தை, நண்பன் என்ற நிலையில், எந்தவிதமான எதிர் பார்ப்புமின்றி, நாட்டு மக்களிடம் அன்பு செலுத்தி, நேசித்து, அவர்கள் குறை தீர்த்து ஆட்சி செய்ய வேண்டும். ஒரு அரசனின் அகம் முழுவதும்- அவன் சிந்தனை, எண்ணம், செயல் என அனைத்தும் தன் நாட்டு மக்களின் நலம், நாட்டின் வளம், வளர்ச்சி பற்றியதாகவே இருக்கவேண்டும்.
ஒரு அரசன் அருள்மனம், ஐம்பொறியடக்கல், பகுத்தறிவு, லட்சியம், முயற்சி, நேர்மை, ஞானம், மேன்மை ஆகிய எட்டினை யும் குணங்களாகவும்; தைரியம், வீரம், விவேகம், வித்தை, பொறுமை, உழைப்பு, விழிப்புணர்வு, பாரபட்சமில்லாமை ஆகியவற்றை நடைமுறைச் செயல்களாகவும் கொண்டு ஆட்சி செய்யவேண்டும்.
தன் நாட்டில் வாழும் மனிதன், மிருகம், விலங்கு, பறவை, தாவரம் என அனைத்து ஆன்மாக் களிடமும் அன்பு செலுத்தி, "மண்ணுயிர்களைத் தன்னுயிர் போல் நேசித்து' அரசு புரிபவன் ஆன்மிக அரசன் ஆவான். இவனது ஆட்சி நிர்வாகமுறையே ஆன்மிக அரசு என்ற வகைப்பாடாகும்.
(ஆன்மா+அகம்+அரசு=ஆன்மிக அரசு). தன் நாட்டு மக்கள்மீது மட்டும் அல்லாமல் இந்த பூமியில் வாழும் அனைத்து ஆன்மாக்களையும் நேசிப்பவன். இவன் ஆட்சியில் நாட்டு மக்களின் நல்வாழ்வே முக்கியமானதாக இருக்கும்.
நிர்வாகம்
ஆன்மிக அரசனின்- தமிழ் மன்னர்களின் நிர்வாக முறை பற்றிகூறுகின்றேன் கேள்.
உயிரினம் வாழ்வதற்கு உடலே ஆதாரம்; அந்த உடலுக்கு சக்தி கிடைக்க உணவே ஆதாரம். உணவுக்கு விவசாயம், பயிர்வளம் அவசியம்.
தன் நாட்டில் உள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து வகை நிலப்பகுதிகளை ஆராய்ந்து- நீ அறிந்து அங்குள்ள அனைத்து குறைகளையும் நீக்கி, மக்களின் வாழ்வாதாரம் அழியாமல் பாதுகாக்கவேண்டும்.
விவசாயம் செழிக்க மண், நீர்தான் ஆதாரம். இவை இரண் டையும் பற்றிய ஞானமும், அனுபவ அறிவும் இருக்க வேண்டும்.
விவசாயம் சம்பந்தமான அனைத்தும் மன்னனின் நேரடி கண்காணிப்பில் இருக்கவேண் டும். அல்லது விவசாயம், அதற்கு ஆதாரமான நீர் பராமரிப்பு இரண்டையும் ஒருவனே நிர்வாகம் செய்யவேண்டும். அந்த நிர்வாகி பருவமழை, நீர் பராமரிப்பு பற்றிய அறிவும், அனுபவமும் உள்ளவனாக இருக்கவேண்டும்.
விவசாயம், பயிர் நிர்வாகம் ஒருவனிடமும், நீர் பராமரிப்பு மற்றொருவனிடமும் இருந்தால் விவசாயம், நீர்வளம் இரண்டும் அந்த நாட்டில் அழிந்துவிடும்.
விவசாயம், நீர் பராமரிப்பு நிர்வாகம் செய்பவர், அந்த நாட்டை, அந்த விவசாயப் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும்.
நாட்டின் மலை, வனவளம் அழியாமல் காப்பாற்ற வேண்டும். மலை, வனவளம் செழிப்பாக இருந்தால்தான் மருதநிலப்பகுதி செழிப்பாக இருக்கும். மலை, வனத்தில் வாழும் மக்களை மன்னன் பாதுகாக்க வேண்டும். இந்த மலைவாழ் மக்களே மலை, வனம், காடு, அதிலுள்ள உயிரினங்கள், மரம், தாவரம், மூலிகைகள் என அனைத்தையும் அழியாமல் பாதுகாக்கும் காவலர்கள் என்பதை உணர்ந்து, நாட்டிலுள்ள அரசு நிர்வாகிகளால், அவர் களுக்கு எந்த இடையூறும் இல்லாமல், மலைவாழ் மக்கள் சுதந்திரமாக செயல்படச் செய்யவேண்டும்.
மலையும், காடும் ஒரு நாட்டின் எல்லை அரண் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வனத்தில் வாழும் கொடிய மிருகங்கள்தான் காட்டின் காவலர்கள். இந்த மிருகங்களும் அழிந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும். இதனால் நாட்டிலுள்ள மனிதன் காட்டில் நுழைந்து வனவளத்தை அழிக்கமாட்டான்.
வனத்தில் வளரும் மூலிகைகளைப் பாதுகாக்கவேண்டும். இந்த மூலிகைகளைக் கொண்டு ஆதூர சாலைகளை அமைத்து, நாட்டு மக்களின் நோய் தீர்த்து, மக்களை ஆரோக்கியமாக வாழச்செய்ய வேண்டும். வனத் திலுள்ள மூலிகைகள் நமது சித்தர்களின் ஞானத்தால் அறியப்பட்டவை; சித்தர்களின் அருளைப் பெற்றவை என்பதை மன்னன் புரிதல் வேண்டும்.
வனவிலங்குகள், பறவையினங்கள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் அவற்றால் மனிதர்களுக்கும், பயிர்களுக்கும் அழிவு ஏற்படும்போது, அரசன் அவற்றை வேட்டையாடலாம். இது அரசனின் கடமை யாகும். அதேபோல் கொடிய மனிதர்களால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும்போது, அவர் களைக் கொல்லலாம். இந்தச் செயல் அரசனுக்கு உயிர்க்கொலை பாவமல்ல.
ஒரு நாட்டில் பயிர்த்தொழில், கால்நடைகள், வனவளம் இவைதான் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரம். வாணிபத்திற்கும் இவையே ஆதாரம். இந்த செல்வங்களும், விவசாயமும் அழிந்தால், அந்த நாட்டின் வளர்ச்சி குறையும். தன் நாட்டு மக்களுக்குத் தேவையான அனைத்தையும் தன் நாட்டிலேயே உற்பத்தி செய்துகொள்ள அரசன் வழிகாணவேண்டும். எதற்கும் பிறரையும், பிற நாட்டையும் எதிர்பார்க்கக்கூடாது. இந்த சூட்சும ஞானம் அறிந்து, கடைப்பிடித்து, சுயஅறிவால் ஆட்சி செய்பவனே ஆன்மிக அரசன்.
புலத்தியனே, உடலை வளர்க்கும் உணவினை அடையும் நிலைபற்றிக் கூறினேன்.
இனி ஒரு ஆன்மா பாதிப்படையாமல் பாதுகாக் கும் ஆட்சிமுறை, நிர்வாகம் பற்றிக் கூறுகிறேன்.
நாட்டில் குற்றங்கள் இல்லாமலிருக்க, மக்கள் குற்றங்கள் செய்யாதிருக்க, அந்நாட்டு அரசன், அரசு நிர்வாகிகள், காவல் பணியாளர் கள், போர் வீரர்கள், நியாயாதிபதிகள் ஆகியோர் குற்றங்கள் செய்யாது, நேர்மையானவர்களாக, மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்.
அரசு நிர்வாகிகள், ஊழியர்கள், அரசனின் குடும்பத்தார், நியாயாதிபதிகளால் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அவர்களை உண்மையான ஒற்றர் களை நியமித்துக் கண்காணிக்க வேண்டும். இந்த ஒற்றர்களைக் கண்காணிக்க மேலும் இரண்டுநிலையில் ஒற்றர்களை நியமிக்க வேண்டும். மூன்றாம் நிலை ஒற்றர்கள் மன்னனின் அந்தரங்க மேற்பார்வையில் உள்ளவர்களாக இருக்கவேணடும்.
அரசன் பிறரின் கைப்பாவையாகி, குரு, ஆச்சார்யன், அமைச்சர்கள், ஆலோசகர்கள், அரசு குடும்பத்தார், அரசு நிர்வாகிகள் என இவர்கள் சொல்வதைக் கேட்டு செயல்படக் கூடாது. தன் அந்தரங்க ஒற்றர்கள் கூறுவதைக் கேட்டு, தன் சுய அறிவால் உண்மையை ஆராய்ந்து செயல்படவேண்டும். மன்னனை மக்கள் சந்திக்க எந்த தடையும், எந்த நிலையிலும் இருக்கக்கூடாது.
அரசன் எந்த நிலையிலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள எதிரி மன்னனிடம் அடிபணியக்கூடாது. மாற்றான் வலுவறிந்து, தன் சுயபுத்தியாலும் தன் சக்தியாலும் அவனை வெல்லவேண்டும். தன் நாட்டு மக்களை அடிமைகளாக வாழும்படி மாற்றிவிடக்கூடாது.
அந்நியர்களின் ஆதிக்கம், ஆலோசனை, அந்நியமொழி, கலாச்சாரம், வாழ்வியல் முறைகள், பொருட்கள் ஆகியவற்றை நாட்டில் நுழைய விடக்கூடாது. தன் நாடு, தாய்மொழி, மக்கள் நலன், பண்பாடு, நமது கலாச்சாரம், வாழ்வியல் முறை பாதிக்கும்போது, எதிரி நாட்டின்மீது போர் தொடுத்து அழிக்கலாம். பகை, கடன், நெருப்பு இவை மூன்றிலும் மீதம் வைக்கக்கூடாது. முற்றாக அழித்துவிட வேண்டும்.
எதிரி நாட்டுடன் போர் செய்யும்போது, அந்த நாட்டுக் குடிமக்களைக் கொல்வதும், துன்புறுத்துவதும், பொருளை அபகரிப்பதும் பாவம். இது ஆன்மிக அரசன் செயல் அல்ல. இது ஒரு திருடனின் செயலாகும். இது மகாபாவத்தை மன்னனுக்கும் மக்களுக்கும் கொண்டுவந்து சேர்க்கும். எதிரி அரசனை, போர் வீரர்களைக் கொல்லலாம். இது பாவ மல்ல; அரசனின் கடமை. நாட்டு மக்களுக்கு பாதிப்பு, துன்பம் ஏற்படும்போது, மன்னன் என்ற நிலையில் இருந்து நியாயம் வழங்கக்கூடாது. பாதிக்கப் பட்டவர் நிலை, பாதிப்பு உருவான மூல காரணம், பாதிப்பின் அளவு என அனைத்தை யும் தன் சுயஅறிவால் அறிந்து, பாதிக்கப்பட்ட ஆன்மா மனநிம்மதி அடைய, பாரபட்சமின்றி நியாயம் வழங்கவேண்டும். நியாய சபைகள் மக்களின் உடல், உயிர், ஆன்மாவைப் பாதுகாப்பதற்காகவே செயல்படவேண்டும்.
நியாய சபை இரண்டு நிலைகளில் மட்டுமே இருக்கவேண்டும். கீழமை நியாய சபை பாதிப்பு ஏற்பட்ட இடத்திலும், அடுத்து அரசனின் நேரடி நியாய சபையும் இருக்கவேண்டும். கீழ் உள்ள சபையில் தவறுகள் நடந்தால், அங்கு நியாயம் வழங்கிய, நியாயாதிபதி பொறுப்பில் உள்ளவனை தண்டித்து, பொறுப்பிலிருந்து நீக்கிவிட வேண்டும். நியாயம் கிடைக்காமல் எந்த ஒரு ஆன்மாவும் பாதிப்படையக்கூடாது.
அரசன் பாதிக்கப்பட்ட ஆன்மாக்களுக்கு நீதி வழங்கக்கூடாது. நியாயம் வழங்கவேண்டும். நீதி என்பது வேறு; நியாயம் என்பது வேறு. நீதி என்பது, தனக்கு முன்பு இருந்தவர்கள் சொல்லியதை, செய்ததை அடிப்படையாகக் கொண்டும், பிறர் கூறும் கருத்துகள், சாட்சி, சந்தர்ப்பவாதங்கள், சம்பிரதாய முறைகளை ஆதாரமாகக் கொண்டும் சொல்லப்படுவது. நீதி சொல்பவர்களின் மனநிலை, அறிவு நிலையைப் பொருத்து தீர்ப்பு கூறுவது.
நியாயம் என்பது எங்கும், எப்போதும், எந்த இடத்திலும் மாறாத தன்மைகொண்டு, ஒரே நிலையானதாக இருக்கும். நீதியில் சத்தியம், உண்மை இராது. சம்பவம், சந்தர்ப்பவாத பேச்சும்தான் இருக்கும். ஆனால் நியாயம் என்பது சத்தியமானது. இயற்கையைப்போல் என்றும், எதற்கும், யாருக்காகவும் மாறாதது. ஒரு அரசன் தன் நாட்டில் நீதிமன்றங்களை அமைக்கக் கூடாது. நியாய சபைகளை, நியாயாதிபதிகளையே நியமித்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
அந்நிய நாட்டுப் பகுதியைச் சேர்ந்தவன் எவ்வளவு பெரிய அறிவாளியானாலும், தன் அரசில் நிர்வாகம் செய்ய அனுமதிக்கக்கூடாது.
நாட்டு மக்கள் மூடநம்பிக்கைகளில் சிக்கி மாளாமல், பிரபஞ்சம், பஞ்சபூதம், உண்மை ஞானம், வாழ்க்கைக்கு ஆதாரமான தொழில், நேர்மை, நன்னடத்தை, மொழிப்பற்று, நாட்டுப்பற்று ஆகியவற்றைக் கற்பிக்கும் கல்விக் கூடங்களை நாடெங்கும் உருவாக்கி, தமிழ்ப் பண்பாட்டை போதித்து, அறிவால் விழிப்படைந்து, உழைப்பினால் மக்களின் வாழ்வை உயர்வடையச் செய்யவேண்டும்.
இவைதான் தமிழ் மன்னர்கள் ஆட்சிபுரிய நான் வகுத்துக்கொடுத்த ஆன்மிக ஆட்சி வழிமுறைகள்.
புலத்தியர்: தமிழ் மன்னர்களின் ஆட்சிக்கு இலக்கண நெறிகளை வகுத்துக்கொடுத்த அகத்தீசரே, அடுத்து ஆஸ்திக அரசு பற்றிய விளக்கத்தையும் கூறுங்கள்.
அகத்தியர்: புலத்தியனே, இப்போது சித்தர்கள் எல்லாரும் அவரவர் இருப்பிடக் குகைகளுக்குச் செல்வோம். நாளை தமிழ் சபையில் ஆஸ்திக அரசு பற்றி அறிவோம்.
வஞ்சனைபொய் சூதுகபடங்கள் நீக்கி
மானவபிமான முதற்பெருமை நீக்கி
அஞ்சுகின்றகோப மாங்காரம் நீக்கி
ஆசையதைப்பாதி அடியோடே நீக்கி
துஞ்சவேசோதித்துப் பார்த்தாலுந் தான்
துணிவாகிபுத்தியே கதியென் றெண்ணி
தஞ்சமென்றேஐயனது நிழற்போல் காத்து
சரணத்தினேவல் செய்துதழைத் திடாயே.
(சைவ சித்தாந்த ஞானம்)
சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்.