Advertisment

எழுமின் விழிமின்! - முனைவர் இரா. இராஜேஸ்வரன்

/idhalgal/om/wake-dr-ira-rajeswaran

"எழுமின், விழிமின். குறிக்கோள்ளை அடையும்வரை நில்லாது உழைமின்!'' இந்த எழுச்சியூட்டும் பொன்மொழியை நமக்கு வழங்கியவர்தான் சுவாமி விவேகானந்தர்.

Advertisment

இளைஞர்களுக்குத் தங்களின் இலக்கை அடை வதற்கான உந்துணர்வைத் தூண்டும்வண்ணம் சொன்னது மட்டுமின்றி, தன்னுடைய வாழ் நாளில் அதேபோன்று நடந்துகாட்டியவரும் அவரே! அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893-ல் நடக்கவிருந்த சர்வமத மகாசபையில் (ஜ்ர்ழ்ப்க் ல்ஹழ்ப்ண்ம்ங்ய்ற் ர்ச் தங்ப்ண்ஞ்ண்ர்ய்ள்) பங்கேற்க, இந்து மதம் சார்பில் சென்ற சுவாமி விவேகானந்தருக்கு படிப்படியாக பல சோதனைகள், தடைகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் தன்னுடைய ஆத்ம பலத்தால் வென்று, உலகளவில் சாதனை புரிந்துவிட்டு தாயகத்திற்கு 1897-ல் திரும்பினார்.

Advertisment

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் (ஈட்ழ்ண்ள்ற்ர்ல்ங்ழ் ஈர்ப்ன்ம்க்ஷன்ள் கி.பி. 1451-1506) என்பவர் அட்லான்டிக் கடலைக் கடந்து கி.பி. 1492-ஆம் ஆண்டு அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடித்தார். கொலம்பஸின் வீரத்தையும், முயற்சியையும் கௌவரவிக்கும் வகையில், அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகை யில் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் மாபெரும் கண்காட்சியும், பொருளாதாரம், அறிவியில், ஆன்மிகம் போன்றவற்றிற்கான பேரவைக் கூட்டமும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஒரு அங்கமாக "ஹால் ஆஃப் கொலம்பஸ்' எனும் பெரிய கட்டடத்தில் 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதியன்று சர்வமத மகாசபைக் கூட்டம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

vv

பெருமைமிக்க இந்த சபையில் ஒவ்வொரு மதத்தின் சார்பிலும் மதத் தலைவர்கள், அறிஞர் கள் என பலர் கலந்துகொள்ளவிருந்தனர்.

ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவ மதப் பிரிவின் சார்பில் கார்டினல் கிப்பன்ஸ், இலங்கை புத்த மதத்தின் சார்பில் தர்மபாலர், பிரம்ம சமாஜத்தின் சார்பில் மஜும்தார் மற்றும் நகர்கர், தியாசபியின் (பட்ங்ர்ள்ர்ல்ட்ண்ஸ்ரீஹப்) சார்பில் அன்னிபெ

"எழுமின், விழிமின். குறிக்கோள்ளை அடையும்வரை நில்லாது உழைமின்!'' இந்த எழுச்சியூட்டும் பொன்மொழியை நமக்கு வழங்கியவர்தான் சுவாமி விவேகானந்தர்.

Advertisment

இளைஞர்களுக்குத் தங்களின் இலக்கை அடை வதற்கான உந்துணர்வைத் தூண்டும்வண்ணம் சொன்னது மட்டுமின்றி, தன்னுடைய வாழ் நாளில் அதேபோன்று நடந்துகாட்டியவரும் அவரே! அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893-ல் நடக்கவிருந்த சர்வமத மகாசபையில் (ஜ்ர்ழ்ப்க் ல்ஹழ்ப்ண்ம்ங்ய்ற் ர்ச் தங்ப்ண்ஞ்ண்ர்ய்ள்) பங்கேற்க, இந்து மதம் சார்பில் சென்ற சுவாமி விவேகானந்தருக்கு படிப்படியாக பல சோதனைகள், தடைகள் ஏற்பட்டன. அவற்றையெல்லாம் தன்னுடைய ஆத்ம பலத்தால் வென்று, உலகளவில் சாதனை புரிந்துவிட்டு தாயகத்திற்கு 1897-ல் திரும்பினார்.

Advertisment

இத்தாலி நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டோபர் கொலம்பஸ் (ஈட்ழ்ண்ள்ற்ர்ல்ங்ழ் ஈர்ப்ன்ம்க்ஷன்ள் கி.பி. 1451-1506) என்பவர் அட்லான்டிக் கடலைக் கடந்து கி.பி. 1492-ஆம் ஆண்டு அமெரிக்க கண்டத்தைக் கண்டுபிடித்தார். கொலம்பஸின் வீரத்தையும், முயற்சியையும் கௌவரவிக்கும் வகையில், அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகை யில் அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் மாபெரும் கண்காட்சியும், பொருளாதாரம், அறிவியில், ஆன்மிகம் போன்றவற்றிற்கான பேரவைக் கூட்டமும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஒரு அங்கமாக "ஹால் ஆஃப் கொலம்பஸ்' எனும் பெரிய கட்டடத்தில் 1893-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதியன்று சர்வமத மகாசபைக் கூட்டம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

vv

பெருமைமிக்க இந்த சபையில் ஒவ்வொரு மதத்தின் சார்பிலும் மதத் தலைவர்கள், அறிஞர் கள் என பலர் கலந்துகொள்ளவிருந்தனர்.

ரோமன் கத்தோலிக் கிறிஸ்துவ மதப் பிரிவின் சார்பில் கார்டினல் கிப்பன்ஸ், இலங்கை புத்த மதத்தின் சார்பில் தர்மபாலர், பிரம்ம சமாஜத்தின் சார்பில் மஜும்தார் மற்றும் நகர்கர், தியாசபியின் (பட்ங்ர்ள்ர்ல்ட்ண்ஸ்ரீஹப்) சார்பில் அன்னிபெசன்ட் அம்மையார் என பல்வேறு அறிஞர்கள் அந்தந்த மதம், மதப்பிரிவின் சார்பில் தேர்ந்தெடுத்து பிரதிநிதியாக அறிவித்துவிட்டனர். இதில் இந்து மதம் சார்பில், அத்வைத வேதாந்தம் பரப்புதல், சமூக, சமயப் பணியைச் செய்தல் போன்றவற்றைச் செய்து வரும் புகழ்பெற்ற இராமகிருஷ்ணா மிஷனைத் தோற்றுவித்தவரும், இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடருமான சுவாமி விவேகானந் தருக்கு (1863-1902) நல்ல வாய்ப்பு கிடைத்தது.

கேத்ரி மன்னர், இராமநாதபுர மன்னர் உள்ளிட்ட பிரமுகர்களின் பொருளாதார உதவி யுடன் 1893 மே மாதம் 31-ஆம் நாள் பம்பாயி லிருந்து கடல் மார்க்கமாக பயணம் மேற்கொண் டார். இலங்கை, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் வழி யாக கனடாவின் வான்கூவர் நகரை அடைந் தார். அதன்பின்னர் அங்கிருந்து ரயில்மூலம் சிகாகோவுக்கு பயணம் மேற்கொண்டார்.

இரயில் பயணத்தின்போது அமெரிக்க செல்வந்தப் பெண்மணி சேன்பான் என்பவ ரைத் தற்செயலாக சந்தித்தார். சுவாமி விவேகானந்தரின் தெய்வீக முகத்தைக் கண்ட அவர், பாஸ்டன் நகரில் தன் இல்லத்தில் விருந்தினராகத் தங்க அழைப்புவிடுத்தார். அந்த அழைப்பை சுவாமி விவேகானந்தர் நிராகரித்து நன்றி தெரிவித்தார்.

ஜூலை மாதம் சிகாகோ நகரை அடைந்த சுவாமி விவேகானந்தர் உலகக் கண்காட்சி யைப் பார்வையிட்டு, புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை அறிந்து வியந்தார். சர்வமத மகாசபை செப்டம்பர் மாதம்தான் நடை பெறும் என்பதை சிகாகோ நகருக்குச் சென்ற பின்புதான் அறிந்தார். ஊர் தெரியாத இடத்தில் சுமார் இரண்டு மாதங்கள் தங்கவேண்டும்; அதுவும் பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு. என்ன செய்வதென யோசித்தார். இந்து மதத்தின் துறவி, வேதாந்தம், ஆங்கில மொழி அறிந்தவர் என்கிற முறையில், இந்து மதத்தின் பிரதிநிதியாக சிலரின் தூண்டுதலால் அமெரிக்காவுக்குச் சென்றாலும், சரியான தகவல் தொடர்பில்லாத காரணத்தால் பதிவு செய்யும் நுழைவுத் தேதியும் கடந்துவிட்டது. மேலும் புகழ்பெற்ற இந்த சபையில் பேச பரிந்துரைக் கடிதமும் விவேகானந்தரிடம் இல்லையென்பதே பின்னடைவு! சபையின் முக்கியஸ்தர்களிடம் பேசிப் பார்த்தார். எந்த முன்னேற்றமும் இல்லை. கையில் இருந்த பணமும் கரையத் தொடங்கியது. உதவுவதற்கு யாருமில்லாத சூழ்நிலையில் தெய்வத்தின்மீதும், தன்னுடைய குருவின்மீதும் நம்பிக்கை வைத்து நாட்களைக் கடத்தினார்.

ரயில் பயணத்தின்போது சந்தித்த அமெரிக்க பெண்மணியின் ஞாபகம் வரவே, சிகாகோவிலிருந்து சுமார் 1,500 கிலோமீட்டர் தூரத்திலிருந்த பாஸ்டன் நகருக்குச் சென்றார். சேன்பான் பெண்மணி அவரை வரவேற்று உபசரித்து, தன் இல்லத்தில் தங்குமாறு கூறினார்.

சர்வமத மகாசபையில் கலந்துகொள்ள வந்த சுவாமி விவேகானந்தருக்கு ஏற்பட்ட தடங்கல்களைக் கேட்டு மனம் வருந்தினார். தன்னால் இயன்ற அளவுக்கு உதவுவதாகக் கூறினார்.

சுவாமி விவேகானந்தர் அமெரிக்க பெண்மணியின் இல்லத்தில் தங்கியிருந்த சமயத்தில், ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜே. ஹெச். ரைட் என்பவரைச் சந்தித்தார். இருவரும் குறுகிய காலத்தில் நல்ல நண்பர்களாக மாறிவிட்டனர். சுவாமி விவேகானந்தரின் அறிவாற்றலையும், திறமை யையும் கண்டு வியந்து, இந்து மதம் சார்பில் சபையில் பேச கீழ்க்கண்டவாறு ஒரு கடிதம் எழுதி, அதை சபையின் தலைவரிடம் கொடுக்கு மாறு கூறினார்.

"நமது மெத்தப் படித்த அனைத்து பேராசிரியர்களையும் ஒன்று சேர்த்தாலும் ஈடாகமுடியாத ஒரு அறிவாளியை உங்களிடம் அனுப்புகிறேன்' என எழுதியிருந்தார். மேலும் சுவாமி விவேகானந்தர் மீண்டும் சிகாகோ செல்ல ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார். கடிதத்தையும், சபையின் தலைவரின் விலாசத்தையும் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு சிகாகோவுக்குப் பயண மானார்.

சிகாகோ நகருக்கு வந்தவுடன், சபையின் தலைவரை சந்திக்க நினைத்த வேளையில், அவருடைய விலாசத்தை எழுதிவைத்த சிறிய சீட்டு தொலைந்ததை நினைத்து மிகவும் வருந்தினார். ஒரு பெரிய நகரில் சரியான விலாசமில்லாமல் எப்படி செல்வது எனக் குழம்பினார். தங்க இடமின்றி இரயில் நிலையத்திலேயே சில நாட்கள் கழித்தார். கையில் கொண்டுவந்த பணம் குறைவாக இருந்த சூழ்நிலை. இருப்பினும் மனம்தளராமல் வேண்டிய முயற்சியை எடுத்துக்கொண்டே இருந்தார்.

ஒருநாள் அந்த நகரில் பணக்காரர்கள் வாழும் பகுதிக்குச் சென்று வீடு வீடாக உணவு கேட்டார். சிலர் கொடுத்தார்கள். சிலர் கேலிசெய்து திருப்பி அனுப்பினார் கள். பசி மயக்கத்தில் மரத்தடியில் சுவாமி விவேகானந்தர் அமர்ந்திருந்தபோது, எதிரே இருந்த வீட்டிலிருந்து ஒரு பணக்கார பெண் வெளியே வந்தார். அவர் சுவாமி விவேகானந்த ரைப் பார்த்துவிட்டு என்ன நடந்ததென்று விசாரித்தார். ஒரு துறவியின் தன்னம்பிக் கையைக் கண்டு வியந்து, அவரைத் தன் இல்லத் தில் தங்குமாறு கேட்டுக்கொண்டார்.

சபையின் தலைவரிடம் சுவாமி விவேகானந் தரை திருமதி ஜார்ஜ் டபிள்யூ ஹேல் என்னும் அந்த பணக்காரப் பெண்மணி அறிமுகம் செய்துவைத்தார். ஹார்வார்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கொடுத்த பரிந்துரைக் கடிதத்தைப் படித்துப் பார்த்தவுடன், சபையின் தலைவர் இந்து மதத்தின் பிரதிநிதி யாகப் பேச எல்லாவகையிலும் உதவினார்.

