Advertisment

இறையமுதம் வாரி வழங்கிய வாரியார் சுவாமிகள்! -முனைவர் இரா.இராஜேஸ்வரன்

/idhalgal/om/wariyar-swami-given-by-god-dr-irajeswaran

"ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்

ந ப்ரூயாத் ஸத்யமப் ரியம்

ப்ரியம் ச நாந்ருதம் ப்ரூயாத்

ஏஷ தர்ம ஸனாதன'.

(உண்மையே எப்பொழுதும் பேசவேண்டும். எது கேட்பதற்கு இனிமையானதோ அதை மட்டும் பேசவேண்டும்; இன்மையற்றவை பேசக்கூடாது. கேட்பவருக்கு இனிமையைக் கொடுக்கிறது என்பதாக பொய்யை பேசக்கூடாது. இதுவே சனாதன தர்மமாகும்) என்கிறது மனுநீதியின் சாஸ்திரம்.

Advertisment

இந்த குணத்தை பிறவியிலிருந்தே இயல்பாகக் கொண்டவரும், தன்னுடைய சொற்பொழிவைக் கேட்பவர்களுக்கு ஒருவிதமான தெய்வீகஈர்ப்பு சக்தியை அனுபவிக்கச் செய்தவரும், நகைச்சுவை உணர்வுடன் எவர் மனமும் வருத்தப்படாமல் அனைவரிடமும் சகஜமாக பேசுவதில் வித்தகராகவும், பண்டிதரும், பாமரரும் ஏற்கும் வண்ணம் இறைபக்தி உணர்வை வளர்த்தவரும், சூழ்நிலைக்கு ஏற்ப மதிநுட்பத்துடன் அழகாகத் தமிழில் பேசும் பாங்கும், தன் சொற்பொழியில் தேவாரம், திருப்புகழ், கம்பராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து தகுந்த மேற்கோளை சுட்டிக்காட்டி கணீர் என பேசுபவரும், ஏழைகளிடம் இரக்க குணம் கொண்டவரும். தர்ம சிந்தனை உடையவரும்- இப்படி பல நற்பண்புகளை ஒருங்கே கொண்டவர்தான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். சைவ சமயத்திற்கும், தமிழுக்கும் முருகப் பெருமானின் திருவருளால் போற்றத்தக்க திருப்பணிகளை செல்வதற்காகவே பிறந்தவர்.

ss

"வேழ முடைத்து மலைநாடு மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோ ருடைத்து.'

என்கிற ஔவையார் பாடலில். தமிழகத்தில் அன்றைக்கு இருந்த தொண்டை மண்டலத்தின் (வேலூர் உள்ளிட்ட பகுதி) சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளார். சான்றோர்கள் பலரை உருவாக்கிய பெருமை இம்மண்டலத்திற்கு உண்டு.

தொண்டை மண்டலத்

"ஸத்யம் ப்ரூயாத் ப்ரியம் ப்ரூயாத்

ந ப்ரூயாத் ஸத்யமப் ரியம்

ப்ரியம் ச நாந்ருதம் ப்ரூயாத்

ஏஷ தர்ம ஸனாதன'.

(உண்மையே எப்பொழுதும் பேசவேண்டும். எது கேட்பதற்கு இனிமையானதோ அதை மட்டும் பேசவேண்டும்; இன்மையற்றவை பேசக்கூடாது. கேட்பவருக்கு இனிமையைக் கொடுக்கிறது என்பதாக பொய்யை பேசக்கூடாது. இதுவே சனாதன தர்மமாகும்) என்கிறது மனுநீதியின் சாஸ்திரம்.

Advertisment

இந்த குணத்தை பிறவியிலிருந்தே இயல்பாகக் கொண்டவரும், தன்னுடைய சொற்பொழிவைக் கேட்பவர்களுக்கு ஒருவிதமான தெய்வீகஈர்ப்பு சக்தியை அனுபவிக்கச் செய்தவரும், நகைச்சுவை உணர்வுடன் எவர் மனமும் வருத்தப்படாமல் அனைவரிடமும் சகஜமாக பேசுவதில் வித்தகராகவும், பண்டிதரும், பாமரரும் ஏற்கும் வண்ணம் இறைபக்தி உணர்வை வளர்த்தவரும், சூழ்நிலைக்கு ஏற்ப மதிநுட்பத்துடன் அழகாகத் தமிழில் பேசும் பாங்கும், தன் சொற்பொழியில் தேவாரம், திருப்புகழ், கம்பராமாயணம், மகாபாரதம் போன்றவற்றிலிருந்து தகுந்த மேற்கோளை சுட்டிக்காட்டி கணீர் என பேசுபவரும், ஏழைகளிடம் இரக்க குணம் கொண்டவரும். தர்ம சிந்தனை உடையவரும்- இப்படி பல நற்பண்புகளை ஒருங்கே கொண்டவர்தான் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். சைவ சமயத்திற்கும், தமிழுக்கும் முருகப் பெருமானின் திருவருளால் போற்றத்தக்க திருப்பணிகளை செல்வதற்காகவே பிறந்தவர்.

ss

"வேழ முடைத்து மலைநாடு மேதக்க

சோழ வளநாடு சோறுடைத்து பூழியர்கோன்

தென்னாடு முத்துடைத்து தெண்ணீர் வயல்தொண்டை

நன்னாடு சான்றோ ருடைத்து.'

என்கிற ஔவையார் பாடலில். தமிழகத்தில் அன்றைக்கு இருந்த தொண்டை மண்டலத்தின் (வேலூர் உள்ளிட்ட பகுதி) சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளார். சான்றோர்கள் பலரை உருவாக்கிய பெருமை இம்மண்டலத்திற்கு உண்டு.

தொண்டை மண்டலத்தின் பாலாற்றங்கரையில் காங்கேயநல்லூரில் செங்குந்த வீர சைவ மரபில் மல்லையா, (மல்லையாதாசர்) கனகவல்- தம்பதியினர் வசித்து வந்தனர். மல்லையா இசையிலும், ஆன்மிக சொற்பொழிவு ஆறறுவதிலும் வல்லவர். கந்தபுராணம், திருப்புகழ், இராமாயணம் போன்றவற்றை தொடர் சொற்பொழிவாற்றி பாமர மக்களை பக்தி மார்க்கத்திற்கு அழைத்துச் சென்றவர். இத்தம்பதியினருக்கு மொத்தம் 11 குழந்தைகள் பிறந்தன. அக்குழந்தைகளில் நான்காவதாக 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு கிருபானந்தவாரி என பெயரிட்டு வளர்த்தனர். குழந்தைக்கு மூன்று வயது இருக்கும்போதே ஆரம்பக் கல்வியை தந்தையார் மல்லையா கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். ஐந்து வயது முதற்கொண்டு பல தமிழ்நூல்களை தானே படிக்கத் தொடங்கி, ஒன்பது வயதிலேயே வெண்பா பாடும் அளவிற்கு இயற்கையாகவே அறிவைப்பெற்றார். பன்னிரண்டு வயது நிரம்பிய சமயத்தில் ஏறத்தாழ 15 ஆயிரம் தமிழ்ப் பாடல்களை மனப்பாடம் செய்யும் அளவிற்கு உயர்ந்தார். முருகப்பெருமானுக்கு உரிய சஷ்டி திதியில் பிறந்ததால் சிறு வயது முதற்கொண்டு இறையுணர்வும், குறிப்பாக முருக பக்தியையும் கொண்டவராகத் திகழ்ந்தார்.

Advertisment

vv

வீர சைவ குலநெறிப்படி குழந்தைக்கு ஐந்து வயது இருக்கும் சமயத்தில் திருவண்ணாமலை பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்யப்பட்டது. பின்னாளில் மதுரை திருப்புகழ் சுவாமிகள், காங்கேய நல்லூர் முருகன் கோவிலில் சூக்கும சடக்கர மந்திரத்தை உபதேசித்தூர். அதன்பின்னர் சில ஆண்டுகள் கழித்து சிவாகமங்களில் வல்லநரும், சைவ சித்தாந்தங்களில் கரை கண்டவருமான ஈசான சிவச்சாரியார் சிவாகம விதிப்படி நிர்வாண தீட்சை அளித்து, "வாமதேவசிவம்' என்கிற தீட்சாநாமத்தை வழங்கினார். இப்படி ஆன்மிக வழியில் சென்ற கிருபானந்த வாரிக்கு தன் தந்தையாரைப் போலவே தமிழில் சொற்பொழிவு செய்யவேண்டும் என்கிற தாகம் மனதில் இருந்துகொண்டே இருந்தது.

கிருபானந்த வாரிக்கு 19 வயது நிரம்பிய சமயத்தில் அவருடைய தாய்மாமா சிவகுருவின் மகளான அமிர்தலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த பின்னர் சென்னையில் தங்கி தென்மடம் வரதாச்சாரியாரிடம் வீணை கற்கத் தொடங்கினார். சுமார் நான்கு ஆண்டுகளில் சரிவர வீணை கற்று தேந்தார். தந்தையாரின் சொற்பொழிவுக்கு உதவி செய்வதற்கும், பேச பயிற்சி எடுக்கவும் காங்கேய நல்லூருக்கே திரும்பினார்.

வீணை கற்கும் காலத்தில் ஒருநாள் சென்னை நம்புல்லையர் தெருவில் வசித்த சிவனடியார் இல்லத்தில் தங்கி இருந்த பாம்பன் சுவாமிகளை தரிசனம் செய்யும் பாக்கியம் இளைஞருக்குக் கிட்டியது. இதைத் தனது பிறவிப் பயனாக நினைத் தார். காரணம் அவருடைய தரிசனமும், அருளுரையும் இளைஞரான கிருபானந்த வாரியை முருகபக்தி மார்க்கத்திற்கு அழைத்துச் சென்றது.

ஒருசமயம் மதுரை திருப்புகழ் சுவாமி கள் காங்கேயநல்லூரில் திருப்புகழ் பக்தி சொற்பொழிவு ஆற்ற வந்திருந்தார். சொற்பொழிவு செய்துகொண்டிருந்த சமயத்தில் அவருக்கு வயிற்றுவலியும், வயிற்றுப் போக்கும் ஏற்படவே, சொற் பொழிவைத் தொடர்ந்து நடந்த முடியாமல் அவதிப்பட்டார். இதனால் ஊர் மக்கள் மல்லையாவை சொற்பொழிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அவரோ தன் குருநாதர் நின்ற இடத்தில் நான் எப்படி பிரசங்கம் செய்வேன்? எனக்கூறி தயங்கினார்.

சொற்பொழிவைக் கேட்க ஆவலுடன் வந்த ஊர் மக்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்க, தன் மகன் கிருபானந்த வாரியை அழைத்துப் பேசச் சொன்னார்.

தந்தையாரின் கட்டளை ஏற்று, முருகப் பெருமானை வேண்டிக்கொண்டு இளைஞர் கிருபானந்த வாரி பேசத் தொடங்கினார்.

vv

திருப்புகழைப்பற்றி மிக அருமையாக நீண்டநேரம் பேசி பக்தர்களை பரவசப் படுத்தினார். கிருபானந்த வாரியின் பேச்சைக் கேட்ட திருப்புகழ் சுவாமிகள் சொற் பொழிவுக்கு இடையே வந்தால் தடங்கல் ஏற்படும் என நினைத்து முடிந்தபின்பு மகிழ்ச்சியுடன் இளைஞரை கட்டித்தழுவி "நீதான் என் வாரிசு' என மேடையில் அறிவித்து ஆசி வழங்கினார். அதன் பின்னர் மக்கள் இவரை "வாரியார் சுவாமிகள்' என மரியாதையுடன் அழைக்கத் தொடங்கினார் கள்.

நெற்றியில் திருவெண்ணீறும், கழுத்தில் உருத்திராட்சை கண்டி மாலையும், கண்களில் ஞானவொளியுடன் வாரியார் சுவாமிகள் செய்யும் கதாகாலட்சேபம் கேட்க பலர் பக்தியுடன் கூடுவார்கள். தனக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் சொல்லவேண்டிய கருத்தை எளிய முறையில் புரியும்படி சொல்லுவதில் வல்லவர்.

அன்று காங்கேயநல்லூரில் மதுரை திருப்புகழ் சுவாமிகளின் அருளாசியுடன் ஆன்மிக சொற்பொழிவு செய்யத் தொடங்கிய வாரியார் சுவாமிகள் பின்னா ளில் தமிழ்நாட்டு கிராமங்கள்தோறும் சென்று தனது பேச்சால் பக்திப் பயிரை வளர்த்து வந்தார். தமிழ் அன்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க இந்தியா வின் பிற பகுதிகளுக் கும், மலேசியா, சிங்கப்பூர், நேபா ளம், இலங்கை, இலண்டன் போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று எண்ணில் அடங்காத தொடர் சொற்பொழிவை ஆற்றியுள்ளார்.

வெறும் கதாகாலெட்சேபம் செய்யாமல் கோவில் திருப்பணிகளை செய்வது, கும்பாபிஷேகம் நடத்துவது போன்ற அரும்பணிகளையும் மேற்கொண்டார். பல திருத்தலங்களுக்குச் சென்ற வாரியார் சுவாமிகள் தனது மானசீக குருநாதர் அருணகிரிநாதர் "வயலூரா! வயலூரா!' என பக்தியுடன் அழைக்கும் வயலூர் முருகன் கோவிலுக்குச் செல்ல ஆசைப்பட்டார்.

வயலூர் திருத்தலம்தான் அருணகிரி நாதருக்கு திருப்புகழை பாடும் திறத்தை வழங்கிய இடம்.

"பாத பங்கய முற்றிட உட்கொண்

டோது கின்றதி ருப்புகழ் நித்தம்

பாடு மன்பது செய்ப்பதி யிற்றந் தவனீயே.''

அருணகிரிநாதருக்கு வயலூர் முருகன்மீது என்றும் தணியாத காதல் உண்டு. இத் திருத்தலத்தின் இராஜகோபுரம் கட்டும் பணியின் பொறுப்பை ஏற்ற வாரியார் சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு மகாகும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்தி வைத்தார். இதனால் இவரது புகழ் எங்கும் பரவத் தொடங்கியது. பல ஊர்களிலிருந்தும் இவரைத் தொடர்புகொண்டு தங்கள் ஊர் கோவிலுக்கு திருப்பணியை செய்ய வருமாறு அன்புடன் அழைத்துச் செல்லத் தொடங்கினார்கள். இப்படி யாக தமிழ் நாட்டில் பல கோவில் திருப் பணிகள் இவரது முயற்சியில் செய் யப்பட்டது.

பேச்சுத் திறமையால் மக்க ளைக் கவர்ந்த இவர் தனது எழுத்துத் திறமை யாலும் மக்கள் மனதில் நீக்கமற இடம் பிடித்தார். ஆன்மிகம், வாழ்க்கைமுறை, பொது விஷயம் சம்பந்தப் பட்ட துறைகளில் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளார்.

இறைசேவையை தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்து வந்த வாரியார் சுவாமிகள் 1993-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ஆம் தேதி லண்டனிலிருந்து சென்னைக்கு வரும் வழியில் விமானத்திலேயே முருகன் திருவடியில் கலந்தார்.

சொந்த ஊரான காங்கேயநல்லூரில் முருகன் கோவிலுக்கு எதிரே சரவண பொய்கை மண்டபத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டு, "ஞானத்திருவளாகம்' எனும் பெயரில் நினைவு மண்டபம் கட்டப்பட்டது.

இவரது சேவையைப் போற்றி 1986-ல் அண்ணாமலை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 1991-ல் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் "இலக்கிய முது முனைவர்' பட்டத்தை வழங்கி கௌரவித்தது.

"நல்லவர்களின் நட்பை

பெறாவிட்டால் வாழ்வில்

முன்னேற்றம் ஒருநாளும்

உண்டாகாது.''

-வாரியார் சுவாமிகள்

om010823
இதையும் படியுங்கள்
Subscribe