17
இரண்டாம் பாகம்
துர்முகனுக்கு அழிவு தொடங்கிவிட்டது. சதாட்சியால்தான் அவனுக்கு அழிவென்பதை அவன் அறியவில்லை. அவன் விதியும் அவனை அறியும்படிச் செய்யவில்லை.
அசுரர்கள் முடிவே இப்படித்தான்.. விபரீத வரசித்திகளோடு இருந்தாலும், தெய்வசக்தி நினைத்தால் அந்த வரசித்திக்கு நடுவி லும் ஒருவழியைக் கண்டு பிடித்துவிடும் என்பதை அகந்தை மிகுந்த அவர்கள் உணர்ந்ததே யில்லை. இம்முறையும் அப்படித்தான் நடந்தது. சதாட் சிக்கும், துர்முகனுக் குமான போரில் துர்முகன் மடிந்தான்.
அவன் ஒளித்து வைத்திருந்த வேதங்களை எடுத்து சதாட்சியான தேவி முனிவர்களிடம் அளித்தாள். தேவருலகமும் புத்துயிர் பெற்றது. எங்கும் வேத முழக்கமும் வேள்வி களும் நடக்கத் தொடங்கி சர்வ லோக இயக்கங்களும் சீராயின.
துர்முகனை அழித்தமையால் தேவிக்கு துர்க்கா என்கிற திரு நாமமும் ஏற்பட்டது. வியாசரும் சதாட்சி துர்க்கையான வரலாற்றைக் கூறி முடித்தவராக ஜெனமேஜெயனை ஏறிட்டார். அவனிடம் எந்த கேள்விகளும் இல்லாத ஒரு ஆழ்ந்த மௌனம்.
""என்ன ஜெனமேஜெயா... எதனால் இந்த மௌனம்?'' ""அசுரர்களை எண்ணித்தான்... எவ்வளவு பட்டாலும் இவர்களுக்கு புத்தி வருவதில் லையே...?'' ""இதுவரை வந்ததில்லை. இனியும் வராது.
அங்கேதான் சிருஷ்டியின் ரகசியம் ஒளிந் துள்ளது.''
""இது என்ன விநோதமான பதில் மகரிஷி?'' ""விநோதமான பதிலில்லை. மிக யதார்த்த மான பதில்...''
""அப்படி எனக்குத் தெரியவில்லை...''
""நான் இப்போது சொல்லப்போகும் கதையைக் கேட்டால் உனக்குத் தெரிந்துவிடும்.''
""அது என்ன கதை?''
""ஹாலன், ஹலன் என்று இரு அசுரர் கள்! இவர்கள் தங்கள் வரசித்தியால் கயிலாயத் தையும், வைகுண்டத்தையும் தங்கள் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவர விரும்பினர்.''
""திரும்பவும் அசுர புராணமா?''
""ஆம்! ஆனால் இந்த அசுர கதையின் விளைவு, எவரும் கற்பனைகூட செய்து பார்த்திராத விளைவுகளை அளித்ததுதான்...''
""அப்படி என்ன விளைவு?''
""சிவனும், விஷ்ணுவுமேகூட இதனால் சக்தி யிழந்தார்கள் என்பது ஒரு மோசமான விளைவு தானே?''
""ஆச்சரியமாக உள்ளதே?''
""ஆம்; அதுதான் லோக சிருஷ்டி! அம்பிகை யின் சாகசங்கள் ஆச்சரியத்துக்கே ஆச்சரியம் தருபவையாகும். சொல்லப்போனால் இந்த அசுரர்களால்தான் 108 சக்தி தலங்கள் பூமியில் ஏற்பட்டன.''
""நூற்றெட்டா?''
""ஆம்; ஒன்றல்ல... இரண்டல்ல...
நூற்றெட்டு...!''
""அது என்ன 108 என்கிற ஒரு எண் கணக்கு?''
""108 என்பது ஒரு கால
17
இரண்டாம் பாகம்
துர்முகனுக்கு அழிவு தொடங்கிவிட்டது. சதாட்சியால்தான் அவனுக்கு அழிவென்பதை அவன் அறியவில்லை. அவன் விதியும் அவனை அறியும்படிச் செய்யவில்லை.
அசுரர்கள் முடிவே இப்படித்தான்.. விபரீத வரசித்திகளோடு இருந்தாலும், தெய்வசக்தி நினைத்தால் அந்த வரசித்திக்கு நடுவி லும் ஒருவழியைக் கண்டு பிடித்துவிடும் என்பதை அகந்தை மிகுந்த அவர்கள் உணர்ந்ததே யில்லை. இம்முறையும் அப்படித்தான் நடந்தது. சதாட் சிக்கும், துர்முகனுக் குமான போரில் துர்முகன் மடிந்தான்.
அவன் ஒளித்து வைத்திருந்த வேதங்களை எடுத்து சதாட்சியான தேவி முனிவர்களிடம் அளித்தாள். தேவருலகமும் புத்துயிர் பெற்றது. எங்கும் வேத முழக்கமும் வேள்வி களும் நடக்கத் தொடங்கி சர்வ லோக இயக்கங்களும் சீராயின.
துர்முகனை அழித்தமையால் தேவிக்கு துர்க்கா என்கிற திரு நாமமும் ஏற்பட்டது. வியாசரும் சதாட்சி துர்க்கையான வரலாற்றைக் கூறி முடித்தவராக ஜெனமேஜெயனை ஏறிட்டார். அவனிடம் எந்த கேள்விகளும் இல்லாத ஒரு ஆழ்ந்த மௌனம்.
""என்ன ஜெனமேஜெயா... எதனால் இந்த மௌனம்?'' ""அசுரர்களை எண்ணித்தான்... எவ்வளவு பட்டாலும் இவர்களுக்கு புத்தி வருவதில் லையே...?'' ""இதுவரை வந்ததில்லை. இனியும் வராது.
அங்கேதான் சிருஷ்டியின் ரகசியம் ஒளிந் துள்ளது.''
""இது என்ன விநோதமான பதில் மகரிஷி?'' ""விநோதமான பதிலில்லை. மிக யதார்த்த மான பதில்...''
""அப்படி எனக்குத் தெரியவில்லை...''
""நான் இப்போது சொல்லப்போகும் கதையைக் கேட்டால் உனக்குத் தெரிந்துவிடும்.''
""அது என்ன கதை?''
""ஹாலன், ஹலன் என்று இரு அசுரர் கள்! இவர்கள் தங்கள் வரசித்தியால் கயிலாயத் தையும், வைகுண்டத்தையும் தங்கள் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவர விரும்பினர்.''
""திரும்பவும் அசுர புராணமா?''
""ஆம்! ஆனால் இந்த அசுர கதையின் விளைவு, எவரும் கற்பனைகூட செய்து பார்த்திராத விளைவுகளை அளித்ததுதான்...''
""அப்படி என்ன விளைவு?''
""சிவனும், விஷ்ணுவுமேகூட இதனால் சக்தி யிழந்தார்கள் என்பது ஒரு மோசமான விளைவு தானே?''
""ஆச்சரியமாக உள்ளதே?''
""ஆம்; அதுதான் லோக சிருஷ்டி! அம்பிகை யின் சாகசங்கள் ஆச்சரியத்துக்கே ஆச்சரியம் தருபவையாகும். சொல்லப்போனால் இந்த அசுரர்களால்தான் 108 சக்தி தலங்கள் பூமியில் ஏற்பட்டன.''
""நூற்றெட்டா?''
""ஆம்; ஒன்றல்ல... இரண்டல்ல...
நூற்றெட்டு...!''
""அது என்ன 108 என்கிற ஒரு எண் கணக்கு?''
""108 என்பது ஒரு காலக்கணக்கு. ஒரு மனிதன் தன் வாழ்வில் தான் பிறந்த காலப் புள்ளியை 60 வருட முடிவில் மீண்டும் சந்திக்கிறான். இதுவொரு வட்டச்சுற்று. இதோடு ஒரு மண்டல காலம் எனும் 48 நாட்களைக் கூட்டிட 108 வரும்!''
""ஒரு மண்டல காலம் என்றால்?''
""இருபத்தேழு நட்சத்திரங்கள், பன்னிரண்டு ராசிகள், ஒன்பது கோள்கள்... இதன் கூட்டுத்தொகையே 48. ஆகமொத்தத்தில் 60 ஆண்டுக்காலம் ஒரு முழுச்சுற்று வாழும் மனிதன், 27 நட்சத்திரங்கள் மற்றும் பன்னிரு ராசிகள், ஒன்பது கோள்களாலேயே வழிநடத்தப்படுகிறான். அதனாலேயே அனைத்தையும் உள்ளடக்கிய 108 என்கிற ஒரு எண் அளவு உருவானது.''
""108-க்குப்பின்னால் இப்படி ஒரு உள்ளடக்கமா?''
""ஆம்... இந்த உள்ளடக்கத்திற்கு ஏற்பவே அம்பிகையும் தன் சக்தி மிகுந்த 108 அம்சங்களைப் பூவுலகில் 108 கோவில்களில் ஏற்படுத்தித் தந்தாள்.''
""அந்த வரலாறை விரிவாகக் கூறுங்கள் மகாமுனி.''
""கூறுகிறேன். இந்த வரலாறை விரிவாக மட்டுமல்ல; மிக கவனமாகவும் கூறவேண்டும். மனிதர்களில்தான் பெரியவர்- சிறியவர் பாகுபாடும் பேதமும்... இறையம்சங்களில் அது கிடையாது. கூடவும் கூடாது. ஒரு கல் அடித்து இன்னொரு கல் விலகும். ஆனால் தண்ணீர் அடித்து தண்ணீர் விலகாது- ஒன்றுதான் சேரும்.''
""பீடிகை பலமாக உள்ளதே?''
""ஆம்; என் அய்யன் என்றும், பரம் பொருள் என்றும் போற்றிடும் ஸ்ரீஸ்ரீவிஷ்ணுவும் சிவனுமே சக்தியின் பொருட்டு ஒரு நாடகம் ஆடிடும்போது பீடிகை பலமாய்ப் போட்டால்தானே புரியும்?''
""பீடிகைபோதும்... கதைக்கு வாருங்கள்.''
""வருகிறேன்.... ஹாலனும் ஹலனும் கயிலை மீதும் வைகுண்டம்மீதும் படையெடுத்தனர்.
அவர்களை எதிர்ப்பதற்கான சக்தி வரம் வடிவில் இருப்பதாலேயே படையெடுத்தனர்.
விஷ்ணுவும் சிவனும் தன் சக்தியால் இவர்களை வெல்ல முடியாது. இதுவே இவர்கள் இருவரும் பெற்றிருந்த வரம். இதனால் கயிலாயமும், வைகுண்டமும் இந்த அசுரர் வசம் அகப்பட்டுவிடும் ஒருநிலை தோன்றி விட்டது.
விஷ்ணுவும் சிவனும் ஹாலன், ஹலன் இருவரின் அடிமையாக மாறப் போவதை லட்சுமியாலும், சக்தியாலும் தாள முடியவில்லை. அந்த நொடியே அவர்கள் இருவரும் ஒரு முடிவுசெய்து தங்கள் சக்தியை இருவருக்கும் அளிக்க, போரில் ஹாலனும் ஹலனும் கொல்லப்பட்டனர்.
ஒருவழியாக கயிலாயமும், வைகுண்டமும் தப்பிப் பிழைத்தன. காரணம் சக்தியும் லட்சுமி யும்! ஆனால் இவர்கள் இருவரை விஷ்ணுவும், சிவனும் நேரில் சந்தித்து தேறுதல்கூட அளிக்க வில்லை. மாறாக மௌனமாக இருந்தனர். இது இருவரையும் பாதித்தது.
"எங்களால்தான் வெற்றி கிடைத்தது. ஆனால் எங்களைப் பாராட்ட உங்களுக்கு மனம் வரவில்லையே' என்றனர்.
"உங்களைப் பாராட்டுவது எங்களை நாங்களே பாராட்டிக்கொள்வது போலா காதா?' என்று அய்யன்கள் இருவரும் திரும்பக் கேட்டனர்.
"இல்லை... சக்தியைப் போற்றும் எண்ணம் தங்களுக்கு இல்லை' என்றாள் பார்வதி, "என் தண்ணருளைப் போற்றும் எண்ணம் தங்களுக்கும் இல்லை' என்ற லட்சுமிதேவி, "நாங்கள் இல்லாவிட்டால் என்னாகும் என்பதை உங்களுக்குப் புரியவைக்க நாங்கள் உங்கள் இருவரையும்விட்டு விலகுகிறோம்' என்று கூறியதோடு விலகியும் விட்டனர்...''
""அய்யோ! இது என்ன கொடுமை? இப்படிக்கூடவா தேவியர்கள் அவசரப் படுவர்?''
""இப்படியெல்லாம் அவர்கள் நடக்கப்போய்தானே 108 ஆலயங்களைப் பூவுலகம் பெற்றது.''
""அது எப்படி?''
""கூறுகிறேன். லட்சுமியும் சக்தியும் விலகவும், சிவனும் விஷ்ணுவும் தனித்தனர்.
தங்கள் தனிசக்தியைப் பயன்படுத்தும் விருப்பமுமின்றி சக்தியற்றவர்கள் போலாயி னர். இதனால் தேவயக்ஞங்கள் நின்றன. தேவருலகின் சமச்சீர் நிலைகுலைந்துபோய் தடுமாற்றம் ஏற்பட்டது.''
""உண்மையில் இது மிக மோசமான ஒரு நிலையே... அசுரர்களால் முதலில் பிரச்சினை- பிறகு தேவர்களாலேயே... விநோதமும்கூட...''
""விநோதம் மட்டுமல்ல; விபரீதமும் ஏற்பட்டது. சகலலோகங்களிலும் விஷ்ணு வின் காத்தல் தொழிலும், சிவனின் அழித்தல் தொழிலும் முடங்கிப் போனது. பிரம்மா இதையுணர்ந்து, அதன் முடக்கத்தை அவர் போக்கி உலக இயக்கம் நின்றுவிடாதபடி செய்தார். அதேவேளை அவரது படைப்புத் தொழில் இதனால் தடைப்பட்டது. எனவே தன் புத்திரர்களான சனகர், சனந்தனர், சனத்குமாரர், சனாதனர் ஆகியோரிடம், ""நீங்கள்தான் ஸ்ரீவிஷ்ணு, ஸ்ரீசிவன் இருவரின் இயக்கமற்ற நிலைக்குக் காரணமான போக்குக்கு நல்வழி காணவேண்டும். உடனடி யாக அம்பிகையான பராசக்தியை எண்ணிக் கடுந்தவம் புரியுங்கள். அவள் உங்கள் பொருட்டு லட்சுமி தேவியையும், பார்வதி தேவியையும் திரும்பச்செய்து கருணை புரியட்டும்' என்றார். அதேபோல சனகாதியர் நால்வரும் பராசக்தியை எண்ணிக் கடும்தவம் புரிந்தனர். இந்தத் தவத்துக்கு தட்சனும் துணைபுரிந்தான். சனகாதியர் தவத்துக்கு அம்பிகையும் மனம் இரங்கினாள். முக்கண்களோடும், நான்கு கரங்களோடும் ஜோதிப்பிழம்பாய்த் தோன்றிய அம்பிகை சனகாதியர்க்கு கேட்ட வரத்தை அளித்தாள். அவள் தோன்றிய ரூபத்துக்கு சச்சிதானந்த ரூபம் என்று பெயர்.
இந்த ரூபத்தை தியானிப்பவர்களுக்குப் பிரிந்துசென்றவை கைகூடும். அதேபோலவே லட்சுமி பாற்கடலில் திரும்பத் தோன்றி விஷ்ணுவை அடைந்தாள். சனகாதியருக்கு உதவிசெய்த தட்சனுக்கு மகளாய்ப் பிறந்து பார்வதிதேவி சிவனை அடைந்தாள்.
இச்சம்பவம் ஆண்- பெண் உறவில் இருவருக்கும் சம அந்தஸ்தும் பலமும் இருப்பதை உலகுக்கு உணர்த்துகிறது. உலகம் இதை உணரத்தான் இப்படியொரு சம்பவமும் நடந்தது.''
வியாசர் கூறிமுடித்திட ஜெனமே ஜெயனும், ""நல்ல படிப்பினைதான்'' என்றான்.
அப்படியே ""108 சக்தி கோவில்கள் எப்படி ஏற்பட்டன என்று கூறவில்லையே'' எனவும் கேட்டான்.
""நல்ல கேள்வி... பிறகே அதற்கான தேவையும் அதற்குரிய சம்பவமும் நடந்தன... மகரிஷிகளில் துர்வாசர் என்று ஒருவர். மிகவும் கோபக்காரர்! இவர் வருகி றார் என்றாலே தேவர்கள், அசுரர்கள் நடுங்குவர். மும்மூர்த்திகளிடம்கூட இவர் கோபப்படக்கூடியவர். இப்படிப்பட்ட துர்வாச மகரிஷி ஒருசமயம் சனகாதியர்க்குக் காட்சியளித்த ஆதிசக்தியின் சச்சிதானந்த ரூபத்தைத் தானறிந்த விசேஷமான- அம்பிகைக்கு மிக உகந்த மாயாபீஜ மந்திரத்தால் தியானித்தார். இதனால் மகிழ்ந்த அம்பிகை துர்வாசருக்கு தான் அணிந்திருந்த உத்தமமான மலர்மாலையை எடுத்துக் கொடுத்தாள். அது அபூர்வமாலை! அந்த மாலையோடு தட்சனின் இருப்பிடம் சென்றார்.
தட்சன் அவரை மாலையோடு கண்டு வினவினான்.
"இந்த மாலை உங்களுக்கு எப்படி கிடைத்தது... இதன் வாசமும் ஒளியும் மனதைக் கவர்ந்து இதப்படுத்துகிறதே?' என்றான்.
இதை தேவி தனக்களித்ததைக் கூறினார் துர்வாசர். உடனேயே "இதைத் தாங்கள் எனக்குத் தரமுடியுமா?' என்று கேட்டான். துர்வாசரும் தட்சனின் விருப்பத்தை மதித்தும், சக்தி அம்சமான பார்வதிக்கே தந்தை என்கிற காரணம் கருதியும் அந்த மாலையை தட்சன்வசம் அளித்தார்.
அந்த மாலையோடு தன் படுக்கையறைக் குச் சென்ற தட்சன் அதை அகற்றாமலே தன் மனைவியோடு கூடினான். இதனால் மாலையின் சக்தி எதிர்வினைக்கு மாறியது. வாசமுள்ள ஒன்றை நாம் சரியாகக் கையாளத் தவறினால் அது நாற்றம் மிகுந்ததாகிவிடும். அருள்சக்தியும் இருள்சக்தியாகிவிடும். தட்சன்வரையிலும்கூட அப்படித்தான் ஆனது.
தட்சன் அந்த மாலையைப் பிய்த்து எறிந்ததோடு, விஷ்ணு, சிவன், அம்பிகை என சகலரையுமே வெறுக்கக்கூடிய ஒரு மனநிலைக்கு மாறிவிட்டான்.''
-வியாசர் இவ்வாறு கூறிமுடிக்கவும், ஜெனமே ஜெயனிடம் பலத்த அதிர்ச்சி.
""மகரிஷி! இதென்ன விந்தை... பக்தியுடனும் ஆசையுடனும் கேட்டுப் பெற்ற ஒரு மாலை இப்படிக்கூடவா எதிர்வினை புரியும்? என்னால் இதை நம்பமுடியவில்லை'' என்றான்.
""ஆம்... மேலோட்டமாகப் பார்த்தால் இப்படித்தான் பேசத்தோன்றும்.
ஆனால் இதை நுட்பமாய்க் காண வேண்டும். தேவியின் மாலை மிகப் புனிதமானது. மனக்கட்டுப்பாட்டோடு பூஜிப்பவர்கள்வசம் உள்ள ஒன்று. காமமும் புணர்வும் மனக்கட்டுப்பாடின்மையை உணர்த்துபவை. தட்சன் செய்த புணர்ச்சிதான் மூலகாரணம்.''
""கழுத்தில் தேவி மாலை இருக்க தட்சனுக்கு காமஉணர்வே ஏற்பட்டிருக்கக் கூடாதே?''
""நீ சொல்வது ஒரு கோணம். காம உணர்வு எழும்பும் நிலையில் மாலையை எண்ணி அதைக் கட்டுப்படுத்திக்கொண்டால் நல்லது. இங்கே மாலை ஒரு கருவி... மனம் கொண்ட மனிதன் அதை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறான் என்பதில்தான் தீதும் நன்றும் உள்ளது.''
""நல்லது... பிறகென்ன நடந்தது?''
""தட்சனின் மனமாற்றம் அவன் மகளான தாட்சாயினியான அம்பிகைக்கு கோபத்தையும் வருத்தத்தையும் உண்டாக்கிற்று. "என் கணவனை தூஷிக்கும் தட்சன் இனி எனக்குத் தந்தையுமில்லை; நான் அவருக்கு மகளுமில்லை' என்று அறிவித்தாள் தேவி. சிவபெருமானோ ஒருபடி மேலேபோய் பெரும் கோபம் கொண்டு தட்சனின்மீது பெரும் அக்னி யைப் பாய்ச்ச எண்ணம் கொண்டார்.
அதன்விளைவாக வீரபத்திரரும், பத்ரகாளியும் சிவபெருமானிடமிருந்து தோன்றி தட்சபுரம் உள்ளிட்ட மூவுலகையும் அழிக்க முற்பட்டனர்.
இதனால் தட்சனும் தன் தவறையுணர்ந்து ஓடிவந்து சிவன் காலில் விழுந்தான். அவனை மன்னித்த சிவபெருமான் சிறு தண்டனையாக அவன் சிரசை ஆட்டுத்தலையாக மாற்றி விட்டார். இருந்தும் கோபம் அடங்காமல் அம்பிகையான பார்வதியை சித்கலா ரூபமாய் தோளில் சுமந்துகொண்டு திரியலானார். இதைக்கண்ட மகாவிஷ்ணு சிவனின் கோபத்தைத் தணித்து சித்கலா ரூப சக்தி பூமியெங்கும் ஒவ்வொரு கலை வடிவில் கோவில் கொள்ள வேண்டும் என்று வேண்டவும், சிவபெருமான் அந்த கலைவடிவக் கோவில்களை விஷ்ணு தன் கையால் எழுப்பவேண்டும் என்று விரும்பி சித்கலா ரூப சக்தி உடலை விஷ்ணுவிடம் ஒப்படைத்தார்.
விஷ்ணுவும் தன் தனிப்பெரும் சக்தி யோடு கூடி 108 கலைகொண்ட சக்தி அம்சங்களைக்கொண்டு கோவில் எழுப்பத் தொடங்கினார்.
அதில் சிவபெருமானும் கோவில்கொண்டு தியானம், ஜபம், சமாதி, நிஷ்டை என்ற நிலைகளில் ஈடுபட்டார். அந்த 108 ஆலயங்கள் இவைதான்!
காசி விசாலாட்சியே முதல் தெய்வம்!''
""இரண்டாவதாய்?''