இப்படி எல்லா சோதனைகளையும் கடந்து வந்த சுவாமி விவேகானந்தர், தான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த அந்த செப்டம்பர் 11-ஆம் தேதியும் வந்தது. பல மதத்தலைவர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் நிரம்பிய மேடையில், சுமார் 4,800 முதல் 5,000 பேர் வரையிலான பார்வையாளர்களுக்கு மத்தியில் பேசவேண்டிய சூழ்நிலை. ஒருபுறம் அவருக்கு மகிழ்ச்சி தந்தாலும் மறுபுறம் குறிப்பிட்ட நேரத்துக்குள் இந்து மதம்பற்றி எப்படிப் பேசுவது என்கிற மனக்குழப்பமும் இருந்தது. 30 வயதான இளம் துறவிக்கு இப்படிப்பட்ட மனக்குழப்பம் வருவது இயற்கையே! இவரை முதலில் பேச அழைத்த போது மனச் சோர்வினால் பேசுவதற்கு தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்தார். மதிய உணவு இடைவெளிக்குப்பின்பு கட்டாயம் பேசவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார்.

பேச மைக்முன்பு வந்தவுடன் சரஸ்வதி தேவி யையும், தன் குருவையும் பிரார்த்தித்துக் கொண்டு, கம்பீரமான குரலில், "அமெரிக்க சகோதரிகளே, சகோதர்களே...'' என ஆங்கிலத் தில் பேசத் தொடங்கினார். உடனே பார்வை யாளர்கள் உற்சாகமாக எழுந்துநின்று கையைத் தட்டி மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். காரணம், சுவாமி விவேகானந்தர் அவர்களை அன்புடன் அழைத்த விதம். இரண்டு வார்த்தைகள்மூலம் இந்து மதம் ஓர் அன்பான மதம் என்று நிரூபித்தார். மற்ற மதத்தினரின் சொற்பொழிவைவிட சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவு அருமை யாக இருந்ததால் பார்வையாளர்கள் மிகவும் ரசித்துக் கேட்டனர். தன்னுடைய பேச்சால் அனைவரையும் கவர்ந்த சுவாமி விவேகானந் தரை அனைவரும் பாராட்டினார்கள். இதனால் உலகளவில் இந்து மதத்திற்கு ஓர் நற்பெயரை சம்பாதிக்க முடிந்தது. அமெரிக்கா வில் பிரசித்திபெற்ற நியூயார்க் ஹெரால்டு பத்திரிகை, "சமயப் பேரவையில் மாண்புமிக்க வராக விளங்கியவர் விவேகானந்தர். கல்விச் சிறப்புடைய இத்தகைய ஒரு நாட்டிற்கு மதப் பிரச்சாரகர்களை நாம் அனுப்புவது எவ்வளவு முட்டாள்தனம் என்பது அவரது சொற்பொழிவைக் கேட்ட பிறகுதான் புரிகிறது' என வானளாவ புகழ்ந்தது!

சர்வசமயப் பேரவையில் 17 நாட்கள் மதங்கள் பற்றிய விவாதங்கள், சொற்பொழிவு கள் நடந்தன. இதில் சுவாமி விவேகானந்தர் ஆறுமுறை சிறப்புடன் பேசி அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்தார். எந்த நாட்டில் தனித்து விடப்பட்டாரோ, அந்த நாட்டின் மூலைமுடுக் கெங்கும் இவரது படங்கள் அலங்கரித்தன. பின்னாளில் சிகாகோ நகரில் சுவாமி விவேகானந்தர் பெயரில் ஒரு தெருவுக்கு (கஹய்ங்), 'நஜ்ஹம்ண் யண்ஸ்ங்ந்ஹய்ஹய்க்ஹ ஜ்ஹஹ்' என பெயர் சூட்டப்பட்டது.

தனக்கேற்பட்ட பல தடைகளைத் தகர்ந் தெறிந்து உலகளவில் ஒப்பற்ற ஆன்மிக குரு வாகத் திகழ்ந்தார். இராம காரியமாக இலங்கைக் குச் சென்றபோது ஆஞ்சனேயருக்கு சில தடை கள் ஏற்பட்டன. அவற்றை அவர் எப்படி மதி நுட்பத்துடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர் கொண்டு வெற்றிபெற்றாரோ, அதேபோல் சுவாமி விவேகானந்தரும் வெற்றிக்கொடியை நாட்டினார்.

நாமும் நம் வாழ்வில் தடைகள் ஏற்பட்டால் அதைக்கண்டு மனச் சோர்வடையாமல் எதிர் கொள்ளப் பழகிக்கொள்ளவேண்டும்.

om010223
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe