"நீரின்றி அமையாதுலகு' என்பது வள்ளுவர் வாக்கு. இங்கென்ன நடந்து கொண்டிருக்கிறது? இயற்கையை அழித்து வருகிறோம். அதன்விளைவு "ஆக்ஸிஜன் அவுட்கோயிங்'; "கொரானா வைரஸ் இன்கம்மிங்'. அதுமட்டுமா? இயற்கையாகவும் இயல்பாகவும் கிடைக்கும் உயிராற்றல், உயிர் சக்தியையும் இழந்துவருகிறோம். அவ்வுயிராற்றலை மருத்துவமனைகளிலும், மருந்துக்கடை களிலும் தேடித் திரிகிறோம். இன்று எல்லாரிடமும் எல்லாமும் இருக்கவில்லை. என்றாலும், அவரவர் வாழ்க்கைக்குத் தேவையானது ஓரளவாவது இருக்கிறது. ஆனால் ஆரோக்கியமும் ஆனந்தமும் இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை. இதற்கென்ன காரணம்? பக்திக்குறைவுதான். அதனால்தான், தவறைத் தவறென்று தெரிந்தும், அதை பயமின்றிச் செய்ய மனம் துணிகிறது.
மகளிர் தின நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து வேலூர் விரைவுப் புறநகர் ரயிலில் மாலை நேரம் பயணித்தேன். கூட்டம் பிதுங்கி வழிந்தது. பயணிகள் அனைவரின் முகத்திலும் களைப்பு தாண்டவமாடியது. அருகிலிருந்த ஒரு இளைஞனிடம், ""எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?'' என்றேன். அந்த இளைஞன், ""சென்னையில் ஒரு கல்லூரியில் பொறியியல் படிக்கிறேன். காலை 6.00 மணிக்கு அரக்கோணத்திலிருந்து ரயிலைப் பிடித்து சென்னை கல்லூரிக்கு வந்து, மீண்டும் மாலை 6.00 மணிக்கு சென்னையில் ரயிலைப் பிடித்து அரக்கோணம் திரும்பிக் கொண்டிருக்கின்றேன்'' என்றான். அவன் பொருளாதாரக் கஷ்டத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தான் இரண்டாமாண்டு படித்துவருவதாகவும், இன்னும் இரண்டாண்டுகள் இப்படி கஷ்டப்படத்தான் வேண்டுமென்றும் கூறினான். ""படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?'' என்றேன். ""என் வேலை இப்போது படிப்பது மட்டுமே. கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும். எங்கள் குலதெய்வம் என்னைக் கைவிடாது'' என்று கூறினான். இங்கே அவனுடைய இறைப்பற்றையும் அதன்மீதுள்ள நம்பிக்கையையும் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.
அருகில் இன்னொரு இளைஞன் இருந்தான். அவன் ரயிலில் ஏறுபவர்களுக்கும், இறங்குபவர்களுக்கும் சிறுசிறு உதவிகளைச் செய்தான். அவனிடம், ""என்ன செய்துகொண்டிருக்கிறாய்?'' என்றேன். பட்டப் படிப்
"நீரின்றி அமையாதுலகு' என்பது வள்ளுவர் வாக்கு. இங்கென்ன நடந்து கொண்டிருக்கிறது? இயற்கையை அழித்து வருகிறோம். அதன்விளைவு "ஆக்ஸிஜன் அவுட்கோயிங்'; "கொரானா வைரஸ் இன்கம்மிங்'. அதுமட்டுமா? இயற்கையாகவும் இயல்பாகவும் கிடைக்கும் உயிராற்றல், உயிர் சக்தியையும் இழந்துவருகிறோம். அவ்வுயிராற்றலை மருத்துவமனைகளிலும், மருந்துக்கடை களிலும் தேடித் திரிகிறோம். இன்று எல்லாரிடமும் எல்லாமும் இருக்கவில்லை. என்றாலும், அவரவர் வாழ்க்கைக்குத் தேவையானது ஓரளவாவது இருக்கிறது. ஆனால் ஆரோக்கியமும் ஆனந்தமும் இருக்கிறதா என்றால் பெரும்பாலும் இல்லை. இதற்கென்ன காரணம்? பக்திக்குறைவுதான். அதனால்தான், தவறைத் தவறென்று தெரிந்தும், அதை பயமின்றிச் செய்ய மனம் துணிகிறது.
