சப்த கன்னிமார் என்று அழைக்கப்படும் ஏழு கன்னிமார் தெய்வங்களின் வழிபாடு தமிழக கிராமங்களில் சிறப்பாக வழிபட்டு வருகிறார்கள். தோப்புக்கரைகளிலும், பெருந் தெய்வ கோவில்களில் ஒரு பகுதியிலும் சப்த கன்னிமார் என்று அழைக்கப்படும் ஏழு கன்னிமார் தெய்வங்கள் சிலைகளாக வைத்து வழிபட்டு வருகிறார்கள். இந்த ஏழு கன்னிமார் உருவான வரலாறு பல விதங்களாக கூறப்படுகின்றன. அது குறித்து நாம் பார்ப்போம்.
கற்புடைய ஏழு கன்னிகள் கடல் தேவதை களாக பூமியில் தோன்றினர். அவர்கள் ஏழு பேரும் பார்வதியின் அவதார மாக கருதப்பட்டனர். இதில் திருமாலின் மனைவியான லட்சுமி கடலிலிருந்து தோன்றியவர். அடுத்த மூவர் தேவலோ கன்னிகள்.
அடுத்த மூவர் பூம்புகாரில் பிறந்தவர்கள் என்றும், இவர்கள் ஏழு பேருக்கும் மூன்று அண்ணன்கள் இருந்தனர். மொத்தம் பத்து பேர். இவர்கள் அனைவரும் மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஏழு தங்கைகளையும் வீட்டில் விட்டுவிட்டு மூன்று அண்ணன்மார் களும் தினசரி கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருவார்கள்.
ஒருசமயம் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றபோது புயல் மழையில் சிக்கிய அண்ணன்கள் மூவரும் மீண்டும் கரைக்கு வருவதற்கு காலதாமதம் ஆகியுள்ளது. தங்கைகளான ஏழு கன்னிப் பெண்களும் தனியாக குடிசையில் தனித்திருந்த அந்தப் பெண்களை சிலர் பலாத்காரம் செய்துள்ளனர்.
கற்பிழந்த ஏழு கன்னியர்கள் அவமானம் தாங்காமல் கடலில் விழுந்து தங்கள் உயிரை துறந்தனர். அவர்களது அண்ணன்மார்கள் தங்கைகள் இறந்த தகவலை கரையேறி வருவதற்குள் தகவல் தெரிந்த அண்ணன்கள் மூன்று பேரும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். மறுநாள் கடலில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட ஏழு கன்னி மார்கள் உடல்களும் கரை ஒதுங்கின. அப்பகுதி மீனவர்கள் மேற்படி சம்பவம் நடந்ததை அறிந்தனர்.
இப்படிப்பட்ட கொடூர சோக நிகழ்வு அவர்களை பெரும் சோகத் தில் ஆழ்த்தியது. ஊருக்கு கேடு நேர்ந்துவிட்டது. இதை சரி செய்ய வேண்டும் என்று ஊர் முக்கியஸ்தர்கள் இது குறித்து பூசாரியை அழைத்து குறி கேட்டனர். அவர் கன்னிமார் களுக்கு நேர்ந்த கொடுமை சம்பவத்தை மீனவ மக்களுக்கு எடுத்துச்சொன்னார். இந்தநிலை யில் ஆவிகளாக மாறிய ஏழு கன்னிப் பெண்களும் மீனவக் குடிகளை அழிக்க தொடங்கினர். அவர்களை கற்பழித்த துஷ்டர்களை தேடித்தேடி சென்று கொன்றனர். ஊருக்கு கேடு நேர்ந்து விட்டதை அறிந்த ஊர்மக்களும் பூசாரியும் பூஜைசெய்து கன்னிமார்களை ஏழு கல்லில் சிலையாக உருவாக்கி அதில் அடக்கி வைத்தனர். அந்த ஏழு கன்னியரையும் கல்லாய் நிறுவி படையல் இட்டு சடங்குகள் நடத்தினார்கள். அப்படி பூஜைசெய்து ஏழு கன்னியரையும் தெய்வமாக உருவாக்கி வணங்கி வந்தனர். இந்த கதை நாகை மாவட்டம் பூம்புகார் உட்பட அப்பகுதி கிராமங்களில் வழக்கத்தில் உள்ளது.
இதேபோன்று பாற் கடல் கன்னிகள் என்று ஏழு கன்னிமார்கள் வைத்து குமரி மாவட்ட பகுதிகளில் வழிபட்டுவருகிறார்கள். இந்தக் கன்னிமார்கள் உருவானது குறித்து அங்கு கூறப்படும் கதைகள். அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்தபோது முதலில் நஞ்சு உருவானது. அப்போது பத்திரகாளி உருவாகி அப்பகுதியிலுள்ள குற்றாலம் எனும் ஊரில் கோட்டைக் கட்டி வாழ்ந்துவந்ததாகவும் அங்கு ஏழு கன்னிமார் ஏழு பிள்ளைகளை பெற்றனர்.
அந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி எடுத

அந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி எடுத்து வளர்த்துவந்தாள். மகாவிஷ்ணு அவர் கள் ஏழு பேருக்கும் பெயர் வைத்தார். அவர் பத்திரகாளியின்அருகிலேயே கன்னியர்களாக அமர்ந்துள்ளனர். இங்கு நடைபெறும் பூஜை முறையின்போது ஏழு கன்னிப் பெண்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பூசாரியின்முன் கொண்டுவந்து நிறுத்துவார்கள். அவர் ஏழு பேரையும் கோவிலுக்குள் கூட்டி சென்று கன்னிமார்முன்பு நிற்கவைத்து பூஜை நடத்துவார்.
இந்த கன்னிமார் தெய்வங்களுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சுற்றிலும் உள்ள சுமார் 30 கிராமங்களுக்கு வீதி உலா கொண்டு செல்வார்கள். கிராம மக்கள் அந் தந்த ஊர்களியே வழிபாடு செய்துவருகிறார் கள். இந்த எழுவர் பற்றி மேலும் ஒரு கதை கூறப் படுகிறது. தேவலோகத்தில் சிவபூஜைக்கு ஒத்துழைக்காமல் இருந்த தேவலோக பெண்கள் ஏழு பேர் சிவபெருமான் சாபத்திற்கு ஆளாகினர். சிவபெருமான் சாபத்தின்படி அந்த ஏழு தேவலோக கன்னிகளும் பூலோகத்தில் ஒரு விவசாயிக்கு மகள்களாக வந்து பிறந்தனர். அவர்களுக்கு பார்வதி, பட்டத்தாள், அருந்தவம், பூவாள், பச்சையம்மாள், காத்தாயி, பூங்காவனம் என்று பெயரிட்டு அந்த விவசாயி வளர்த்து வந்தார். இவர்கள் சக்தியின் வடிவமாக பிறந்த ஏழு பேர்களுக்கும் திருமண வயது வந்தது. பெற்றோர்கள் ஏழு பேருக்கும் திருமணம் செய்துவைக்க மண மகன்களை தேடி வந்தனர்.
ஏழை குடும்பம் என்பதால் மாப்பிள்ளை கிடைக்காமல் அந்த பெற்றோர்கள் தத்தளித்தனர். இது குறித்து கவலை அடைந்த அந்த ஏழு கன்னி பெண்களும் ஊருக்கு அருகில் ஓடிய வெள்ளாற்று பகுதியில் மணலால் சிவலிங்கம் செய்து சிவனை நோக்கி தவமிருந்தனர். இதையறிந்த சிவபெருமான் அவர்களிடம் ஒரு திருவிளையாடல் நடத்தினார். அவர் ஒரு விவசாயி உருவத்தில் அவர்கள்முன் தோன்றினார். அவர் ஏழு கன்னிகளையும் கட்டித் தழுவ முயன்றார் யாரோ ஒரு இளை ஞன் தங்களை கட்டித் தழுவ வருவதைக்கண்டு திசைக்கு ஒருவராக தப்பித்து ஓடினார் கள். பிரிந்து சென்ற ஏழு சகோதரிகளும் ஒன்றுசேர்வதற்கு ஒரு ஆண்டு ஆனது. ஒரு ஆண்டுக்குப்பின் ஏழு பேரும் ஒன்றுசேர்ந்த னர். அவர்களில் காத்தாயி மட்டும் கையில் குழந்தையுடன் வந்துசேர்ந்தாள். அவள்மீது சந்தேகம் கொண்ட மற்ற சகோதரிகள் குழந்தை எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்தனர். அப்போது காத்தாயி இளைஞன் ஒருவர் நம்மை கட்டித் தழுவ வரும்போது இளைஞனிடமிருந்து நாம் திசைக்கு ஒருவராக தப்பி ஓடும்போது அந்த இளைஞன் என்னை நோக்கி வந்து என்னோடு கலந்தார்.
அவரது செயலால் எனக்கு இந்த குழந்தை என்றாள். அவள் கூறியதை மற்ற சகோ தரிகள் நம்பவில்லை. அப்போது காத்தாயி நான் என்ன செய்தால் நான் சொல்வது உண்மை என்று நீங்கள் நம்புவீர்கள் என்று கேட்க, ஆறு சகோதரிகளும் அவளை குழந்தையுடன் தீயில் இறங்குமாறு கூறினர்.
அதன்படி காத்தாயி தீயை மூட்டி தன் குழந்தையுடன் தீயில் இறங்க தயாரானார்.
அப்போது அந்த ஏழு பேர் முன்பும் சிவபெருமான் தோன்றினார். அவர் நடந்தவை எல்லாம் எமது திருவிளையாடல் தவிர வேறு ஒன்றும் இல்லை. நீங்கள் ஏழு பேரும் சக்தியின் வடிவங்கள். என் சாபத்தால் நீங்கள் பூமியில் பிறக்க நேர்ந்தது. இனி நீங்கள் என்னிடமிருந்து தப்பி ஓடி எந்தெந்த இடத்திற்கு சென்றீர்களோ அந்தந்த இடங்களில் அம்மன்களா கோவில் கொண்டு மக்களை காத்தருள வேண்டும். உங்களுக்கு காவல் தெய்வங்களாக முனியப்பா, பூ மலையப்பா, முத்தையா, ஏழு முனிகள், ராயப்பா போன்ற ஏவல் தெய்வங்கள் உடனிருப்பார்கள் என்று கூறி மறைந்தார்.
அந்த ஏழு பேரும் அரியலூர் மாவட்டம் வெள்ளாற்றங்கரையில் உள்ள சன்னியாசி நல்லூர். பெரம்பலூர் மாவட்ட எல்லையிலுள்ள காளிங்கராயநல்லூர். புலியூர். கடலூர் மாவட்டபகுதியிலுள்ள சித்தூர், குமாரை, வெங்கனூர், விழுப்புரம் மாவட்ட பகுதியிலுள்ள அறகண்டநல்லூர் ஆகிய ஏழு இடங்களில் தெய்வங்களாக அமர்ந்து மக்களின் வேண்டுதல்களை நிறைவேற்றிவருகிறார்கள். ஆடி, ஆவணி மாதங்களில் இந்த ஏழு தெய்வங்களுக்கும் தொடர்ச்சியாக ஏழு வெள்ளிக்கிழமைகளில் தீமிதி திருவிழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஏழு கன்னிமார்களுக்கு வேறு ஒரு சம்பவக் கதைகயும் கூறப்படுகிறது. பிரம்மாவைநோக்கி அந்தக்காசூரன் என்ற அசுரன் தவம் இருந்தான். அவனுக்கு பிரம்மா காட்சி கொடுத்தார். அவரிடம் பலம் பொருந்திய வரங்களைப்பெற்ற அந்தக்காசூரன் நான் என்கிற ஆணவம் ஏற்பட்டது.
அவன் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத் தத் தொடங்கினான்.
அவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவன் தேவர்களை காப்பாற்ற அந்தக்காசூரனுடன் போரிட் டார். சிவனின் அம்பினால் காயமுற்ற அசுரன் உடலில் இருந்து சிந்திய ஒவ்வொரு துளி இரத்தமும் ஒரு அசுரனாக மாறினர். அவர்களை வதம்செய்ய சிவ பெருமான் தனது வாயிலிருந்து தீப்பிழம்பை வெளியேற்றி அந்த தீஜுவாலையில் இருந்து ஒரு பெண் உருவத்தைப் படைத்தார்.
அவரைப்போலவே மற்ற கடவுளர்களும் ஒவ்வொரு பெண்களைப் படைத்தனர்.
அப்படி படைக்கப்பட்ட ஏழு பெண்களும் அந்தக்காசூரனை வதம்செய்ய காரணமாக இருந்தனர்.
அவர்கள் புராணத்தின்படி சாமுண்டி, பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, வராகி, கௌமாரி, இந்திராணி, என இவர்கள் ஏழு பேரையும் சப்த கன்னிமார்களாக சிவாலயங்களில் வைத்து வழிபாடு செய்துவருகின்றனர். இந்த ஏழு கன்னிமார் வழிபாடுகள் தமிழகத்தில் மட்டுமல்ல கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களிலும் மற்றும் வட மாநிலங்களிலும் வழிபடப்பட்டுவருகின்றனர்.
இந்த ஏழு கன்னிமார் தெய்வவழிபாடு குறித்து குதியாக ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத் தில் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த தெய்வங்களில் பிராமி காமத்தை நீக்குபவர்.
அதனால் அவருக்கு காமனாசினி என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மகேஸ்வரி கோபத்தை போக்குபவள். அதனால் இவருக்கு குரோத நாசினி என்ற பெயருண்டு. வைஷ்ணவி மோகத்தை வதம் செய்பவள். அதனால் இதற்கு மோகநாசினி என்ற பெயர். வராகி தற்பெருமை, செருக்கு, ஆணவத்தை வதம் செய்பவள். அதனால் அவருக்கு மதனாசினி என்றும், இந்திராணி இவர் மதமாச்சரியங்களை நாசம் செய்பவள். சாமுண்டி பாவங்களை வதம்செய்பவர். அதனால் இவருக்கு பாபநாசினி என்றும், கௌமாரி, லோபத்தை வதம் செய்பவர். அதனால் இவருக்கு லோபநாசினி என்றும் லலிதா சகஸ்ரநாமத்தில் கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட பெயர்களால் இந்த ஏழு பெண் தெய்வங்களையும் பெரும்பாலான மக்கள் காலம் காலமாக வழிபட்டுவருகிறார் கள்.இவர்களுக்குள் சப்த மாதாக்கள் என்ற பெயரும் உண்டு. மேலும் சண்டா, முண்டா என்ற இரு அசுரர்கள் பிரம்மாவை வேண்டி தவம் இருந்தனர். அவர்களுக்கு காட்சிகொடுத்த பிரம்மாவிடம் இருவரும் கன்னித்தன்மையோடு உள்ள ஒரு பெண்ணால் மட்டுமே தங்களுக்கு மரணம் நேரவேண்டும். மற்றவர்களால் எங்களுக்கு எந்த ஆபத்து வரக்கூடாது என்று வரம் பெற்றனர். அதனால் அந்த அசுரர்களுக்கு அகந்தை ஏற்பட்டது. தேவர்களை, முனிவர்களை, கொடுமைப்படுத்தினர். அதில் முக்கியத்துவம் வாய்ந்த கார்த்தியானி முனிவரை கொடுமை செய்தனர். அந்த முனிவர் பராசக்தியின் தீவிர பக்தர். இதைக்கண்டு கோபம்கொண்ட அன்னை பராசக்தி அசுரர்களை அழிக்க ஒரு படையோடு கிளப்பினார். அப்போது அந்த அசுர கூட்டத்தை ஒழிக்க தன்னிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார். அதேபோல் சிவன், விஷ்ணு, பிரம்மா, முருகன், வராக மூர்த்தி, எமன் ஆகிய ஒவ்வொருவரும் தங்கள் அம்சமாக பெண்களை உருவாக்கினர்.
அந்த ஏழு பெண்களும் அந்த அசுர கூட்டத்தை அழித்தனர். அன்னை பராசக்தி சிவபெருமான் இருவருடமும் ஏழு கன்னிப் பெண்கள் ஆசியைப்பெற வந்தனர். அவர்களிடம் பூலோகத்தில் சென்று தெய்வங்களாக அமர்ந்து மக்களை காக்குமாறு பணித் தனர். இவர்களுக்கு ஏவல் தெய்வமாக வீரபத்திரர் துணை யிருப்பார் என்று அருள்புரிந்தனர். அப்படி உருவான அந்த ஏழு கன்னியமார்களும் சப்த கன்னிகளாக பல சிவாலயங்களில் வீரபத்திரனுடன் காட்சியளிக்கிறார்கள்.
மேலும் இவர்கள் ஆலயங்களில் மட்டுமல்ல; கிராமப்புறங்களில் ஆற்றங் கரை, ஏறிகரை, குளக்கரை, ஊரின் எல்லை கள் என ஆங்காங்கே சிலை வடிவில் அமர்ந் துள்ளனர். அவர்களை வழிபாடு செய்யும் மக்களின் இடர்பாடுகளை நீக்கி வருகிறார் கள். இந்த ஏழு கன்னிமார் வழிபாடு மிகவும் தொன்மையானது. மேலும் இவர்கள் வேப்பமரத்தடி அடியில் அமர்ந்திருப்பார்கள். இந்த கன்னிமார்களுக்கு பொங்கல் வைத்தும் கருத்தமணி, கருவளையம் வைத்து பெண்கள் வழிபடுகிறார்கள்.
கிராமப்புறங்களிலுள்ள கன்னிமார் தெய்வங்களுக்கு தனி வழிபாட்டுக்குரிய மந்திரங்களோ, சடங்குகளோ கடைப்பிடிப்ப தில்லை. இந்த கன்னிமார் வழிபாட்டில் தென் மாவட்டங்களில் மாரியம்மன், பத்திர காளியம்மன், அரியநாச்சி அம்மன், காந்தாரி யம்மன், வண்டி மலையச்சி அம்மன், உமையம்மன் என்ற பெயர்களில் வழிபாடு செய்கிறார்கள், தமிழகத்தில் மட்டுமல்ல; கர்நாடகத்தில் அன்னம்மா, சந்தேஸ்வரம்மா, மாதேஸ்வரம்மா, மாரம்மா, உடலம்மா, கொக்கலம்மா, சுகஜம்மா என்ற பெயர்களில் வழிபட்டு வருகிறார்கள். ஆந்திராவில் போலேர் அம்மா, அங்கம்மா, முத்தியாலம்மா, தில்லியம்மா, பொலசியம்மா, பங்காராம்மா, மாதம்மா என்ற பெயர்களில் வழிபடுகிறார் கள். இவர்களுக்கு ஏவல் தெய்வமாக போத்தி ராஜா என்ற ஆண் தெய்வம் உள்ளது.
இந்த கன்னிமார்கள் குறித்து மார்க் கண்டே புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. காளிதாசரின் குமார சம்பவம் என்னும் காவியத்தில் சப்த கன்னிமார்கள் என்பது சிவ பெருமான் பணி பெண்கள் என்ற குறிப்பும் காணப்படுகிறது. இந்த ஏழு கன்னிமார் தெய்வங்கள் திருமால் குடிகொண்டுள்ள கோவில்களிலும் எம்பெருமான் சிவன் கோவில் கொண்டிருக்கும் கோவில்களிலும் மற்றும் அய்யனார், செல்லியம்மன், போன்ற சிறு தெய்வவழிபாட்டு கோவில்களிலும் கன்னிமார் தெய்வ வழிபாடு நீக்கமற இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் ஏழு கன்னிமார் வழிபாடு பல்லவர்கள் காலம் தொட்டு இன்று வரை தொடர்ந்து வருவதாகவும் வரலாற்று ஆதாரங் கள் கூறுகின்றன. இதற்கு தாய்மார்கள் எழுவர் வழிபாடு என்றும் பெயர் உள்ளது. அதேபோல் தமிழ் இலக்கியங்களான சிலப்பதிகாரம், கலிங்கத்துப் பரணி, தக்கையா பரணி, திருமந்திரம் போன்ற இலக்கியங்களில் தாய்மார் எழுவர் தெய்வ வழிபாடுகள் குறித்து குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ரிக் வேதத்திலும் இடம்பெற்றுள்ளது. எனவே சப்த கன்னிமார்கள் வழிபாடு என்பது மக்களிடம் இரண்டறக் கலந்த ஒன்று. இப்படிப் பட்ட கன்னிமார்கள் தெய்வங்கள் ஒரு ஊரில் இருந்து மற்ற ஊர்களுக்கு பரவியது எப்படி? மக்கள் புலம் பெயர்ந்து செல்லும் போது தங்கள் தெய்வத்தையும் உடன் கொண்டுசெல்வார்கள். அதற்கு உதாரணமாக கடலூர் மாவட்டம் நல்லூர். இந்த ஊரை ஒட்டி கோமதி நதி, மணிமுத்தாநதி, மயூரா நதி ஆகிய மூன்று நதிகள் ஒன்றுகூடுகின்றன.
அதன் முகத்துவாரப் பகுதியில் பாண்டவர் கள் ஐவர் வழிபட்ட வில்வனேஸ்வரர் என்ற சிவாலயம் உள்ளது. இந்த ஆலயத்தை நடுவில் வைத்து மூன்று நதிகளும் இரண்டாக பிரிந்து ஆலயத்தின்முன்பு ஒன்று கூடுகின்றன. இது இறைவன் கழுத்தில் மாலை அணிந்துள்ளது போன்ற தோற்றத்தில் இந்த வில்வனேஸ்வரர் ஆலயமும் நதிகளும் அமைந்துள்ளது.
அப்படிப்பட்ட சிறப்புபெற்ற இந்த ஆலயத் திற்கு பின்புறம் சப்த கன்னிமார்கள் ஏழு பேர் அமர்ந்து பக்தர்களின் குறைகளை போக்கி வருகிறார்கள்.
இது குறித்து சப்த கன்னிமார் ஆலயத்தை வழிபாடு செய்துவரும் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் நம்மிடம், "இந்த ஊரில் சுமார் 60 குடும்பங் களுக்குமேல் எங்கள் விஸ்வகர்மா சமூகத்தவர் கள் வாழ்கிறோம். எங்களுக்கு சப்த கன்னி மார்கள்தான் குலதெய்வம். எங்களுக்கு பூர்வீகம் குடியாத்தம். அங்கிருந்து புலம் பெயர்ந்த எங்கள் முன்னோர்கள் இந்த ஊரில் வந்து வாழ்ந்தனர். அவர்கள் அவ்வப்போது குடியாத்தம் சென்று குலதெய்வமான கன்னி மார்களை வழிபட்டுவருவார்கள். காலப் போக்கில் அங்கிருந்து மண்ணெடுத்து வந்து இந்த இடத்தில் சப்த கன்னிமார்களை உருவாக் கினார்கள். அவர்கள் மறைவுக்குப்பிறகு தற்போது நான் சிறிய அளவில் கோவிலை உருவாக்கி கன்னிமார்கள் மற்றும் ஏவல் தெய்வமான பாவாடைராயர், முனியப்பர் ஆகிய தெய்வங்களுக்கு வழிபாடு செய்து வருகிறேன்.
நிறைய பேர் இங்குவந்து கன்னிமார்களை வழிபட்டு பலனடைத்துள்ளனர். திருமணத் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள். இப்படி பல்வேறு தரப்பினரும் இங்கு வந்து கன்னிமார்களை வழிபட்டு நிவர்த்தி அடைந்துள்ளனர் என்கிறார்'' விஸ்வகர்மா பழனிவேல்.
இந்த கிராம பகுதியில் வாழ்ந்த பல குடும்பங்கள் அங்கிருந்து தெற்கே சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரம்பனூர் கிராமத்திற்கு புலம்பெயர்ந்து சென்றனர்.
அவர்கள் தங்கள் குலதெய்வமான கன்னிமார் கோவிலை ஊருக்கு அருகிலுள்ள குளக்கரை யில் அமைத்து வழிபாடு செய்துவருகிறார் கள். நினைத்த காரியம் கைகூட கன்னிமார் வழிபாடு நிச்சயம் வழிகாட்டுகிறது என்று கூறுகிறார்கள் வரம்ரபனூர் கிராம மக்கள்.
இப்படி கன்னிமார் தெய்வ வழிபாடு கிராமமக்களின் வாழ்வியலோடு பிரிக்க முடியாத இன்றியமையாத வழிபாடு என்கிறார் வேப்பூர் கல்யாண சுந்தரம். சென்னை தொடர்ந்து வழிபட- திருச்சி, தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. வேப்பூரிலிருந்து வடகிழக்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் நல்லூர்.
பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது வரம்பனூர்.வேப்பூரில் இருந்து அனைத்து போக்குவரத்து வசதிகளும் உள்ளன.