எத்தகைய பக்தி இன்னல் தீர்க்கும்? - யோகி சிவானந்தம்

/idhalgal/om/what-kind-devotion-will-you-solve

வ்வொருவரும் இறைவழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

இறைவழிபாடு என்பது வெட்கப்பட வேண்டிய செயலல்ல. ஏனென்றால் இன்று பலர் பைக்கில், காரில் சென்று கொண்டிருக்கும்போது சாமி கும்பிடுவது என்று சர்க்கஸ் வேலை யெல்லாம் செய்கின்றனர்.

அதுவல்ல பக்தி. பொறுமை, சாந்தகுணம், அமைதி, அன்பு, நீதி, நேர்மை, தர்மசிந்தனை, கருணை என அத்தனை நற்குணங்களையும் உள்ள டக்கிய ஒரு உயர்ந்த சிந்த னையே இறைவழி பாடாகும். இன்று நம்மில் பலரிடம் பொறுமை என்பதே இல்லாமல் போய்விட்டது. தெய்வப் புலவர் திருவள்ளுவர்-

"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று'

என்கிறார். அதாவது, பிறர் செய்த பெருந் தீங்கை எந்த சூழ்நிலையிலும், எக்காலத்திலும் பொறுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய தீங்கையும், தீங்கைச் செய்தவர் பற்றியும் எள்ளளவுகூட மனதில் வைத்துக்கொள்ளாமல் அந்த கணமே மறந்துவிடுதல் வேண்டும். அதுவே பொறுத் தலைவிட மிகச்சிறந்ததாகும்.

இன்று பெரும்பாலா னோர் வீட்டில் சமைப்ப தில்லை. துணி துவைப்பது மில்லை. உணவருந்த ஹோட்டல், துணிகள் துவைக்க வாஷிங்மெஷின் என்று செயற்கை எந்திரமாக மாறிவிட்டனர். "நேரமில்லை' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடுகின்றனர். பல குடும்பத்தினர் துரித உணவகங்களிலும், மாமிச உணவகங் களிலும் உண்கின்றனர். இது உடல் நலத்திற்கு பெருந்தீங்கை விளைவிக்கும்.

எதற்கெடுத்தாலும் அவசரம். காரணம் பொறுமையின்மை; மற்றொன்று சோம்பேறித்தனம். பொறுமை அவசியம். அதற்கென்று சோம்பேறித்தனமாக மாறக் கூடாது. சோம்பேறித்தனம் ஒரு தனி மனிதனின் எதிர்காலத்தை மட்டுமல

வ்வொருவரும் இறைவழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

இறைவழிபாடு என்பது வெட்கப்பட வேண்டிய செயலல்ல. ஏனென்றால் இன்று பலர் பைக்கில், காரில் சென்று கொண்டிருக்கும்போது சாமி கும்பிடுவது என்று சர்க்கஸ் வேலை யெல்லாம் செய்கின்றனர்.

அதுவல்ல பக்தி. பொறுமை, சாந்தகுணம், அமைதி, அன்பு, நீதி, நேர்மை, தர்மசிந்தனை, கருணை என அத்தனை நற்குணங்களையும் உள்ள டக்கிய ஒரு உயர்ந்த சிந்த னையே இறைவழி பாடாகும். இன்று நம்மில் பலரிடம் பொறுமை என்பதே இல்லாமல் போய்விட்டது. தெய்வப் புலவர் திருவள்ளுவர்-

"பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை

மறத்தல் அதனினும் நன்று'

என்கிறார். அதாவது, பிறர் செய்த பெருந் தீங்கை எந்த சூழ்நிலையிலும், எக்காலத்திலும் பொறுத்துக்கொள்ள வேண்டும். அத்தகைய தீங்கையும், தீங்கைச் செய்தவர் பற்றியும் எள்ளளவுகூட மனதில் வைத்துக்கொள்ளாமல் அந்த கணமே மறந்துவிடுதல் வேண்டும். அதுவே பொறுத் தலைவிட மிகச்சிறந்ததாகும்.

இன்று பெரும்பாலா னோர் வீட்டில் சமைப்ப தில்லை. துணி துவைப்பது மில்லை. உணவருந்த ஹோட்டல், துணிகள் துவைக்க வாஷிங்மெஷின் என்று செயற்கை எந்திரமாக மாறிவிட்டனர். "நேரமில்லை' என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடுகின்றனர். பல குடும்பத்தினர் துரித உணவகங்களிலும், மாமிச உணவகங் களிலும் உண்கின்றனர். இது உடல் நலத்திற்கு பெருந்தீங்கை விளைவிக்கும்.

எதற்கெடுத்தாலும் அவசரம். காரணம் பொறுமையின்மை; மற்றொன்று சோம்பேறித்தனம். பொறுமை அவசியம். அதற்கென்று சோம்பேறித்தனமாக மாறக் கூடாது. சோம்பேறித்தனம் ஒரு தனி மனிதனின் எதிர்காலத்தை மட்டுமல்ல;

அவன் குடும்பத்தையே நிம்மதியற்ற நிலைக்குக் கொண்டுசென்றுவிடும். இதைப்பற்றி வாழ்வியல் சித்தர் திருவள்ளுவர்-

"மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த

குடிமடியும் தன்னினும் முந்து'

என்கிறார். தனது செயல்களில் சோம்பல் இல்லாமல் இருக்கவேண்டும். சோம்பல் எனும் தன்மை அழித்துவிடக்கூடிய இயல்பு டையது. சோம்பல் உள்ள ஒருவன் நிச்சயமாக அறிவற்றவனாகக் கருதப்படுவான். அப்படி ஒருவன் சோம்பல் நிறைந்தவனாக இருப்பான் எனில், அவன் பிறந்த குடி (குடும்பம்) அவனுக்கு முன்பாக அழிந்துவிடும் என்கிறார்.

எனவே பொறுமை வேண்டும்; அதே வேளையில் சோம்பல் இல்லாத தன்மையும் வேண்டும். இதோடு நம்பிக்கையுடன் இணைந்த இறைபக்தியே ஒருவன் சிறந்து, உயர்ந்து, நிம்மதியாக வாழ வழிவகுக்கும். இறைபக்தியில் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி ஒரு நிகழ்வுமூலம் காண்போம்.

ஒரு பெரிய அழகிய கிராமம். அந்த ஊரில் ராஜசிங்கம் எனும் பெரியவர் அவ்வூரின் தலைவராக இருந்து வந்தார். மிகச்சிறந்த சிவபக்தர். அவரின் தலைமையிலும், வழிகாட்டுதலிலும் ஒரு சிறிய கவலையும் இல்லாமல் மக்கள் மிக மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வந்தனர். அவருக்கு ஆறு குழந்தை கள். குணவதியான மனைவி. அவரின் பெரும் முயற்சியில் அவ்வூரில் அமைந்துள்ள ஏரி, குளங்கள், ஆறுகள் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்பட்டு வந்தன. அதனைச் சார்ந்து பலவகை மரங்களும் நடப்பட்டு அந்த கிராமமே ஒரு அழகிய சோலையாகக் காட்சியளித்தது. ஆடுகள், மாடுகள், கோழிகள் என அத்தனை வளர்ப்புப் பிராணிகளும் மகிழ்ச்சியாகவும், சுதந்திரமாகவும் இருந்தன. மொத்தத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் ஊர்த்தலைவர் சரிசெய்துவிடுவார் எனும் அசைக்கமுடியாத நம்பிக்கை மக்களிடம் இருந்தது.

இது எப்படி சாத்தியப்பட்டது? ஊர்த் தலைவரைப் போன்று அவ்வூர் மக்களும் இறைவழிபாடு, தர்மசிந்தனை, நேர்மையான குணங்களுடன் திகழ்ந்தனர். இவ்வாறு மகிழ்ச்சியோடு சென்றுகொண்டிருந்த ஊரில் ஒருநாள், ஒரு நெகடிவ் எனர்ஜி- அதாவது அசுத்த சக்தி (பேய்) இறைவனிடம் சென்று, ""நான் உமது அதிதீவிர பக்தனான ராஜசிங்கத்தை சில சோதனைகளுக்குள்ளாக்க விரும்புகிறேன். அதற்கு உங்கள் அனுமதி தேவை'' என்று கேட்டது. அதற்கு இறைவன், ""நீ எதற்கு எனது பக்தனை சோதிக்க விரும்புகிறாய்?'' என்று கேட்டார்.

siddhar

உடனே அந்த பேய், ""அந்த சூழ்நிலையில் அவன் உங்கள்மீதுகொண்ட பக்தியில் உறுதியாக இருக்கிறானா? எவ்வாறு செயல்படுகிறான் என்பதை நீங்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன்'' என்றது.

இறைவனும் அதற்கு ஒப்புக்கொண்டார். பேய்த்தன்மை உடைய அசுரசக்தியின் ஆட்டம் ஆரம்பமானது. மாதம் மும்மாரி பொழிந்த நிலை மாறியது. மரம், செடி, கொடி, பறவைகள், விலங்குகள் என அனைத்து ஜீவராசிகளும் கடும் பாதிப்புக்குள் ளாகின. இயற்கையின் இயல்புநிலை மாறத் தொடங்கியது. ஏரி, குளங்கள் வற்றின. தண்ணீர்ப் பஞ்சமும், உணவுப் பஞ்சமும் தலைவிரித்தாடியது. பலர் கிராமத்தைவிட்டுப் போய்விடலாமா என்று எண்ணத்தொடங்கினர்.

ஊர்த்தலைவரின் குடும்ப மும் சிதைந்தது.

அவரின் குழந்தைகள் அனைவரும் பல்வேறு காரணங்களால் இறந்துபோயினர்.

ஊர்த்தலைவருக்கு குன்ம நோய் வந்து உடல் சீழ்பிடித்தது. ஆனாலும் அவர் தன் இறைப்பற்றையும், இறைவழிபாட்டை யும் நிறுத்தவே இல்லை. இறைவனிடம் முன்பைவிட உள்ளம் உருகிப் பிரார்த்தனை யில் ஈடுபட்டார். அனைவரையும் நம் அய்யன் எம்பெருமான் காப்பாற்றுவார் என்று அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால் அவரது மனைவியோ தன் கணவரிடம், ""நீங்கள் கடவுள் இல்லை என்று மறுத்துவிடுங்கள்'' என்றாள்.

அந்த தீயசக்தியின் சூழ்ச்சி புரியாமல், அவள் பேச்சைக் கேட்கச் சொல்லி கணவனை வற்புறுத்தினாள். இந்த உரையாடலை அந்த தீயசக்தி மறைந்துநின்று பார்த்தது.

அவளின் கணவனோ தன் மனைவியிடம், ""ஏனம்மா வீண் கவலை கொள்கிறாய்? நான் வணங்கும் ஈசன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். நம் அனைவரையும் காப்பாற்ற வேண்டியது அவரது பொறுப்பு. நீயும் நம்பிக்கையோடும், பொறுமையுடனும் இறைவனைத் துதி. அதுவே நமக்கு நற்கதியைத் தரும்'' என்று சொல்லியவாறே தன் மனதிற்குள் தீவிரமான பிரார்த்தனைக் குள் மூழ்கினார். இந்த நிகழ்வுகளை மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருந்த அசுத்த சக்தியானது, "இவரை நாம் ஒன்றும்செய்ய முடியாது' என்று பயந்து, அந்த இடத்தைவிட்டு ஓடி இறைவனிடம் நடந்ததைக்கூறி தனது முயற்சியில் தான் தோற்றுவிட்டதை ஒப்புக்கொண்டது.

அடுத்த கணம் ஊர்த்தலைவர் ராஜ சிங்கத்தின் முன்பாக இறைவன் திருக்காட்சி தந்து, அவரின் நோயை குணமாக்கி, குழந்தைகள் உட்பட அவர் இழந்த அத்தனை செல்வத்தையும் தந்து, அந்த கிராமத்தையே மீண்டும் பழைய நிலைக்கு மாற்றி அருளாசி வழங்கினார்.

ஒரு மனிதனுக்கு வரும் சந்தேகம் என்பது மரணத்தைப் போன்றது. நம்பிக்கை என்பது உயிரைப் போன்றது. நம் ஒவ்வொருவருக்கும் பொறுமை வேண்டும். சோம்பல் இல்லாத தன்மை வேண்டும். இறைவனை எப்போதும் மறவாத நினைப்பும் நம்பிக்கையும் வேண்டும்.

"நாடகத்தால் உன் அடியார்

போல் நடித்து நான் நடுவே

வீடகத்தே புகுந்திடுவேன்

மிகப்பெரிதும் விரைகின்றேன்

ஆடகச் சீர் மணிக்குன்றே

இடையறா அன்பு உனக்கென்

ஊடகத்தே நின்று உருகத்

தந்தருள் எம் உடையானே...'

என்கிறார் மாணிக்கவாசகர்.

ஒரு நாடகத்தில் ஒரு நடிகன் தான் ஏற்றுக்கொண்ட பாத்திரத்திற்கேற்ப நடிப்பதுபோல நானும் அடியவர்களைப் போல நடித்து (பொய் வேடம் பூண்டு) அவர்களோடு கலந்து புகுந்துகொண்டு, அத்தகையவர்களோடு சேர்ந்து பேரின்ப வீட்டுலக வாழ்வு வாழ மிக ஆசைப் படுபவனாகவும், அதில் அதிவேகம் காட்டுபவனாகவும் இருக்கிறேன். மிக உயர்ந்த பொன்னான மலையில் பொதிந்துள்ள சிறந்த மாணிக்க மணிக்குன்றே நான் உன்மேல் வைத்துள்ள பக்தி என் உள்ளத்தில் தொடர்ந்து தொய்வில்லாமல் இருக்க உன்மேல் அன்பு பெருகுமாறு, என் உள்ளத்துள்ளும் புகுந்து அங்கேயே குடிகொண்டிருக்க வேண்டும். என் உள்ளம் உருகிக் கனிந்து, நின்பக்தியில் மூழ்கும், கலக்கும் பக்குவமான நிலையினை எனக் குத் தந்தருள்வாய். என்னை ஆட்கொண்டு அருளிய- என்னை உடைமையாகக்கொண்ட பரம்பொருளே என்று மாணிக்கவாசகர் புலம்புகிறார்.

இங்கே நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். நாம் இறைவன்மீது கொண்டுள்ள பக்தியில் பொய்யோ, நடிப்போ இருக்கக்கூடாது. தூய பசும்பாலின் குணத்தோடு இருக்கவேண்டும். அத்தகைய பக்தியே நமக்கு மருந்தாகும்.

ஆகவே, இந்த உடலும் மனமும் புத்தியும் எப்போதும் இறை நினைப்போடு இருக்க வேண்டும். அத்தகைய பக்தி நம்மை எல்லா துன்பத்தில் இருந்தும் காப்பாற்றும்.

om010219
இதையும் படியுங்கள்
Subscribe