மகளிர் தின நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக சென்னையிலிருந்து வேலூர் விரைவுப் புறநகர் ரயிலில் மாலை நேரம் பயணித்தேன். கூட்டம் பிதுங்கி வழிந்தது. பயணிகள் அனைவரின் முகத்திலும் களைப்பு தாண்டவமாடியது. அருகிலிருந்த ஒரு இளைஞனிடம், ""எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?'' என்றேன். அந்த இளைஞன், ""சென்னையில் ஒரு கல்லூரியில் பொறியியல் படிக்கிறேன். காலை 6.00 மணிக்கு அரக்கோணத்திலிருந்து ரயிலைப் பிடித்து சென்னை கல்லூரிக்கு வந்து, மீண்டும் மாலை 6.00 மணிக்கு சென்னையில் ரயிலைப் பிடித்து அரக்கோணம் திரும்பிக் கொண்டிருக்கின்றேன்'' என்றான். அவன் பொருளாதாரக் கஷ்டத்தில் இருக்கிறான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. தான் இரண்டாமாண்டு படித்துவருவதாகவும், இன்னும் இரண்டாண்டுகள் இப்படி கஷ்டப்படத்தான் வேண்டுமென்றும் கூறினான். ""படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்?'' என்றேன். ""என் வேலை இப்போது படிப்பது மட்டுமே. கண்டிப்பாக நல்ல வேலை கிடைக்கும். எங்கள் குலதெய்வம் என்னைக் கைவிடாது'' என்று கூறினான். இங்கே அவனுடைய இறைப்பற்றையும் அதன்மீதுள்ள நம்பிக்கையையும் என்னால் புரிந்துகொள்ளமுடிந்தது.
அருகில் இன்னொரு இளைஞன் இருந்தான். அவன் ரயிலில் ஏறுபவர்களுக்கும், இறங்குபவர்களுக்கும் சிறுசிறு உதவிகளைச் செய்தான். அவனிடம், ""என்ன செய்துகொண்டிருக்கிறாய்?'' என்றேன். பட்டப் படிப்பை முடித்துவிட்டு, ஒரு கட்டுமான நிறுவனத் தில் கொத்தனார் வேலை பார்ப்பதாகக் கூறினான்.
அவனும் இதேபோன்று அரக்கோணம்- சென்னைக்கு தினமும் அலைகிறான். ""நீ ஏன் படித்துவிட்டு கொத்தனார் வேலை பார்க்கிறாய்? ஏதேனும் ஒரு அலுவலகத்தில் வேலை பார்க்கலாமல்லவா?'' என்று கேட்டேன். அதற்கு அவன், ""பொறியியல் பட்டதாரி களே இன்றைக்கு எட்டுமுதல் 10,000 ரூபாய்வரையே சம்பளம் வாங்குகின்றனர். தினக்கூலியாக இருந்தாலும், எனக்கு தினசரி 800 ரூபாய் கிடைக்கிறது. நான் மாதம் 20,000-க்கும் அதிகமாக சம்பாதிக்கிறேன். என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றான். ""உன் வேலை நிரந்தரமில்லையே'' என்றேன். அதற்கு அவன் சொன்ன பதில் என்னை வியப்படையச் செய்தது.
""இந்த பூமியில் எதுவும் நிரந்தரமில்லை. ஏன், நம் உயிரே நமக்கு நிரந்தரமில்லை எனும்போது நாமேன் கவலைப்படவேண்டும்? நான் தினசரி வணங்கும் சிவ பெருமான் என்னையும், என் குடும்பத்தையும் ஒரு போதும் கைவிடமாட்டார். எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. கடமையைச் செய்துகொண்டே இருப் போம். மற்றதை இறைவன் பார்த்துக்கொள்வான்'' என்றான்.
