"தன்னையறிந் தொழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளை பேண நினையார்
பேரறிவைப் பேணுவாரென் றேயாடாய் பாம்பே.'
(பாம்பாட்டிச் சித்தர்)
புலத்தியர்: ஆசானே, அகம் முழுவதும் பொருளாசைக்கொண்டு, தன் நலமே பெரிதென எண்ணி, நாட்டு மக்களின் நல்வாழ்வைப் பற்றிக் கவலைப்படாத ஆத்திக (ஆஸ்திக) அரசனின் குணத்தையும், அவன் ஆட்சியில் மக்கள் படும் சிரமங்களையும் நேற்று கூறினீர்கள். இன்று ஞானம் கொண்ட ஞாத்திக அரசனைப் பற்றிக் கூறுங்கள்.
அகத்தியர்: புலத்தியனே, ஞானம் என்றால் அறிவு என்று பொருளாகும். ஒருவன் தன் சுய அறிவினால் அனைத்தையும் அறிந்து, தன் அனுபவத்தால் உணர்ந்து செய்யும் செயல்கள் அனைத்தும் ஞானச்செயல்கள் ஆகும். அனுபவ அறிவே உண்மை ஞானமாகும்.
சித்தர்களாகிய நாம் கூறிய ஞானம் 108 பிரிவுகளாகும். ஒரு மனிதர் தன்னையறியும் அறிவு, தன் முன்வினை, பூமி, கோள்கள், நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறிதல், அவற்றின் செயல்பற்றிய அறிவு, இப்பூமியில் உயிரினங்களின் உடல், உயிர், ஆன்மா, நோய், மருத்துவம், சித்தத்தின் செயல், பிறப்பின் நிலை, வாழ்வு, இறப்பு, உணவு, உடை, பொருள் என இன்னும் மனித வாழ்வு சம்பந்தப்பட்டவற்றின் நன்மை- தீமைகளை அறிவதே ஞானமாகும். ஒருவன் தனக்கு தீமை தருவனவற்றை நீக்கி, நன்மை தருவனவற்றை அறிந்து பயன்படுத்தி வாழ்வதே ஞானவாழ்க்கையாகும்.
இந்த பூமியில் அன்றும், இன்றும், எதிர்காலத்திலும் இல்லாதவை பற்றி கற்பனையால் கூறப்படுபவையும்; தன் உயிர், உடல், மனதால் அறிய முடியாதவையும்; நம்பிக்கை வேண்டுமென்று இவை பற்றிக் கூறுவதும் ஞானமல்ல.
பூரண ஞானம் பெற்ற அரசன் இந்த பூமியில் உள்ளவை பற்றித் தெளிவாக அறிந்திருப்பான். அவன் ஆட்சி நிர்வாகம், செயல்கள் அறிவைச் சார்ந்தே இருக்கும். இவன் தன் நாட்டின் ஒவ்வொரு இடத்தையும், ஊரையும் தெளிவாக அறிந்திருப்பான்.
அங்கு வாழும்
"தன்னையறிந் தொழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னையறி யாதவரே தன்னைக் காட்டுவார்
பின்னையொரு கடவுளை பேண நினையார்
பேரறிவைப் பேணுவாரென் றேயாடாய் பாம்பே.'
(பாம்பாட்டிச் சித்தர்)
புலத்தியர்: ஆசானே, அகம் முழுவதும் பொருளாசைக்கொண்டு, தன் நலமே பெரிதென எண்ணி, நாட்டு மக்களின் நல்வாழ்வைப் பற்றிக் கவலைப்படாத ஆத்திக (ஆஸ்திக) அரசனின் குணத்தையும், அவன் ஆட்சியில் மக்கள் படும் சிரமங்களையும் நேற்று கூறினீர்கள். இன்று ஞானம் கொண்ட ஞாத்திக அரசனைப் பற்றிக் கூறுங்கள்.
அகத்தியர்: புலத்தியனே, ஞானம் என்றால் அறிவு என்று பொருளாகும். ஒருவன் தன் சுய அறிவினால் அனைத்தையும் அறிந்து, தன் அனுபவத்தால் உணர்ந்து செய்யும் செயல்கள் அனைத்தும் ஞானச்செயல்கள் ஆகும். அனுபவ அறிவே உண்மை ஞானமாகும்.
சித்தர்களாகிய நாம் கூறிய ஞானம் 108 பிரிவுகளாகும். ஒரு மனிதர் தன்னையறியும் அறிவு, தன் முன்வினை, பூமி, கோள்கள், நிலம், நீர், காற்று, வெப்பம், ஆகாயம் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை அறிதல், அவற்றின் செயல்பற்றிய அறிவு, இப்பூமியில் உயிரினங்களின் உடல், உயிர், ஆன்மா, நோய், மருத்துவம், சித்தத்தின் செயல், பிறப்பின் நிலை, வாழ்வு, இறப்பு, உணவு, உடை, பொருள் என இன்னும் மனித வாழ்வு சம்பந்தப்பட்டவற்றின் நன்மை- தீமைகளை அறிவதே ஞானமாகும். ஒருவன் தனக்கு தீமை தருவனவற்றை நீக்கி, நன்மை தருவனவற்றை அறிந்து பயன்படுத்தி வாழ்வதே ஞானவாழ்க்கையாகும்.
இந்த பூமியில் அன்றும், இன்றும், எதிர்காலத்திலும் இல்லாதவை பற்றி கற்பனையால் கூறப்படுபவையும்; தன் உயிர், உடல், மனதால் அறிய முடியாதவையும்; நம்பிக்கை வேண்டுமென்று இவை பற்றிக் கூறுவதும் ஞானமல்ல.
பூரண ஞானம் பெற்ற அரசன் இந்த பூமியில் உள்ளவை பற்றித் தெளிவாக அறிந்திருப்பான். அவன் ஆட்சி நிர்வாகம், செயல்கள் அறிவைச் சார்ந்தே இருக்கும். இவன் தன் நாட்டின் ஒவ்வொரு இடத்தையும், ஊரையும் தெளிவாக அறிந்திருப்பான்.
அங்கு வாழும் மனிதன், விலங்கு முதலான உயிரினங்களின் மீது இரக்கம்கொண்டு அவை அழியாமல் காப்பாற்றுவான். ஒவ்வொரு பகுதி மக்களின் பாரம்பரியத் தொழில், பொருளாதாரம், வாழ்வுநிலை, நாகரிகம், பண்பாடு என அனைத்தையும் அழிந்துவிடாமல் பாதுகாப்பான்.
அவன் சிந்தனையும், செயலும் தன்னைப் பற்றி இருக்காது. தன் நாடு, மக்கள் நலனைப் பற்றியே இருக்கும்.
வரப்புயர நீர் உயரும்; நீர் உயர நிலம் உயரும்; நிலம் உயர குடி உயரும்; குடிகள் உயர கோன் உயர்வான் என்னும் கருத்தை மனதில் கொண்டவன்.
இதனால் உணவு, தொழில் மூலப் பொருட்கள் குறைவின்றிக் கிடைக்கும். விவசாயிகள், தொழிலாளர்களின் பொருளா தாரம், வாழ்வாதாரம் உயரும்.
மக்களின் பொருளாதாரம் உயரும்போது, எதற்கும் பற்றாக்குறை இல்லாததால் பொருள் பஞ்சம், உணவுப் பஞ்சம் இருக்காது.
அதனால் நாட்டில் களவு இராது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். நாட்டில் அமைதி நிலவும்.
நிலத்தடி நீரைப் பாதுகாப்பதில் மிகுந்த கவனமாக இருப்பான். பூமியில் உள்ள நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி வானில் சென்று மேகமாக உருமாறி, மறுபடியும் பூமியில் மழையாகப் பெய்யும். பூமி நீரை சேமித்துவைத்து, தாவரங்களின் வேருக்கு நீர் தந்து, நாட்டைப் பசுமையாக வைத்திருக்கும். நிலத்தடி நீர் வறண்டுபோனால் பூமியில் மழை பெய்யாது; மரம், தாவரங்கள் காய்ந்துவிடும் என்ற உண்மையை அறிந்தவனாதலால் நிலத்தடி நீரை மக்கள் குறைத்துவிடாமல் பாதுகாப்பான்.
நாட்டின் தட்பவெப்ப நிலை, பருவ காலங்கள் அறிந்து, அவற்றைத் தாங்கி வளரும் பாரம்பரியப் பயிர்வகை எவையென்பதை அறிந்து, அவை அழிந்துவிடாமல் பாதுகாப் பான். அன்னியப் பகுதி விவசாயம், உணவுப் பயிர் வகைகளை தன் நாட்டில் அனுமதிக்கமாட்டான்.
மலை, காடு, வனப்பகுதிகளில், மழை அதிகமாகப் பெய்ய உயரமான மரங்களை வளர்த்தும், மக்கள் வசிக்கும் சமவெளிப்பகுதிகளில் பலன்தரும் பழ மரவகைகளை வளர்க்கவும் ஆவன செய்வான். மலைநாட்டு மக்கள் எல்லைக் காவலர்களாக இருப்பார்கள். காட்டில் வாழும் விலங்கினங்கள் அழிந்துவிடாமல் இருக்க தக்க பாதுகாப்பு செய்வான். விலங்குகள் காடுகளுக்கு காவலாக இருக்கும்.
நமது தென்பாண்டி நாடு விவசாயம் சார்ந்த பூமியாகும். இங்கு மழைநீர் வளம் தர பொதிகையும், சமவெளிப்பகுதி பயிர்வளம் செழிக்க தாமிரபரணியும் இயற்கை தந்த செல்வமாகும். இவையிரண்டும் அழியாமல், காலத்தால் அழிக்கப்படாமல் இருக்கும்வரை பாண்டியன் பூமியில் பஞ்சம் இராது.
ஞாத்திக அரசன் நாட்டுமக்கள் ஞானம் பெறவேண்டுமென்று நாடுமுழுவதும் அறிவாலயங்களை (பள்ளிகள்) உருவாக்கு வான். அங்கு 108 விதமான ஞானத்தை போதிக்க ஆணையிடுவான்.
தமிழ்க் கல்வி ஒவ்வொருவருக்கும் ஞானம் தருவதாக இருக்கும். அவரவர் தன் தனித்திறமை யைத் தானே அறிந்து தன் உழைப்பு, முயற்சியால் வாழ்வை உயர்த்திக் கொள்ளவும், மூடநம்பிக்கை விடுத்து, மகத்தான மனித சக்தி அறிந்து செயல்படுத்தும் கல்வியாகவும் இருக்கும். "ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது' என்பதுபோல் ஞானம் தராத ஏட்டுக்கல்வியும், காலத்தை வீணாக்கி, பொழுதுபோக்கும் நிலையிலுள்ள கற்பனைக் கதைகளும், கவிதைகளும் இவன் அமைக்கும் கல்விக்கூடங்களில் இராது. மனிதனுக்கு பகுத்தறிவு, ஞானம் தராத எதுவும் கல்வியாக இராது.
ஞாத்திக அரசன் பற்றி அடுத்த இதழில் மேலும் அறிவோம்.
வாசி யோகம்
சூரியனின் ஒளியில் நம் நிழல் உருவை ஆகாயத்தில் பார்ப்பது குறித்து கடந்த இதழில் கண்டோம். அதுபோல இரவு நேரத்தில் சந்திரனை மேகங்கள் மறைக் காமல் நன்கு ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் சமயத்தில், உருவத்தின் நிழலைப் பார்த்தும் பலன் அறியலாம் என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.
இரவு நேரத்தில் சந்திரனின் பிரகாசமான ஒளியில் மேடு, பள்ளம் இல்லாத சமமான இடத்தில் உங்கள் நிழல் விழும்பக்கம் திரும்பி நின்றுகொண்டு, ஐந்தடிக்கும் குறையாமல், பத்தடி நீளத்திற்கும் மிகாமல் நிழல்விழும் சமயத்தில் உருவ நிழலை கண் சிமிட்டாமல் பார்த்து, பின் கண்சிமிட்டாமல் ஆகாயத்தைப் பார்த்தால் நம் உருவம் அங்கு தெரியும்.
அந்த உருவம் ஆகாயத்தில் மஞ்சள் நிறத் தில், தங்கம்போல் பிரகாசமாகத் தெரிந் தால் இப்பிறவி வாழ்வில் செல்வந்தனாக வாழ்வார்கள். வெண்மை நிறமாகத் தெரிந்தால், இந்த பூமியில் பெருமையுடன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் சூழ நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து முடிப்பார்கள்.
நிழல் உருவத்தின் சரீர உறுப்புகளில் ஏதாவது ஒன்று குறைவாகத் தெரிந்தால், ஒன்று தெரியாமல் போனால் கடந்த இதழில் சூரியனுக்கு கூறியதுபோல் பலன்களை அடைவார்கள்.
இந்த நிழல் உருவத்தைத் தொடர்ந்து பன்னிரண்டு வருடங்கள் பார்த்துக் கொண்டே வருபவர்களுக்கு, அவர்களின்முன் நிற்கும் நிழல் உருவம் அவர்களுடன் பேசும். அப்படி நம் நிழலுடன் பேசும் சித்தி நிலையை அடைந்துவிட்டோமானால், அந்த நிழல் உயர்வான வாழ்வை அடைய வழிகாட்டும். அதன் வழிகாட்டுதல்படி தவறாமல் கடைப்பிடித்து செய்துவந்தால், பொதுவாக மனிதர்களின் உடம்பில் வெளிப்பட முடியாமல் மறைந்திருக்கும் அனைத்து சக்திகளும் வெளிப்பட்டு, மிக சக்திமிக்கவராக வாழச் செய்துவிடும். அணிமா முதலான எண்வகை சித்திகளையும் பெறலாம்.
