லகின் எந்த ஷிர்டி சாயிபாபா ஆலயத்திலும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் பாபா சிலை வெள்ளைநிறப் பளிங்குச் சிலை யாகவோ, ஐம்பொன்னிலோ, செம்பிலோதான் அமைந்திருக்கும். ஆனால், "சாயி பிரச்சார் சேவா டிரஸ்ட்' சார்பில் சென்னை ஊரப் பாக்கத்தில் (வண்டலூர்- கூடுவாஞ் சேரிக்கு இடையில்) கட்டப்பட்டு வரும் நூதன ஷிர்டி சாயிபாபா தியான மையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட வுள்ள சிலை முழுக்க முழுக்க பச்சை நிறத்தாலான இத்தாலி−யன் மார்பிளாலானது என்பதே இதன் தனிச்சிறப்பு.

Advertisment

அருளும் பொருளும் தரும் ஆகர்ஷணம் அதிகம் நிறைந்த அதியற்புத சிலையிது. இந்த பச்சைநிற பாபா சிலையே பாபாவின் மிகப்பெரும் அற்புதமாய் இருக்க, இச்சிலை நிகழ்த்தும் அற்புதங்களும் அநேகம்.

இதுவரை வணங்கிப் பலன் பெற்றவர்கள் பலர். பக்தர் கள் இச்சிலையை மரகத சாயிபாபாவாக வணங்குகின் றனர்.

gg

Advertisment

30-4-2012 அன்று ஷிர்டியிலி−ருந்து இச்சிலை சென்னைக்கு வரவழைக்கப்பட்டது. அன்றைய தினம் பத்திரிகையாளரும், எழுத்தாளரும், "சாயி பிரச்சார் சேவா டிரஸ்ட்' நிர்வாக அறங்காவலருமான எஸ். லட்சுமி நரசிம்மன் தனது குடும்பத்தாருடன் ஷிர்டி சென்றிருந்தார். அங்கே துவாரகாமாயி அருகே ஒரு சிலை விற்பனைக்கடையில், தூசிபடிந்த நிலையில் ஓரமாக கவனிப்பாரற்றிருந்த அந்த பச்சைநிற பாபா சிலை அவர்கள் கண்களில் பட்டது. ஏதோ ஒரு தெய்வீக சக்தி அவர்களை அருகே இழுப்பதுபோல இருந்திருக் கிறது. அருகே சென்று பார்த்தபோது அதன்வசமாகி பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள். அந்த பாபா சிலையின் கண்கள் அப்போது பேசின. ஆனாலும் அவர்களுக்கு அச்சிலையை வாங்கும் எண்ணமோ வாங்குவதற்கான நிதிநிலையோ இல்லை. இருந்தபோதிலும் அந்த கடைக் காரர் எப்படியாவது அச்சிலையை அவர்களிடம் தந்தால் போதும் என்கிற மனநிலையில், நம்பமுடியாத அளவுக்கு மிகவும் குறைந்த விலையில் அவர்களி டம் தந்தார். அப்படி தெய்வாதீனமாக- தானாக வந்து சேர்ந்த சிலை இது.

அதுவரை பாபாவுக்குக் கோவில் கட்ட வேண்டுமென்ற எண்ணம் இல்லாத லட்சுமி நரசிம்மனுக்கு, அச்சிலை வந்துசேர்ந்தபிறகே அப்படி ஒரு எண்ணம் துளிர்விட்டது. ஆனாலும் அதற்கான பணவசதி இல்லாத நிலை. உடனே அவர் பாபாவிடம், "உங்கள் பச்சைநிறச் சிலையை வைத்து 108 இடங்களில் பஜனை, பூஜை செய்கிறேன்.

அதற்குள் கோவில் கட்ட இடம் பார்த்துக் கொள்ளுங்கள்' என்று வேண்டிக்கொண்டு அதன்படியே செய்தார். சுமார் 80 பஜனைகள் நடந்துமுடிந்த நிலையில், சென்னை மாம்பலத்தில் வாடகை இடத்தில் பச்சைநிற பாபா தரிசன மையம் அமைந்ததோடு, சொந்த இடத்தில் கோவில் கட்டுவதற்கான நிலமும் நன்கொடையாகக் கிடைத்தது.

இதற்கிடையில் பச்சைநிற சாயிபாபா செய்த அற்புதங்கள் அநேகம்...

Advertisment

"சாயி பிரச்சார் சேவ டிரஸ்ட்' ஆண்டு தோறும் சென்னை அயோத்தியா மண்டபத் தில் ஏதாவதொரு பாபா சிலையை வைத்து ஹோமம் நடத்துவது வழக்கம். 2012-ஆம் ஆண்டு அப்படி ஒரு ஹோமம் நடந்தபோது, அங்கு தற்கா−கமாக வைப்பதற்கான சிலை கிடைக்கவில்லை. அந்த இக்கட்டான நிலையில்தான் ஷிர்டியி−ருந்து பச்சைநிற சாயிபாபா சிலை கிடைத்தது. அந்த ஆண்டு முதல் அச்சிலைக்கு 1,008 சங்காபிஷேகமும் நடைபெற்றுவருகிறது. அப்போது சுமார் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப் படுகிறது.

இதன் நிறுவனர் லட்சுமி நரசிம்மனுக்கு ஜாதகரீதியாக அப்போது புதன் தசை தொடங்கியிருந்தது. அவரை மதுரை சென்று மீனாட்சியம்மனை தரிசித்து வருமாறும், பச்சைநிறக் கல்பதித்த மோதிரத்தை அணியுமாறும் ஜோதிடர்கள் அறிவுறுத்தினர்.

அந்த நிலையில் இரண்டரை அடி உயர பச்சைக் கற்சிலையாக- மதுரை மீனாட்சியின் அம்சமாகவே பாபா வந்துசேர்ந்தார்.

கோயம்புத்தூரிலுள்ள நாக சாயிபாபாவும், இந்த பச்சைநிற சாயிபாபாவும் அளவில் ஒரேவிதமானவர்கள். கோவை நாகசாயி ராகு- கேது அம்சம் என்பதுபோல, இப்பச்சைநிற பாபா புதன் கிரக அம்சமானவர் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

சாயிபாபாவுக்கு கோவில் கட்டுபவர்கள் முதலி−ல் அறக்கட்டளை தொடங்கி, இடம் பார்த்து, நன்கொடை வசூ−த்து, கோவில் கட்டி, கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து, அதற்கான அழைப்பிதழும் அச்சிட்டு, அதன் பிறகே ஜெய்ப்பூர் சென்று பாபா சிலையை வரவழைப்பது வழக்கம். ஆனால் பச்சைநிற பாபா ஆலயத்தைப் பொருத்தவரை, முதலி−ல் அவர் சிலை வடிவில் வந்து அருள்பா−த்திருக் கிறார். அதன்பிறகே மற்ற வேலைகள் தொடங் கியுள்ளன. தேடிவந்த தெய்வம் இவர்.

அதேபோல சேலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவரும் தானாக முன்வந்து 450 கிலோ எடை யுள்ள துவாரகமாயி வடிவிலான சிலையை நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.

பாபாவுக்கான 108 பஜனைகளின்போது, பிரபல இசைக்கலைஞர் மாண்ட−ன் ஸ்ரீனிவாசனின் நெருங்கிய உறவினர் இல்லத்திலும் பஜனை நடந்தது. அதில் ஸ்ரீனிவாசனும் பங்கேற்று பாபாவுக்கு ஆரத்தி எடுத்தார். அப்போது ஆரத்தி ஜோதி யில் பாபாவின் உருவ தரிசனம் கிடைத்தது. பின்னர் புகைப்படத்திலும் தெரிந்தது.

அன்றிரவு பாபாவின் சிலைக்கு வியர்த்தது மேலும் ஒரு அதிசயம்.

அதேபோல இன்னொரு பஜனையின் போது, பாபாவின் தாடையி−ருந்து திடீரென ஒரு துளி நீர் சொட்டிய அதிசயமும் நிகழ்ந் தது. அதுபோன்ற பஜனைகளின்போது இறுதி நேரத்தில் பாபா சிலையின் எடை கூடிவிடும் அதிசயமும் நடந்துள்ளது.

பக்தர்கள் சிலரின் கனவில் தோன்றி தம்மை வந்து தரிசிக்குமாறு இந்த பாபா அழைத்திருக் கிறார். அப்படி ஒரு பக்தர் கனவில் இவர் ஆயிரம் தலைகளுடன் கூடிய ஸ்ரீ சத்ய நாராயணராகக் காட்சிதந்திருக்கிறார்.

கல்வியில் தேர்ச்சி, திருமணத்தடை நீங்கு தல், கடன்நிவர்த்தி, தேக ஆரோக்கியம், தொழில் முன்னேற் றம், குடும்ப ஒற்றுமை போன்ற பலன்களை இவர் அளித்து வருகிறார்.

கருணையே உரு வான குழந்தை முக வடிவோடு, பிஞ்சு போன்ற கை, கால் விரல்களோடு, கொள்ளை அழகோடு ஆகர்ஷணம் நிறைந்த அதி அற்புதமாக உள்ளது இச்சிலை. தற்போது ஊரப்பாக்கத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவில் பச்சைநிற சாயிபாபாவுக்கான தியான மையக் கட்டட வேலைகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

இவ்வாலய பூமி பூஜையின்போது தற்போ தைய தருமபுர ஆதீனம் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அதிசய பச்சைநிற பாபா பற்றி லட்சுமி நரசிம்மன் கூறும்போது, ""நான் பத்திரிகையாளராக இருந்தபோது சாயிபாபா பக்தனாக இல்லை. சொல்லப்போனால் அப்போது ஒரு பத்திரிகையில் ஷிர்டி பாபா பற்றியும், புட்டபர்த்தி பாபா பற்றியும் எதிர்மறையாக எழுதியிருக்கிறேன். ஆனால் பாபா என்மேல் பெருங்கருணை வைத்து, அவருக்கு ஆலயம் எழுப்புமளவுக்கு ஆசிர் வதித்திருக்கிறார். அதுதான் பாபாவின் அற்புத மகிமை. என் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றி தடுத்தாட்கொண்டுவிட்டார் பாபா.

சுமார் இரண்டு கோடி ரூபாய் செலவிலான இக்கட்டடப் பணிகளில் முக்கால்வாசி முடிந்துவிட்டன. மேற்கொண்டு சுமார் நாற்பது லட்ச ரூபாய் இருந்தால் விரைவில் கும்பாபிஷேகம் செய்துவிடலாம். அதற்கான நன்கொடையாளர்களை சாயிபாபாவே அனுப்பிவைப்பார் என்று நம்புகிறோம்'' என்கிறார்.

பக்தர்கள் தரும் நன்கொடைகளுக்கு 80 ஜி வருமான வரி விலக்கும் உண்டு.

இந்த தியான மையத் தில் பிள்ளையார், முருகர், ஆஞ்சனேயர், மீனாட்சி, மகாமேரு மற்றும் காஞ்சி மகாபெரியவரின் புனித பாதுகைகளும் இடம் பெறவுள்ளன.

அதிசய பச்சைநிற சாயிபாபா சிலை தற்போது சென்னை மாம்பலம் மையத்தில் பக்தர்களின் தரிசனத் திற்காக வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப் பட்டு வருகின்றன. கும்பா பிஷேகத்தின்போது இச்சிலை ஊரப்பாக்கம் மையத்தில் பிரதிஷ்டை செய்யப்படும்.

இந்த தியான மையம் ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தி−ருந்து ஆதனூர் செல்லும் நெடுஞ் சாலையில் வர்த்தமான் நகரில் உள்ளது.

பச்சைநிற சாயிபாபாவை தரிசிக்க தொடர்புகொள்ளவேண்டிய தொலைபேசி: 98403 25245.

தற்கா−க தரிசன மைய முகவரி:

சாயி பிரச்சார் சேவா டிரஸ்ட்,

8, பாபு ராஜேந்திர பிரசாத் இரண்டாம் தெரு,

மேற்கு மாம்பலம், சென்னை- 33.

கட்டப்பட்டு வரும் ஆலய முகவரி:

பச்சைநிற சாயிபாபா தியான மையம்,

பிளாட் எண்: 40, ஸ்ரீ வர்த்தமான் நகர் மெயின் ரோடு,

ஊரப்பாக்கம் மேற்கு, செங்கல்பட்டு மாவட்டம்.