"அந்தக் காலம் அது.. அது நம் வசந்த் அண்ட் கோ காலம். இந்தக் காலம் இது.. இதுவும் நம் வசந்த் அண்ட் கோ காலம்.. எந்தக் காலம் ஆனா லும் அது நம் வசந்த் அண்ட் கோ காலம் என்று கம்பீரமாக பாடலைப் பாடி என்றென்றும் மக்களின் பேராதரவுடன் வெற்றி நடைபோடும், எங்கள் வசந்த் அண்ட் கோவின் குரு, மாபெரும் சாதனைபுரிந்த அமரர் வசந்த குமார்தான் நாங்கள் தினமும் வணங்கி பூஜிக்கும் முதல் தெய்வம் என்று மனம் நெகிழ, வசந்தகுமார் திரு உருவச் சிலையை வணங்கி விட்டு நம்மிடம் தனது பக்தி ஈடுபாடுகள், ஆன்மிக அற்புதங் கள், தங்கள் தொழில் வெற்றி களுக்கு உறுதுணையாய் இருந்துவரும் தெய்வ சக்தி கள் பற்றி, பழனி ஆண்டவ ரின் அருள் கடாட்சங்கள் பற்றி நம்மிடம் விரிவாகக் கூறினார் "வசந்த் அண்ட் கோ'வின் நிறுவன இயக்குநர் திருமதி.தங்கமலர்...
"தெய்வ பக்தி, ஆன்மிக ஈடுபாடு கள் சிறுவயது முதலே எனக்கு வந்துவிட்டது. பழனிமலையில் ஆண்டிக் கோலத்தில் அருளாட்சி புரிந்துவரும் முருகப் பெருமான்தான் எங்கள் வசந்த் அண்ட் கோவை மக்கள் மனதில் ஆழப் பதிய வைத்து தொழில் துறையில் என்றும் சிகரமாய் அரசாட்சி புரிய வைக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த நன்றியை ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு வினாடி யும் தெரிவித்துவருகிறேன்.
சிறு வயது முதல் இப்போது வரையில் எந்தவேளையிலும்

சிறு வயது முதல் இப்போது வரையில் எந்தவேளையிலும் முருகா... முருகா.. . முருகாதான்... "ஓம் சரவணபவ' இதழில் உன் புகழைக் கூற வைத்ததும் நீதானே முருகா என்பேன்.
முருகன் எனக்கு தெய்வமாக மட்டு மன்றி நண்பனாக, சகோதரனாக, உறவினராகவும் இருந்துவருகிறார். முருகப் பெருமானிடம் நேரில் பேசுவதுபோல் இல்லப் பூஜையறையில் அமர்ந்து நான் பேசுவது உண்டு. அனைத்து முருகப் பெருமான் பாடல்களைப் பாடி, சுலோகங் களைக் கூறி தினமும், தவறாமல் விளக் கேற்றி வணங்கி விட்டுத்தான் எனது இல்லப் பணிகளைத் துவங்குவேன்.
முருகப் பெருமான் பக்தி ஈடுபாட்டில் சுவையான விஷயம் ஒன்றைச்சொல்கி றேன். வீட்டிலோ, அலுவலகத்திலோ விலை உயர்ந்த பொருளோ, சாதாரண விலை குறைந்த பொருளோ காணாமல் தொலைந்து போய்விட்டால் படு டென்ஷ னாகி பதட்டப்பட்டு பரபரப்பாகி கோபத் தில் கத்த மாட்டேன். உடனே "முருகா... முருகா... ப்ளீஸ் நான் தொலைத்த பொருளை கிடைக்க வைத்துவிடப்பா' என்று கெஞ்சி முருகனிடம் பரிபூரண சரணாகதி அடைந்து பிரார்த்தனை செய்யத் துவங்கி விடுவேன்.
என்ன அதிசயம்... என்ன அற்புதம்... நான் முருகனை வேண்டிய சில நிமிடங்களிலேயே தொலைத்த பொருள் கிடைத்துவிடும். நன்றி முருகா... நன்றி... நன்றி என்று உடனே ஆனந்தக் கூத்தாடி வடிவேலன் பாதங்களை வணங்கிவிடுவேன்.
கன்னியாகுமரி "ஆதிமூல ஆண்டவர்' எனும் அற்புத தெய்வீக விளக்கைத்தான் சிவனாகவும், முருகனாக வும், பெருமாளாகவும் எங்கள் குலதெய்வ விளக்காகப் பரம்பரை பரம்பரையாக வழிபட்டு வருகிறோம்.
தினமும் காலை எழுந்ததும் குளித்து புத்தாடை உடுத்தி எங்களுக்கு வழிகாட்டிய எங்கள் அன்புத் தந்தை அமரர் வசந்தகுமார் புகைப்படம் முன்பும், சமீபத்தில் காலமான என் மாமனார் புகைப்படம் முன்பும் "அகண்ட தீபம்' ஏற்றி நாங்கள் வணங்கத் தவறுவதே இல்லை.
பழனி, திருச்செந்தூர் முருகப் பெருமான் கோவில்களுக்கு வருடம் ஒரு முறை குடும்பத் துடன் சென்று வணங்கி வருவோம் ஆபீஸில் அவசரம்... என்று அழைத்தாலும் பூஜை வழிபாடுகளை முடித்தபிறகுதான் அலுவலகத்திற்குச் செல்வேன்.
