தலைப்பிலுள்ளது வாரியார் சுவாமிகள் வாக்கு. 64-ஆவது நாயன்மார் என்று பாராட்டுப்பெற்ற சிறந்த முருகபக்தர். வேல் என்றாலே வேலன் நினைவுக்கு வந்துவிடுவான். வேலின் உருவத்தை நினைக்கும்போதே அதைத் தாங்கிய கரங்களுடன் கந்தன் காட்சி மனதில் தோன்றும். கண்களைமூடி வேலின் அகன்ற இலைப்பகுதியை மனக்கண்ணில் நினைத்தால், கந்தனின் கருணைமுகம் தோன்றும். வேலின் காம்புப்பகுதியே அவன் திருமேனியாய் ஒளிரும்!
ஆயுதத்தால் பெயர்
எல்லா தெய்வங்களுக்கும் வெவ் வேறு ஆயுதங்கள் உள்ளன. அவற்றின் பெயரால் அந்த தெய்வங்களுக்குத் திருநாமங்கள் அமையவில்லை! திருமாலை சக்கரபாணி (சக்கரத்தை ஏந்தியவர்) என்பார்களேதவிர சக்கரன் என்பதில்லை. சூலம் ஏந்திய சிவனை சூலன் என்பதில்லை. ஆனால் வேல் தாங்கிய முருகன் வேலன்
தலைப்பிலுள்ளது வாரியார் சுவாமிகள் வாக்கு. 64-ஆவது நாயன்மார் என்று பாராட்டுப்பெற்ற சிறந்த முருகபக்தர். வேல் என்றாலே வேலன் நினைவுக்கு வந்துவிடுவான். வேலின் உருவத்தை நினைக்கும்போதே அதைத் தாங்கிய கரங்களுடன் கந்தன் காட்சி மனதில் தோன்றும். கண்களைமூடி வேலின் அகன்ற இலைப்பகுதியை மனக்கண்ணில் நினைத்தால், கந்தனின் கருணைமுகம் தோன்றும். வேலின் காம்புப்பகுதியே அவன் திருமேனியாய் ஒளிரும்!
ஆயுதத்தால் பெயர்
எல்லா தெய்வங்களுக்கும் வெவ் வேறு ஆயுதங்கள் உள்ளன. அவற்றின் பெயரால் அந்த தெய்வங்களுக்குத் திருநாமங்கள் அமையவில்லை! திருமாலை சக்கரபாணி (சக்கரத்தை ஏந்தியவர்) என்பார்களேதவிர சக்கரன் என்பதில்லை. சூலம் ஏந்திய சிவனை சூலன் என்பதில்லை. ஆனால் வேல் தாங்கிய முருகன் வேலன் என்றழைக்கப்படுகிறான்.
மூன்று சொற்கள்
வாரியார் வாக்கில் வேலை, வணங்கு தல், வேலை என்ற மூன்று சொற்கள் உள்ளன. இவை சிந்தனைக்குரியன. ஏனெனில் வாரியார் போன்ற சான்றோர்கள் பயனற்ற சொற்களைக் கூறமாட்டார்கள்!
வேலை- முருகனை; வணங்குவதே- வழிபடுவதே; வேலை- கடமை. இவ்வாறு முருகனை வழிபடுவதையே தொடர்ந்து செய்தால் நம் வினைகள் எல்லாம் அகன்று போகும். நற்கதியும் தானே வந்துசேரும். அதனால்தான் வினைதீர்க்கும் வேல் என்றார்கள்.
ஆயுதமே துணை
எதையும் எழுதத் தொடங்கும் போது கடவுள்துணை, அய்யனார் துணை, கருமாரிதுணை என்று எழுது வார்கள். முருகபக்தர்கள் "வேலும் மயிலும் துணை' என்று எழுதுவார்கள். ஏன்? வேலன் செய்வதை வேல் செய்யும் என்ற நம்பிக்கை. சரி; மயிலானது வாகனம் தானே? அது எப்படித் துணையாகும்?
வாகனமாயுள்ள மயில் முருகனின் பகைவனாயி ருந்து, கந்தன் கருணையால் மயில் வாகனமாகும் திருவருள் பெற்றது. எனவே மயிலை வணங்கினால் அதுபோன்ற திருவருளும் மன்னிப்பும் தங்களுக்கும் கிடைக்கும் என்பது கருத்து.
ஆயுத வழிபாடு
தெய்வங்களின் ஆயுதத்தை வழிபடுவது மரபாக உள்ளது. அவற்றுள் சூலம், வேல், சக்கரம் ஆகிய மூன்றும் வழக்கத்தில் உள்ளன. பெருமாள் கோவில்களில் "சக்கரத்தாழ்வார்' என்று சக்கரத்திற்குத் தனிச்சந்நிதி இருக்கும். சூலத்தை நட்டு ஆத்தாள் என்று சக்தி தேவியை வழிபடுவதுண்டு. அதேபோல் வேலைமட்டும் நட்டு அதையே முருகனாக பாவித்து அபிஷேக ஆராதனைகள் செய்வர். பின்னர் வேல் நட்ட இடத் தில் ஆலயம் எழுப்புவதும் வழக்கத்திலுள்ளதாகும். திருவள்ளுவர் கூறும் வேல் அம்பினால் சிறுமுயலுக்கு குறிவைத்து வெல்வதைவிட, வேலால் யானையைத் தாக்கி, அது தவறிவிட்டாலும் அந்த வேலின் முயற்சியே உண்மை வெற்றியாகும். அதுவே வீரவேல்! "கானமுயலெய்த அம்பினில் யானை பிழைத்த வேலேந்தல் இனிது.'
வெற்றிதரும் சொல்
வேலை வீசத்தான் வேண்டுமென்பதில்லை. "வேல் வேல்' என்றாலே அது வெற்றிதரும். வெல் என்பதற்கு வெற்றிபெறுக என்பது பொருள். இது வினைச்சொல். இதுவே வெல்லுதல் என்னும்பொழுது தொழிற்பெயரா கிறது. அதில் வெல் என்ற பகுதி மட்டும் முதல் நிலை தொழிற்பெயர். அதையே வேல் என்று நீட்டினால் முதல்நிலை திரிந்த தொழில் பெயராகிவிடும். இவ்வாறு ஒருவினைச்சொல் பெயர்ச்சொல்லாக மாறியதால் அது ஆயுதமானது. இதுபோல் முருகனும் ஆரம்பம் முதலே பெயர்மாற்றம் பெற்றிருக்கிறான். சிவனது நெற்றிக் கண்ணில் தோன்றிய தீப்பொறிகளை கங்கை சுமந்து சென்றதால் காங்கேயன் ஆனான். சரவணப் பொய்கையில் வளர்ந்ததால் சரவண பவனானான். தாய் உமாதேவி ஆறு குழந்தை களையும் அணைத்தபொழுது கந்தன் (ஸ்கந்த) ஆனான். ஆறு முகங்களும் ஓருடலுமானதால் ஆறுமுகனானான்.
வேலின் வேகம்
வேல் வேகமாய்ச் செல்லும் ஆயுதம். அதே போல் "வேலா' என்றழைத்தால் வேலனும் அடியார்களைக் காக்க விரைந்துவருவான். "வேலா' என்னும் சொல் நம் மனதை ஊடுருவும்; மலையையும் ஊடுருவும். அதனாலேயே அருண கிரிநாதரும், "குன்றுருவ வேல் வாங்கி நின்றமுகம்' என்று பாடினார். "வேலா' என்றால் கருங்கல் மனமும் கசிந்துருகும். இதனை "முருகா என்றதும் உருகாதா மனம் மோகன குஞ்சரி மணவாளா' என்ற திரைப்பாடல் வரியால் உணரலாம்! வேலனைக் காதலித்தால் (பக்தி) கருதியவையெல்லாம் கைகூடும்!