பாவ- சாப- தோஷங்கள் மார்க்கம்! சித்தர்தாசன் சுந்தர்ஜி

சதுர்வேதம் ஆறுவகை சாத்திரம் பல

தந்திரம் புராணங்களை சாற்றுமாகமம்

விதம்வித மானவேறு நூல்களும்

Advertisment

வீணாண நூல்களென்றே யாடாய் பாம்பே.

(பாம்பாட்டிச் சித்தர்)

புலத்தியர்: ஆசானே, ஆன்மிக அரசனின் ஆன்ம நேயத்தையும், நாட்டு மக்கள்மீது அன்புகொண்ட ஆட்சிமுறையையும் பற்றி தெளிவு சொன்ன தாங்கள், ஆத்திக அரசனின் ஆன்மாவின் நிலைபற்றியும், அவன் குணம், ஆட்சி, நிர்வாக முறைபற்றியும் விளக்கமாகக் கூறுங்கள்.

Advertisment

அகத்தியர்: ஆத்திக (ஆஸ்திக)

அரசன், ஒரு நாட்டின் அரசனுக்குரிய நற்குணங்கள், ஆட்சி நெறிமுறைகள் அறியாதவனாக, சுயஅறிவு, ஆட்சி புரியும் திறமையற்றவனாக இருப்பான். அரச குரு, ஆச்சாரியர்கள், அரசப் பிரதி நிதிகள், நிர்வாகிகளின் உதவியால், அரச வம்சத்தில் பிள்ளையாகப் பிறந்த ஒரே காரணத்தால், பரம்பரை வாரிசு முறையில் நாட்டின் அரசனாக்கப் படுவான்.

ஆத்திக அரசன் தன் நாட்டைப் பற்றியும், மக்கள் நலன்பற்றியும் சிறிதும் கவலைப்பட மாட்டான். தன்நலன், தன் குடும்பத்தார் நலன், தன்னை சார்ந்திருப் பவர்கள் நலனுக்கு முக்கியத்துவம் தந்து ஆட்சிபுரிவான். நாட்டு மக்கள் அனைவரும் அடிமைகளாக, மன்னனின் நலமே முக்கியம் என எண்ணி வாழவேண்டு மென கட்டளையிடுவான். தன் நாடும், நாட்டிலுள்ள பொன், பொருட்கள் அனைத்தும் தனக்கும், தன்னைச் சார்ந்த வர்களுக்கும் மட்டுமே உரிமையானது என்பான்.

ஆத்திக அரசன் சுயஅறிவு இல்லாத வன்; அரச தர்ம நெறிமுறைகளை அறியாதவன் என்பதால் அரச குரு, ஆச்சாரியர், அமைச்சர்கள், அரசு நிர்வாகிகள் என பிறர் சொல்வதைக் கேட்டு, அவர்கள் விருப்பப்படி ஆட்சி செய்வான். தன் பதவி ஆசையால் தன் உடன்பிறந்தோரையும், குடும்பத்தாரை யும், உதவி செய்தவர்களையும்கூட கொல்வான்.

மக்களை நேரடியாகச் சந்திப்பதைத் தவிர்ப்பான். தனக்கு பொன், பொருள் தருபவர்களையும், அவற்றை அடையும் வழிமுறைகளைக் கூறுபவர்களையும் மட்டுமே அருகில் வைத்துக்கொள்வான். நாட்டின் வளர்ச்சி, மக்களின் நலன் சார்ந்த எந்த செயலையும் செய்ய மாட்டான்.

நாட்டின் நிலப்பகுதிகள் தெரியாத வன். மண்வளம், நீர்வளம், வனவளம் அறியாதவன். இவன் ஆட்சியில் இவை பாதுகாப்பற்றதாகிவிடும். முறையான நீர் நிர்வாகம் இல்லாததால் மண் மலடாக்கப்படும். மருதநிலப் பகுதி பாலைவனமாகும். மலை, வனம் அழியும்; மழைவளம் குறையும்.

ஒரு நாட்டின் மண் பகுதியில் விளையும் பாரம்பரியப் பயிர்வகைகள் மற்றொரு நாட்டின் மண்ணில் விளையாது. ஒரு மண்ணில் விளையும் தாவரங்களின் குணம், விளைவு மற்றொரு நாட்டு மண்ணிற்குப் பொருந்தாது. மண் தன்மையும், தட்பவெப்பநிலையும் வெவ்வேறாக இருக்கும் என்ற சாதாரண அறிவுகூட இல்லாதவனாக இருப்பான். தென்புலத்தின் பாரம்பரியப் பயிர், தாவரங் கள், மூலிலிகைகள், மலை மரங்கள் பாதுகாக்கப்படாமல் அழியும். அன்னிய நாட்டின் பயிர், தாவர மரவகைகளைப் பயிர்செய்யத் தூண்டி வழி வகுப்பான். இதனால் பாரம்பரிய பயிர்த்தொழில் பாழாகும். விவசாயக் குடிமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள்.

ஆத்திக அரசன் ஆட்சியில் நியாயம் என்பது இல்லாமல் போய்விடும். நியாய வான்கள் ஒதுக்கப்படுவார்கள். அரசனின் எண்ணத்தைச் செயல்படுத்தும்விதமாக நீதிபதிகள் எனப்படுவோர் நியமிக்கப்படு வார்கள். நியாயமன்றங்கள், நீதிமன்றங்க ளாக மாறி, அவரவர் எண்ணத்தையே நீதி எனக் கூறுவார்கள். இங்கு பொருள், பதவி உள்ளவர்களுக்கும், பக்திமான்கள் எனப் படுவோர்க்கும் ஒருவித நீதியாகவும், பொருளற்ற பாமர மக்களுக்கு ஒருவித மான நீதியும் வழங்கப்படும். அரசன் எவ்வழியோ, அந்த வழியிலேயே நியாயத்தைப் பேண வேண்டிய அரசு நிர்வாகிகளும், காவலர் களும் செயல்படுவார்கள்.

ஆஸ்திக அரசன் ஆட்சி யில் பொருள், பதவி உள்ளவன் மதிக்கப்படுவான். உண்மை யைச் சொல்பவர்க்கும், உழைத்து வாழும் மக்களுக்கும் மரியாதை இராது; உயர்வும் உண்டாகாது. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்காது. பிறரை ஏமாற்றுபவன், பொய் சொல்பவன், பிறர் பொருளை அபகரிப்பவன் புத்திசாலிலி என போற்றி மதிக்கப்படுவான்.

குரு, ஆலோசகர்கள் கூறுவதைக் கேட்டு, ஆன்ம நேயமில்லாமல் அண்டை நாட்டின்மீது படையெடுத்துச் சென்று போர்புரிந்து, அந்நாட்டு மக்களைக் கொன்று வதைசெய்து, அங்குள்ள பொன், பொருள், கால்நடைகளைக் கொள்ளையடித்து வரும் கொளளைக்காரனாக அரசன் இருப்பான். போரினால் தன் நாட்டு மக்களும் மடிவார்களே என்ற ஆன்ம நேயம் இல்லாதவன். "போரில் மக்களைக் கொன்றதால் உண்டான பாவ- சாபங்கள் கோவில் கட்டி கல், மண், உலோகத்தில் உருவங்களை வைத்து பூஜை செய்தால் நீங்கும்' என்று குருமார்கள் கூறுவதைக் கேட்டு, நாட்டை வளப்படுத்தாமல், கொள்ளையடித்த பொருட்களால் கோவில் களைக் கட்டிவைப்பான்.

அகத்தியனான யான் வகுத்துத் தந்து, தமிழ்மக்கள் கடைப்பிடித்துவரும் தென் புலத்தார் முன்னோர் வழிபாடு (நீத்தார் கடன்), குடும்பத்தார் வழிபாடு, சுற்றத்தார் வழிபாடு, விருந்தினர் வழிபாடு, உயிரின வழிபாடு என்ற ஐம்பெரும் வழிபாட்டுமுறைகளை தமிழ்மக்கள் விலக்கிவிடுவார்கள். (தமிழர்களின் ஐம்பெரும் வழிபாட்டுமுறைகளைப் பின்வரும் தொடர்களில் அறியலாம்).

அன்னிய இனத்தாரின் வழிபாட்டுமுறைகள் நாடெங்கும் பரவும். இசை, ஆடல், பாடல், நடனம், தானம், தர்மம், அலங்காரம், ஆரவாரம், மாயாவாதங்கள், கதைகள் போன்றவையே கடவுள் வழிபாடாகக் கடைப்பிடிக்கப்படும். கோவில் நிர்வாகம் செய்பவர்களை மக்கள் கடவுளாக எண்ணி வழிபடுவார்கள்.

ஆத்திக அரசன் ஆட்சியில் தமிழ் மண்ணில் அன்னிய இனத் தாரின் ஆதிக்கம் அதிகமாகும். அவர் களின் நிர்வாகம், ஆலோசனையால் தமிழின மக்களிடையே உயர்வு- தாழ்வு நிலை உருவாகி ஒற்றுமை குறையும். மொழியால், தொழிலால் அடையாளப் படுத்தப்பட்ட மக்கள், பிரித்தா ளும் சூழ்ச்சியால் மதம், சாதி, கடவுள், வழிபாட்டு முறையால் பேதப்படுத்தப்படுவார்கள்.

ஓரினமாக வாழ்ந்த தமிழினம் சிதறும். ஆத்திக அரசனின் ஆட்சிமுறை, ஆன்மிக அரசனின் ஆட்சிமுறைக்கு நேர் எதிர்மாறானதாகவே இருக்கும். எல்லாருக்கும் பொதுவாக இயற்கையால் உண்டாக்கப்பட்ட மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்து சக்தி களும் பொன், பொருளாக மாற்றப்படும். இயற்கை அழிக்கப்படும். வானில் உலாவரும் கோள்களும், நட்சத்திரங்களும் வழிபாட்டுப் பொருளாகவும், வாணிபப் பொருட்களாகவும் மாற்றப்படும்.

ஆத்திக அரசன் ஆட்சியில் தமிழின மக்களின் பகுத்தறிவு ஞானமும், ஆற்றலும் குலையும். அகத்தியனால் உருவாக்கப்பட்ட தமிழர் பண்பாடு, ஐம்பெரும் வழிபாடு, சைவ சித்தாந்த தமிழர் நாகரிகம், வாழ்வியல் முறை, மொழி, இனப் பற்று ஆகியவை காலத்தால் அழியும்.

அன்னியரின் வாழ்வுமுறை, வழிபாட்டைப் பெரிதாக எண்ணுவார்கள். இதுதான் ஆத்திக அரசனின் ஆட்சிமுறை; அறிந்துகொள்.

புலத்தியர்: அகத்திய மாமுனியே! தாங்கள் கூறுவதை என்னால் நம்ப முடியவில்லை.

siddhar

அகத்தியர் உருவாக்கிய தமிழ்மொழி, தமிழ் மக்களின் வாழ்வியல் முறையான சைவ சித்தந் தாந்தக் கருத்து, கொள்கைகள் அழிந்துவிடும் என்று முக்காலமும் அறிந்த நீங்களே கூறுகிறீர் களே!

அகத்தியர்: அகத்தியனாகிய யான் எதிர்கால நிகழ்வுகளை அறிந்துதான் கூறுகிறேன். இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது திரேதா யுகம். இன்னும் பல்லாயிரம் வருடங்கள் சென்றபின்பு, தென்புலத்தில் பிரளயம் உண்டாகி, நீரினால் தென் புலப்பகுதி கொஞ்சம் அழியும். அப்போது வடபுலத்தில் மழை வளம் குன்றி பஞ்சம் உருவாகும். வடபுலத்தைச் சேர்ந்த மக்கள் பிழைக்க வழியின்றி, தென்பாண்டி நாடு நோக்கி வருவார்கள். அவர்கள் தங்கள் நாகரிகம், வழிபாட்டுமுறைகளை கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் மக்களிடையே நுழைத்து, தமிழ் மக்களை அடிமைப்படுத்தி விடுவார்கள்.

தமிழின மக்களும் பகுத்தறிவு இழந்து, அறியாமை இருளில் சிக்கிக் கொள்வார்கள். அந்த சமயத்தில் தமிழ்மொழி, மக்களைக் காப்பாற்றி வந்த சித்தர்களாகிய நாம் அனைவ ரும், இவர்களைவிட்டு விலகி மலைக் குகைகளில் குண்டலிலினி யோகம் செய்தவண்ணம் மறைந்தி ருப்போம். அதேசமயம் நாங்கள் கூறிய சைவ சித்தாந்தக் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்களைத் தேடிச்சென்று காப்பாற்று வோம்.

புலத்தியர்: ஆத்திக (ஆஸ்திக) அரசனின் ஆட்சிமுறையையும், அவன் குணத்தையும், அவன் ஆட்சியால் தமிழ் மக்களின் எதிர் கால நிலையையும் அறிந்து கொண்டேன். இதைப்போன்றே ஞான ஆதிக்கம் கொண்ட ஞாத்திக அரசனின் ஆட்சிமுறை பற்றியும் விளக்கமாகக் கூறுங்கள்.

அகத்தியர்: புலத்தியனே, நாளை சித்தர்கள் கூடும் தமிழ்ச்சங்கத்தில் அனைவரும் அறியும்வண்ணம் கூறுகிறேன்.

பல யுகங்களுக்குமுன்பு அகத்தியர் கூறியது போன்றுதான் கி.பி. 9-ஆம் நூற்றாண்டிற் குப் பின் தமிழ்நாட்டில் ஆத்திக அரசர்களின் ஆட்சி உருவாகி, அந்த மன்னர்களால் தமிழ் மொழி, தமிழர் வாழ்வு மாறத்தொடங்கியது. இன்றைய நாளில் தமிழர் தன் வரலாறு தெரியாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.

இதனை தாயுமான சுவாமிகள்- சித்தர்களின் பெருமையை கூறி, அவர்கள் அருளை வேண்டி "சித்தர்கணம்' என்ற தொகுப்பில் பத்து பாடல்கள் பாடியுள்ளார். இதில் ஒரு பாடலில்-

"கர்ம மொருவ னாட்டிலோ பழைய

ஞானம் முக்கியமென்று நவிலுவேன்

வடமொழியான் வல்லான் ஒருத்தன் வரவும்

திராவிடத்தில் வந்ததாக விவகரிப்பேன்'

என்கிறார்.

தமிழ் மண் யாரால், எப்போது திராவிட நாடு என மாறியது என்பதைப் பின்னர் அறிவோம்.

வாசி யோகம்

(நன்மை- தீமை, மரண காலம், அஷ்ட மகா சித்திகள் நிலை)

தமிழ்ச் சித்தர்கள் கூறிய சித்த மார்க்கம் அறிந்து, அவர்கள்கூறிய வழியில் மூச்சுக் காற்றின் நிலையறிந்து வாழ்ந்து வருபவர்கள் தங்களின் நன்மை, தீமை, மரண காலத்தைத் தாங்களே அறிந்து கொள்ளலாம். அத்தீமை களை தங்களின் மூச்சுக்காற்றின் உதவியால் தடுத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் சித்தர்கள் கூறியுள்ளார்கள்.

மேடு, பள்ளம் இல்லாத சமமான இடத்தில், ஆகாயத்தில் மேகம் மறைக்காமல் பளிச் சென்று வெயில் காயும்போது நின்று கொள்ள வேண்டும். நம் உருவ நிழல் பூமியில் ஐந்தடி நீளத்திற்குக் குறையாமலும், பத்தடி நீளத்திற்கு மேற்படாமலும் இருக்கவேண்டும். கைகள் உடலோடு சேர்ந்திருக்கவேண்டும். கண்களை இமைக்காமல், அந்த நிழலிலில் தெரியும் கழுத்துப் பகுதி, கைகள், கால்கள் என இந்த உறுப்புகளில் ஏதாவது ஒன்றை நன்கு பார்த்துவிட்டு, கண் களை இமைக்காமல் அப்படியே ஆகாயத்தைப் பார்த்தால், அங்கு நம் உருவம் தெரியும்.

அந்த உருவம் மஞ்சளாக- தங்க நிறமாக இருந்தால், அவர் பரம ஏழைக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தன் சுய உழைப்பு, முயற்சி யால், புத்தி சாதுர்யத்தால் வாழ்வில் படிப்படி யாக உயர்ந்து, அனைத்து செல்வங்களையும் அடைந்து தனவந்தனாக வாழ்வார். இப்பிறவி வாழ்வில் இவர் அடையும் இந்த செல்வ வாழ்வை எந்த கிரகத்தாலும், தேவதைகளாலும், முற்பிறவி பாவ- சாப வினைப் பதிவுகளாலும் தடுத்து நிறுத்தமுடியாது! தன் வாழ்வில் எதிரிகளை வென்று, எதிரிகளும் பணிந்து வணங்கும் வாழ்வை அடைவார்.

ஆகாயத்தில் தெரியும் உருவத்தின் நிறம் வெண்மையாக இருந்தால் எந்த விதமான நோயும் இல்லாமல், உயிர்பயம், கண்டம், கிரக பாதிப்பு, எதிரிகளால் தொல்லை இல்லாமல், நல்ல உடல் ஆரோக்கியத்துடன், நீண்ட ஆயுளுடன் பூமியில் வாழ்ந்து மரிப்பார்.

ஆகாயத்தில் தெரியும் உருவம் கருமை நிறமாக இருந்தால் நோய்களால் உடல் பாதிப்படைந்து, நோயாளியாகவே வாழ்ந்து மரணத்தை அடைவார்.

ஆகாயத்தில் தோன்றும் உருவத்தில் கைகளாவது, கால்களாவது, பார்வைக்குத் தெரியாமல் இருந்தால் ஆறுமாதத்தில் கண்டம், கஷ்டம், மரணபயம் உண்டாகும். அல்லது மரணமேகூட நேரிடலாம்.

ஆகாயத்தில் தெரியும் உருவத்தில் தலைப்பகுதி தெரியாமல், முண்டம் மட்டும் கண்களுக்குத் தெரிந்தால் மூன்று மாதங்களில் மரணம் உண்டாகும் என சித்தர்கள் வாசி யோக முறையில் கூறியுள்ளார்கள்.

அடுத்த இதழில் மனிதர்களுள் மறைந்தி ருக்கும் அட்டமகாசித்திகளை அவரவரின் நிழல் உதவியால் எப்படி அடையலாம் என்று சித்தர்கள் கூறியுள்ளதை அறிவோம்.

"விண்ணைப்பார் தன்னைப்பார் மண்ணைப்பாரு

மேன்மைபெறு சித்தரருளை மேவிப்பாரு

பெண்ணைப் பார்த்தலையாதே பெண்தான் தேகம்

பிரியமுடன் தேகமதைப்பேணிப் பார்த்தால்

கண்ணப்பா துலங்குமடாஅந்தக் கண்ணால்

காணலாஞ் சித்துவெகு கண்ணில் காணும்

மண்ணப்பா யென்ற சடந்தன்னைப் பேணா

மாந்தருக்கு யென்னவரும் மண்தானாமே.'

(சைவ சித்தாந்தம்)

சித்தரைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!