Advertisment

குடும்பத்தின்மீது தேங்காய் வைப்பதேன்?

/idhalgal/om/why-put-coconuts-family

ன்மிகப் பெரியவர்கள் இதற்கு சொன்ன விளக்கத்தைப் பார்ப்போம்.

மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர்.

நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற் காக கலசம் வைத்து பூஜைசெய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம்.

Advertisment

ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல்சுற்றி, அதில் நீர்நிரப்பி ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப் போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்துப் பூஜிக்கிறோம்.

ன்மிகப் பெரியவர்கள் இதற்கு சொன்ன விளக்கத்தைப் பார்ப்போம்.

மனிதன் உயிர்வாழத் தேவையானது தண்ணீர்.

நீரின்றி அமையாது உலகு என்கிறார் வள்ளுவர். அந்த நீரில் இறைவனை ஆவாஹனம் செய்வதற் காக கலசம் வைத்து பூஜைசெய்கிறோம். கலசம் மூலமாக இறைவனை உருவகப்படுத்துகிறோம்.

Advertisment

ஒரு சொம்பு அல்லது குடத்திற்கு நூல்சுற்றி, அதில் நீர்நிரப்பி ஏலக்காய், லவங்கம், பச்சைக் கற்பூரம் முதலிய வாசனைத் திரவியங்களைப் போட்டு, மேலே மாவிலை வைத்து தேங்காய் வைத்துப் பூஜிக்கிறோம்.

ff

கலசம் வைக்க பித்தளை அல்லது தாமிரச் சொம்பினைப் பயன்படுத்துகிறோம். காரணம், இந்த உலோகங்கள் எளிதில் ஈர்க்கும் சக்தி கொண்டவை. இயற்பியலில் "கடத்திகள்' என்பர்.

ஆங்கிலத்தில் Conductors என்பார்கள். வெளியே உச்சரிக்கப்படும் மந்திரங்களை உள்ளே ஈர்த்துக்கொடுக்கும் திறன் படைத்தவை. இறைவனின் உடலாக இந்தப் கலசங்களையும், அதன் மேல் சுற்றப்படும் நூலினை நாடி, நரம்புகளாக வும் பொருள் காணலாம்.

ஏலக்காய்த்தூள் முதலான வாசனைப் பொடிகள் ஆதார சக்தியாகக் கருதப்படுகின்றன. அறிவியல்ரீதியாக குரோமோசோம், ஜீன்கள், டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. என்று சொல்கிறோமே- அதுபோல.

கலசம் அல்லது குடத்தின்மேல் மாவிலை யைச் செருகி அதன்மேல் தலைப்பகுதியாக தேங்காயை வைக்கிறோம். மற்ற இலைகள் மரத்திலிருந்து பறித்தவுடன் காய்ந்துவிடும். ஆனால் மாவிலை குறைந்த பட்சம் நான்கு நாட்களுக்காவது அப்படியே இருக்கும். மேலும் மாமரம் என்பது, அஞ்ஞானத்தைப் போக்கி மெய்ஞ்ஞானத்தைத் தரவல்லது.

மற்ற காய்களுக்கு இல்லாத சிறப்பு தேங்காய்க்கு மட்டும் ஏனென்றால், தேங்காய்க்கு மட்டுமே மூன்று கண்கள் அமைந்துள்ளன. இறைவ னின் திருநாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்யும்போது, "சோம சூர்ய அக்னி லோசனாய நம:' என்று உச்சரிப்பார்கள்.

லோசனம் என்றால் கண்கள். அதாவது வலக் கண் சூரியன், இடக்கண் சந்திரன், மூன்றாவதாக அக்னி என்று அழைக்கப்படும் நெற்றிக்கண். இந்த மூன்றாவது கண்ணைத் திறக்கும் வல்லமை படைத்தவன் இறைவன் மட்டுமே. இந்த மூன்று கண்களும் இறைவனுக்கு அமைந்தி ருப்பதால், அத்தகைய மூன்று கண்களையுடைய தேங்கா யைத் தலைப்பகுதியாக உருவகப்படுத்தி கலசத்திற்கு வைக்கிறோம். நார்ப்பகுதியை தலைமுடியாகக் கருதுகிறோம்.

கலசம் வைக்க சொம்பு கிடைக்கவில்லை என்றால் கூட வெறும் தேங்காயை மட்டும் வைத்தே இறைவனை ஆவாஹனம் செய்ய இயலும். ஏனெனில் இயற்கையாகவே தேங்காய்க்குள் ஆதார சக்தியான நீர் இருக்கிறது. அதுவும் சுவை மிகுந்ததாக இருக்கிறது.

கலசத்தில் இறைவனை உருவகப்படுத்தும்போது இறைவனின் தலைப்பகுதியாக இருப்பதற்கு தேங்காய் தான் பொருத்தமானது என்பதை நம் முன்னோர்கள் வைத்திருப்பதற்கான காரணமும் இதுவே.

-கவிதா பாலாஜி கணேஷ்

om010422
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe