ஆன்மிக வட்டா ரத்தில் இன் றைக்கு அதிகம் பேசப்படுவது "தமிழ் அர்ச்சனை' என்பது!
இதை சரியென்றும், தவறென்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டம் 1974-ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இறைவனை வழிபடவும், துதிக்கவும் மொழியென்பது ஒரு தடையே அல்ல. அது சமஸ்கிருதமாக இருப்பினும், தமிழாக இருப்பினும் இறைவன் ஏற்றுக்கொள்வார். ஆத்மார்த்தமான பக்தி உணர்வே முக்கியம்!
இந்த வீண் சச்சரவு காலங்காலமாக இருந்துவருகிறது. சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பும் இந்த சச்சரவு வந்துள்ளது. அதைத் தமது வாதத் திறமையால் தீர்த்துவைத்தவர் வேதாந்த தேசிகர் சுவாமிகள். இம்மகான் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் விசிஷ்டாத் வைதத்தையும், ஸ்ரீ வைஷ்ணவ நெறியையும் காக்க தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட அரிய வேதாந்த நூல்களையும், ஸ்தோத்திரங் களையும் இயற்றியுள்ளார்.
இவருடைய காலத்தில் வேத மந்திரங்கள் தான் முதன்மையாக இருந்தன. காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளின் உற்சவத்தின் போது ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாட சிலர் எதிர்ப்பு தெரிவித்த சமயத்தில், அவர்களிடம் வாதத் திறமையால் போராடி திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். இறைவனைத் துதிக்க சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழ் மொழியும் சிறந்த மொழியே என மெய்ப்பித் தார். இரண்டு மொழிகளும் பழமையான மொழிகளே; இதில் எந்தவிதமான பேதமும் கிடையாது என வாதிட்டு வென்றார். வடமொழியான சமஸ்கிருதமும், நம் தமிழ் மொழியும்- மொழிச் செழுமையும், தொன்மையும், இலக்கியத்தையும் கொண்டவை. இவ்விரண்டும் உயர்தனிச் செம்மொழிகள் மட்டுமின்றி, இறைவனால் படைக்கப்பட்ட மொழிகளே! கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் போன்ற
ஆன்மிக வட்டா ரத்தில் இன் றைக்கு அதிகம் பேசப்படுவது "தமிழ் அர்ச்சனை' என்பது!
இதை சரியென்றும், தவறென்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் மொழியில் அர்ச்சனை செய்யும் திட்டம் 1974-ஆம் ஆண்டு தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. இறைவனை வழிபடவும், துதிக்கவும் மொழியென்பது ஒரு தடையே அல்ல. அது சமஸ்கிருதமாக இருப்பினும், தமிழாக இருப்பினும் இறைவன் ஏற்றுக்கொள்வார். ஆத்மார்த்தமான பக்தி உணர்வே முக்கியம்!
இந்த வீண் சச்சரவு காலங்காலமாக இருந்துவருகிறது. சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பும் இந்த சச்சரவு வந்துள்ளது. அதைத் தமது வாதத் திறமையால் தீர்த்துவைத்தவர் வேதாந்த தேசிகர் சுவாமிகள். இம்மகான் வைஷ்ணவ சம்பிரதாயத்தில் விசிஷ்டாத் வைதத்தையும், ஸ்ரீ வைஷ்ணவ நெறியையும் காக்க தமிழ், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட அரிய வேதாந்த நூல்களையும், ஸ்தோத்திரங் களையும் இயற்றியுள்ளார்.
இவருடைய காலத்தில் வேத மந்திரங்கள் தான் முதன்மையாக இருந்தன. காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாளின் உற்சவத்தின் போது ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தைப் பாட சிலர் எதிர்ப்பு தெரிவித்த சமயத்தில், அவர்களிடம் வாதத் திறமையால் போராடி திவ்யப் பிரபந்தத்தைப் பாடும் வழக்கத்தைக் கொண்டுவந்தார். இறைவனைத் துதிக்க சமஸ்கிருத மொழிக்கு இணையாக தமிழ் மொழியும் சிறந்த மொழியே என மெய்ப்பித் தார். இரண்டு மொழிகளும் பழமையான மொழிகளே; இதில் எந்தவிதமான பேதமும் கிடையாது என வாதிட்டு வென்றார். வடமொழியான சமஸ்கிருதமும், நம் தமிழ் மொழியும்- மொழிச் செழுமையும், தொன்மையும், இலக்கியத்தையும் கொண்டவை. இவ்விரண்டும் உயர்தனிச் செம்மொழிகள் மட்டுமின்றி, இறைவனால் படைக்கப்பட்ட மொழிகளே! கிரேக்கம், இலத்தீன், எபிரேயம் போன்ற மொழிகளும் செம்மொழிகள்தான் என அறிஞர்கள் கூறுவர்.
வேத மந்திரங்களுக்கு இணையாக நாலாயிர திவ்யப்பிரபந்தங்கள் விளங்குவ தால், அதை "உபய வேதாந்தம்' என்றே வேதாந்த தேசிகர் அழைத்தார். எனவேதான் வேத மந்திரங்களுக்கு இணையாக பிரபந்தங்களைப் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார். அவை இன்றளவும் தொடர்கிறது. "தமிழ்மொழியின் வரலாறு' நூலை எழுதிய பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாஸ்திரி) தமிழ்மொழியை ஒரு தனிமொழி, உயர்தனிச் செம்மொழி போன்ற தொடர்களால் சிறப்பித்தார். அவருக்கு முன்னோடியாக சுமார் 750 ஆண்டுகளுக்கு முன்பு வேதாந்த தேசிகர் திகழ்ந்தார்.
வைணவ நெறியை நிலைநாட்டவும், மக்களை நல்வழிப்படுத்தவும் கி.பி. 1268-ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தையடுத்த தூப்புல் என்னும் கிராமத்தில் (தூப்புல் என்றால் தர்ப்பைப்புல் விளையுமிடம் என்று பொருள்) புரட்டாசி மாத திருவோண நட்சத்திர நன்னாளில், திருப்பதி திருவேங்கடமுடையானின் கண்டாமணியின் (ஆலயமணி) அம்சமாக அனந்தசூரி- தோதாரம்பாள் தம்பதிகளுக்கு மகனாக வேங்கடநாதன் எனும் பெயரில் அவதரித்தார்.
இத்தம்பதியினருக்கு நீண்டநாட்களாக குழந்தைப்பேறு இல்லாமலிருந்தது. அந்தக் குறைநீங்க திருப்பதி வேங்கடமுடையானைப் பிராத்தனை செய்ய 1256-ஆம் ஆண்டு திருப்பதிக்கு (திருமலை) சென்றார்கள். ஏழுமலையான் தரிசனத்திற்கு முதல் நாள் இரவு, தோதாரம்பாள் கனவில் ஏழுமலையான் சிறு குழந்தை வடிவில் தோன்றி, கோவில் கருவறையில் உபயோகப்படுத்தப்படும் மணியைக் கொடுப்பதாகவும், அதை வாயில் போட்டுக்கொண்டால் குழந்தை பிறக்கும் எனவும் கூறினார். மறுநாள் காலை தான்கண்ட கனவை கணவரிடம் தோதாரம்பாள் தெரிவித்தார். அவ்வாறே ஏழுமலையானின் ஆலயமணியை விழுங்கிய 12 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்தது. 12 ஆண்டுகள் தாயின் வயிற்றில் கர்ப்பவாசம் செய்து, பிறகு குழந்தை பிறந்தது. பராசர முனிவர் இதேபோன்று 12 ஆண்டுகள் அவரது தாயின் வயிற்றில் கர்ப்ப வாசம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
12 வருடங்கள் தாயாரின் கர்ப்பத்தில் இருந்து இறைவனைப் பற்றிய நல்ல கருத்துக்களைக் கேட்டதால், பிறந்து வளர்ந்தபிறகு வேதாந்த தேசிகர் ஒரு ஞானியாகத் திகழ்ந்தார். ஸ்ரீ இராமனுஜரின் 72 சிம்மாசன பீடாதிபதிகளில் கிடாம்பி வம்சமும் ஒன்று. கிடாம்பி ஆச்சான் என்பவர் ஆலய மடப்பள்ளியில் வேலை செய்து, பகவானுக்கு கைங்கரியம் செய்து வந்தார். இவருடைய வம்சத்தில் வந்தவர்தான் கிடாம்பி அப்புள்ளார். இந்த அப்புள்ளார் வேதாந்த தேசிகரின் தாய்மாமா உறவு. இவர் மூலம் சகல வேதங்களையும் சாஸ்திரங்களை யும் முறையாகக் கற்றார்.
பஞ்ச சமஸ்காரத்தை தாய்மாமனே ஆச்சாரியனாக இருந்து செய்து வைத்தார். இருபது வயதுக்குள் வேத, சாஸ்திரங்களைக் கசடறக் கற்றுத் தேர்ந்தார். தமிழ்மொழியிலும், சமஸ்கிருத மொழியிலும் அபார புலமை மட்டுமின்றி, அபார நினைவாற்றலையும் இயற்கையாகவே பெற்றிருந்தார்.
வேதாந்த தேசிகருக்கு குடும்பத்தினர் திருமங்கை என்னும் பெண்ணைத் திருமணம் செய்துவைத்தனர். ஆனால் அவருக்கு இல்லறத் தில் நாட்டமின்றி வைணவ நெறியில் ஈடுபாடு கொண்டிருந்தார். அப்புள்ளார் உபதேசித்த கருட மந்திரத்தை, திருவஹீந்திர புரம் கோவிலுக்கு அருகேயுள்ள ஔஷதாத்ரி மலையில் தனிமையில் அமர்ந்து ஜபித்தார். இவரது ஆழ்ந்த ஜபத்தின் பயனாக, கருட பகவான் வேதாந்த தேசிகர்முன்பு தோன்றி ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை உபதேசித்து அருளாசி புரிந்தார்.
பெரிய திருவடியான கருடாழ்வார் உபதேசித்த ஸ்ரீ ஹயக்ரீவ மந்திரத்தை வேதாந்த தேசிகர் ஜபிக்க ஆரம்பித்தார். இதன் பலனாக ஒருநாள் வெள்ளை நிற குதிரை முகம்கொண்ட ஸ்ரீ ஹயக்ரீவப் பெருமாளே காட்சியளித்தார். கலைகளுக்கு அரசியான சரஸ்வதியின் குருநாதரான ஸ்ரீ ஹயக்ரீவரின் பரிபூரண ஆசி வேதாந்த தேசிகருக்குக் கிடைத்ததால் சகல கலைகளும், வித்யைகளும் இவரைத் தேடிவந்தன. இன்னும் சொல்லப்போனால் இவரது நாக்கில் ஹயக்ரீவர் குடிகொண்டார்! பெருமாளைப் போற்றி-
"ஜ்ஞாநாநந்தமயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ருதிம்
ஆதாராம் சர்வ வித்யாநாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே'
எனத் தொடங்கும் ஹயக்ரீவ ஸ்தோத்தி ரத்தை வேதாந்த தேசிகர் இயற்றினார்.
வேதாந்த தேசிகர் 24 பிரபந்தங்களை "தேசிகப் பிரபந்தம்' எனும் பெயரில் பாடியருளினார்.
இவர் பாடிய "ஆஹார நியமம்' எனும் தொகுப்பு 21 பாசுரங்களைக் கொண்டது. சாஸ்திரங்களில் வலியுறுத்தப்பட்ட வகையிலும், முன்னோர்களால் வகுக்கப்பட்ட நியதிகளையும் அடிப்படையாக்கொண்டு, உணவு வகைகளை எப்படி உட்கொள்ள வேண்டு மென அற்புதமாகப் பாடியுள்ளார்.
திருப்புட்குழியில் வசித்தவர்களுக்கு காய்ச்சல் நோய் வந்தபோது, அது நீங்குவதற் காக "ஷோடசாயுத ஸ்தோத்திரத்'தை இயற்றினார்.
இன்றைய கொரோனா தொற்றுக் காலகட்டத்தில் இவ்விரண்டு ஸ்தோத்திரங்கள் நம்மைப் பாதுகாக்க மிகவும் உபயோகமாக இருக்கும்.
திருவரங்களின் பாதுகையைப் பற்றி 1000 சுலோகங்கள் கொண்ட "ஸ்ரீ பாதுகா சஹஸ்ரம்' எனும் ஸ்தோத்திரத்தை எழுதினார். இதை ஒரே இரவில் எழுதிமுடித்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
திருப்பதி திருவேங்கடமுடையானை தரிசனம் செய்து, பெருமாள்மீது பத்து ஸ்லோ கங்கள் கொண்ட தயாசதகத்தைப் பாடினார்.
இப்படியாக பல வைணவ தலங்களுக்குச் சென்று ஆங்காங்கு பல அற்புதங்களை நிகழ்த்தி னார். பாம்பாட்டியின் தந்திரமான செயலை அடக்க "கருட தண்டகம்' பாடினார். ஸ்ரீரங்கம் போகும் வழியில் ஸ்ரீ முஷ்ணம் புண்ணிய தலத் தில், ஒரு வைசியர் வீட்டில் தங்கிய சமயத்தில் ஹயக்ரீவருக்கு பாலமுதை அளித்தார்.
ஸ்ரீ வேதாந்த தேசிகரின் சமகால நண்பராக இருந்தவர் ஸ்ரீ வித்யாரண்யர். சிறந்த அத்வைத சித்தாந்தியும், ஸ்ரீ ஆதிசங்கரரின் வழித்தோன்றலுமான ஸ்ரீ வித்யாரண்யர், வேதாந்த தேசிகரின் வறுமை நிலையை அறிந்து, விஜயநகர மன்னர் மூலம் உதவிசெய்ய முன்வந்தபோது அதை நிராக ரித்து, தன்னுடைய பெருமாள் பக்தியையும், வைராக்கியத்தையும் "வைராக்கிய பஞ்சகம்' எனும் ஸ்தோத்திரம்மூலம் வெளிப்படுத்தினார்.
"ஸ்ரீஸ்துதி' எனும் ஸ்தோத்திரத்தைப் பாடி ஒரு பிரம்மச்சாரியின் வறுமையை நீக்கியவர். தாயார் அருளால் தங்க நாணயங்கள் கிடைத்த போது, அதில் ஒன்றைக்கூட தான் எடுக்காமல் அந்த பிரம்மச்சாரி இளைஞனை எடுத்துக் கொள்ளுமாறு கூறிய பெருந்தகை.
இவருடைய கவித்திறமையை அங்கீகரிக் கும் வண்ணம் ஸ்ரீரங்கநாதரே இவருக்கு "வேதாந்தாசார்ய' என்னும் பட்டத்தை அளித்த தாகவும், அதேபோல் ஸ்ரீரங்கநாயகித் தாயார் "சர்வதந்ரஸ்வதந்திரர்' என்னும் பட்டத்தை அளித்ததாகவும் கூறுவர். வேதாந்தாசார்ய பட்டம் கிடைத்தபின்பு இவர் வேதாந்த தேசிகர் என அழைக்கப்பட்டார்.
தாயார் அளித்த பட்டத்திற்கு "சர்வகலா வல்லவர்' என்று பொருள். இதை மெய்ப்பிக்கும் வண்ணம் ஒரு கொத்தனார் அரைகுறையாகக் கொடுத்த செங்கல்லைக்கொண்டு அழகான கிணற்று மதில்சுவரைக் கட்டினார். அந்த கிண றும், அவர் கட்டிய மதில்சுவரும் இன்றும் திருவந்திபுரத்தில் உள்ளன. அதேபோன்று தனது சிலையைத் தானே வடித்துக்கொடுத்த சம்பவத்தையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
மொகலாய மாலிக் காஃபூரின் படைகள் ஸ்ரீ ரங்கத்தைக் கொள்ளையடிக்க வந்த சமயத் தில், அதைத் தந்திரமாகத் தடுத்து கோவில் விக்ரகங்கள், தங்க ஆபரணங்களைப் பாதுகாத் தார். தன் உயிரையும் மதிக்காமல், மிக சாமர்த்திய மாக வேதாந்த தேசிகர் செய்த பணியானது போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.
இறைவனை வழிபட மொழிபேதம் அவசியமில்லை.