நான் மிகுந்த மகிழ்ச்சியடைந் தேன். அந்த தம்பி சொன்ன வார்த்தைகள் என் காதில் ரீங்கார மிட்டன. "எனக்குக் கிடைப்பது போதுமானதாக இருக்கிறது' என்ற வார்த்தைகள் எவ்வளவு உன்னதமானது. "போதுமென்ற மனமே பொன்செய்யும்- மருந்து' எனும் முதுமொழி எதை உணர்த்து கிறது? கிடைப்பது எதுவாக இருப்பினும் செயலாக இருப்பினும், செயலின் விளைவாக ஈட்டப்படும் பொருளாக இருப்பினும், உண்ணும் உணவாக இருப்பினும், "இது போதும்; இதுவே போதும்.
உபரியாக இருப்பதை பிறருக்கு உதவு வோம்' என்ற எண்ணம்வேண்டும். உபரியாக இல்லையென்றாலும் இருப்பதைப் பகிர்ந்துகொள்வோம் என்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இந்தச் செயலே இறைவன் விரும்பும் செயலாகும். போதும் என்று மனமும், எண்ணமும் செயல் படும்போது, புத்தி தெளிவாகி உடம்பானது ஆரோக்கியம் பெற்று பொன்னுடம்பாக மாறுகிறது.
"வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று'
என்கிறார் வள்ளுவர்.
மழையால்தான் இவ்வுலகம் மகிழ்ச்சிகரமாக சுழன்று வாழ்ந்து வருகிறது. மழையே அனைத்துயிர் களுக்கும் வாழ்வாதாரமாக இருக்கி றது. எனவே, மழையே உலக உயிர் களுக்கெல்லாம் இறவா மருந்தாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மழைநீர் எவ்வாறு உலக உயிர்களுக் கெல்லாம் ஆதாரமோ, அவ்வாறு இறைவன் ஈஸ்வரனின் கருணைப் பார்வை ஒன்றே நமக்கு அனைத்தையும் நல்கும் அருட்கொடையாகும். இப்போது பக்தியில் சிறக்கும் ஒரு நிகழ்வினைக் காண்போம்.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம், சமுதாயத்தில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி எனும் மகாபிரிவினை எண்ணம் மனிதர்களிடையே தீவிரமான விஷமாக இருந்தது. சில நூற்றாண்டு களுக்குமுன் அது இன்னும் அதிகம். அத்தகைய சூழலில் ஊருக்கு ஊர் சாதிப்பாகுபாடு இருந்தது. ஆண்டான் என்றும், அடிமை என்றும் வெகுவாக சமூகம் பாதிக்கப்பட்டிருந்தது. இப்படி இருந்தபோதும் மேல்சாதியினரும் கீழ்சாதியினரும் ஒன்றாக சந்தித்துக் கொள்ளும் ஒரு இடமாக, நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருப்புங்கூர் எனும் ஊர் இருந்தது. இவ்வூருக்கு புங்கை வனம் என்றும், இராமாயண காலத்தில் கருஞ்சாருண்யம் என்றும் பெயர்களுண்டு.
இத்திருப்புங்கூரில் மிகவும் சக்தி வாய்ந்த பழமையான சிவாலயம் ஒன்றுள்ளது. அதன் மேற்கே, காவிரியாற்றின் கிளைகள் பரவி காவிரிப் பூம்பட்டினத் தில் கலப்பதற்குமுன்பு, பல ஊர்களில் நுழைந்து அதன்காரணமாக விவசாயம் செழித்துக் கொழித்த ஒரு ஊரே ஆதனூர்.
அந்த ஆதனூரில் புலையர் மரபைச் சார்ந்த நந்தனார் எனும் அதிதீவிர சிவபக்தர் வாழ்ந்துவந்தார். அவர் தினசரி திருப்புங்கூரிலுள்ள சிவாலயம் சென்று வெளியிலேயே நின்று, இறைவனைக் கண்களால் காணாது உள்ளத்திலே உருகி வழிபட்டுவந்தார். ஏனென்றால் மேல்சாதியினர் மட்டுமே உட்பிராகாரத்திற்குச் சென்று இறை தரிசனம் செய்யமுடியும். தாழ்ந்த சாதியினர் என்று பிரித்துப் பார்க்கப்பட்ட மக்களோ கோவிலுக்கு வெளியே நின்றுதான் வழிபடமுடியும்.
நந்தனாருக்கோ எப்படியேனும் என்றாவது ஒருநாள் இறைவனின் லிங்கத் திருமேனியை தரிசிக்கவேண்டுமெனும் ஆவலும், ஆதங்கமும் அதிகரித்துக்கொண்டே போனது. தாயைப் பிரிந்து பிள்ளை திடீரென தாயைக் கண்டுவிட்டால், ஓடிச்சென்று அன்புமழை பொழியத் துடிப்பதைப்போல நந்தனாரின் மனமும் தவியாய்த் தவித்தது.
நந்தன் சிவதரிசனம் செய்ய கோவிலுக்கு வெளியே நின்று எட்டி எட்டிப் பார்ப்பார். இடையே நந்தியெம்பெருமான் வேறு மறைத் துக் கொண்டிருப்பார். நந்தனோ, கைகளை தலைக்குமேல் தூக்கிக் கூப்பி, "இறைவா, நான் உன் பிள்ளை இல்லையா? எனக்கு உன் தரிசனம் பெறும் தகுதியில்லையா?' என்று பிதற்றியபடி அவராகவே ஆடுவார்; பாடுவார். உண்மையான உள்ளன்போடுகூடிய பக்திக்கு குலமேது, கோத்திரமேது? இறைவனின் அபிஷேகத்திற்கு பொருட் களைக் கொண்டுவந்து கொடுப்பது, அங்கு கொட்டப்படும் முரசுகளுக்கும், மத்தளங்களுக் கும் தோலையும், மத்தளங்களைக் கட்டும் வாரையும் பதப்படுத்தித் தருவது என்பதெல்லாம் நந்தனின் வேலைகளாகும். விழித்திருக்கும் ஒவ்வொரு மணித்துளியும் ஈசனே கதியென்று பைத்தியமாய்த் திரிந்த நந்தனின் உள்ளம் முழுக்க எம்பெருமானின் சிந்தனையே பரவிக்கிடந்தது.
இங்கு, பக்தியில் எப்படி இருக்க வேண்டுமென்று திருமந்திரச் சிற்பி திருமூலர் கூறுவதைப் பார்ப்போம்.
"என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகங்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தவொண் ணாதே.'
தன் உடல் எலும்புகளையே விறகாகக்கொண்டு, தசைகளை எல்லாம் அறுத்துப்போட்டு, பொன்னிறம் தோன்ற நெருப்பில் நன்றாக வறுத்து வதக்கினாலும், அன்போடு மனமுருகி, உள்ளம் நெகிழத் தொழுது வணங்குபவர்களுக்கே அல்லாது மற்றவர்க்கு என்னைப்போல இறையருள் பெற இயலாது.
அதாவது உடல் வருந்த முயற்சித்தாலும், உள்ளத்தில் அன்புகொண்டு, பக்தி செலுத்தி, மனம் உருகிப் பணிந்து தொழுபவர்க்கே கண்ணுள் மணியான இறைவன் வசப் படுவான் என்பதே இதன் உயர்ந்த கருத்தாகும்.
இந்தச் செய்யுளுக்கே உதாரணமானவர் நந்தனாராவார்.
சிவபெருமானின் மனதில் இடம் பிடித்துவிட்டார் நந்தன். முன்பொருசமயம் பார்வதி தேவி, சிவனை நோக்கி ஒரு குளத்திலமர்ந்து தவமியற்றினாள். அந்தக் குளத்திற்கு ரிஷப தீர்த்தம் என்று பெயர். நந்தியெம்பெருமான் தனது கொம்புகளால் குடைந்து உருவாக்கியதே இக்குளம். திருப்புங்கூர் சிவாலயத்தின் பின்புறம் இக்குளம் உள்ளது.
கவனிப்பாரற்றுக் கிடந்த ரிஷப தீர்த்தக் குளத்தை நந்தனே தூர்வாரி சீராக்கினார்.
மறைந்து கிடப்பதை வெளியே கொண்டுவருவதும், மறைக்கக்கூடியதை நகர்த்தி வைப்பதுமே ஈஸ்வர செயலாகும். நந்தனையும், சிவபெருமானையும் எது மறைக்கிறது? அது வேறுயாருமல்ல; நந்தியெம்பெருமானேதான். பெருங்கடலைக் கப்பல் மறைக்கமுடியுமா? வானத்தை கோள்களும், நட்சத்திரங்களும் மறைக்க முடியுமா?
திருப்புங்கூரில் புலையன் நந்தனுக்குக் காட்சிதர எம்பெருமான் திருவுளம் கொண்ட கணம், "என் பக்தனைக் காணவேண்டும்; நந்தியே நீ சற்று விலகியிரு' என்று சொன்னார். "நம்மைக்கடந்து ஒரு பக்தன் வந்துவிட்டானா? அப்படியானால் என் பக்தி குறைந்துவிட்டதா?' என்று நந்தி குழம்பி நிற்க, கோள்களும், விண்மீன்களும், வானுலகத் தேவர்களும் வாயடைத்து நிற்க, நந்தியெம்பெருமானும் மிரட்சியுடன் விலகிநின்றார். வாசலில் நின்றுகொண்டிருந்த நந்தனின்மீது ஈஸ்வரனின் திருப்பார்வை விழுந்தது. நந்தனுக்கு சிவபெருமான் பரிபூரணமாகக் காட்சிதந்தார். இறைவனைக் கண்டுவிட்ட நந்தன் பக்திப் பரவசத்தோடு ஆனந்தக் கூத்தாடினார்.
எவனொருவன் உள்ளன்புடன்கூடிய பக்தியில் இருக்கிறானோ அவனை இறைவன் எப்போதும் கைவிடமாட்டார் என்பதே இந்நிகழ்வின் வாயிலாக நாம் உணரவேண்டிய கருத்தாகும். திருஞானசம்பந்தர், சுந்தரர், திருநாவுக்கரசர் ஆகியோ ரால் பாடல்பெற்ற தலமே திருப்புங்கூர் சிவாலயம். கி.பி. 9-ஆம் நூற்றாண்டில் இங்கு பூமிக்கடியில் நந்தனாரின் சிலை தோண்டி எடுக்கப்பட்டது. பக்தியில் சிறப் பவனுக்கு பரமன் அருள்புரிவான் என்பதைப் பின்வரும் திருமந்திரம் மூலம் அறிவோம்.
"உற்றுநின் றாரொடும் அத்தகு சோதியைச்
சித்தர்கள் என்றும் தெரிந்துஅறி வாரில்லை
பத்திமை யாலே பணிந்தடி யார்தொழ
முத்தி கொடுத்தவர் முன்புநின் றானே.'
தவயோகத்தில் ஈடுபட்டுள்ள யோகிகள், சித்துகளில் வல்லவர்களாகிய சித்தர்கள்கூட, ஒளிச்சுடரான பரம்பொருளை எப்போதும் எளிதாக உணர்ந்தறிந்து கொண்டாரில்லை. ஆனால் உள்ளன்போடு பணிந்து பக்தி செய்யும் அடியவர்கள் துதித்தவுடன், அவர் களுக்கு அருளாசிபுரிய அவர்கள்முன் தோன்றுவான் சிவபெருமான். எனவே, உள்ளன்போடு ஈஸ்வர பக்தி செய்வோம்; சிவனின் அருளைப்பெற்று சிந்தை தெளிவோம்.