அண்ணனென்ன? தம்பியென்ன...? -ராமா சுப்பு

/idhalgal/om/what-brother-what-brother-rama-subpu

காபாரதத்தில் அண்ணன்- தம்பிகள் ஐந்துபேர். இராமாயண காவியத்தில் ஸ்ரீராமபிரானுடன் சேர்த்து அண்ணன்- தம்பிகள் நான்கு பேர். அவர்கள் வாழ்ந்த காலத்திலே அண்ணன்- தம்பிகளிடையே ஒற்றுமை, அன்பு, பரிவு, பாசங்கள் நிறைந் திருந்தன. அண்ணனுக்குத் தம்பிகள் கொடுக் கும் மரியாதையும், தம்பிமார்களிடையே அண்ணன் காட்டும் பரிவும், பாசமும் மனம் நிறைந்திருந்தது; மகிழ்ச்சியும் கூடியிருந்தது.

பதினான்கு ஆண்டுகள் வனவாசம் முடித்து, மீண்டும் அயோத்தியை ஆண்டு கொண்டிருந்தார் ஸ்ரீராமபிரான். அப்போது ராமராஜ்ஜியத்திலே மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள். ஸ்ரீராமபிரானை மன்னரென்று பாராமல் தெய்வமாகவே நினைத்து வழிபட்டார்கள். அவருடைய தர்மபரி பாலன ஆட்சியிலே, அயோத்தி நகரிலுள்ள மைய இடமான மகாமண்டப சபையிலே, ஒவ்வொரு நாளும் தெய்வீக சொற்பொழிவு கள், இறைவன்மீதான நாம சங்கீர்த்தனம், ஆடல், பாடல், பாராயணம் என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சி நடந்துகொண்டே இருக்கும்.

tt

அருகிலுள்ள ஏதோ ஒரு இடத்திலே, இரண்டு குழந்தைகள் மிக அற்புதமாகப் பாடுவதாகவும், அவர்களின் கதாகாலட்சே பம் கேட்க கேட்க அவ்வளவு பிரமாதமாக இருப்பதாகவும் கேள்விப்பட்ட, மகாமண்டப சபையினர், அந்த இரண்டு குழந்தைகளையும், அயோத்தியிலுள்ள மகாமண்டப சபையில், அவர்களை பாடவைக்கவேண்டும் என்றும், அந்த நிகழ்ச்சிக்கு இளைய அரசரான பரதனை அழைத்துவந்து சிறப்புரை யாற்றி அந்த நிகழ்ச்சியை அவரே ஆரம்பித்து வைக்கவேண்டுமென்றும், முடிவுசெய்து, இளைய அரசர் பரதனைக் காணவந்தனர்.

இளைய அரசர் பரதனும் ஒப்புக் கொண்டு அந்த நிகழ்ச்சிக்

இளைய அரசர் பரதனும் ஒப்புக் கொண்டு அந்த நிகழ்ச்சிக்கு வருவதாகக் கூறி அழைப்பை ஏற்றுக்கொண்டார்.

அன்று மாலை மகாமண்டப சபையிலே அந்தக் குழந்தைளின் கதாகாலட்சேபம் அரங்கேறியது. குழந்தைகள் மிக அருமையாகப் பாடிக்கொண்டிருந்தனர்.

அவர்களின் இனிய குரலிலே பாடும் அந்தப்பாடலைக்கேட்டு மேய்மறந்து போனார் பரதன். லஷ்மணனும், சத்துருகனும் கூட இருந்து அந்தப் பாடல்களை அனுபவித்துக்கொண்டிருந்தனர். பாடலின் இடையிலே பரதன் தன் தம்பி லட்சுமணனைப் பார்த்து "லட்சுமணா! இந்தக் குழந்தைகள் யாரென்று தெரியவில்லையே? மிக அற்புதமாகப் பாடுகிறார்களே! அதிலும் நம் அண்ணன் ஸ்ரீராமரின் சரித்தரையல்லவா கூறிப் பாடுகிறார்கள். இவர்கள் யார்?'' என்று கேட்டான். அதற்கு லட்சுமணன் "அண்ணா! இவர்கள் யாரென்று எனக் குத் தெரியவில்லை. இருந்தாலும் இந்தக் குழந்தைகள் பாடுவதை நம் அண்ணார் இராமரும் கேட்க வேண்டுமென்பது என்னுடைய ஆசை'' என்றான். இதைக்கேட்ட சத்ருகண் "அதனாலென்ன... அண்ணாரைக் கேட்கலாமே'' என்றான்.

இவர்கள் இப்படிப் பேசிக்கொண்டிருந்த போது, இசை நிகழ்ச்சி முடிவுபெற, அந்தக் குழந்தைகளுக்குப் பரிசுப்பொருளை வழங்க ஒரு பெரிய வெள்ளித் தட்டில் பொற்காசுகளுடன் சில ஆபரணங்கள், பட்டு வஸ்திரங்கள் வைத்து பரதன் பரிசளித்தார். ஆனால் அக்குழந்தைகள் அதை வாங்க ஒப்புக்கொள்ளவில்லை. "இளைய அரசரே! தங்களின் ஆசிக்கும், உங்கள் அபிமானத் திற்கும் நன்றிகள். எங்கள் குருநாதர் எங்களை பாடிவிட்டு வரத்தான் சொல்லி அனுப்பினாரே தவிற இதுபோன்ற பரிசுப் பொருட்களையெல்லாம் வாங்கக்கூடாது என்று கட்டளையிட்டு இருக்கிறார். ஆகவே, இதை ஏற்க நாங்கள் விரும்பவில்லை. மன்னித்தருவேண்டும்'' என்றனர். "யார் உங்கள் குருநாதர்'' என்று பரதன் கேட்க, "எங்கள் குருநாதர் வால்மீகி மகரிஷி'' என்று பதிலளித்தனர். வால்மீகிப் பெயரைக் கேட்டதும் மௌனமாகிவிட்டார் பரதன். பரிசுப் பொருட்களுடன் மீண்டும் அரண்மனைக்கு திரும்பிவிட்டார் பரதன். கூடவே தம்பிமார்களும் வந்துவிட்டனர்.

நாளை நடைபெறும் அக்குழந்தைகளின் பாட்டுக் கச்சேரியிலே, அண்ணன் இராமரை கலந்துகொள்ள அழைக்கவேண்டுமென்ற நோக்கத்திலே பரதன், லட்சுமணன், சத்ருக்கன் மூவரும் ஸ்ரீராமரின் அறைக்குச் சென்றனர். ஆனால் இராமரின் அறை உள்ளே தாளிடப்பட்டிருந்தது. மூவரும் வெளியே கதவருகில் நின்றுகொண்டு "சத்ருகனா நீயே அண்ணனிடம் கச்சேரிக்கு வரச்சொல்லி கேள். ஏனென்றால் உன்மீதுதான் அண்ணனுக்கு அளவு கடந்த பிரியம்'' என்று பரதன் சத்ருக்கனைக் கேட்டான். அதற்கு சத்ருக்கன் "அண்ணா! என்னைவிட மூத்தவர் நீங்கள். உங்களுக்கு அடுத்து லட்சுமணன் இருக்கிறார். மூத்தவர் நீங்கள் இருவரும் இருக்கும்போது நான் இளையவன் எப்படிக் கேட்கமுடியும். அண்ணன் லட்சுமணனைக் கேட்கச் சொல்லுங்கள்'' என்றான். லட்சுமணனைப் பார்த்து பரதன் கேட்டான். "லட்சுமணா! நீ அண்ணனுடன் பதினான்கு ஆண்டுகள் உடன் இருந்திருக்கிறாய். ஆகவே நீ கேட்டால் அண்ணன் மறுக்கமாட்டார். நீ கேட்கிறாயா?'' என்று கேட்டான்.

"அண்ணா இது எப்படி முடியும். நீங்கள் பெரியவர். இராமருக்குப் பதில் நீங்கள்தானே அயோத்தியை ஆண்டு வந்தீர்கள். ஆகவே, அண்ணன் உங்கள் பேச்சை மதித்து ஏற்றுக்கொள்வார். எனவே நீங்கள் கேட்பதுதான் உசிதம். நீங்களே கேளுங்கள்'' என்றான் லட்சுமணன்.

இப்படியாக மூவரும் ஒருவருக்கொருவர் யார் அண்ணனிடம் கேட்பது என்று அளவளாவிக்கொண்டிருக்கும்பொழுது, எதிர்பாராதவிதமாக இராமரே தனது அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்துவிட்டார். எதிரில் தம்பிமார்கள் நிற்பதைக்கண்டு வியப்புடன் "என்ன? நீங்கள் மூவரும் எதற்காக இங்கு நிற்கிறீர்கள்?'' என்று இராமர் கேட்டார். மெதுவாக பரதன் அச்சமுடன் "அண்ணா! நேற்று நமது மகாமண்டப சபையிலே இரண்டு குழந்தைகள் மிக அற்புதமாகப் பாடினார் கள். அந்தக் குழந்தைகள் என்ன ஆச்சரியம்? உங்கள் சரித்திரத்தையே கூறிப் பாடுகிறார்கள். எனவே அந்த பாடல் நிகழ்ச்சிக்குத் தங்களை இன்று அழைத்துப் போகலாமென்று உங்கள் விருப்பத்தைக் கேட்க நாங்கள் இங்கு வந்திருக்கிறோம்'' என்றான். அதற்கு இராமர் "பரதா! நான் நேற்று மாலை உப்பரிகையிலே உலாவிக்கொண்டிருந்தபொழுது யாரோ குழந்தைகள் பாடுவது என் காதில் பட்டது. அருமையாக இருந்தது. இருந்தாலும் ஒரு அரசர் அவர் சரித்திரத்தையே, ஒரு மண்டபத்தில் இருந்து கேட்பது என்பது சாஸ்திரப்படி தவறு.

நான் இன்னும் சில நாட்கள் கழித்து யாகம் ஒன்று நடத்தலாமென்று இருக்கிறேன். அந்த யாகத்தின்போது இக்குழந்தைகளின் இன்னிசையைக் கேட்டுக்கொள்கிறேன். ஆகவே நீங்கள் போகலாம்'' என்று இராமர் கூற தம்பிமார்கள் அதை பணிவோடு ஏற்றுக்கொண்டு சென்றுவிட்டனர்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், தம்பிமார்கள் அண்ணனிடம் ஒரு சாதாரண விஷயத்தை அண்ணனிடம் கேட்கவே எவ்வளவு யோசிக்கிறார்கள். ஒரு பாடல் கச்சேரியிலே அண்ணனை கலந்து கொள்ளக் கேட்கவேண்டும்.

அவ்வளவுதானே? இதுவென்ன பெரிய ராஜாங்க விஷயமா? அண்ணன் ஏதாவது சொல்லிவிடுவாரோ என்று பயப்படுவதற்கு... அப்படியொன்றுமில்லையே... ஒரு சிறிய விஷயம். இதைக்கூட அண்ணனிடம் கேட்க அந்த தம்பிமார்களுக்கு எத்தனை அச்சம் பாருங்களேன். அவர்கள் அண்ணனுக்குக் கொடுக்கும் மரியாதை தான் என்ன? தந்தைக்குப்பிறகு அண்ணன் தான் தந்தை. தந்தைக்குக் கொடுக்கும் மரியாதையை அண்ணனுக்குக் கொடுக்க வேண்டுமென்று எப்படி கனிவோடும் அன்போடும், பணிவோடும் கொடுக்கி றார்கள்.

மகாபாரதத்திலே சூதாடும்போது அண்ணன் தர்மரை அவரது தம்பிமார்கள் எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் சூதாடினார்கள் அல்லவா? அவர்கள் அண்ணனை எதிர்த்திருந்தால் பாரதக்கதையே மாறிப்போயிருக்கும். ஆக, இப்படியெல்லாம் அண்ணன்- தம்பிகள் வாழ்ந்த காலமுண்டு. ஆனால் இப்போது அண்ணன் என்னடா? தம்பி என்னடா? என்று ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டல்லவா இருக்கிறார்கள். அண்ணனைக் கண்டால் தம்பிக்குப் பிடிப்பதில்லை. தம்பியைக் கண்டால் அண்ணனுக்குப் பிடிப்பதில்லை. ஒருவொருக்கொருவர் எதிரிகளாக இருகிறார்கள். உடன்பிறந்தவன்தானே தம்பி என்று அண்ணன் அனுசரித்துப் போவதில்லை. அண்ணன் என்ன சொல்வது? நான் என்ன கேட்பது என்று தம்பியும் எதையும் கேட்பதில்லை. போதாக் குறைக்கு அவரவர்கள் மனைவிமார்கள் அவ்வப்போது தூபம் போட்டு, அண்ணன்- தம்பி சண்டையை பெரிதுபடுத்தி ஆட்டம் போடுகிறார்கள். காலம் மாறிவிட்டது; எல்லாம் தலைகீழாகிவிட்டது. அண்ணன், தம்பி, பாசம், பரிவு, அன்பு, நேசம் எப்பொழுதுதான் வருமோ அது இறைவனுக்கே தெரியும்.

om010524
இதையும் படியுங்கள்
Subscribe