ராகு- கேது பெயர்ச்சி 13-2-2019

வகிரகங்களில் நிழல் கிரகங்கள் என்று போற்றப்படும் ராகு- கேதுக்கள் மானிடர்களின் கர்மவினைகளுக்கேற்ப நற்பலன்களையும், தோஷங்களையும் தந்து, பாவச்சுமைகளை அகற்றும் புண்ணியமூர்த்தி கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

முன்வினைப் பாவச்சுமைகளை உணர்ந்து, தங்கள் செயல்பாடுகளைத் திருத்தி நன்மையை நாடும் மானிடர்கள், இந்த ராகு- கேதுக்களை உரிய முறையோடு வழிபட்டு நலம்பெறலாம் என்று வேதம் அறிந்தவர்கள் கூறுவர்.

ராகு- கேது பெயர்ச்சியால் ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் என்ன என்பதை சில வழிகாட்டி நூல்கள் தெரிவிக்கின்றன. இந்நாளில் உரிய தெய்வப் பரிகாரங்கள் செய்து, முடிந்தவரை ராகு- கேது தலங்களை தரிசித்து வருவதால் இக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் குறையும்.

Advertisment

கேதுவுக்கு அதிதேவதை விநாயகப் பெருமான். அவர் எல்லா தோஷங்களையும் நீக்கி சுகமான வாழ்வளிப்பார் என்பதால், தினந்தோறும் விநாயகர் அகவல் போன்ற நூல்களைப் பாராயணம் செய்து வழி பட்டால், கேது தோஷங்கள் நீங்கும்.

ராகுவைக் கட்டுக்குள் கொண்டுவரும் சக்தி காளிதேவி, துர்க்கைக்கு உண்டு. எனவே, ராகு காலத்தில்- குறிப்பாக வெள்ளிக் கிழமைகளில் அபிஷேக ஆராதனைகளுடன், நெய் விளக்கேற்றி வழிபட ராகு- கேது தோஷ நிவர்த்திக்கு வழிவகுக்கும்.

ராகு- கேது தோஷங்களிலிலிருந்து விடுபட பல கோவில்கள் உள்ளன. அவற்றுள் சில...

Advertisment

கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ் வரம் ராகு தோஷ நிவர்த்தித்தலம். இங்கு ராகு பகவான் தனிச்சந்நிதி கொண்டு அருள்புரிகிறார்.

பொதுவாக, ராகு மனிதத்தலை, நாக உடலுடன் காட்சி தருவார். ஆனால் இங்கு முழுமையாக மனித வடிவில் அருள்புரிகிறார். மேலும் தன் பத்தினிகள் நாகவல்லிலி, நாகக்கன்னி தேவியரு டன் உள்ளார். இவருக்குப் பாலாபிஷேகம் நடைபெறும்போது பால் நீலநிறமாக மாறி வழிந்தோடும் அதிசயத்தைக் காணலாம்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிர பரணிக் கரையிலுள்ள திருத்தலம் கோடக நல்லூர். இத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீமன் நாராயணனை வழிபட அனைத்து தோஷங் களும் நீங்கும்.

மயிலாடுதுறை- காரைக்கால் சாலையில் செம்மங்குடிக்கு அருகில் உள்ளது திருச்சிறு புலிலியூர். இங்கு எழுந்தருளியிருக்கும் "மாகட லமுது' எனும் கிருபாசமுத்திரப் பெருமாளை யும், தயாநாயகித் தாயாரையும் வழிபட ராகு தோஷம் நீங்கும். இது ஆதிசேஷன், பெருமாளை வழிபட்டு வரங்கள் பெற்ற திருத்தலம். அதனால் இங்கு அருள்புரியும் ஆதிசேஷனை வணங்கினால் பூர்வீக சொத்து வழக்கில் வெற்றிகிட்டும்.

தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் குத்தாலம் எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து வடமேற்கில் சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் கதிராமங்கலம் என்னும் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை வனதுர்க்காதேவிக்கு அர்ச்சனை செய்யும்போது, வலக்கரத்தின் உள்ளங்கையில் வியர்வை முத்துகள் வெளிப்படும் அதிசயத்தை தரிசிக்கலாம். இந்த வனதுர்க்கையை வழிபட ராகுவினால் ஏற்படும் துன்பங்கள் விலகும். ராகு காலத்தில் எலுமிச்சம்பழ மாலை சாற்றி, எலுமிச்சை சாதம் நிவே தனம் செய்து, எலுமிச்சம்பழ மூடியில் விளக்கேற்றி வழிபட நல்லபலன் கிட்டும் என்று கூறப்படுகிறது.

இனி, சில கேது தலங்களைக் காண்போம்.

சீர்காழியிலிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர் தூரத்திலுள்ள கீழ்ப்பெரும்பள்ளம் கேது பகவான் தலம். இங்கு இவரை ஏழு தீபங்கள் ஏற்றி வழிபட கேது தோஷங்கள் நீங்கும் என்று தல வரலாறு கூறுகிறது.

கேதுவுக்கு அதிபதி விநாயகப்பெருமான் ஆவார். எனவே, திருச்சி உச்சிப் பிள்ளையார் மற்றும் மலை அடிவாரத்திலுள்ள மாணிக்க விநாயகர், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர், திருச்செங்காட்டங்குடி வாதாபி கணபதி உள்ளிட்ட ஆலயங்களுக்குச் சென்று வழி பட்டாலும் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். மேற்கண்ட தலத்திற்குச் செல்ல இயலாத வர்கள் தங்கள் ஊரிலுள்ள விநாயகரை வழிபட நல்லபலன்களைப் பெறலாம்.

raghukethu

ராகு- கேது ஆகியவர்கள் தனித்தனியாக அருள்புரியும் திருத்தலங்கள் உள்ளதுபோல், ராகுவும் கேதுவும் ஒன்றுசேர்ந்து அருள்புரியும் தலங்களும் உள்ளன. அவற்றுள் சில...

நன்னிலத்திலிலிருந்து பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திருவாஞ்சியம் மூவர் பாடல்கள் பெற்ற தலம். இங்கு அருள்பாலிலிக்கும் இறைவன் வாஞ்சிநாதர், இறைவி மங்களாம்பிகை. இங்கு எமதர்மராஜன் சந்நிதி முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு அருள்பாலிலிக்கும் ராகு- கேதுவை ஒரேசமயத்தில் வழிபட்டால் அனைத் துத் தோஷங்களும் நீங்கும்.

ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தலம் காளஹஸ்தி. பஞ்சபூதத் தலங்களில் இது வாயுத்தலம். தட்சிண கயிலாயம் என்ற பெருமைக்குரியது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீகாளத்திநாதரை வழிபட்டு, ராகு- கேதுவை யும் வழிபட்டுப் பரிகாரங்கள் செய்து கொண் டால் சகலவிதமான தோஷங்களும் விலகும்.

கும்பகோணம்- காரைக்கால் சாலையில் கொல்லுமாங்குடிக்கு மேற்கே கற்கதி என்னும் கிராமத்திலிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருப்பாம்புரம் திருத்தலம். இங்கு வீற்றிருக்கும் இறைவன் சேஷ புரீஸ்வரர்; இறைவி பிரம்மராம்பிகை. இங்கு ராகு- கேதுவுக்கு தனிச்சந்நிதி அமைந் துள்ளது. ராகுவும்- கேதுவும் இத்தலத்திற்கு வந்து வழிபாடுசெய்து சாப விமோசனம் பெற்றனர் என்று தலவரலாறு கூறுகிறது. எனவே, இங்கு பரிகாரங் கள் செய்துகொள்ள ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்பர்.

மேலும் பல திருத்தலங்கள் உள்ளன. ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் கோவிலிலும், திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் கோவிலிலிலும் பதஞ்சலிமுனிவருக்கு சமாதிகள் உள்ளன. பதஞ்சலிலியின் சமாதியில் வழிபட ராகு- கேது தோஷங்கள் நீங்கும். இதேபோல் புகழ்பெற்ற வைணவத் திருத்தலங்களில் ஸ்ரீராமானுஜருக்கு தனிச்சந்நிதி உள்ளதைக் காணலாம். ஸ்ரீராமானுஜர், ஆதிசேஷன் அவதாரம் என்று கூறப்படுவதால் ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்று கூறுவர்.

மேலும், தஞ்சை புன்னைநல்லூர் மாரியம் மன், சமயபுரத்தில் அருள்புரியும் மாரியம்மனை வழிபட்டாலும் ராகு- கேது தோஷங்கள் நீங்கும்.

திருநெல்வேலிலியிலிருந்து மதுரை செல்லும் வழியிலுள்ள சங்கரன்கோவிலிலில் அருள்புரியும் அம்பாள் ஆனந்தத் திருக்கோலத்தில் உள்ளார்.

இங்கு புற்று மண்தான் பிரசாதமாக வழங்குவர். இந்த அம்பாளை வழிபட ராகு- கேது தோஷங்கள் நீங்கும் என்பர்.

நாமக்கல்லிலிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது திருச்செங்கோடு தலம். இங்கு ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி யுள்ளார். இத்தலத்தில் 60 அடி நீளத்தில் ஐந்து தலை நாகத்தின் சிலை கோவில் படிக்கட்டு அருகில் உள்ளது. இத்தலத்தில் அருள்புரியும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட ராகு- கேது தோஷம் மற்றும் பல சர்ப்பதோஷங்கள் நீங்கும்.

ஸ்ரீதேவி, பூதேவியருடன் ஆதிகேசவப் பெருமாள் இம்மலையில் அருள்புரிகிறார். மேலும், வெள்ளை நிற பாஷாணத்தினாலான முருகப்பெருமானும், சப்த கன்னியர்களும் அருள்புரிகிறார்கள். இவர்களையும் ஒரே சமயத்தில் வழிபடுவதால் ராகு- கேது தோஷங் கள் நீங்கும் என்று தலவரலாறு கூறுகிறது.

பொதுவாக, ராகு- கேது தோஷங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத்திறனாளி களுக்கு தங்களால் இயன்றளவு தர்மம் அல்லது அன்பளிப்பு செய்தால் தோஷத்திலிலிருந்து விடுபடுவதுடன் புண்ணியமும் சேரும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.