Advertisment

அண்ணாமலை எனும் அற்புதம்! - அயன்புரம் த. சத்தியநாராயணன்

/idhalgal/om/wonder-annamalai-ayanpuram-t-sathyanarayana

திருவாரூரில் பிறந்தால் முக்தி; சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி; காசியில் இறந்தால் முக்தி என்பது போல், திருவண்ணாமலையை நினைத் தாலே முக்தி கிடைத்துவிடும் என்பது தாத்பரியமான உண்மை!

பார்வதிதேவிக்கு ஈசன் இடபாகம் அருளியதோடு, பிரம்மனுக்கும் திருமாலுக் கும் "தான்' என்ற அகந்தையைப் போக்கும் வண்ணம் சிவபெருமான ஜோதிப்பிழம்பாகக் காட்சியளித்த பெருமைமிகு திருத்தலம் திருவண்ணாமலை.

நவகோபுரங்கள் சூழ்ந்த அண்ணாமலை யார் திருக்கோவில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கும் மேற்பட்ட தொன்மையும் பெருமையும் வாய்ந்த இத்திருக்கலம் சோழர்கள் காலம்முதல் சம்புவராய மன்னர்கள் காலம்வரை படிப்படியாக உருவாக்கப்பட்டது. இதில் வடக்கு கோபுரம் மட்டும் "அம்மணி அம்மாள்' எனும் பெண் சிவனடியாரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கிழக்கு கோபுரம் எனும் ராஜகோபுர

திருவாரூரில் பிறந்தால் முக்தி; சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி; காசியில் இறந்தால் முக்தி என்பது போல், திருவண்ணாமலையை நினைத் தாலே முக்தி கிடைத்துவிடும் என்பது தாத்பரியமான உண்மை!

பார்வதிதேவிக்கு ஈசன் இடபாகம் அருளியதோடு, பிரம்மனுக்கும் திருமாலுக் கும் "தான்' என்ற அகந்தையைப் போக்கும் வண்ணம் சிவபெருமான ஜோதிப்பிழம்பாகக் காட்சியளித்த பெருமைமிகு திருத்தலம் திருவண்ணாமலை.

நவகோபுரங்கள் சூழ்ந்த அண்ணாமலை யார் திருக்கோவில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டு களுக்கும் மேற்பட்ட தொன்மையும் பெருமையும் வாய்ந்த இத்திருக்கலம் சோழர்கள் காலம்முதல் சம்புவராய மன்னர்கள் காலம்வரை படிப்படியாக உருவாக்கப்பட்டது. இதில் வடக்கு கோபுரம் மட்டும் "அம்மணி அம்மாள்' எனும் பெண் சிவனடியாரால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கிழக்கு கோபுரம் எனும் ராஜகோபுரம் தமிழகத்தின் இரண்டாவது மிக உயர்ந்த கோபுரமாகும். கிருஷ்ண தேவராய மன்னரால் 1513-ல் கட்டத் தொடங்கி, அவர் மறைவுக்குப்பின் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னரால் 1590-ல் முடிக்கப்பட்டதாம். இதன் உயரம் 217 அடியாகும். மேற்கு கோபுரம் 144 அடி உயரமும், அம்மணி அம்மாள் கோபுரம் என்று சொல்லப்படும் வடக்கு கோபுரம் 171 அடி உயரமும், திருமஞ்சனகோபுரம் என்று சொல்லப்படும் தெற்கு கோபுரம் 157 அடி உயரமும் கொண்டு விளங்கு கின்றன.

எண்கோண அமைப்பில் காட்சிதரும் திருவண்ணாமலையைச் சுற்றிலும் இந்திரலிங் கம், அக்னிலிங்கம், எமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசான்யலிங்கம் என்று அஷ்டலிங்கங்கள் அமையப்பெற்றுள்ளன.

"முத்தைத் தரு பத்தித் திருநகை' என்று அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அடியெடுத்துக் கொடுத்த இடம் கிளிக் கோபுரமாகும். போசாள மன்னன் மூன்றாம் வீர வல்லாளனால் 1340-ஆம் ஆண்டு இந்த கோபுரம் நிர்மாணிக்கப்பட்டதாம். மேலும் 70 அடி உயரம்கொண்ட மூன்று கட்டை கோபுரங்களும் உள்ளன. திருக்கோவில் ஐந்து உட்பிராகாரங்களைக் கொண்டதாகும். தேரோடும் மாடவீதி ஆறாம் பிராகாரமாகவும், கிரிவலம் செல்லும் பாதை ஏழாம் பிராகாரமாகவும் உள்ளன.

Advertisment

ss

கார்த்திகைத் திங்களில் பௌர்ணமியும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்த நன்னாளில், மாலையில் அண்ணாமலையார் உமையொரு பாகனாய், அர்த்தநாரீஸ்வரராய் எழுந்தருளி காட்சியளிப்பது, 2668 அடி உயர மலையுச்சியில் ஜோதி வடிவாக அண்ணாமலையார் காட்சிதருகிற தீபத் திருவிழா இந்த பிரம்மாண்ட ஆலயத்தின் பிரம்மிப்பூட்டும் பெருவிழாவாகும்.

Advertisment

274 சிவாலயங்கள் தேவாரப் பாடல்பெற்ற திருத்தலங்கள் என்று போற்றப்படுகின்றன. இவற்றுள் ஒன்றாக அக்னித்தலம் என்று போற்றப்படும் திருவண்ணாமலை திகழ்கிறது. சமயக் குரவர்கள் நால்வராலும் போற்றிப் பாடப்பெற்ற தனிச்சிறப்பு இந்த ஆலயத்திற்குண்டு.

இமயமலை ஈசனின் மேனி என்றால் அண்ணாமலை ஈசனின் இதயமென்று கூறலாம்.

அழகிய பௌர்ணமி இரவில் ஆயிரமாயிரம் பக்தர்கள் மலையைச் சுற்றி பக்திப் பெருக்குடன் "ஓம் நமசிவாய' கோஷ மிட்டு கிரிவலம் வருகிற நிகழ்வு இந்த ஆலயத்திற்கேயுரிய உயரிய சிறப்பாகும்.

கிரிவலத்தின்போது ஒவ்வொரு, திக்கிலும் கைகூப்பி தியானித்து, கால் பதிக்கும் சத்தம் கேட்காத வண்ணம் மெதுவாக நடக்கவேண்டும்.

பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் நடந்து வரவேண்டுமென்று அருணாசல புராணத்தில் ஒரு நெறிமுறை சொல்லப்பட்டி ருக்கிறது.

அண்ணாமலையின் கிழக்கு கோபுரத்தில் முன், பசு நெய்யிட்டு தாமரைத் தண்டுத் திரியினால் அகல்விளக்கு ஏற்றி, அதை உயரப் பிடித்து தீபத்துடன் அண்ணாமலையாரை தரிசித்து கிரிவலம் தொடங்கி, பிறகு பூத நாராயணரை தரிசித்துவிட்டு கிரிவலத்தை நிறைவுசெய்வது ஐதீகம். இது கூட்டநெரிசல், சூழ்நிலையின் காரணமாகத் தற்போது தவிர்க்கப்படுகிறது.

எந்தெந்த கிழமைகளில் பௌர்ணமி நாளில் கிரிவலம் செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்குமென்று பார்க்க லாம்.

ஞாயிற்றுக்கிழமை- நோய்நொடி நீங்கும்.

திங்கட்கிழமை- பாவங்கள் அகன்று புண்ணியங்கள் சேரும்.

செவ்வாய்க்கிழமை- கடன் பிரச்சினை, வறுமைகள் தீரும்.

புதன்கிழமை- மோட்சகதி கிடைக்கும்.

வியாழக்கிழமை- குருவருள் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை- குழந்தைப்பேறு கிட்டும்.

சனிக்கிழமை- நவகிரக தோஷம் நீங்கும்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை யிலுள்ள ஆதி அண்ணாமலையில்தான் மாணிக்கவாசகர் எழுந்தருளி திருவெம்பா வைப் பதிகங்களைப் பாடினார் என்பது வரலாறு.

எனவே கார்த்திகை தீபத்திருநாளில் மட்டு மின்றி, அனுதினமும் அண்ணாமலையாரை நினைத்து வணங்கி அவர் அருள்பெறுவோம்; ஆனந்தமாய் வாழ்வோம்!

om011224
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe