இறைவனை அறிந்துகொள்வது எப்படி?

/idhalgal/om/what-sri-ramanujar-preached

ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?

இராமானுஜர் ஒரு வைஷ்ணவ சித்தாந்த ஈர்ப்புடையவர். இவர் வேதாந்தத்தின் ஒரு பிரிவான, விசிஷ்டாத் வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். இவர் ஸ்ரீபெரும் புதூரில் பிறந்தவர். இவருடைய குரு யாதவ பிரகாசர். ஸ்ரீ ராமானுஜர் அரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். ஸ்ரீரங்கப் பெருமானை வழிபட்டு, பல திருப்பணிகள் செய்து, தீண்டாமையை எதிர்த்து குரல் கொடுத்தவர். ஸ்ரீராமானுஜருக்கு எம்பெருமானார், பாஷ்யகாரர், உடையவர் என பல திருநாமங்கள் உண்டு. இவர் பாவார்த்த ரத்னாகரம் எனும் ஜோதிட நூலும் எழுதியுள்ளார்.

ஸ்ரீ ராமானுஜர் திருக்கோஷ்டியூர் சென்று, அங்கு வாழ்ந்த நம்பி பெருமாளிடம், மந்திர உபதேசம் பெற விரும்பினார். அவர் அங்குசென்று, நான் இராமானுஜன் வந்திருக்கிறேன் எனக்கூற, நம்பி ""நான் செத்து வா'' என பதில் கூறினார்.

இவ்வாறு 17 முறை இராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைக் கூறினார். கடைசியாக, இராமானுஜர். ""அடியேன் வந்திருக்கிறேன்'' என கூற, நம்பி அவரை அழைத்து, "ஓம் நமோ நாராயணயா' என்ற மந்திரத்தை உபதேசித்து அருளினார். கூடவே இதை வெளியில் சொன்னால்,உனக்கு நரகம் கிடைக்கும் எனவும் கூறினார். எனினும் உலகமக்கள் அனைவரும் மோட்ச கதி அடைந்து, தற்போது பெறவேண்டும் எனும் கருத்தில்,ஸ்ரீ ராமானுஜர் திருக் கோஷ்டி யூர் கோபுர விமானத்தில் நின்று, உரக்க இந்த மந்திரத்தைக் கூறினார். தான் நரகம்சென்றாலும் பரவாயில்லை. மக்கள் அனைவரும் மோட்சம் செல்லவேண்டும் எனும் உய

ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?

இராமானுஜர் ஒரு வைஷ்ணவ சித்தாந்த ஈர்ப்புடையவர். இவர் வேதாந்தத்தின் ஒரு பிரிவான, விசிஷ்டாத் வைதத்தின் முன்னோடியாக விளங்கியவர். இவர் ஸ்ரீபெரும் புதூரில் பிறந்தவர். இவருடைய குரு யாதவ பிரகாசர். ஸ்ரீ ராமானுஜர் அரிய நூல்கள் பலவற்றை எழுதியவர். ஸ்ரீரங்கப் பெருமானை வழிபட்டு, பல திருப்பணிகள் செய்து, தீண்டாமையை எதிர்த்து குரல் கொடுத்தவர். ஸ்ரீராமானுஜருக்கு எம்பெருமானார், பாஷ்யகாரர், உடையவர் என பல திருநாமங்கள் உண்டு. இவர் பாவார்த்த ரத்னாகரம் எனும் ஜோதிட நூலும் எழுதியுள்ளார்.

ஸ்ரீ ராமானுஜர் திருக்கோஷ்டியூர் சென்று, அங்கு வாழ்ந்த நம்பி பெருமாளிடம், மந்திர உபதேசம் பெற விரும்பினார். அவர் அங்குசென்று, நான் இராமானுஜன் வந்திருக்கிறேன் எனக்கூற, நம்பி ""நான் செத்து வா'' என பதில் கூறினார்.

இவ்வாறு 17 முறை இராமானுஜர் வந்தபோதும், நம்பி இதே பதிலைக் கூறினார். கடைசியாக, இராமானுஜர். ""அடியேன் வந்திருக்கிறேன்'' என கூற, நம்பி அவரை அழைத்து, "ஓம் நமோ நாராயணயா' என்ற மந்திரத்தை உபதேசித்து அருளினார். கூடவே இதை வெளியில் சொன்னால்,உனக்கு நரகம் கிடைக்கும் எனவும் கூறினார். எனினும் உலகமக்கள் அனைவரும் மோட்ச கதி அடைந்து, தற்போது பெறவேண்டும் எனும் கருத்தில்,ஸ்ரீ ராமானுஜர் திருக் கோஷ்டி யூர் கோபுர விமானத்தில் நின்று, உரக்க இந்த மந்திரத்தைக் கூறினார். தான் நரகம்சென்றாலும் பரவாயில்லை. மக்கள் அனைவரும் மோட்சம் செல்லவேண்டும் எனும் உயரிய நோக்கத்தில் சொல்லப்பட்ட திருமந்திரம் இதுவாகும். இப்போதும் திருக்கோஷ்டியூர் கோவில் விமானத்தில் இராமானுஜர் சிலையும், அதன் எதிர் தெருவில் "கல் திருமாளிகை' எனஅழைக்கப்படும் நம்பியின் வீடும் உள்ளது.

பாவ ஜாதகம் என்றால் என்ன?

-கே. பிரபாவதி, கன்னியாகுமரி.

ஜோதிடத்தில் இதனை நிர்த்தன, யோகம் என்று குறிப்பிடுவர். இதில் "நி' என்றால் இல்லையென்று அர்த்தமாகும். தனம் என்பது செல்வத்தை குறிக்கும். எனவே நிர்த்தனம் என்பது செல்வம் இல்லாத நிலையைக் குறிக்கும்.

இதனை எவ்விதம் அறிவது? 1, 2, 5, 9 எனும் வளமை தரும் கிரகங்கள், 8#ஆமிடத்தில் மறைந்தால் அது நிர்த்தன ஜாதகம் அல்லது பாவ ஜாதகம் எனப்படும். இவ்வித கிரக அமைப்பு உடையவர்கள் ஒருவேளை உணவுக்கே தெருத்தெருவாக பிச்சை எடுத்து உண்பர்.

பரிகாரங்கள் எல்லாருக் கும் பலிப்பது இல்லையே? அது குறித்து...

-கே. பிரபாவதி, கன்னியாகுமரி

ஜோதிடர்கள், அனைத்துவித தோஷத் திற்கும் பரிகாரம் கூறுகிறார்கள். ஜாதகர் களும் சிரத்தையாக நிறைவேற்றுகிறார்கள்.

அரச மரத்தை சுற்றியவுடன், அடி வயிற்றில்கை வைத்து பார்க்கலாமா? அதற்கென்று ஒரு காலகட்டம் இருக்கிறது அல்லவா. அதுபோல் ஜாதகர்கள் எவ்வளவு நம்பிக்கை யுடன் பரிகாரம் செய்தாலும், அதற்கான காலம் கனிந்துவருகையில், செயல்கள் வெற்றிகரமாக நடக்கும். உங்கள் பிறப்புஜாதகத்தின் தசாபுக்தி, சந்தா தாரர்களின் ஒத்துழைப்பும், கோட்சார இணைவும், ஒன்றுபடும்போது, இறைவனின் கருணையால், பரிகாரப் பலன் நடைமுறைக்கு வரும். எனவேபரிகாரத்தினால் பலன் இல்லையே என யாரும் விசனப்படாதீர்கள். இறைவனை பூஜித்தபலன் என்றுமே இல்லை என்றாகி விடாது.

இறைவனை அறிந்துகொள்வது எப்படி?

-ஆர்.கே. -ங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

இதற்கு ஸ்ரீ ரமண மகரிஷி பதில் கூறி உள்ளார். ""தத் த்வம் அஸி'' எனும் மகா வாக்யமே இதன் பதிலாகும். உன்னை நீயே உணரவேண்டும். இதுவே பிரம்மம் எனும் இறைவனை அறிந்து கொள்ளும் வழியாகும். நாம் முற்றிலுமாக ஈசனிடம் நம்மை ஒப்புவித்தால்,மேற்கொண்டு கேள்வி கேட்கஅங்கே ஒருவனும் இருக்கமாட்டான். ஒன்று தன் மூலத்தை தானே நுண்ணுணர்வால் அறிந்து,அம்மயமாய் இருக்கவேண்டும். இல்லாவிடில் எந்தவித பின் வாங்கலுமின்றி இறைவனை முற்றிலுமாக சரணடைய வேண்டும். இந்த இரண்டு வழியில் எதில் சென்றாலும் இறைவனை அறியமுடியும்.

மனதை உள்முகமாக திருப்புவது எப்படி?

-ஆர்.கே. -ங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

உருவ த்யானம் அல்லதுஅருபத் த்யானம் எதை தேர்ந்தெடுத்து செய்தாலும், முழு மனதுடன் தீவிரமாக ஈடுபடுங்கள். எது உயர்ந்தது எனும் வீண் தர்க்கம் தேவையில்லை. பூஜை, ஜெபம், தியானம் என எந்த முறையை பின் பற்றினாலும், "நான் செய்கிறேன்' எனும் தன் முனைப்பு நீங்கி, நாம் வழிபடும் தெய்வத்தில், பிரிவற்ற அகண்டாகார வஸ்துவில் ஒன்ற வேண்டும். இதுவே ஆன்மிக உயர்வுக்கு வழி. இதனையேமனதை உள்முகமாக திருப்புவது என்பர்.

மந்திர உபதேசம் என்றால் என்ன?

-ஆர்.கே. -ங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

மக்கள் சாதாரணமாக, தெய்வத்தை வழிபட்டு பல பூஜைகள் செய்கின்றனர். பலர் அஷ்டோத்திர மந்திரம் கூறி வழிபாடு செய்கிறார்கள். இன்னும் சிலர், சகஸ்ரநாம ஸ்தோத்திரம் கூறி பூஜை செய்கிறார்கள். சகஸ்ரநாமம் என்பது 1,008 தெய்வ நாமாக்களை கொண்டது. இது சாதாரணமாக அனேகரும் தெய்வ வழிபாடு செய்யும் முறையாகும்.

இதுதவிர மந்திர உபதேசம் பெறுவது என்பது வேறுபட்ட தனி வழிபாடாகும். நாம ஜெபம் என்பது மிகவும் பயன் தரும் வழிபாடாகும். இதில் மூலமந்திரம் என்பது ரிஷிகளால் பல கோடிக்கணக் கில் ஜெபித்து, தெய்வ சக்தியை அதில் உருவேற்றி பலமானதாக மாற்றியிருப்பார். மந்திரம் என்பது பிரபஞ்சம் கொடுக்கும் சப்த வடிவாகும். இந்த பிரபஞ்ச ஒ-யை ரிஷிகள் ஆகர்ஷித்து, அதனை வரி வடிவமாக்கி, அதனால் இறைவனைத்தொடர்ந்து தியானம் செய்தார்கள். முக்கியமான மந்திரம் எனில் "ஓம்'என்றே கூறலாம். இந்த மந்திரம்அனைத்து தெய்வங்களுக்கும் உருவாக்கப் பட்டுள்ளது.

இந்த மந்திரங்களை, ஒவ்வொரு மனிதரும் பக்தரும் தாமே, தனக்குத்தானே கற்றுக்கொள்ளக்கூடாது. ஒரு குரு மூலமாகவே மந்திர உபதேசம் பெறவேண்டும்.

இதற்கு இறைவனின் அனுக்கிரகமும் குருவின் அருளும் தேவை. இதற்கு சம்பந்தப்பட்டவரின் ஜாதகமும் உயரிய நிலையில் இருக்கவேண்டும்.

அந்தணர்கள், சிறுவர்களாக இருக்கும்போது, பூணூல் கல்யாணம் என்று நடத்துவர். அப்போதுஅவர்களின் காதில், காயத்ரி மந்திரம் ஓதப்படும். இதுவே அவர்களின் மந்திர உபதேசமாக அமையும். இதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சந்தியாவந்தனத்தின்போது கூறி வழிபடுகின்றனர். மந்திரங்களில் முதன்மையானதும், வலிமைமிக்கதும் காயத்ரி மந்திரமேயாகும்.

மந்திர உபதேசம் பகலில் நல்ல நேரத்தில், தேர்ச்சிபெற்ற குருமூலம் சொல்லப்படவேண்டும். மகாபெரியவர், ஒருமுறை ஒரு மந்திரம் கூறி, அனைவரையும் வழிபட கூறினார். அது, "அம் பகவா' என்று கூறினார். அம் என்பது ஒரு மங்கள அட்சரம். பகவா என்பது தெய்வத்தைக் குறிக்கும்.

ஸ்ரீ ரமண மகரிஷி, தனது பக்தரிடம், ஆத்ம ஞானம் கிடைக்கவில்லையே என்று வருந்தாதே. கிடைக்கவேண்டும் என்றால் இதுவும் ஒரு குருவின் மந்திரஉபதேசம்தான்.

ஜோதிடமும் மந்திரமும்

கிரகங்களும் ரிஷிகளும்

சூரியன்-மரிசீ

சந்திரன்-அத்தரி

செவ்வாய்-க்ரது

புதன்-புலஸ்தியர்

குரு-ஆங்கிரசர்

சுக்கிரன்-புலஹர்

சனி-வசிஷ்டர்

கிரகங்களும் நவகரி மந்திரங்களும்

சூரியன்-ஹரீம்

சந்திரன்-க்ரீம்

செவ்வாய்-ஸ்ரீம்

புதன்-கௌம்

குரு- ஓம்

சுக்கிரன்- ஐம்

சனி- ஹெளம்

ராகு-சௌம்

கேது-கலீம்

கிரகங்களும் அஷ்டமூர்த்தி மந்திரங்களும்

சூரியன்- ஷம் ஈசானாய நமஹ

சந்திரன்-ஸம் மஹா தேவிய நமஹ

செவ்வாய்- ரம் ருத்ரலிங்காய நமஹ

புதன்-லம் சர்வலிங்காய நமஹ

குரு-ஹம் பிமலிங்காய நமஹ

சுக்கிரன்-வம் பவலிங்காய நமஹ

சனி-யம் ருத்ரலிங்காய நமஹ

ராகு-க்ஷம் பசுபதயே நமஹ

இதுதவிர சங்கு, சக்கரம் இதனை முத்திரைபோல் இரு தோள்களி லும் வைஷ்ணவர்களும், வயதானயாதவர்களும் முத்திரை இட்டிருப்பர். இதுவும் ஒருவகை மந்திர உபதேசம்தான். இவர்கள் வாழ்வில் மிகுந்த நெறிமுறையுடன் ஒரு சன்யாசி வாழ்வை கடை பிடிப்பர். ஆக, இறைவன் அனுக்கிரகம்இருந்தால் மட்டுமே, ஒருவர் மந்திர உபதேசம் பெற இயலும்.

ஆர்.கே. லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

om 01-06-24
இதையும் படியுங்கள்
Subscribe