Advertisment

இன்பம் எங்கே ! - R.D.வேல்

/idhalgal/om/where-pleasure-rd-vale

விவசாயி ஒருவர்... மிக வசதியாகத்தான் வாழ்ந்துவந்தார். ஆனாலும் மனதில் ஒரு சலிப்பு இருந்து கொண்டே இருந்தது. "என்னடா வாழ்க்கை?' என எரிச்சலான எரிச்சலுடன் வாழ்ந்துவந்தான். மகிழ்ச்சி யாக இருப்பவனும் அந்த விவசாயியிடம் பேசினால் அவனும் விரக்தியான மன நிலைக்கு மாறிவிடுவான்.

"என் வாழ்க்கைல இன்பமே இல்ல. துன்பம்தான் இருக்கு' என புலம்பிவந்த அந்த விவசாயிக்கு ஒரு சேதி கிடைத்தது.

"இந்த ஊருக்கு புத்தபிரான் வரவிருக்கிறார்' என்று தகவல் வந்ததும்... "அந்த மகானைச் சந்தித்து தனக்கு வ

விவசாயி ஒருவர்... மிக வசதியாகத்தான் வாழ்ந்துவந்தார். ஆனாலும் மனதில் ஒரு சலிப்பு இருந்து கொண்டே இருந்தது. "என்னடா வாழ்க்கை?' என எரிச்சலான எரிச்சலுடன் வாழ்ந்துவந்தான். மகிழ்ச்சி யாக இருப்பவனும் அந்த விவசாயியிடம் பேசினால் அவனும் விரக்தியான மன நிலைக்கு மாறிவிடுவான்.

"என் வாழ்க்கைல இன்பமே இல்ல. துன்பம்தான் இருக்கு' என புலம்பிவந்த அந்த விவசாயிக்கு ஒரு சேதி கிடைத்தது.

"இந்த ஊருக்கு புத்தபிரான் வரவிருக்கிறார்' என்று தகவல் வந்ததும்... "அந்த மகானைச் சந்தித்து தனக்கு வாழ்க்கையில் நிம்மதியும் மகிழ்ச்சியும் இன்பமும் இல்லாத நிலையைச் சொல்-... தீர்வு கேட்கவேண்டும் என எண்ணிக்கொண்டான்.

Advertisment

ss

குறிப்பிட்ட நாளில் புத்தமகான் அவ்வூருக்கு வந்தார். அவரிடம் தன் மனநிலையைச் சொன்ன விவசாயி "ஏன் என்னோட மனம் இப்படி வறட்சியாக இருக்கிறது?' எனக் கேட்டான்.

புத்தர் அவனைக் கருணையுடன் கூர்ந்து கவனித்தபடி... "உன்னோட இந்த நிலைமைக்கு நீதான் காரணம்' என்றார்.

விவசாயி திகைத்தான்.

"என்னோட பிரச்சினைக்கு நான் எப்படி காரணமாக இருக்கமுடியும்.''

"ம்... உனக்கு குடும்பம்

இருக்கா?''

"அன்பான மனைவி, அழகான குழந்தைகள் இருக்கிறார்கள்.''

"பிழைப்புக்கு வழி இருக்கிறதா?''

"தாராளமா? நிறைய நிலபுலன்கள் இருக்கு மகானே!''

"செல்வச் செழிப்பு இருக்கா?''

"நிறைய இருக்கு.''

"இருக்க இடம் இருக்கா?''

"நல்ல விசாலமான வீடு இருக்கு?''

"ஊரில் உனக்கு எதிரிகள் இருக்கிறார்களா?''

"சேச்சே... இந்த மக்கள் என்மேலே வன்மம் எதுவும் இல்லாதவங்க.''

"எல்லாம் இருந்து... இல்லாதது போல் ச-த்துக்கொள்ளும் உனக்கு எதிரி! உன் நிம்மதியை மகிழ்ச்சியை அழிப்பது நீதான். முத-ல் உன் மனதை சுத்தப்படுத்து. "நமக்கு இவ்வளவு வசதிகள் இருக்கிறதே' என மனநிறைவு அடை. உன்னால் காணாமல்போன உன் இன்பம், நிம்மதி, மகிழ்ச்சி எல்லாம் திரும்ப கிடைக்கும்.''

புத்தரின் இந்த போதனை அவனை சிந்திக்க வைத்தது.

தன் மனதின் கசடுகளை தூர்வாரி தூரப் போட்டான்.

"எனது நிம்மதி எனக்குள்தான் இருக்கிறது' என உணர்ந்தான். இன்பம் அவனை சூழ்ந்து கொண்டது.

1958-ஆம் ஆண்டு வெளியான "மானமுள்ள மறுதாரம்' படத்தில் பாலாஜி பாடுவதாக அமைந்த... கே.வி. மகாதேவன் இசைத்த... சீர்காழி கோவிந்தராஜன் பாடிய... அ. மருதகாசி எழுதிய பாட-ன் பல்லவி...

"இன்பமெங்கே இன்பமெங்கே

என்று தேடு!

எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு!

இன்றிருப்போர் நாளையிங்கே

இருப்பதென்ன உண்மை! -இதை

எண்ணிடாமல் சேர்த்து வைத்துக்

காத்து என்ன நன்மை?

இருக்கும் வரை இன்பங்களை

அனுபவிக்கும் தன்மை...

இல்லையென்றால் வாழ்வினிலே

உனக்கு ஏது இனிமை?'

இப்படி அமைந்தது இந்தப் பல்லவி. ஆக... இன்பமோ? துன்பமோ? அது... நமக்குள்தான் இருக்கிறது என்பதை உணர்வோம்.

இருப்பதைக்கொண்டு

சிறப்புடன் வாழ்வோம்!

(பெருகும்)

Advertisment
om010525
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe