பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் ஒரு சேர இணைந்த அவதார ஸ்வரூப மாக விளங்குபவர் தத்தாத் ரேயர். தத்தா என்ற சொல்லுக்கு "கொடுக்கப்பட்டவர்' என்று பொருள். அத்ரி மகன் என்பதால் ஆத்ரேயா என்று பெயர். அதாவது மும்மூர்த்திகள் தங்களையே, அத்ரி- அனுசூயா தம்பதிக்கு மகனாக கொடுத்த தால் அவருக்கு தத்தாத்ரேயர் என்ற பெயர் ஏற்பட்டது.
மும்மூர்த்திகளின் திருவிளையாடலும் தத்தாத்ரேயரின் பிறப்பும் சப்த ரிஷிகளில் இரண்டா வது ரிஷியான அத்ரி முனிவர், கர்தபிரஜாபதியின் மகளான அனுசூயாவை மணந்து கொண்டார். அனுசூயா கற்பு நெறி தவறாத மங்கையர்க் கரசி. கற்பு நெறி தவறாத அனுசூயாவைக் கண்டு திரிமூர்த்திகளின் மனைவிகளும் பொறாமை கொண்டார்கள். அவளின் கற்பை சோதனைசெய்து பார்க்கவேண்டும் என்பதற்காக தமது கணவன் மார்களை வேண்டிக்கொண் டார்கள். தங்கள் துணைவியார் களின் வேண்டுதலின்படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முனிவர்கள் போன்று மாறுவேடமிட்டு அத்ரி முனிவர் இல்லாதபோது அனுசூயாவின் குடிலுக்கு சென்று உணவு தருமாறு கேட்டார்கள். அவளும் வந்துள்ள முனிவர்களுக்கு உணவு சமைத் தாள். மூவருக்கும் இலை போட்டு உணவு பரிமாற முற்பட்டாள். உணவை பரிமாற வந்தவளிடம் அவர்கள், ஒரு வினோத கோரிக்கையை வைத்தார்கள். பிறந்த மேனி யாக, அதாவது அவள் உடலில் துளிக்கூட ஆடை இல்லாமல் உணவு பறிமாறினால் மட்டுமே, உணவருந்துவோம் என்று கூறி விட்டனர். வந்துள்ளவர்களோ முனிவர் கள். இயலாது என்று கூறமுடியாது கற்புக்கரசியான அவளுக்கு அவர் களின் வேண்டுகோளை ஏற்பதும் இயலாது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thathirayar.jpg)
எனவே அவள் தனக்கு வழிகாட்ட வேண்டு மென்று கணவரை மனதில் நினைத்து வேண்டினாள். அடுத்த நிமிடமே மும்மூர்த்திகளும் பிறந்த குழந்தைகளாகி விட்டார்கள். அந்தக் குழந்தைகளை வாரி எடுத்து தனது மார்பில் இருந்து பாலூட்டி னாள். அவள் கணவர் திரும்பிவந்தார். நடந்ததைக் கேட்டு அறிந்தார். தனது ஞான திருஷ்டியினால் நடக்கபோவதை அறிந்துகொண்டார். குழந்தைகள் அவளிடம் கொஞ்சி விளையாடின.
மும்மூர்த்திகள் திரும்பி வராததைக்கண்டு பயந்து போன மூன்று தேவியரும் நாரதர்மூலம் நடந்ததை அறிந்துகொண்டார்கள். உடனே அனுசூயாவிடம் சென்று நடந்ததற்காக மன்னிப்புக் கோரி தமது கணவர்களை திருப்பித் தருமாறு கேட்டார்கள். அனுசூயாவும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு மும்மூர்த்திகளை மீண்டும் பழைய நிலைக்கு ஆக்க தன் கணவனை வேண்டினாள். குழந்தை கள் மறைந்தன. மும்மூர்த்திகளும் தமது உண்மை யான ரூபத்தை அனுசூயா-அத்ரி முனிவர் தம்பதி களுக்குக் காட்டி இன்னும் சில நாட்களிலேயே விஷ்ணுவானவர் அவர்களுக்கு மகனாகப் பிறப்பார் எனவும், பிறக்க உள்ள குழந்தை மும்மூர்த்திகளின் அவதாரமாக, அவர்கள் சக்தியை உள்ளடக்கி தத்தாத்திரேயர் என்ற அவதூதராக பிறந்து பூமியிலுள்ள அவல நிலையை ஒழிப்பார் என உறுதி தந்து விட்டு அவர்களை ஆசிர்வித்த பின்னர் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கூறிய படியே அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் சுசீந்திரம் ஸ்தலத்தில் மார்கழி மாதம் பௌர்ணமி நாளில், மிருகசீரிட நட்சத்திரத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா வடிவம் இணைந்தே மும்மூர்த்திகளின் அவதார மாக மனித உருவில் பூமிக்கு தத்தாத்ரேயராக விஷ்ணு பகவான் அவதரித்தார்.
இறைவனே குழந்தை யாகப் பிறந்ததால், தத்தாத் ரேயர் சாதாரணக் குழந்தை யாக வளரவில்லை. மற்ற குழந்தைகளைக் காட்டி லும் அவரின் போக்கு வேறுவிதமாகவும் விசித்திர மாகவும் இருந்தது. யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தவர் சிறிது வளர்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறினார்.
பல இடங்களுக்கும் சுதந்திரமாக சுற்றித் திரிவார். மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் சென்று அமர்ந்து கண்களை மூடியபடி இருப்பார். அவரைச் சுற்றி எப்போதுமே பெரும் ஒளிவெள்ளம் இருந்தது. அவரைக் கண்ட ரிஷி முனிவர்கள் அவர் சாதாரண பிறவி அல்ல என்பதைப் புரிந்து கொண்டார்கள். மாபெரும் யோகி, ஞானி, அவதூதர் என அவரை பலரும் பலவிதமாக போற்றித் துதிக்கலாயினர்.
அவர் வேதங்களை நன்கு அறிந்தவர் என்பதை அறிந்துகொண்ட பல ரிஷிகளும் முனிகளும் அவரை குருவாக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார்கள். அவர் குஜராத், மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளில் சுற்றித் திரிந்தார். கனகபுரா என்று அழைக்கப்படும் கர்நாடகாவிலுள்ள ஒரு ஊரில் அவர் ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது.
தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்றும் சொல்லப்படுகிறது. பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார்.
தத்தாத்ரேய ஜெயந்தி
மார்கழி மாதம் பௌர்ணமி தினத்தில் தத்தாத்ரேயர் அவதார தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வைகாசி மாதம் தசமி திதியில் தத்தாத்ரேயர் ஜெயந்தி கொண்டாடப் படுகிறது. அனுமன்,மார்க் கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவி யாக வாழும் சிறப்பு பெற்றவர். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர் களது கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தத்தாத்ரேயர் உருவம் வித்தியாசமானது.
மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். காளையும் அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங் களாக உள்ளன. அவரைச்சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம்கொண்டு திகழ்கின்றன. உலகில் பலபெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள்.
ஸ்ரீதத்தாத்ரேயர் ஜெயந்தி தத்தாத்ரேயர் வழிபாடு ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரேசமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேகபலமும் கிடைத்து, பதவிப்பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-12/thathirayar-t.jpg)