னிதன் எத்தனையோ விதமான பாவச் செயல்களைப் புரிகிறான். தான் செய்த துன்பங்களுக்கான விளைவுகளை அவன் ஓய்வான காலத்தில் அனுபவிக்கும்போதுதான் மனம்திருந்தி வாழ முற்படுகிறான்.

ஆனால் உடலோ ஆரோக்கியமோ அப்போது அதற்கு இடம் கொடுப்பதில்லை. பணமும் நேரமும் இருந்தாலும் பிராயச்சித்தப் பரிகாரங்கள் செய்வதற்காக உடல் ஒத்துழைப்பு தருவதில்லை.

ammavasai

Advertisment

இதற்காகத்தான் சிறுவயதிலேயே "இரையோடு இறையையும் தேடு' என்று பெரியோர்கள் சொன்னார்கள். பொதுவாகத் தன்னுடைய பாவச் செயல்களை நினைத்து வருந்துவோர் புண்ணிய நதி தேவதைகள் அருள்பாலிக்கின்ற ஆலயங்களுக்கு அடிக்கடி சென்று, சந்தன அபிஷேகம், தைல அபிஷேகம், பாலாபிஷேகம், தேனாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் போன்ற அபிஷேக ஆராதனைகளால் வழிபட்டு, பாவங்களைக் களையக்கூடிய எள், பிரண்டை, வாழைக்காய், புடலங்காய், அதிரசம் போன்ற பண்டங்களைப் படைத்து ஏழைகளுக்கு வழங்கலாம்.

தன் மனைவியிடமோ பிள்ளைகளிடமோ கூறக்கூட இயலாத அளவுக்கு அதர்மச் செயல்கள் புரிந்தவர்கள் ஏராளம்! அத் தவறுகளை உணர்ந்து தக்கப் பரிகார வழிமுறைகளைத் தேடுவதுதான் பிறவி எடுத்ததன் பொருளாகும். மேலும், சித்தர்கள் அருளியுள்ள வாழ்க்கை நியதிகளின்படி, எவருமே எந்த வாழ்க்கை ரகசியத் தையும் யாரேனும் ஒருவரிடமாவது ஒளிவுமறைவின்றி தெரிவித்துதான் செல்லவேண்டும். மறைக்கப்பட்ட ரகசியங்களோடு ஒருவர் மரணமடைந்தால், அவை வெளியாகும்வரை அவருக்குப் பிறவித்தளைகள் பெருகிக்கொண்டே செல்லும். இதற்காகத்தான் அக்காலத்தில் நந்தியெம்பெருமானின் காதுகளில் தமக்கேற்பட்ட துர்கனவை எடுத்துரைத்து, சுவாமியிடம் தக்கப் பிராயச்சித்த வழிமுறைகளை வேண்டிப் பெற்றார்கள். எனவே, நமது வாழ்க்கையில் ஏதேனும் ரகசியங்கள் இருப்பின், உற்றமோ, சுற்றமோ, அறிந்தவரோ, அறியாதவரோ- எவரிடமாவது ஒப்புவித்தால்தான் மரணத்தளைகளின் துன்பங்கள் ஓரளவேனும் நீங்கும். இல்லையேல் இந்த ரகசியத்தளைகளே தம் சந்ததியரின் தர்ப்பண சக்தியைப் பெற இயலாமல் செய்துவிடும்.

இன்றைக்குப் பல குடும்பங்களில் தர்ப்பணத்தைப் பற்றி அறியாதிருப்பதற்கும், பெற்ற பிள்ளைகளே தர்ப்பணத்தைச் செய்யாமல் இருப்பதற்கும் மூலகாரணம் பலரும் தன் ரகசியங்களை எடுத்துரைக்காமல் அப்படியே விட்டுவிட்டு மரணமடைந்ததுதான். எனவே, வயதான காலத்திலேனும் புண்ணிய நதி தேவதைகள் எழுந்தருளியுள்ள தலங்களில், குறிப்பாக வெள்ளி, சனிக்கிழமைகளில் தேவதா மூர்த்திகளுக்குத் தைலக்காப்பிட்டு, ஏழைகளுக்கு ஆடைகள் தானமளிக்கலாம். எண்ணெய்த் திரியுடன் விளக்குகள், மாங்கல்யச் சரடு, பொன் மாங்கல்யம் தானமாக அளித்தால் இறையருளால் நல்வழி காட்டப் பெறுவோம்.

Advertisment

கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயம், செங்கல்பட்டு அருகிலுள்ள உத்திரமேரூர் ஆலயத்திலும் கங்கை, காவிரி, யமுனை போன்ற புண்ணிய நதி தேவதா மூர்த்திகள் அருள்பாலிக்கிறார்கள். பெறுதற்கரிய தரிசனங்கள் இவை.

ஆடி, தை மாத இரு அமாவாசை தினங்களில் தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த எள் கலந்த நீருக்காகத்தான் முன்னோர்கள் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருக்கிறார்கள். (தர்ப்பணம் செய்யாதவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்).