அஷ்டமகா சக்திகள்
ஒருவர் தன் உடலை மிகச்சிறியதாக சுருக்கிக்கொள்வது "அணிமா' என்ற சக்தி.
"மஹிமா' சக்தியின்மூலம் உடலை மிகப் பெரிதாக்கலாம்.
"கரிமா' சக்தியின் உதவியால் உடலை மிக்க பளுவானதாகச் செய்துகொள்ளலாம்.
"லஹிமா'வால் மிக லேசாக- எடை குறைவாகச் செய்துகொள்ளலாம். தன் உடலை காற்றைவிட லேசாக்கி காற்றில் பறக்கலாம்.
"பிராப்தி' சக்தியால் சூரியன், சந்திரன் போன்ற ஒன்பது கிரகங்களையும், பஞ்ச பூதங்களின் சக்திகளையும் தன்வசப்படுத்திக் கொள்ளலாம்.
"பிரகாமியம்' என்ற சக்தியால், தன் உயிரை இறந்துபோன உடம்பில் நுழைத்து, அந்த உடலை உயிர்பெறச் செய்து இயங்க வைக்கலாம். நாம் நினைத்த இடத்தில் தோன்றலாம். பிறர் மனதை தன் மனதின் இச்சைப்படி இயக்கலாம்; பிறரை செயலிலிழக்கச் செய்யலாம்.
"ஈசத்துவம்' எனும் சக்தியால் இந்த பூமியில் உயிர்களைப் படைத்தல், பஞ்சபூதங்களை செயல்படச் செய்தல், கோள்களின் சுழற்சி யால் பூமியில் பருவங்களை உண்டாக்குதல், தோற்றுதல், அழித்தல் என்ற ஐந்துவகையான செயல்களையும் செய்து அனைத்திற்கும் தலைவனாக விளங்கலாம்.
"வசித்துவம்'- அண்டம்முதல் அனைத் தையும் தன்வசமாகச் செய்துகொள்ளலாம்.
அணிமா, மஹிமா, கரிமா ஆகிய மூன்றுசக்திகளும் மனிதனின் உடம்பில் மறைந்திருந்து செயல்படும் மண் தத்துவ சக்திகளாகும்.
லஹிமா மூச்சுக்காற்றின் தத்துவ சக்தியாகும்.
பிராப்தி மனித உடம்பினுள்ளே இருக்கும் வெப்ப சக்தியாகும்.
பிரகாமியம் மனதை இயங்கச் செய்யும் நீர்சக்தியாகும். (காய்ந்து கிடக்கும் பூமியில் மழை பெய்தால், அந்த நீரின் சக்தியால் அங்கு உயிரினம், தாவரங்கள் தோன்றும்).
ஈசத்துவம் என்பது அவரவர் ஆன்மநிலை சக்தியாகும்.
வசித்துவம் என்பது, நம் உடலிலிலுள்ள உயிர், ஆன்மா மற்றும் இதற்கு ஆதாரமான மண், நீர், காற்று, வெப்பம், ஆன்மா (உணர்வுகள்), ஆகாயம், என்ற பஞ்சபூத சக்திகளையும் தன் உடலைவிட்டு வெளி யேறாமல் அடக்கி வைத்து மரணத்தை வென்று வாழும் நிலையாகும்.
எட்டுவித சக்திகளும் மனிதனின் உள்ளேதான் மறைந்திருக்கின்றனவே தவிர வெளியில் எங்கும் இல்லை. அட்டமகா சக்திகளை அடைய மனிதர்களுக்கு தன்னையறியும் பகுத்தறிவு வேண்டும். தன் உயிர், உடல், ஆன்மா பற்றிய தெளிந்த ஞானம் வேண்டும்.
அவரவரின் நிழலிலின் சக்தியைப் பற்றித் தொடர்ந்து அறிவோம்.
தானாகித் தான்முடிந்த சூட்சந் தன்னைத்
தரணிதனி லறியாமல் தான்தா னென்றே
ஊனாகி நின்றதிரு உடலைக் காணான்
உடலிலில் நின்ற அட்சரத்தின் உறுதி காணான்
ஆணாகி நின்ற திருவாசி காணான்
அமர்ந்து நின்ற வாசிதிரு நயனங் காணான்
வானாகி நின்றவடி முடியுங் காணான்
மதிகெட்டு விதியழிந்து மாறுவானே.
(சித்தர் சித்தாந்தம்)
சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)