எந்த ஆபீஸ் பிரச்சினையாக இருந்தாலும் நான் வேண்டும் முருகப் பெருமானும் மற்ற தெய்வங்களும் நான் அலுவல கம் செல்லும் முன்பே பிரச்சினை களைத் தீர்வு செய்து விடுவார் கள். டென்ஷன் ஏதுமின்றி எனது அன்றாட அலுவல் பணிகளைத் துவங்குவேன்.
எனக்கு விசேஷ தொழில் நுட்பங்களை பல வெளிநாடு களுக்கு தொழில் சம்பந்த மான அனைத்து மீட்டிங்கு களுக்கும் என்னை அழைத் துச்சென்று சிறப்புப் பயிற்சிகள், அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கி என்னை வெற்றிகரமான பெண் தொழிலதிபர் ஆக்கிய என் தந்தை வசந்தகுமார் அவரைப்போல் தமிழ் பேசும் அறிவு, எழுதும் ஆற்றல் பெறவைத்தது. எல்லாவற்றிற்குமே தெய்வங்களின் அருள்தான் முழுக் காரணமாக இருந்தது.
என்னைப் பல்வேறு விதங்களில் ஊக்குவித்து ஆதரித்து என் வெற்றிகளுக்கு உறுதுணையாய் இருக்கும் என் கணவர் மற்றும் மகள், மகன்கள் (முருகப் பெருமான் பெயரைத்தான் என் மகனுக்கு வைத்தேன்) எனது அலுவலக பணிகளுக்கு பேருதவி செய்துவரும் எங்கள் நிறுவன மேனேஜிங் டைரக்டர் அம்மா தமிழ்செல்வி, எங்கள் நிறுவன டைரக்டர்கள் சகோதரர்கள் விஜய் வசந்த், வினோத் குமார் ஆகியோரை வழங்கிய தெய்வங்களுக்கு என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
ஆபீஸ் டென்ஷன்களை வீட்டிற்கு வந்து காட்டவே கூடாது என்று, என் அப்பா வசந்தகுமார் கூறுவார்.
இப்போது கடும் தொழில் போட்டிகள் வந்தபோதும் கூட, அவற்றை எதிர்கொண்டு "என்றும் முத-டம்' பெற்று வசந்த் அண்ட் கோ திகழ வடிவேலன் திருவருளே துணை என்பேன்.
நான் சிறுமியாக இருந்தபோது அப்பா, அம்மா, சகோதரர்கள், உறவினர்களுடன் காரில் உறவினர் திருமணம் ஒன்றுக்கு சென்றுகொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராதவிதமாக கார் தடுமாறி நிலைகுலைந்து உடைந்து போனபோது, பழனி முருகப் பெருமான் வடிவில் உடன்வந்த தாய்மாமன் ரவி அவர்கள்தான் கவிழ்ந்து கிடந்த காரின் கண்ணாடிகளை அசுர பலத்துடன் உடைத்து எங்கள் எல்லாரையும் வெளியே வரச்செய்து உயிர் பிழைக்க வைத்து எங்களுக்கு மறுஜென்மம் தந்தார். அந்த சமயம் என் சகோதரர் விஜய் வசந்த் மட்டும் மூச்சு பேச்சின்றி அசை வின்றி கிடந்ததைப் பார்த்து நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் அலறித் துடித்துவிட்டோம். "முருகா என் உடன் பிறந்த எங்கள் உயிரான சகோதரனைக் காப்பாற்று' என்று நான் பெரிதாக கத்தி அழுததும் என் தாய்மாமன் ரவி ஆவேசம் வந்ததுபோல் விஜய் வசந்த்திற்கு ஒன்றும் ஆகாது... அவன் உயிர் பிழைப்பான்... எதிர்காலத்தில் தொழில்துறை, அரசியல், திரைத்துறை சாதனைகள் செய்தே தீருவான்! என்று சப்தமாக அருள்வாக்கு வந்ததுபோல் கூறியபடி விஜய்வசந்த் மார்பில் ரவி மாமா இரு கரங்களையும் சேர்த்து பலமுறை அழுத்தியதும் சட்டென்று எழுந்து உட்கார்ந்து விட்டார் என் சகோதரர் விஜய்வசந்த். நாங்கள் எல்லாரும் எங்களுக்கு உயிர்ப்பிச்சை போட்ட உன்னத காவல் தெய்வம் பழனி முருகனுக்கு பரிபூரண நன்றிகளை கூறி ஆனந்தக் கண்ணீர் விட்டோம்.
முருகனின் அருளால் சிறந்த பெண் தொழிலதிபராகவும் சிறப்பு விருதுகளைப் பெற்றுவருகிறேன்.
தற்போது 127 கிளைகள் உள்ள வசந்த் அண்ட் கோவை 300 கிளைகளாக ஆக்க வேண்டும் என்ற உயர் லட்சியத்தோடு செயல்பட்டு வருகிறோம். அதற்கு எங்கள் நிறுவன உயர் அதிகாரிகளும், ஊழியர்களும் பெரிதும் உதவி வருகிறார்கள்.'
தங்கமலரின் தங்கமான மனசுக்கு ஏற்றபடி ஏற்றங்கள் காண வாழ்த்தி விடை பெற்றோம்.