ளவல், தன் தந்தைக்குச் செய்யவிருந்த சடங்கு முறையின் முக்கியத்துவம் வாய்ந்த தறுவாயில்- ஓரையாடுதல், வட்டாடுதல், கழங்கு, அம்மானை, தூற்பந்தாடுதல், அருவி நீராடல், ஊஞ்சலாடுதல் போன்ற விளையாட்டுகளை, தன்னோடு விளையாடி மகிழும் தோழிமாரோடு சேர்ந்து இளவலைக் காணவந்தவள், அத்தோழிகளிடம் நடந்துகொள் வதைப் போலவே செய்தாள். ஆனால் இளவலின் கரம் பட்டவுடன் இனம் புரியா வெட்கத்துக்கு உள்ளானாள்.

Advertisment

ஏதேதோ தடுமாற்றங்கள் அவள் நெஞ்சுக்குள்ளே நிகழ்ந்தன. அதனை எளிதாக சமாளிக்க முடியாதவளாய், தன் செவிலித் தாயின் தோளில் சாய்ந்து துவண்டாள்.

rr

நாணுறச் செய்த ரகசிய வார்த்தைகள்!

செங்காந்தள் கொடியிடை யாள் துவண்டு விழுவதைக்கண்ட தோழியர், அந்நிகழ்வு அவளை என்னவெல்லாம் செய்து கொண்டிருக்கின்றது என்பதை, சிறுவயது முதலே அவளுடன் பழகிவந்தமை யால் எளிதாகக் கண்டறிந்தனர். நகைமுகை களாய் அவளைச் சூழ்ந்துகொண்டு கேலி செய்யத் தொடங்கினர். அதைக்காட்டிலும், செவிலி தன் காதுகளில் சொன்ன வார்த்தை கள் அவளை மேலும் சீண்டி நாணுறச் செய்தன.

அம்மொழிகள் அவளுக்கு மட்டுமே சொந்த மானவை. ஆதலால் நாம் அறியக்கூடாது.

செவிலித்தாயின் புன்னகை பூத்த புன்முறுவல் முகம் நற்றாயிடம் திரும்பியது. நற்றாய், தன் மகளைக் காட்டிலும் நாணிப் புன்னகைத்தாள். செவிலித்தாய் தோழியரிடம், "மஞ்சள் குத்தும் திருநாளுக்கு ஒத்திகை பாருங்கள்'' எனக் கூறியவுடன், கலகலவென சிரிப்பொலி கூட்டத்தில் பரவியது. "அத்தை சம்மதித்தால் நாளையே செய்துவிடலாம்'' என ஒருசேரத் தோழியர் பேரரசியாரிடம் திரும்பக் கேட்டனர். இதைக்கேட்ட பூங்கொடியாள் மேலும் மேலும் நாணிக் குறுகி செவிலித்தாயின் முந்தானைக்குள் தன் முகத்தை மூடினாள்.

மன்னவன் கரம் கரும்பா? இரும்பா?

பேரரசியார், "மஞ்சள் பூத்துக் குலுங்குகின்றன; அதற்கென்ன பஞ்சம்?'' என்றாள். அத்தையின் ஆவல்கண்ட நற்றாய் ஓடிவந்து பூங்கொடியாளைத் தன்னிடம் வாங்கி "கொடுத்து வைத்தவள்'' எனக் கூறி, அவள் நெற்றியில் கொஞ்சி ஆசீர்வதித்தாள். கண்களைத் திறந்து வெளியுலகைப் பார்க்க முடியாதவளாய் இருந்த இளவஞ்சிக்கொடியை, அப்பொழுதுதான் இளவல் கடைக்கண்ணால் பார்வை யிட்டான். என்ன அழகு!

Advertisment

kk

மெல்லுடலியாள் வெட்கத் தால் நத்தைபோன்று தன் தாயிடம் ஒடுங்கிக் கிடந்தாள். பஞ்சணையவளுக்குப் பஞ்சணையாய், தான் தாங்கத் துடித்தான்.

"அத்தை, அவளை விட்டுவிடாதீர்கள். கீழே துவளப்போகி றாள்'' எனக் கூறிய படி, தான் தாங்கிப் பிடிக்கக் கரத்தை நீட்டினான். "அவ சரம் வேண்டாம். தலைவாழை பூத்து விட்டது'' என பேரரசியார் அவனை நிதானிக்கச் செய்தாள். அதைக் கேட்ட இளங்கொடியாள், வாழைப் பூவண்ணத்தில் மேலும் தலைகுனிந்தாள். தோழியர்கள், "மன்னவன் கரம் இரும்பாக இருந்ததா? இல்லை கரும்பாக இருந்ததா?'' எனக் கேட்டு கேலி செய்தனர்.

இதைக்கேட்ட இளவலின் இணை யாளுக்கு வெண்நுதல் சிவந்தன. தாயினைப் பற்றியிருந்த தந்தக்கரங்கள் மெல்ல நழுவி, தன் தோழியரைத் தொட்டு தோழியர் கூட்டத்தில் புகுந்து மறைந்துகொண்டது. கரங்களுக்குரிய கன்னியவள் சென்ற வழியே இளவலின் கண்கள் சென்று தேடத் தொடங்கின.

மணவாழ்க்கையை பாதிக்கும் பயிர்ப்பு குணம்!

சங்ககாலத்தில் பெண் களின் குணங்களாகக் கருதப் பட்ட அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நான்கு குணங்களில், முதல் மூன்று குணங்களின் உச்ச நிலைகளில் இளவலின் அம்மான் மகள் இருந்தாள்.

இதில் பயிர்ப்பு என்றால் என்னவென்று பெரும் பாலோருக்குத் தெரியாது. பயிர்ப்பு என்ற குணத்திற்கு "குற்சிதம்' என்ற பெயரும் உண்டு. குற்சிதம் என்றால், ஒரு கன்னிப் பெண்ணானவள் தன் தாயோ அல்லது அவளது செவிலித்தாயோ தவிர, பிறர் யாராக இருப்பினும் அவர்கள் தங்கள் உடம்பின் எந்த இடத்தில் தொட்டாலும் கூச்சத்தோடுகூடிய வெறுப்புணர்வைக் காட்டுவார்கள். இந்த குணத்திற்குதான் பயிர்ப்பு என்று பெயர்.

சில பெண்களிடம் இது மிக அதிகமாகக் காணப் படும். இந்த குணத்தினால் சிலரது மணவாழ்க்கையே பாதிக்கக்கூடும். ஆதலால், இதைப் போக்குவதற்காக சங்ககாலத்து வேளாண் குடி மன்னர்களின் திருமணச் சடங்குகளில், முதல் சடங்காக இந்த மஞ்சள் குத்துத் திருநாள் கொண்டாடப்பட்டது.

ஆதித்தமிழர் பண்பாட்டின் உச்சம்!

அது என்னவெனில், இவர்கள்தான் மணமகன், மணமகள் என்று உறுதி செய்யப்பட்டவுடன், அடுத்துவரும் பௌர்ணமி நாளில் முதிர்ச்சியாக விளைந்து நிற்கும் மஞ்சள் கதிர்களை கிழங்குகளோடு மண்ணிலிருந்து முழுமையாகக் கிளர்ந் தெடுத்து, நன்னீரில் நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்வார்கள். அவற்றை, மணமகனின் சுற்றத்தார்களிலுள்ள சுமங்கலிப் பெண்கள், மணமகனின் இல்லமான அரண்மனையின் மைய மண்டபத்தில், மணவறை இருக்கும் இடத்தில் ஒன்றாகச் சேர்த்துவைத்து, அதனைச்சுற்றி மாங்குலைகளைச் செருகிவைப்பார்கள். அவற்றின்மீது பன்னீர், சந்தனம், அகில் போன்றவற்றைத் தூவி, அதனருகில் நன்றாகக் குலை விளைந்த தலைவாழை மரத்திலிருந்து வாழைப்பூவோடு சேர்த்து வாழைப்பழத் தார்களை இணைத்துக்கட்டுவர். இதனைச் சூழ்ந்து சுமங்கலிகள் அமர்ந்துகொள்வார்கள்.

dd

Advertisment

அவர்கள் ஒவ்வொருவரும் வெற்றிலையின்மீது விளக்குகளை வைத்து விளக்கேற்றி, முல்லைப்பூக்களைக்கொண்டு தங்கள் குலத்தில் பதிவிரதைகளாக இல்லறம் காத்துநின்ற மூதாதையப் பெண்டிர்களை நினைத்து, மஞ்சள் குலையிலும் வாழைப்பூவிலும் மலர்கள் தூவி வழிபடுவார்கள். பிறகு அந்த மஞ்சள் கதிர்களிலிருந்து மஞ்சள் கிழங்குகளை எடுத்து, ஒவ்வொருவருக்கும் தனித்தனியே அங்கு கொண்டுவரப்பட்டு, கழுவி வண்ணம் தீட்டப்பட்டிருக்கும் உரல்களிலிட்டுக் குத்துவார்கள். அவ்வாறு குத்துகின்றபோது, தங்கள் தலைவனான பேரரசனின் குலம் தழைக்கவேண்டுமென, குறிஞ்சிப் பண்ணிசைத்துப் பாடுவார்கள். இதற்கு மஞ்சள் குத்துத் திருவிழா என்று பெயர்.

அதேசமயம் மணமகள் இல்லத்தில் மணமகளை, செவிலித்தாயும் தோழியர்களும் நீராட்டி சீராட்டி அலங்கரித்து மலர்ப்பல்லக்கில் அமர வைத்து, அவ்வூருக்கருகில் ஓடும் ஆற்றங் கரைக்கு காவல் பணிக்கர்கள் புடைசூழக் கொண்டுவருவார்கள். மணமகன் இல்லத்திலிருந்து வணங்கப்பட்டு இடித்த மஞ்சளை உருண்டைகளாக உருட்டி, அதனை நெல் அளக்கும் மரக்கால்களில் வைத்து, அதன்மீது வெங்கல விளக்குகளை நெய்யூற்றி தீபமிட்டு வைத்து, அதனருகில் ஒரு வெற்றிலையை மஞ்சள் உருண்டையில் நட்டுவைத்து, மணமகள் இருக்கும் ஆற்றங்கரைக்கு காவல் புடைசூழ கொம்பு வாத்தியங்கள் முழங்க வந்துசேர்வார்கள்.

மணமகள் வீட்டிலிருந்து கொண்டுவந்த வண்ணத் திரைச்சீலைகளால் மணமகளைச் சுற்றி, பெரிய வட்ட வடிவிலான கோட்டப்பாசறை அமைத்து, அதன் நடுவே அரசமரத்தால் செய்யப்பட்ட ஆசனம் வைத்து, அதில் மணமகளை அமரச் செய்வார்கள். அவளைச் சுற்றிலும் ஆற்றுமணலில் ஊற்று தோண்டுவர்கள். அதில், ஆற்றில்வரும் நீரைவிடத் தூய்மையான நன்னீர் ஊறிவரும்.

அந்த நீரைப் பொற்குவளையில் முகந்து வைத்து, தாங்கள் கொணர்ந்துள்ள மஞ்சள் உருண்டைகளைப் பொற்தட்டுகளில் எடுத்துவைத்துக்கொள்வார்கள்.

அரசமர ஆசனத்தில் அமர்ந்திருக்கும் மணமகளுக்கு சிற்றாடை அணிவிப்பார்கள். சுமங்கலிகள் ஒவ்வொருவராக வந்து மஞ்சள் உருண்டையில் செருகிவைத்திருந்த வெற்றிலைமீது விளக்குவைத்து, மணமகளை விளக்கினைக்கொண்டு ஆராதித்து, தாங்கள் அரைத்த அல்லது இடித்த மஞ்சளை எடுத்து மணமகளின் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரை ஒவ்வொருவரும் பூசிவிடுவார்கள். பின் குலவையிட்டு, தங்கள் கைகளிலிருக்கும் ஊற்றுநீர்க் குடங்களிலிருந்து, உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால்கள் வரை நீர்வார்ப்பு செய்து, மணமகளின் "பயிர்ப்பு' குணத்தைப் போக்குவார்கள்.

இவ்வாறு செய்யவில்லையென்றால், பயிர்ப்பு குணத்தோடு ஒரு மணமகள் இல்லறத்திற்குள் செல்லும்போது உடல்சூடு அதிகமாகி, காய்ச்சலும் குடல் புண்களும் வெப்புக்கட்டிகளும் ஏற்படும். மேலும் இல்லறத் தடங்கல்கள் ஏற்படும். இவற்றை அனுபவத்தால் உணர்ந்திருந்த ஆதித்தமிழர்களின் பண்பாட்டு உச்சமாகத் திகழ்ந்ததுதான் இந்த "மஞ்சள் குத்துத் திருநாள்' ஆகும்.

இந்தப் பயிர்ப்பு நீங்கி இல்லறத்திற்குத் தயாராகவேண்டிய சூழலை அம்மான் மகள் ஏற்கவேண்டும் என்பதை, நாகரிகமான முறையில் தோழியர் கூறியதும், செவிலித் தாய் அதை அம்மான் மகள் காதுகளில் விளக்கியவுடன், அவளுக்கு நாணம் அதிகமாகிச் சுருண்டாள்.

மணவாழ்க்கை நிகழ்வுகள் தொடரும்...

தொடர்புக்கு: 99445 64856

தொகுப்பு: சி.என். இராமகிருஷ்ணன்