அவ்வைப் பிராட்டியார் குறிப்பிடுவதுபோல "அரிதான' இம்மானிடப் பிறவிக்குக் காரணமான முன்னோர்களுக்கு நாம் செய்யவேண்டிய முக்கிய கடமைகளில் ஒன்றே "பித்ரு பூஜனம்' என வழங்கப்பெறும் முன்னோர்களின் ஆராதனையாகும். வள்ளுவப் பெருந்தகையும் "தென்புலத்தார்' எனக் குறிப்பிடுகிறார்.

புதுச்சேரி ஸ்ரீஅரவிந்த அன்னையும்கூட "பித்ரு லோகம்' என்று ஒன்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நாம் அளிக்கும் அரிசி, வாழைக்காய், அன்னதானம் போன்றவை பண்டமாற்றுமுறையில் அந்தந்த தேவதைகள்மூலம் சென்றடைகிறது. இதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பவர் ஸ்ரீ அக்னிப்பகவானின் மனைவி ஸ்வதா தேவி. தர்ப்பண நீரை ஸ்வதா தேவியாகவும், ஹோமத்தில் அளிக்கப்பெறும் ஆஹுதிகளை (திரவியங்கள்) ஸ்வாஹா தேவியாகவும் கொண்டுபோய்ச் சேர்க்கிறார். அதனால்தான் "நமஸ் ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:' எனக்கூறி தேவர்களாகிய பித்ருக்களை வணங்குகிறோம்.

vishnuபித்ருலோகத்தின் தல விருட்சம் எள்ளுச் செடியாகும். மேலும், அவர்கள் அனைத்தையும் நீர் மூலமாகப் பெறவேண்டும் என அவர்களுக்கு விதிக்கப்பெற்றுள்ளது. அதனால்தான் அவர்களுக்கு நீர்ச்சத்துள்ள புடலங்காய், பிரண்டை, வாழைக்காய் போன்றவற்றை உணவாகப் படைக்கிறோம். அதேபோல் எள் உருண்டை, புடலங்காயை நறுக்கும்போது ஏற்படும் "டப்' எனும் சத்தம்கூட அவர்களுக்கு முக்தி தர வல்லதாம். மூன்றுவிதமாக அவர்களுக்கு உணவு போய்ச் சேருகின்றது.

முதலாவது: எள், நீர் கொண்டு தர்ப்பணம்.

இரண்டாவது: ஹோமம் மூலம் நெய், சமித்து, அன்னம்.

மூன்றாவது: மூன்று நபர்களுக்கு வஸ்திரம் (வேட்டி) கொடுத்து, அன்னதானம், தாம்பூலம் பணத்தோடு கொடுப்பது.

மூன்றில் ஒருவர் பித்ரு தேவர்; இரண்டாமவர் விஸ்வேதேவர்; மூன்றாமவர் மகாவிஷ்ணு.

ஒரு எள் மணியின் மகத்துவம் யாதெனில், ஒரு அணுகுண்டைவிட வலிமையானது. எம்பெருமாள் ஸ்ரீமந்நாராயணனின் திருமேனியிலிருந்து உற்பத்தியானது.

அவரே சூரிய நாராயண மூர்த்தியாக- பித்ருக்களின் தலைவராக உள்ளார்.

இந்த பித்ரு லோகமானது சூரிய மண்டலத்தைக் கடந்து சுமார் ஏழரை கோடி மைல் தொலைவில் அமைந்துள்ளதாகக் கருதப்படுகிறது.

காகங்களால் மட்டுமே யோகப்பூர்வமாக நாம் அளிக்கும் பிண்டங்களை பித்ரு லோகத்திற்குக் கொண்டு சேர்க்க இயலும்.

ஒருசில குடும்பங்களில் பித்ருக்களே வந்து பிறப்பதும் உண்டு. அதனால்தான் பெரியவர்களின் பெயர், குலதெய்வத்தின் பெயரை வைப்பர். அவ்வாறு பிறக்கும் ஒரு குழந்தை "தாத்தாவை உரித்து வைத்துள்ளது' என்று கூறிப் பெருமைப்படுகிறோமே, அது எப்படி என்பதை சற்றே சிந்தித்துப் பார்த்தல் வேண்டும்.

பித்ருக்கள் அவர்கள் பெயரைத் திரும்பத்திரும்பச் சொல்வதையே பெரிதும் விரும்புகிறார்கள். இதன் அடிப்படையில்தான் புதுக்கோட்டை ஆலங்குடி ஸ்ரீநாமகிரீஸ்வரர் ஆலயத்திலுள்ள நந்தியின் காதில் சொன்னால், உலகத்தில் எங்கு பெயர் சூட்டினாலும் மூன்றுமுறை ஒலிக்குமாறு அந்தப் பெயர் பித்ரு தேவர்களுக்கு நந்தியின்மூலம் அறிவிக்கப் பெறுமாம்.

தர்ப்பணத்தின் மகிமையை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்களைக் கூறுபவர்கள்கூட தலைவருக்கு மாலை அணிவித்து நினைவாஞ்சலி செலுத்துகின்றனர். அந்த எண்ணங்களின் வலிமை தலைவருக்குப் போய்ச் சேருகின்றது. அதே எண்ணங்களின் வலிமையே இறைவனை பிரபலமடையச் செய்கிறது. கூட்டுப் பிரார்த்தனையைப்போல் சமுதாயத்தில் கூட்டு தர்ப்பணம்கூடச் செய்யலாம்.

