மயமலைத் தொடரின் வடசாரலில், மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது சிவபெருமான் பார்வதியுடன் உறையும் கயிலை மலை.

நான்கு பக்கமும் சமகோணமாக, மிகப்பெரிய பிரமிட் தோற்றத்தில் அமைந்துள்ள இந்த மலை வெள்ளிபோன்று காட்சிதருகிறது. கடல் மட்டத்திலிலிருந்து 22,028 அடி உயரம் கொண்ட இந்த அற்புதமான மலையிலிருந்து வெளிப்படும் ஒளிக்கதிர்கள் இந்தியாவை மேன்மைப் படுத்துகிறதென்றால் மிகையல்ல. சிவபெலிருமானின் அம்சமாகக் காட்சிதரும் இந்த சிகரத்தை "விசுவலிலிங்கம்' என்று பக்தர்கள் போற்றுகிறார்கள்.

ஐம்பது கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இம்மலையின் எதிர்ப்புறத்தில், சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில், ஒரு பெரிய நந்தியின் திருவுருவில் இயற்கையாக அமைந்துள்ளது ஒரு மலை. இந்த இடைவெளியில்தான் பக்தர்கள் கால்நடையாகவும் குதிரைமீது அமர்ந்தும் கிரிவலம் (பரிக்கிரமா) வருகிறார்கள். கயிலை மலையை வலம்வருவதற்கு மூன்று நாட்களாகும். திருவண்ணாமலைபோல சமதளமல்ல. வழிநெடுக மலைகள், சிற்றாறுகள். ஒற்றையடிப்பாதை வழியாக மலைமீது ஏறி வலம்வருகிறார்கள். கிரிவலப்பாதையில் மாலை நேரத்தில் தங்கிச் செல்வதற்கு வசதிகள் உள்ளன.

kovil-tower

Advertisment

நேபாளத்தின் வழியாகச் செல்லும்போது சீன அரசின் கட்டுப்பாட்டில் கயிலைமலை இருப்பதால் பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. மேலும், கடுமையான மருத்துவ சோதனைகளும் உண்டு. இந்த மருத்துவ சோதனையில் தோல்வியுற்றவர்கள், ஆரோக்கியம் குன்றியவர்களுக்கு கயிலை செல்ல அனுமதியில்லை.

உறைபனி மூடியிருக்கும் இந்தியாவின் வட எல்லையாக உள்ள இமயமலைத் தொடரில் நூற்றுக்கும் மேற்பட்ட மலைகள் உள்ளன. இந்த மலைத் தொடரிலிருந்து தான் கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து, ஐராவதி, யாங்கிசீ போன்ற நதிகள் உற்பத்தியாகின்றன.

இமயமலையானது புராணக் கூற்றின்படி பார்வதி தேவியின் தாய்வீடாகும். மலைகளுக்கெல்லாம் அரசனான இமயமலையின் அரசன் இமவான் மகளாகப் பார்வதி தேவி பிறந்து, வளர்ந்து, தவமிருந்து சர்வேஸ்வரனைக் கைப்பிடித்துச் சென்ற இடம் கயிலை யாகும். உலகத்திலேயே உயரமான- அதேசமயத்தில் இளமையான இமயமலை 30 மில்லிலியன் வருடங்களுக்குமுன் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இம்மலைத்தொடர் கிழக்கு- மேற்கில் இரண்டாயிரம் கிலோமீட்டர் தூரம் விரிந்து பரந்துள்ளது.

இந்த இமயத்தின் பகுதிகளில் ரிஷிகேசம், திருக்கேதாரம், பத்ரிகாச்ரமம், கங்கோத்ரி, யமுனோத்ரி முதலிலிய பல புனிதத் தலங்கள் உள்ளன.

கயிலைக்குச் செல்லும்வழியில், கயிலையிலிலிருந்து சுமார் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில், உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் (15 ஆயிரம் அடி உயரத்தில்) மானசரோவர் என்னும் தடாகம் அமைந்துள்ளது. இதனை பிரம்மதேவன் ஏற்படுத்தினார் என்பது புராண வரலாறு.

kovil-tower

பிரம்மாவின் புத்திரரான தட்சன் மற்றும் பல முனிவர்கள் இம்மலைப் பகுதியில் சிவபெருமானை வேண்டித் தவம் மேற்கொண்டார்கள். அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து சிவபெருமானும் பார்வதியும் காட்சி கொடுத்தார்கள். அப்போது, அவர்களுக்குப் பூஜை செய்ய அந்த மலைப்பகுதியில் தண்ணீர் இல்லாததால், முனிவர்கள் பிரம்மனை வேண்ட, பிரம்மா உடனே மானசரோவர் தடாகத்தை ஏற்படுத்தினார். பிரம்மாவின் மனதிலிலிருந்து தடாகம் தோன்றியதால், மானசரோவர் என்று பெயர் பெற்றது. இந்தத் தடாகம் 24 கிலோ மீட்டர் அகலமும், 90 கிலோமீட்டர் சுற்றளவும், 320 சதுர கிலோமீட்டர் பரப்பளவும், 1,255 அடி ஆழமும் கொண்டது.

இந்த மானசரோவர் தடாகத்தில் பக்தர்கள் நீராடுவதுண்டு. பனிப் பொழிவிருந்தால் இயலாமல் போகலாம். மானசரோவரைச் சுற்றி எட்டு புத்த விகாரங்கள் உள்ளன. இதில் நீராடி பித்ருக்களுக்கான பிதுர்பூஜை செய்வது போற்றப்படுகிறது. இந்த தீர்த்தத்தை அதற் குரிய பாத்திரங்களில் கொண்டுவந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கு மென்று கூறப் படுகிறது. திபெத்திய புராணங்களின்படி "பூமியாகிய விராட் புருஷனின் தொப்புள் இந்த மானசரோவர்' என்று போற்றப் படுகிறது. மேலும், கயிலாயமலை சிவரூபம்; மானசரோவர் பார்வதிரூபம் என்றும் புராணம் கூறுகிறது.

இந்த மானச ரோவர் தடாகத்திற்கு எங்கிருந்து தண்ணீர் வருகிறதென்பது இதுவரை கண்டுபிடிக்கமுடியாத அதிசயமாக உள்ளது.

52 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கயிலைமலையின் தென்முகம் நீலக்கல்லையும், கிழக்கு முகம் படிகக் கல்லையும், மேற்கு முகம் சிவப்புக் கல்லையும், வடக்கு முகம் தங்க நிறத்தையும் குறிப்பதாகக் கூறப்படுகிறது. திசைகளுக்கேற்ப வண்ணத்தில் காட்சிதரும் கயிலை மலை பெரும்பாலும் பனிப்பொழிவில் ஆழ்ந்திருக்கிறது.

இந்த மலை கயிலை, மேரு, வெற்பு, ரசதகிரி, சுமேரு, ஹேமாத்திரி (தங்கமயமானது), ரத்னசாறு (ரத்தினங்களாலான ஆபரணமலை), கார்கைலாசம் (தாமரை மலை), அமராத்திரி (அமரர்கள் வாழும் மலை), வெள்ளியங்கிரி. (வெள்ளிமலை), தேவர் பர்வதம் (தேவர்கள் வாழும் மலை), ஞானபர்வதம் (ஞானமலை), சுயம்பு என்றெல்லாம் பல பெயர்களில் போற்றப்படுகிறது.

இந்த மலையை வலம்வருவதற்கு ஏற்றகாலம் ஜுலை முதல் செப்டம்பர் மாதம்வரை.

சிவ- பார்வதி உறைந்திருக்கும் கயிலாய மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல இராவணன் தன் புஜபலத்தால் முயன்று தோல்விகண்டான் என்பது புராண வரலாறு.

சொர்க்கத்திலிருந்து பூமிக்கு இறங்கிவந்த புனித கங்கையை சிவபெருமான் தனது ஜடாமுடியில் தாங்கியது இம்மலையில்தான் என்கிறது புராணம்.

கயிலைக்கு அருகிலுள்ளது கௌரி குண்டம் என்னும் பெரியதொரு குளம். நீள்வட்ட வடிவமான இக்குளத்தின் நீர் மஞ்சள், பச்சை, நீலம் கலந்த நிறத் தில் காணப்படும். பார்வதி தேவி தினமும் சிவபூஜைக்கு இங்கிருந்துதான் தீர்த்தம் எடுத்துச்செல்வதாக ஐதீகம். மேலும் முருகப்பெருமான், ஆறு தாமரை மலர்களில் அவதரித்தது இந்த கௌரி குண்டத்தில்தான் என்றும் சொல்லப்படுகிறது.

கயிலைமலையின் அடிவாரத்திலுள்ள "தார்' என்னும் பகுதியிலிலிருந்து சுமார் எழுபது கிலோமீட்டர் தூரத்தில் தீர்த்தபுரி என்ற தலம் உள்ளது. அரியும் சிவனும் ஒன்றே என்னும் தத்துவத்தை விளக்கும் இடம். இங்கு பஸ்மாசுரன் என்பவன் சிவனை நோக்கித் தவமிருந்து அரிய வரம் பெற்றான்.

"நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர் பஸ்பமாகிப்போக வேண்டும்' என்பதே அவன் பெற்ற வரம். வரம்பெற்ற அசுரன், சிவபெருமான் தலையிலேயே கைவைக்க நெருங்க, சிவன் அங்கிருந்து மறைந்தார். உடனே மகாவிஷ்ணு மயக்கும் மோகினியாக அவதாரமெடுத்து பஸ்மாசுரன் முன்புவரவே, அவன் மோகினியின் அழகில் மயங்கினான். தன்னைப்போலவே நடனமாடினால் அவனை மணந்துகொள்வதாக மோகினி கூற, அவனும் சம்மதித்தான். மோகினி நடனமாடியபடியே கையை தலைமேல் வைக்க, அவனும் தன் தலைமீது கைவைத்து சாம்பலாகிப்போனான்.

புராணத்தகவல்கள் பல நிறைந்த கயிலைமலை இருப்பதுபோல, இந்தியாவின் வடக்குப் பகுதியில் பல மலைகள் உள்ளன. அவற்றில் திபெத்திலுள்ள மானசரோவர் கைலாஷ்; உத்தரகாண்ட் மாநிலம் பிதோரா சார்க் வட்டத்திலுள்ள ஆதிகைலாஷ்; ஜம்மு காஷ்மீர் பகுதியிலுள்ள அமர்நாத் கைலாஷ், இமாச்சலப்பிரதேச இன்னார் வட்டத்திலுள்ள கின்னார் கைலாஷ், இமாச்சலப் பிரதேச சம்பா வட்டத்திலுள்ள மணி மகேஷ் கைலாஷ்; சிம்லாவிலுள்ள ஸ்ரீகாந்த கைலாஷ் ஆகியவையும் போற்றப்படுகின்றன. இந்த மலைகளை ஓரளவு சிரமமில்லாமல் தரிசித்துவிடலாம். ஆனால் கயிலைநாதன் அருள்புரியும் கயிலாயமலையை தரிசித்து வலம் வருவதற்குப் பல இடையூறுகள், கட்டுப்பாடுகள் உள்ளன.

தகுந்த ஏஜென்ஸிமூலம் கயிலை செல்வது நலம் தரும். பொருட்செலவு அதிகமாகலாம். மருந்து, மாத்திரைகள் தேவைப்படும்.

அரசின் அனுமதி பெறவேண்டும். உடல் ஆரோக்கியம் ஒத்துழைக்க வேண்டும். இவற்றையெல்லாம் சமாளித்துவிட்டாலும் இறைவன் அருள் இருந்தால் மட்டுமே கயிலைப் பயணம் புனிதப் பயணமாக அமையுமென்று கயிலை சென்றுவந்தவர்கள் கூறுகிறார்கள்.

பல பெருமைகள் பெற்ற கயிலையை தரிசித்து வலம் வரமுடியாத பக்தர்கள், திருவையாறு ஐயாறப்பர் திருக்கோவிலுக்குச் சென்று அங்கு அருள்புரியும் இறைவனை தரிசித்துப் பேறுகள் பெறலாம். இங்கு ஆடி அமாவாசை திருவிழாக்கோலம் காணும்.

திருநாவுக்கரசர் கயிலை சென்று இறைவனை தரிசிக்கப் பயணமானார். வழிநெடுகில் உள்ள சிவாலயங்களை தரிசித்தபடி தனித்துச்சென்று கொண்டிருந்த திருநாவுக்கரசருக்கு முதுமை காரணமாக பெரிதும் களைப்பு மேலிட்டது. அடுத்து ஓர் அடிகூட எடுத்துவைக்க இயலாமல் துவண்டார். எப்படியும் கயிலை செல்ல வேண்டுமென்ற ஆவலில், இரு கைகளையும் தரையில் ஊன்றி ஊன்றி நகர்ந்தார். ஒரு கட்டத்தில் கைகளும் வலுவிழந்தன. இனி ஊர்ந்து செல்லவும் இயலாத நிலை. "இறைவா, உங்களை தரிசிக்க அருளாசி வழங்குங்கள். கயிலையைக் காண அருளாசி வழங்குங்கள்' என்று இறைஞ்சினார்.

அப்பொழுது, ஒரு அசரீரி, "நாவுக்கரசரே, அருகிலுள்ள பொய்கையில் மூழ்கினால் உமது விருப்பம் நிறைவேறும்' என்றது.

ஒலி வந்த திசை நோக்கி கைகூப்பி வணங்கி னார். அருகிலிருந்த பொய்கை நீருக்குள் மூழ்கினார். எழுந்தபோது தான் திருவையாறு தலத்தின் திருக்குளத்தில் இருப்பதை அறிந்தார்.

"இறைவா! இது என்ன திருவிளையாடல்! நான் கயிலைக் காட்சியைக் காண முடியாதா?' என்று கலங்கினார். மறுகணம் அந்த இடமே கயிலாயமாக மாறியது. திருநாவுக்கரசருக்கு அம்பிகையுடன் காட்சிதந்தார் சிவபெருமான். அந்தத் திரு நாள் ஆடிமாத அமாவாசை என்கிறது புராணம்.

தஞ்சையிலிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தலம் திருவையாறு. இங்குள்ள ஐயாறப்பர் திருக்கோவிலின் வெளிப்பிராகாரத்தில், இறைவன், திருநாவுக்கரசருக்கு கயிலை தரிசனம் தந்ததற்கு சாட்சியாக வடகயிலாயம், தென்கயிலாயம் என்று கோவில்கள் உள்ளன. இங்கு ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று திருநாவுக்கரசர் திருக்கயிலாயக் காட்சிபெறும் விழா சிறப் பாக நடைபெறுகிறது.

இந்த விழாவில் கலந்துகொண்டு இறைவனையும் இறைவியையும் வழிபட்டால், கயிலை சென்ற பலன்கள் கிட்டும். மேலும், அங்குள்ள கோவில்களையும் வலம்வந்து, "ஓம் நமசிவாய' மந்திரத்தை ஜெபித்துக்கொண்டே விழாவில் கலந்துகொண்டால் இறையருள் கிட்டும். கயிலாய மலையை வலம்வந்ததன் புண்ணியப் பலன்களைப் பெறலாம் என்று வேத நூல்கள் கூறுகின்றன.

மேலும், காரைக்காலில் அமைந்துள்ள ஸ்ரீகாரைக்கால் அம்மையார் கோவிலுக்குச் சென்று, அங்கு அருள்புரியும் இறைவன், இறைவி மற்றும் காரைக்கால் அம்மையாரை வழிபட்டாலும் கயிலைவாசனின் திருவருள் கிட்டும் என்று கூறப்படுகிறது.

கயிலை மலைக்குச் செல்லவேண்டும்; கயிலையை வலம் வரவேண்டும் என்று விரும்பும் பக்தர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்தில், (தோட்டம் இல்லையென்றால் ஓரிடத்தில்) பெரிய மண் தொட்டியில் தூதுவளைச் செடியை வளர்த்து, அந்தச் செடிக்கு தினமும் பூஜைசெய்து வணங்கி வந்தால் நல்ல பலன் கிட்டுமென்று சாஸ்திரம் கூறுகிறது.

மூலிலிகைச் செடிகளுக்கெல்லாம் தலைமை வகிக்கும் இந்த தூதுவளைச் செடி, இறைவ னிடம் தூதுசென்று நம் குறைகளைக்கூறி அருளாசி வழங்க வழிசெய்யுமென்று ஞானநூல்கள் கூறுகின்றன. எனவே, தூதுவளைச் செடியை வழிபட்டால் கயிலாயமலை செல்ல வாய்ப்பு கிட்டலாம். அல்லது கயிலாய மலை சென்ற பலன்கள் கிட்டுமென்று கூறப் படுகிறது.