நவகிரகங்களின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டதே உலக இயக்கம். சந்திரன் பூமியைச் சுற்றிவரும்போது, சூரியனுக்கும் சந்திரனுக்குமிடையே உள்ள தூரத்தைக் குறிப்பிடுவது திதி. பௌர்ணமி அல்லது அமாவாசைக்குப்பிறகு வரும் மூன்றாவது திதி திரிதியை. சித்திரை மாதத்தின் அமாவாசைக் குப்பின் வரும் வளர்பிறை திரிதியையே அட்சய திரிதியை. அட்சயம் என்றால் வளர்தல் என்று பொருள். ரோகிணி நட்சத்திரமும் திரிதியை திதியும் இணையும் நாளில் செய்யும் தான தர்மங்கள் மற்றும் வழிபாடுகளுக்கு பலமடங்கு பலனுண்டு. இத்தகைய சிறப்பு மிக்க அட்சய திரிதியை ஸ்ரீ பிலவ வருடத்தில் சித்திரை 31லிஆம் நாள், வெள்ளிக்கிழமை (14லி5லி2021) அன்று வருகிறது.
செல்வச் செழிப்பு தரும் அட்சய திரிதியை ஒரு அட்சய திரிதியை நாளில் தான் ஒரு ஏழைப்பெண்மணி நெல்லிக்கனியை ஆதிசங்கரருக்கு தானம் தந்தார். மனம் குளிர்ந்த ஆதிசங்கரர், "தாங்கள் அளித்த இந்த உணவால் உங்களைப் பிடித்திருக்கும் வறுமை நீங்கும்'' எனக்கூறி, செல்வத்துக்கு அதி தேவதையான ஸ்ரீமகாலட்சுமித் தாயாரை மனதால் வணங்கி "கனகதாரா' ஸ்தோத்திரத்தைப் பாடி தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழியச் செய்தார்.
இதே நாளில் கிருஷ்ண பரமாத்மா, வறுமையில் வாடிய தனது நண்பர் குசேலர் அன்புடன் கொடுத்த அவலை 'அட்சயம்' என்று கூறி மூன்றுபிடி உண்டு, கோடிகோடியாக செல்வங்களை அள்ளிக்கொடுத்து குசேலரை குபேரனாக்கினார்.
செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமிக்கு உகந்த தினமான வெள்ளிக்கிழமையில், செவ்வாயின் நட்சத்திரமான மிருகசீரிடமும் இணைந்த நாளில் இவ்வாண்டு அட்சய திரிதியை வருவதால், அன்றைய தினம் வீட்டில் மகாலட்சுமி, நாராயணர் படம்வைத்து கனதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீசூக்தம் பாடி, குசேலர் கதை படித்து அவல் பாயசம் வைத்து வழிபட்டால், பல தலைமுறை வறுமை, கடன், தீராத சொத்துப் பிரச்சினை, திருமணத் தடை போன்றவை நீங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்குக் கடன் வழங்கிய குபேரன், அட்சய திரிதியை நாளில் மகாலட்சுமியை வழிபட்டு சங்கநிதி, பதுமநிதியைப் பெற்றதாக ஐதீகம். எனவே அன்றைய தினம் லட்சுமிகுபேர பூஜை செய்தால் குறையாத செல்வம் உள்ளவர்களாக, லௌகீக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து ஐஸ்வர்யர்களையும் பெற்று பூரண நலத்துடன் வாழ்லாம்.
செய்ய வேண்டிய சுப காரியங்கள்
புதுக்கணக்கு தொடங்குதல், வீடுகட்ட ஆரம்பித்தல், கிணறு தோண்டுதல், நெல் விதைத்தல், கல்வி கற்க ஆரம்பித்தல், பெண் பார்த்தல், திருமணம் நிச்சயித்தல் போன்றவற்றுக்கு சிறந்த நாளாகும்.
பித்ருக்கடன் தீர்க்க உகந்த நாள் திரிதியை திதியின் அதிதேவதை கௌரி என்பதால், அன்று பார்வதி தேவியை வழிபட்டால் திருமணத் தடை அகலும். கணவன்லி மனைவி ஒற்றுமை மேம்படும். பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் போன்றவற்றை வைத்து செந்தாமரை மலர்களால் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
அட்சய திரிதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. சமீபகாலத்தில் இந்த

அட்சய திரிதியை நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. சமீபகாலத்தில் இந்த நாளில் தங்கம் வாங்கினால் மேலும் மேலும் சேரும் என்னும் நம்பிக்கையும் அதிகரித்து வருகிறது. அட்சய திரிதியையன்று தங்கம் வாங்கினால் மட்டும்தான் தங்கம் சேரும் என்பதில்லை. இந்த பிலவ வருடத்தில் கொரோனா நோய்த் தாக்கம் இருப்பதால் பரணி, பூரம், பூராடம் போன்ற சுக்கிரனின் நட்சத்திரம் வரும் நாட்களில் புதன், சுக்கிர ஹோரையில் தங்கநகை வாங்கலாம். அதேபோல் புதன், வெள்ளிக்கிழமைகளில் பரணி, பூரம், பூராட நட்சத்திரம் சேர்ந்துவரும் நாட்களில் புதன், சுக்கிர ஹோரைகளில் நகை வாங்கினால் தங்கம் சேரும். விலை உயர்ந்த பொருளான தங்கத்தை எல்லாராலும் வாங்கமுடியாது என்பதால், அன்னை மகாலட்சுமி கைகளிலிருந்து பொற்காசுகள் கொட்டும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டுவந்தால் தங்கம் எப்போதும் தங்கும். மிக எளிமையாக மஞ்சள் கிழங்கு, உப்பு, அரிசியும் வாங்கலாம்.
செய்யவேண்டிய தானலி தர்மங்கள்
இந்த நாளில் ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது, ஆதரவற்றோர், ஏழை விவசாயிகள், நடைபாதை வாசிகளுக்கு தானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது அளவற்ற புண்ணியத்தைக் கொடுக்கும்.
ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் செல்வவளம் பெருகும். பழவகைகளை அளித்தால் உயர்பதவி கிடைக்கும். கோடைவெய்யிலின் தாக்கம் தீர குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும். ஆடைதானம் செய்ய மனநிம்மதி கிட்டும். தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வியில் மேன்மை கிட்டும். தயிர் தானமளித்தால் பாவ விமோசனம் உண்டாகும். தானியங்களை வழங்கினால் விபத்து, அகால மரணம் நேராது. தீராத நோயால் அவதிப்படுபவர்கள், உடல்நிலை மோசமானவர்களுக்கு மருந்து வாங்கித் தருவதால், உடல் ஆரோக்கியம் பெறும்.
அன்று பசுவுக்கு கோதுமைத் தவிடு அல்லது அரிசித் தவிடு, வெல்லம், வாழைப்பழம் கலந்து உணவளித்தால் சகலபாவமும் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.
இனி 12 ராசியினரும் அட்சய திரிதியை நாளில் செய்யவேண்டிய தானலி தர்ம முறைகளைக் காணலாம்.
மேஷ ராசி
முருகனுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, துவரம்பருப்பு சாதம் நிவேதித்து வழிபட பணவரவு இரட்டிப்பாகும். அன்று தந்தை மற்றும் வயது முதிர்ந்த பெரியோர்களின் விருப்பங்களை நிறைவுசெய்து நல்லாசி பெற்றால் கோடி புண்ணியம் தேடிவரும். முன்னோர்கள் வழிபாடு செய்து இயன்ற அளவு அன்னதானம் தர தடைலி தாமதங்கள் நீங்கும்.
ரிஷப ராசி
சிவபெருமானுக்கு வில்வ மாலையும், அம்பிகைக்கு ரோஜா மாலையும் அணிவித்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து தானம் வழங்க, மன சஞ்சலம் நீங்கி மகிழ்சி குடிபுகும். ஆதரவற்ற முதியவர்களைப் பராமரிக்கும் இல்லங்களுக்கு உணவு, உடை தானம்தர காரியசித்தி கிட்டும்.
மிதுன ராசி
மகாவிஷ்ணுவுக்கு துளசிமாலை அணிவித்து, பாசிப்பருப்பு பாயசம் நிவேதனம் மற்றும் தானம் செய்தால் நிரந்தர செல்வம், சுபப்பலன் கிட்டும். படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் வங்கிதர, உங்கள் குழந்தைகளால் ஏற்படும் மனக்கவலை அகலும்.
கடக ராசி
அசைவ உணவுண்பதைத் தவிர்த்து, அம்பிகைக்கு பால், தயிர் அபிஷேகம் செய்து, வெண்பட்டுப் புடவை சாற்றி, பால்பாயசம் நிவேதித்து தானம் தர, சகல வினைகளும் அகலும். விவசாயிகளுக்குத் தேவையான விதை, உரம், விவசாயத் தளவாடப் பொருட்கள் வாங்கிக்கொடுத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தி னால், உங்களின் பாவம்நீங்கி அதிர்ஷ்டம் வந்துசேரும்.
சிம்ம ராசி
அசைவ உணவுண்பதைத் தவிர்த்து, பார்வதிலி பரமேஸ்வரருக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்து, கோதுமைப் பாயசம் நிவேதிக்கவும். சிவாச்சாரியார்களுக்கு உணவு, உடை தானம்தந்து ஆசிபெற பணவரவு பன்மடங்காகும். விட்டுப்போன பித்ரு தர்ப்பணத்தை நீர்நிலைகளுக்கு அருகில் செய்ய, சுபகாரியத் தடை அகலும்; கர்மவினை நீங்கும்.
கன்னி ராசி
மகாவிஷ்ணுவுக்கு வஸ்திரம் சாற்றி, வெண் பொங்கல் நிவேதித்து தானம் தருவதன்மூலம் பாவம் நீங்கி அதிர்ஷ்டம் வந்துசேரும். பள்ளி, கல்லூரிப் படிப்பைத் தொடர சிரமப்படுபவர்களுக்கு பண உதவி தரலாம்.
துலா ராசி
அம்பிகைக்கு பொட்டுத் தாலி அணிவித்து, குங்குமார்ச்சனை செய்து, கல்கண்டு சாதம் நிவேதித்து சுமங்கலிப் பெண்களுக்கு தானம் தர நற்பலன்கள் அதிகரிக்கும். அன்று வலம்புரிச்சங்கு வைத்து லட்சுமி குபேர பூஜை நடத்த, பணவரவு மகிழ்ச்சிதரும் விதத்தில் இருக்கும்.
விருச்சிக ராசி
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி எறும்புப் புற்றுகளில் தூவினால், வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும்போது பல தலைமுறை சாபம்நீங்கி புண்ணியப் பலன் அதிகரிக்கும். கஷ்டங்களில் இருக்கும் சகோதரலி சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லருளைப் பெற்றுத்தரும்.
தனுசு ராசி
குலதெய்வத்திற்கு அபிஷேக ஆராதனை செய்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட, பொருளாதாரத்தில் தன்னிறைவு கிடைக்கும். மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளின் பராமரிப்பிற்கு உதவவேண்டும். குழந்தைகள் காப்பகம், முதியோர் இல்லங்களுக்குப் புத்தாடையுடன் இட்லியும் எள்ளு சட்னியும் தண்ணீருடன் தானம் தர, முன்னோர்களின் நல்லாசி கிட்டும்.
மகர ராசி
சிவன் கோவில்களுக்கு தீபமேற்ற எண்ணெய் வாங்கித்தந்து, பராமரிப்பில்லாத கோவில்களுக்குப் பராமரிப்புப் பணிக்கு உதவினால் கர்மவினை நீங்கும். துப்புரவுத் தொழிலாளிகளுக்கு உணவு, ஆடை தானம் தரவேண்டும். ஆன்மாவும் உடலும் குளிர புனித நதிகளில் நீராடவேண்டும்.
கும்ப ராசி
கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் முதலான நறுமணப் பொருட்களைக் கலந்து இறைவனுக்கு ஒருமுறை சந்தனக் காப்பு செய்பவர்களுக்கு சிவலோகப் பதவி கிட்டும். சுத்த அன்னம் நிவேதித்து தானம் வழங்கினால் வீட்டில் பணத்திற்கு சிரமமில்லாத நிலை உருவாகும். வீண்செலவுகள் இருக்காது. பணம் செலவானாலும், வரவும் இருந்துகொண்டே இருக்கும். தொழில் விருத்தியடைந்து, செல்வம் பெருகும். சாலையோரங்களில் ஆதரவின்றி அல்லல்படுபவர்களுக்கு உணவு, உடை, மருத்துவ உதவி தரவேண்டும்.
மீன ராசி
சிவனாரின் திருமேனிக்கு சந்தனக்காப்புப் பொருத்திக் குளிர்வித்தால் உங்கள் உள்ளம் குளிர்ந்து மனபாரம் குறையும். பசு மற்றும் மிருகங்களுக்கு உணவிடவேண்டும். அன்று கோபூஜை நடத்த, பணப் பற்றாக்குறை நீங்கும். சித்தர்களின் ஜீவசமாதி பீடங்களுக்குச் சென்று லட்டு தானம்தந்து வணங்கிட வினைப்பயன் தீரும்.
வைகாசி விசாகம் 25லி5லி2021, வைகாசி 11, செவ்வாய்க்கிழமை யன்று சிறப்புவாய்ந்த வைகாசி விசாகம் வருகிறது.
மனிதன் தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்மவினைகளை அனுபவிக்கி றான்.
1. சஞ்சித கர்மம்
ஒரு கரு உருவாகும்போதே உடன் உருவாவது. அதாவது தாய்லி தந்தை, முன்னோர் களிடமிருந்து, ஆத்மா பல ஜென்மங்களில் செய்த பாவலி புண்ணியத்தால் இந்தப் பிறவியில் பற்றிக்கொள்ளும் கர்மவினையாகும்.
2. பிராரப்த கர்மம்
ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவலி புண்ணியப் பலன்கள்மூலம் இந்தப் பிறவியில் கிடைக்கக் கூடிய நன்மைலி தீமையாகும். இதையே வேறுவிதமாகச் சொன்னால் பிராப்தம், விதி, கொடுப்பினை என்று கூறலாம். இந்த கர்மாவால் வரும் பலனையும் இந்தப் பிறவியிலேயே அனுபவிக்க வேண்டும்.
3. ஆகாமிய கர்மம்
மேற்கூறிய இரண்டு கர்மாக் களைக் கழிக்கச் செய்யும் செயல்கள்மூலம், இப்பிறவியில் ஆசைகளால் பிறருக்குச் செய்யும் நன்மைலி தீமைகளால் வருவது. இந்த மூன்று வகையான கர்மவினைகளிலிருந்து யாரும் தப்பமுடியாது. மனிதன் தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங்கள், துயரங்கள் அனைத் தும் மேலே கூறிய கர்மவினைத் தாக்கத்தால் வருபவை.
ஒருவர் தன் வாழ்நாளில் நற்பலன்களை அனுபவிக்க, நிகழ்காலத்தில் கட்டுப் பாட்டுடன் வாழவைக்கும் முயற்சியாகவே நம் முன்னோர்கள் ஆன்மிகம் மற்றும் மதம் சார்ந்த விஷயங்களை உபதேசித்திருக்கிறார் கள். தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் மனிதர்கள் தங்கள் வாழ்நாளில் எவ்வளவு தவறு செய்தாலும், "என் மனதால்கூட யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்ததில்லை'' என்றே கூறுகிறார்கள். இதற்கு தான் செய்வது தவறென்பது தெரியாத அறியாமையும் ஒரு காரணம். தன் தவறை யாரும் பார்க்கவில்லை; சாட்சி இல்லையென்று தவறை மறைக்க முயற்சிசெய்வது மற்றொரு காரணம். தவறை மறைக்க முயற்சிப்பவர்களுக்கு எந்த பரிகாரமும், வழிபாடும் பலன்தராது. சிறு தவறுமுதல் பெருங்குற்றங்கள் வரை மனித வாழ்வின் அனைத்து சம்பவங் களும் காலபகவான் எனும் கண்காணிப்பு கேமராவால் படம் பிடிக்கப்பட்டு, காலப்பதிவேட்டில் பதியப்படும் என்பதை உணர்ந்தவர்கள் முருகப் பெருமானை சரணாகதியடைந்து, இறைவனின் அருட் கருணையால் கர்மவினை நீங்கி சுபவாழ்வு வாழ்கிறார் கள்.
எல்லாவிதமான கர்மங்களிலிருந்தும் விடுபட எளிமையான வழிபாட்டுமுறை முருகன் வழிபாடாகும். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் அனைத்தையும் தவிடுபொடியாக்கி வாழ்வில் முன்னேற்றத்தை உண்டாக்குவார். முருகனை நம்புபவர்களுக்கு நிச்சயமாகத் தோல்வியே கிடையாது.
மேலே கூறப்பட்ட அனைத்து கர்மவினைகளும் ஒருவருடைய ஜாதகத்தில் கர்மகாரகன் சனி கிரகத்தில்தான் பதிவாகி இருக்கும். சனி நீசமடையுமிடம் மேஷம். மேஷத்தின் அதிபதி செவ்வாய். முருகனைக் குறிக்கும் கிரகம் செவ்வாய். எனவே ஆத்மாவை வலிமைபெறச் செய்ய கோவிலுக்குச் சென்று மனமுருக முருகனை வழிபட்டாலே கர்மங்கள் தன்னால் விலகும். முருகன் இருப்பிடமே முக்தி தலமாகும். முக்தியென்பது கர்மங்களிலிருந்து விடுபடுதலைக் குறிக்கும்.
முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு மலைபோல் வருகின்ற பிரச்சினைகள் எல்லாம் பனிபோல் விலகும். முருகப்பெருமான் கலியுகக் கடவுள். 'எந்த வினையானாலும், கந்தனருள் இருந்தால் வந்தவழி ஓடும்' என்பது தமிழர்களின் நம்பிக்கை.
தமிழ்க் கடவுளாம் முருகனுக்குரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது வைகாசி விசாகம். விசாக நட்சத்திரமென்பது ஆறு நட்சத்திரங்களின் கூட்டமாகும். விசாக நட்சத்திரத்தில் பிறந்த தால் முருகப் பெருமானை விசாகன் என்றும் அழைக்கின்றனர். 'வி' என்றால் பட்சி (மயில்) என்றும், 'சாகன்' என்றால் பயணம் செய்பவர் என்றும் பொருள் கொள்ளலாம். அதாவது மயில்மீது பயணம் செய்பவர் எனப் பொருள். முருகன் அவதரித்த நாள் பௌர்ணமியுடன் கூடிய வைகாசி விசாகமாகும். ஆறுமுகனான திருமுருகனை செவ்வாய்க் கிழமை, விசாக நட்சத்திரம், பௌர்ணமி திதிகளில் துதித்து வழிபாடு செய்தால் ஞானஸ்கந்தனின் அருள் கிடைக்கும்.
வைகாசி விசாக நாளில், வீட்டை, பூஜையறையை தூய்மை செய்து கோலமிடவேண்டும். விளக்குகளுக்கு சந்தனம், குங்குமமிட்டு தீபமேற்றவேண்டும். முருகப்பெருமானுக்கு செந்நிற மலர்கள் உகந்தவை. அரளி, செம்பருத்தி முதலான மலர்களைக்கொண்டு சிவன், பார்வதியுடன் விநாயகர் மற்றும் முருகன் இணைந்த குடும்பப் படத்தை அலங்கரித்து, கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்யவேண்டும். பால், பழம், தேன், வெற்றிலை, பாக்கு மற்றும் உணவு வகைகளை நிவேதனம் செய்யலாம்.
ஒருவர் முறையான ஒரு வழி பாட்டைக் கடைப்பிடிக்கத் தொடங்கும் போதே கர்மவினையானது கரைய ஆரம்பித்து விடுகிறது. மனிதன் முக்தியடைவதற்கும் பிறவாப் பெருநிலை அடைவதற்கும் சஞ்சித கர்மா முற்றிலும் சரிசெய்யப் பட்டிருக்க வேண்டும். பிறவி எடுத்து எடுத்து சரிசெய்வது முடியாத காரியம். சரணாகதி எனும் வழிபாடே சஞ்சித கர்மாவுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரபஞ்சத்தல் வழங்கப்பட்ட அருட்கொடை.
ஜாதகத்தில் எத்தகைய அமைப்பிருந் தாலும், வழிபாட்டால் சரிசெய்ய முடியாத பிரச்சினைகளே கிடையாது. மனிதன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் மனதை நெறிப்படுத்தவேண்டும். மனிதர்களுக்கு பொருள் தேடும் விஷயத்தில் உதவுகின்ற கருவியாகவும், ஆபத்தாகிற வாழ்க்கைக் கடலைத் தாண்டும் விஷயத்தில் கப்பலாகவும், சத்ரு வெற்றியை விரும்பும் சமயங்களில் நல்ல மதிநுட்பம் நிறைந்த மந்திரியாகவும்லி சுருக்கமாகச் சொன்னால் ஜீவாத்மாவின் பயணத்தை எளிமையாக்கி தனது மார்க்கத்தை உணரச்செய்து, தனது இலக்கை அடைய பேருதவிபுரிவது முருகன் வழிபாடு. ஆன்மாவின் முக்கிய சக்திகளாகிய மனம், புத்தியை முருகப் பெருமானிடம் சரணடையச் செய்யும்போது, உன்னத சக்தியான இறைசக்தி வசப்பட்டு நிரந்தரமான சுபப் பலன்களை அடையமுடியும்.
மங்கள வாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமை முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாளாகும். எனவே ஞானகுரு முருகப் பெருமானை, வேலவனுக்கு உகந்த வைகாசி விசாக நட்சத்திர நாளில் வணங்கி வளம்பெற அவன் திருவடி பணிவோம்.