சாஸ்திர சம்பிரதாயங் களில் தேர்ச்சிபெற்ற காசி மாநகரத்து பண்டிதர் ஒருவர் தன் முன்னோர்களுக்கு திவசம் கொடுக்க ஏற்பாடு செய்தார்.
தான் வளர்த்த வெள்ளாடு ஒன்றினை ஆற்றில் குளிப்பாட்டி, மாலை அணிவித்து, மஞ்சள்நீர் தெளித்து அழைத்துவரும்படி சீடர்களிடம் சொன்னார். அவர்களும் அப்படியே ஆட்டை அலங்கரித்துக்கொண்டு வந்தனர்.
முன்னோர்களை நினைத்து ஆட்டை பலியிட நேரம் வந்தபோது... ஆடு சிரித்தது; சிறிது நேரம் சிரித்துவிட்டு, பின் அழுதது!
"ஆடே! நீ பேசுவியா? ஏன் சிரித்தாய்?'' எனக் கேட்டார் பண்டிதர்.
"

"சற்றுமுன்தான் நான் என் முந்தைய பிறவியைப் பற்றி அறிந்தேன். அதனால் சிரித்தேன். இன்றுடன் என் பூலோக வாழ்க்கையிலிருந்து விடுதலை ஆகிறேன். இதை நினைத்தே அழுதேன்'' என்றது ஆடு. "உன்னோட முற்பிறவி கதை என்ன?''
"நான் முற்பிறவிகளில் ஒன்றில் மனிதனாக இருந்தபோது... என் முன்னோர்களுக்காக ஒரு வெள்ளாட்டை பலியிட்டேன்.
அந்த பாவத்திற்காக 500 முறை ஆடாகப் பிறந்து கொல்லப்பட்டேன். இது என் கடைசி பிறவி. இன்றுடன் என் பாவங்கள் நீங்கிவிடும் என்றது.''
"ஏன் அழுதாய்?''
"என்னைக் கொல்லப்போகும் நீங்களும் 500 முறை ஆடாக பிறக்கப்போவதை எண்ணி அழுதேன்!'' ஆடு இப்படிச் சொன்னதும், பண்டிதர் "கொல்லாமை'யை உணர்ந்தார்.
"பண்டிதனாக இருந்தும் காருண்யம் பற்றிய தெளிவின்றி இருந்தேன். இப்போது உயிர்களின் அருமையை உணர்ந்தேன்.''
"பரவாயில்லை. என் 500-ஆவது பிறவி இன்றுடன் முடிகிறது. உங்களிடமிருந்து தப்பினாலும் இன்று என் மரணம் நடந்தே தீரும். ஏன்னா... விதி வலியது.''
ஆடு சொன்னதும்... தன் சிஷ்யர்களை அழைத்த பண்டிதர், "இன்று முழுக்க இந்த ஆட்டின் பின்னால் செல்லுங்கள். அதை எப்படியாவது காப்பாற்றுங்கள்'' எனச் சொல்லிவிட்டு, ஆட்டையும் விடுவித்தார்.
ஆடு அருகே இருந்த ஒரு மலையின்மீது ஏறியது. உச்சியில்... ஒரு மரம் கொளுந்து இலைகளுடன் இருந்தது. அந்த கொளுந்து இலைகளை ஆடு தின்ன முயன்றபோது... பெரும் இடி இடித்து பச்சை மரத்தில் ஊடுருவ... ஆடு தலைவெடித்துச் சிதறி மாண்டது.
அங்கே போதி சத்துவராகிய புத்தர் தோன்றி உபதேசம் செய்தார்.
"கொலை செய்பவன் அந்த பாவத்திலிருந்து தப்பவே முடியாது. பிறப்பிற்கு காரணமானதே... இறப்பிற்கும் காரணமாக இருக்கிறது. பிற உயிர்களை தன் சுயநலத்திற்காக துன்புறுத்துபவனுக்கு மறுபிறவி இன்பமே கிடைப்பதில்லை!'' இவ்வாறு மக்களுக்கும், பண்டிதரின் சீடர்களுக்கும் சொன்னார் புத்தர்.
1964-ல் வந்த, கே. சங்கர் இயக்கத்தில் சிவாஜிக்காக டி.எம்.எஸ். குரலில் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசைத்த, "ஆண்டவன் கட்டளை' படத்திற்காக கண்ணதாசன் எழுதிய "ஆறுமனமே ஆறு' பாடலில் வரும் வரிகள் இதோ...
"ஆசை, கோபம், களவு கொள்பவன் பேசத் தெரிந்த மிருகம்
அன்பு, நன்றி, கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்'
முழுக்க முடியாவிட்டாலும் முடிந்த அளவு பிற உயிர்களின்மீது கருணை காட்டுவோம்; அன்பு செலுத்துவோம்!