"ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டம் எல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவி அடங்கக்
காத்தாளை, ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும்
சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே.'
மனிதர்களின் அனைத்து செயல் பாடுகளுக்கும் காரணமாக இருப்பது பிரபஞ்ச சக்தி. இந்த பிரபஞ்ச சக்தி களுக்கெல்லாம் சக்தியளிப்பவள் பராசக்தி. அந்த பராசக்திக்கு உருவம் கிடையாது. ஆனால் உணரமுடியும்.
அந்த சக்தியைப் பரிபூரணமாக உணர, உருவமாக அமைத்து வழிபடும்போது அதற்கு சில விசேஷ சக்திகள் கிடைக்கின்றன.
நவராத்திரி என்றாலே சக்தியை வழிபடுவது என்றுதான் அர்த்தம். உலகம் அனைத்தும் சக்திமயம் என்பதை விளக்குவதே நவராத்திரியின் தத்துவம். உலக நன்மைக்காகத் தீமை களை அழித்து நன்மையை வழங்கும் வகையில் பராசக்தி- மகேஸ்வரி, கௌமாரி, வாராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகை ரூபங்கள் எடுத்தாலும் அடிப்படை சக்தி ஒன்றே. இந்த தெய்வங்கள் அனைத் தையும் வீட்டிற்கு வரவழைத்து, வணங்கி வழிபடும் விழாவே நவராத்திரி.
சரத் காலத்தில் நவராத்திரி வழிபாடு செய்பவர்கள் துன்பங்களிலிருந்து விடுபட்டு சகல நன்மைகளையும் பெறுவார்கள்.
இந்தியாவில் உணவு, உடை, மொழி, இனம் என பல வேறுபாடுகள் இருந்தாலும், ஆன்மிகரீதியாக சக்தி வழிபாட்டில்- அதுவும் நவராத்திரி வழிபாட்டில் ஒருமைப்பாடே நிலவு கிறது. நவராத்திரி நாட்களில் சக்தியை வழிபட்டால் நினைத்தது நடக்கும்; எதிலும் வெற்றிபெற முடியுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.
நவராத்திரி உலக வளமைக் காகவும், தானியங்கள் செழிக்க வும், செல்வங்கள் பெருகவும், எதிர்ப்புகள் அகலவும் அம்பிகை யைப் பிரார்த்தனை செய்து கொண்டு நடத்தப்படுவது. ஒவ்வொரு வருடமும் நான்கு வித நவராத்திரிகள் கொண்டா டப்படுகின்றன.
1. சாரதா நவராத்திரி
புரட்டாசி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டா டப்படுவது சாரதா நவராத்திரி.
2. வசந்த நவராத்திரி
பங்குனி மாத அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் வசந்த காலத்தில் கொண்டாடப்படுவது வசந்த நவராத்திரி.
3. ஆஷாட நவராத்திரி
ஆடி மாத அமாவாசைமுதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுவது ஆஷாட நவராத்திரி.
4. சியாமளா நவராத்திரி
தை மாத அமாவாசைமுதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப் படுவது சியாமளா நவராத்திரி.
ஒவ்வொரு வருடமும் நான்கு நவராத்திரிகள் வந்தாலும், புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்திரிதான் இந்தியா முழுவதும் கொண்டாடப் படுகிறது.
மேலும், சரஸ்வதிக்கு சாரதா என்ற பெயரும் உண்டு. நவராத்திரியின் கடைசி மூன்று நாட் களில் சரஸ்வதியை வழிபடு வதால், இதற்கு சாரதா நவராத்திரி என்று பெயர் ஏற்பட்டது.
புரட்டாசி மாதத்தில் கொண்டாடப்பட வேண்டிய நவராத்திரி ஏன் ஐப்பசி மாதத்தில் கொண்டாடப்படுகிறது என்ற சிறு சந்தேகத்திற்கான பதிலைப் பார்க்கலாம்.
இந

இந்த வருடம் தொடங்கியதிலிருந்து கொரோனா வந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கையிலிருந்து, விரதங்களையும் பண்டிகைகளையும் கொண்டாடுவதுவரை அனைத்தும் புரியாத புதிராகவே இருக்கிறது. இவ்வருடம் ஐப்பசி மாதத்தில் நவராத்திரி அமைந்ததற்கு, புரட்டாசியில் வரும் இரண்டு அமாவாசைகளே காரணம். ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வந்தால், அதற்கு "அதி மாதம்' எனப் பெயர்.
சூரியன் ஒவ்வொரு ராசியிலும் சஞ்சரிக்கும் காலம் சௌரமான மாதமாகும். ஒவ்வொரு வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி, அடுத்த அமாவாசை வரையுள்ள காலம் சாந்திரமான மாதமாகும். ஒரு வருடத்தில் சௌரமான மாதங்களின் மொத்த நாட்களைவிட, சாந்திர மான மாதங்களின் மொத்த நாட்களின் எண்ணிக்கையில் சுமார் 11 நாட்கள் குறைவாக இருக்கும். இதனால், இரண்டே முக்கால் வருடத்திற்கு ஒரு முறை, ஒரு மாதம் அதிகமாக வரும். இதற்கு அதிமாதம் எனப் பெயர். ஒரு சௌரமான மாதத்தில் இரண்டு அமாவாசை கள் ஏற்பட்டால், அந்த மாதத்தை சாந்திரமான அதி மாதமாகக் கணக்கிடுவது வழக்கம். அதிமாதத்தில் விரதங்களோ பண்டிகைகளோ கொண்டாடப்படுவதில்லை. இந்த அதிமாதத்தின் காரணமாக, முதலில் ஆவணி அவிட்டம், பிறகு கோகுலாஷ்டமி இவ்விரண்டும் ஆவணியில் வராமல் ஆடியில் வந்தது. மகாளயபட்சம் புரட்டாசியில் வராமல் ஆவணியிலேயே வந்தது. நவராத்திரி புரட்டாசியில் வராமல் ஐப்பசியில் வருகிறது.
நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துக்கத்தைப் போக்கும் துர்க்கையையும், இரண்டாவது மூன்று நாட்கள் செல்வத்தைப் பொழியும் லட்சுமியையும், மூன்றாவது மூன்று நாட்கள் ஞானத்தை நல்கும் சரஸ்வதியையும் வழிபடுவது வழக்கம். இந்த மூன்று சக்திகளின் வழிபாட்டுக்குரிய காலமே நவராத்திரி. நவராத்திரி நாட்களில் பஞ்சபூதங்களுள் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட கொலுபொம்மைகளை வைத்து வழிபட சகல சுகங்களும், பாக்கியங்களும் தேடிவரும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி பூஜை சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 1-ஆம் தேதிமுதல் 9-ஆம் தேதி (17-10-2020 முதல் 25-10-2020) வரை நடைபெறவிருக்கிறது. நவராத்திரி நாட்களில், அம்மன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதாரம் எடுக்கிறார். அந்தந்த நாளுக்கு என்ன வழிபாடு என்பதையும், அதனால் ஏற்படும் சுபப் பலன்களையும் காணலாம்.
முதல் நாள்
ஐப்பசி- 1 (17-10-2020), சனிக்கிழமை, பிரதமை திதி, காலை 7.31 முதல் 9.00 மணிவரை கொலு எடுத்துவைக்க நல்ல நேரம். மகா கணபதி பூஜையுடன் தொடங்கி, கலசப் பூஜைசெய்து கலச ஆவாஹனம் செய்யவேண்டும்.
முதல் நாள் துர்க்கா தேவியை மகேஸ்வரி வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். அலங் காரத்தில் மல்லிகை மாலை சூட்டலாம். வில்வார்ச்சனை செய்யலாம்.
நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
ஸ்தோத்திரம்: துர்க்கை அஷ்டோத்திரம், மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். தோடி ராகப் பாடல்களைப் பாடுவது மேலும் சிறப்பு.
பலன்: உடல் வலிமை பெறும். கொடிய நோய்த் தாக்கம் குறையும்.
வேலையில்லாமல் அவதிப்படுவோர் சனிக் கிழமை காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்குள் மஞ்சள் துணி திரியில் விளக்கேற்றி வழிபட, விரும்பிய துறை யில் வேலை கிட்டும்.
இரண்டாவது நாள்
ஐப்பசி- 2 (18-10-2020), ஞாயிற்றுக்கிழமை, துவிதியை திதி.
இரண்டாம் நாளன்று துர்க்கையை கௌமாரி ரூபத்தில் அலங்கரித்து, முல்லை மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யவேண்டும்.
நைவேத்தியம்: புளியோதரை, தயிர்சாதம்.
ஸ்தோத்திரம்: துர்க்கா அஷ்டோத்திரம், ஸ்ரீ லலிதா திரிசதி, ஸ்ரீகாமாட்சி மந்திரம் பாராயணம் செய்து வழிபடவேண்டும். கல்யாணி ராகப் பாடல் சிறந்தது.
பலன்: மாலை 4.30 மணிமுதல் 6.00 மணிக்குள் புதிய வெள்ளைத்துணியில் திரி செய்து, துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபட, குடும்பத்தில் ஏற்படும் தொடர் பிரச்சினைகள் மற்றும் காரியத் தடைகள் அகலும். ஜாதக ரீதியாக சனி மற்றும் ராகு- கேது பெயர்ச்சியின் போது ஏற்படும் சிரமங்கள் முழுமையாக நீங்கும்.பகைவர்களால் ஏற்படும் தொல்லை அகலும். குடும்பத்தில் வறுமை நீங்கி செல்வம் வளம் பெருகும்.
மூன்றாம் நாள்
ஐப்பசி- 3 (19-10-2020), திங்கட்கிழமை, திரிதியை திதி.
மூன்றாம் நாள் துர்க்கையை வாராஹி ரூபத்தில் அலங்கரித்து செண்பகம், தாமரை மற்றும் சம்பங்கிப் பூக்கள் அணிவித்தும், அர்ச் சித்தும் வழிபடலாம்.
நைவேத்தியம்: வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபடலாம்.
ஸ்தோத்திரம்: துர்க்கா அஷ்டோத்திரம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் மற்றும் ஸ்ரீ லலிதா நவரத்தினமாலா பாராயணம் செய்தல் வேண்டும். காம்போதி ராகப் பாடல் மேலும் சிறப்பு.
பலன்: திங்கட்கிழமை காலை 7.30 மணிமுதல் 9.00 மணிக்குள் துர்க்கையை வழிபட, தீராத துன்பம் தீரும். சந்திர தோஷம் அகலும்.எதிர்பார்த்த பதவி உயர்வு கிட்டும். வியாபாரிகளுக்கு, செய்யும் தொழிலில் அதிக லாபம் கிட்டும். மூட்டு சம்பந்தமான நோய் நீங்கும்.
நான்காம் நாள்
ஐப்பசி- 4 (20-10-2020), செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி.
அம்மனை மகாலட்சுமியாக அலங்கரித்து வழிபடவேண்டும். வாசனை நிறைந்த மல்லிகை, தாமரைப் பூக்களால் அலங்காரமும் அர்ச் சனையும்செய்து வழிபடவேண்டும்.
நைவேத்தியம்: பருப்பு சாதம், பாசிப் பருப்புப் பாயசம்.
ஸ்தோத்திரம்: ஸ்ரீமகாலட்சுமியை லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீகனகதாரா ஸ்தோத்திரம் பாடி வழிபடவேண்டும். பைரவி ராகப் பாடலைப் பாடுவது மேலும் சிறப்பு.
பலன்: காலை 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் சுக்கிர ஓரையில் நெய்தீபமேற்றி மகாலட்சுமியை வழிபட, திருமணத்தடை அகலும். சுக்கிர தோஷம் நீங்கும். பணவரவு அதிகரிக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
ஐந்தாம் நாள்
ஐப்பசி- 5 (21-10-2020), புதன்கிழமை, பஞ்சமி திதி.
அம்பிகையை வைஷ்ணவியாக அலங்கரித்து வழிபடவேண்டும். முல்லைப்பூ மற்றும் ரோஜா மாலை அணிவிக்கவேண்டும். தாமரை மலர்களால் அர்ச்சிக்கவேண்டும்.
நைவேத்தியம்: புளியோதரை மற்றும் கோதுமை அல்வா.
ஸ்தோத்திரம்: அபிராமி அந்தாதி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமப் பாராயணம், ஸ்ரீமகாலட்சுமி அஷ்டகம் பாராயணம் செய்வது நன்மை பயக்கும். பந்து வராளி ராகப் பாடல்கள் பாடவேண்டும்.
பலன்: இரவு 7.00 மணிமுதல் 8.00 மணிக்குள் சுக்கிர ஓரையில் நெய்தீபமேற்றி வைஷ்ணவியை வழிபட, சுக்கிரனின் நீசம், வக்ரம், அஸ்தங்க தோஷம் அகலும். வாராக் கடன் வசூலாகும். அடமானத்திலுள்ள நகைகள் மீண்டுவரும். சகல சௌபாக்கியங் களும் கிட்டும்.
ஆறாம் நாள்
ஐப்பசி- 6 (22-10-2020), வியாழக்கிழமை, சஷ்டி திதி.
ஆறாம் நாள் அம்பிகையை இந்திராணி யாக அலங்கரித்து வழிபடவேண்டும். வாசனை மிகுந்த ஜாதி மலர்களை அணிவித்து அர்ச்சனை செய்யவேண்டும்.
நைவேத்தியம்: தேங்காய் சாதம், பால் பாயசம்.
ஸ்தோத்திரம்: ஸ்ரீசூக்தம், மகாலட்சுமி சகஸ்ரநாமப் பாராயணம் செய்தல் வேண்டும். நீலாம்பரி ராகப் பாடல் பாடலாம்.
பலன்: இரவு 8.00 மணிமுதல் 9.00 மணிக்குள் குரு ஓரையில் வெள்ளை மொச்சை வைத்து வழிபட, பிரிந்த தம்பதிகள் சேர்ந்து வாழ்வர். இழந்த பதவி திரும்பக் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். உடலழகு அதிகரிக்கும்.
ஏழாம் நாள்
ஐப்பசி- 7 (23-10-2020), வெள்ளிக்கிழமை, சப்தமி திதி.
ஏதாவது காரணத்தினால் ஒன்பது நாட்கள் முழுமையாக நவராத்திரி பூஜைசெய்ய இயலாதவர்கள், கடைசி மூன்று நாட்களாகிய சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் மட்டுமாவது வழி பட்டால், ஒன்பது நாட்களும் அன்னையை வணங்கிய பலன்கள் கிட்டும்.
சரஸ்வதியாக அருள் தரும் அன்னைக்கு தாழம்பூ சூட்டி, தும்பை இலைகளால் அர்ச்சனை செய்து, வீணை வாசிக்கும் கோலத்தில் பூஜிக்கவேண்டும்.
நைவேத்தியம்: எலுமிச்சை சாதம், கல்கண்டு சாதம்.
ஸ்தோத்திரம்: சரஸ்வதி அஷ்டோத்திரம், சகலகலாவல்லி மாலை, ஸ்ரீசாரதா புஜங்க மந்திரம் மற்றும் ஸ்ரீதேவி கட்கமாலா படிக்கவேண்டும். பிலஹரி ராகம் பாடலாம்.
பலன்: சாஸ்திர ஞானம் அதிகரிக்கும். வித்யா அனுகூலம் கிட்டும்.வரப்போகும் ஆபத்தை முன்கூட்டியே உணரமுடியும்.
எட்டாம் நாள்
ஐப்பசி- 8 (24-10-2020), சனிக்கிழமை, அஷ்டமி திதி.
எட்டாம் நாளில் அம்பிகையை நரசிம்ஹியாக உக்ர ரூபத்தில் தரிசனம் செய்யவேண்டும். ரோஜா மலர் அணிவித்து வழிபடவேண்டும்.
நைவேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
ஸ்தோத்திரம்: தேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி படிக்க உகந்த நாள்.சரஸ்வதிக்குரிய பாடல்கள், மந்திரங்கள் சொல்லுதல் நன்று. புன்னாக வராளி இசை தேவிக்கு உகந்தது.
அஷ்டமி திதி, துர்க்கை வழிபாட்டுக்கு உகந்த திதியாகும். மாதந்தோறும் வரும் அஷ்டமி திதியில் துர்க்கையை வழிபடுவது மிகவும் விசேஷம். நவராத்திரியின் எட்டாவது நாளில் வரும் அஷ்டமி திதி, மகா அஷ்டமி அல்லது துர்க்காஷ்டமி என்றே அழைக்கப் படுகிறது. துர்க்காஷ்டமி நாளில் காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் ராகு கால வேளையில், வீட்டில் கொலுவைத்திருப்ப வர்கள் விசேஷ ஆராதனையுடன் துர்க்கை யம்மனை வழிபடலாம். சண்டி ஹோமம் செய்யலாம்.
பலன்: சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், கிரகண தோஷம் அகலும். குழந்தை பாக்கியம் கிட்டும். திருமணத்தடை அகலும். எதிரித் தொல்லை நீங்கும். அரசியல்வாதிகள் சண்டி ஹோமம் செய்ய பதவியிலுள்ள பிரச் சினைகள் நீங்கும். சத்ரு தாக்கம் அகலும்.
துர்க்காஷ்டமி நாளில் எட்டு வயது நிரம்பிய சிறுமிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களை அம்பிகையின் அம்சமாகவே பாவித்து வழிபட்டு, அவர்களுக்கு மங்கலப் பொருட்களை வழங்கினால், துர்க்கையின் அருளால் வீட்டில் சகல ஐஸ்வர்யங்களும் நிலைத்திருக்கும் என்பது ஐதிகம்.
ஒன்பதாம் நாள்
ஐப்பசி- 9 (25-10-2020), ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி. சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை.
ஒன்பதாம் நாள் அன்னையை சாமுண்டி யாக, அம்பு, அங்குசம் தரித்த ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாக அலங்கரித்து வழிபட வேண்டும். தாமரை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.
நைவேத்தியம்: பால் பாயசம், அக்கார வடிசல்.
ஸ்தோத்திரம்: சரஸ்வதி அஷ்டோத்திரம், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமப் பாராயணம் சிறந்த பலன் தரும். வசந்தா ராகம் இசைக்கலாம்.
தொழில் நன்கு விருத்தியடைவதற்காகத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங் கள், கருவிகள், இசைக்கருவிகள், புத்தகங்கள் மற்றும் வாகனங்கள் என சகல பொருட்களை யும் சுத்தப்படுத்தி பூஜைசெய்ய வேண்டும்.
பலன்: சகல சௌபாக்கியமும் கிட்டும்.
பத்தாம் நாள் :விஜயதசமி
ஐப்பசி- 10 (26-10-2020), திங்கட்கிழமை, தசமி திதி.
வெற்றியைக் குறிக்கும் விஜயதசமி நாளாகும். வெற்றித் திருமகளாக தேவியை அலங்கரித்து வழிபட, நவநிதியும் பெற்று நீடூழி வாழலாம். குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்க அற்புதமான நாளாகும். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும். சரஸ்வதி வழிபாட்டின் இறுதியில் நல்லறிவும், ஞானமும் வேண்டி, விஜயதசமியன்று பூஜையைப் பூர்த்திசெய்ய வேண்டும்.
எல்லா நாட்களிலுமே பூஜைமுடிவில் "ஸ்ரீதுர்க்கா லக்ஷ்மி சரஸ்வதீப்யோ நம' என்றுகூறி, மலர்களுடன் குங்குமம், அட்சதை ஆகியவற்றை அம்பாளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
தினமும் ஏதாவது ஒரு சுண்டல் நிவேதனம் செய்வதால் நவகிரக தோஷம் அகலும்.
இந்த நாட்களில் சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, அவர்களை அம்பிகை யாக பாவித்து மஞ்சள், குங்குமம், தாம்பூலம் வழங்கி வணங்கிட, மாங்கல்ய பாக்கியம் அதிகரிக்கும்.
கன்னிப் பெண்கள் துர்க்கை சந்நிதியில் விளக்கேற்றி வழிபட்டால் விரைவில் திருமணம் நடக்கும்.
பசுவுக்கு அறுகம்புல், அகத்திக்கீரை, வாழைப்பழம் கொடுத்து, மும்முறை வலம் வந்து வழிபட்டால், மூன்று தேவியை வழி பட்ட பலன் கிடைக்கும்.
ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்களுக்கு உதவி செய்ய, அம்மனின் நல்லாசி கிட்டும்.