பெருமதிப்பிற்குரிய நகரத்துப் பெருமக்கள், "நடுவீடு' என்றமைத்து வழிபாடுகளை செய்கின்றனர். நாமும் அவரவர் மரபின்படி இந்தக் கடமையைச் செய்யலாமே! நமது முயற்சியே திருவினையாக்கும் அல்லவா?

பித்ரு ஸ்துதி ஸ்தோத்திரத்தை தினந்தோறும் காலையிலும், பித்ருக்களுடைய தர்ப்பண, சிரார்த்த தினத்திலும், அவரவருடைய ஜென்ம நட்சத்திர தினத்திலும் பாராயணம் செய்தால், அவர்களுக்குக் கிட்டாதது என்பது எதுவுமில்லை. ஜாதகத்தில் பித்ரு தோஷம் உள்ளவர்கள் இதைப் பிரசுரித்து அனைவருக்கும் விநியோகிக்கலாம். எல்லா ரும் இதைப் படிக்கப் படிக்க பித்ருக்கள் மனம் குளிர்ந்து அருள்புரிவார்கள் என்பதில் ஐயமில்லை.

மகாளயபட்ச திதிகளி லும், அடி, தை அமாவாசையிலும் இந்த ஸ்துதியைப் பாராயணம் செய்து, தர்ப்பணம் செய்துவர பலன்கள் பெருகும்.

பித்ரு ஸ்துதி

ஸ்ரீபிரம்மா உவாச:

ஓம் நம: பித்ரே ஜன்ம தாத்ரே ஸர்வ தேவ மயாய ச

ஸுகதாய பிரஸன்னாய ஸுப்ரீதாய மஹாத்மனே

ஸர்வ யக்ஞ ஸ்வரூபாய ஸ்வர்காய பரமேஷ்டினே

ஸர்வ தீர்த்தாவலோகாய கருணா ஸாகராய ச

நம: ஸதா ஆசுதோஷாய சிவ ரூபாய தே நம:

ஸதா அபராத க்ஷமினே ஸுகாய ஸுகதாய ச

துர்லபம் மானுஷமிதம் யேன லப்தம் மயா வுபு:

ஸம்பாவனீயம தர்மார்த்தே தஸ்மை பித்ரே நமோ நம:

தீர்த்த ஸ்நான தபோ ஹோம ஜபாதி பஸ்ம தர்சனம்

மஹா குரோஸ்ச குரவே தஸ்மை பித்ரே நமோ நம:

யஸ்ய ப்ரணாய ஸ்தவனாத் கோடிச: பித்ரு தர்ப்பணம்

அஸ்வ மேத சதை ஸ்துல்யம் தஸ்மை பித்ரே நமோ நம:

இதன் தமிழாக்கம்:

பணிவான வணக்கங்கள்.

எமது பிறப்பிற்குக் காரணமான பித்ருக்களே!

தெய்வீக சக்தி நிரம்பப் பெற்றுள்ள உமது அருளாசிகள் எமக்கு நல்வாழ்க்கையும் சந்தோஷத்தையும் தர, நல்லோரால் போற்றப்படும் உம்மைப் பிரார்த்திக்கிறேன்.

எல்லாவித யாகம், யக்ஞங்கள் வடிவில் உள்ளோரே! அனைத்து புனிததீர்த்தங்கள் வடிவில் இருப்போரே! காருண்யக் கடலே பித்ருக்களே நமஸ்காரம்.

நமஸ்காரங்கள்! எளிதில் சந்தோஷமடைந்து அருளவல்ல பித்ருக்களே! சிவ வடிவே, எம் தவறுகள் யாவையும் மன்னிக்க வேண்டுகிறேன். அருளாசி தாரும் வாரும்!கிடைத்தற்கரிய மானிடப்பிறவி உமதருளால் எமக்குக் கிட்டியது.

இது எமக்கு தர்மம் செய்ய வழிவகுத்தது.

உமக்கு நன்றியுடன் நமஸ்காரங்கள்.

தீர்த்த யாத்திரை, பூஜை புனஸ்காரங்கள் இந்த உடலால் செய்ய அருளிய குருவுக்கும் குருவான பித்ருக்களே நமஸ்காரம்.

உம்மைத் துதிப்பது தர்ப்பணம் செய்வதற்குச் சமமானது. நூறு அஸ்வமேத யாகம் செய்த பலனை எமக்குத் தரவல்லது. நன்றியுடன் மீண்டும் இந்தப் புனித வேளையில், புனித தினத்தில், அடியேன் துதித்து வணங்கி உம் ஆசியை மீண்டும் வேண்டுகிறேன்.

ஓம்ஸ்ரீ மாதா பிதா குலகுரு குலதெய்வம் துணை

ஓம்ஸ்ரீ பித்ரு தேவதாப்யோ நமோ நம: