ஸ்ரீராயரது பரமார்த்த சீடர் அப்பண்ணா வின் பயணம் நெடியதாகவும் கடினமாக வும் இருந்தது. வழியில் காணும் ஒவ்வொரு வரிடமும் சென்று, ஸ்வாமிகளின் நிகழ் வினைக்கூறி, தான் கூறியவற்றை அனைவரிட மும் விளக்கிக் கூறுமாறு கேட்டுக்கொண்டு பயணித்தபடியே இருந்தார்.
""வணக்கம் ஸ்வாமிகளே. அடியேன் வெங்கண்ணன் வந்திருக்கிறேன்.''
""திவான் வெங்கண்ணருக்கு என்னிடம் சொல்ல ஏதுமுண்டா?'' என்றார் ஸ்வாமிகள்.
""ஆம். ஸ்வாமிகளின் நயன திருப்தி காண ஆவலாய் உள்ளேன்.''
""எதற்கு வெங்கண்ணா?''
""தாங்கள் பணித்தபடி ஸ்ரீராயர் அமர்ந்தி ருந்த, தாங்கள் அடையாளம் காண்பித்த கல்லைக்கொண்டு தங்களுக்கான பிருந்தா வன மேடை தயாராகி முடிவுறும் தறுவாயி லுள்ளது ஸ்வாமி. தாங்கள் அதில் ஏதேனும் திருத்தமும் வேறேதாவது செறிவூட்டலும் செய்யப் பணித்தால் சித்தமாயிருக்கிறோம். அதன்பொருட்டு தாங்கள் நேரில் கண்ணுறவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.''
""சரி... புறப்படலாம்'' என்றார் ராயர்.
கைதேர்ந்த சிற்பிகள் ஆங்காங்கே குழுவாக அமர்ந்திருந்து வேலைசெய்து கொண்டிருந்தனர். கல்லுடன் உளியும் சுத்தியலும் மோதும் சத்தம் விடாது ஒருசேர ஒலித்துக்கொண்டிருந்தது. அது தாளலயம் போல் சீராக இருந்தது. விட்டுவிட்டும் பிறகு தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டி ருந்தது. ராகவேந்திர ஸ்வாமிகள் சொற்ப சீடர்களுடன், வெங்கண்ணர் உடன்வர அவ்விடம் சேர்ந்தார். அவரது பார்வை ஒவ்வொரு குழுவிலும் நிலைபெற்று மீண்டது. அருகே சென்று தனது திருக்கரங்களால் அவற்றைத் தொட்டுத் தொட்டு மகிழ்ந்தார். சிலிர்த்தார். "ராமா ராமா ராமா' என்று சொல்லிப் பரவசப்பட்டார்.
பாறையின் கணிசமான பகுதியை அந்த மணல்வெளியில் தனியே சாய்த்து வைத்திருந்தனர். ஸ்ரீராகவேந்திரர் அங்கும் சென்று பாறையைத் தொட்டு வணங்கினார்.
ஒரு காவி வஸ்திரத்தைப் பாறையின்மீது போர்த்தி வணங்கினார். சற்று கண்மூடி தியானித்தவர், ""இங்கு தலைமைச் சிற்பி யார்?'' என்றார்.
மெலிந்த உடலுடன் காணப்பட்ட நடுத்தர வயதுடைய ஒருவர் பவ்யமாக வணங்கினார்.
""ஸ்வாமி... இவர்கள் மூதாதையர் கிருஷ்ண தேவராயரின் கோவில் திருப்பணி செய்தவர்கள். இவர் பெயர் லஷ்மணன். நேர்த்தியான சிற்பி'' என்று வெங்கண்ணர் கூறினார்.
""ஆஹா... பொருத்தமான பெயர் லஷ்மணன். நல்லது நல்லது. சிற்பிகளே, இந்த பெரும் பாறையினைத் தாங்கள் என்ன செய்வதாக உத்தேசம்?'' ""அடியேனின் சிற்றறிவுக்குத் தோன்றியதைச் சொல்கிறேன். ஸ்ரீராமரின் ஸ்பரிசம் படும் பேறுபெற்ற திடமான பாறை. மிகவும் சக்தி வாய்ந்த தேவதையை இதில் கண்டெடுக்கலாம் என்பது எனது தாழ்மையான கருத்து.''
""சரியான யூகம்தான். நான் மானசீகமாய்ப் போற்றும் எனது மூலராமனின் பரமதாசனாக விளங்கும் அந்த வாயுகுமாரனின் கோலத்தை இதனில் படைக்கவேண்டும். அந்த ஆஞ்சனேய திருக்கோலத்தை நான் கண்மூடி அமரும் பிருந்தாவனத்திற்கு எதிரில் அமைக்க வேண்டும் திவான் அவர்களே. அனுதினமும் நான் அவரை வணங்கும்படியான நிலையான தோற்றம் அது...முடியும்தானே?'' என்றார் முறுவலுடன்.
""தங்கள் கட்டளை எங்கள் பாக்கியம்'' என்றார் வெங்கண்ணர்.
""மேலும்...''
""ம்...சொல்லுங்கள்...''
""தாங்கள் முன்பே அறிவுறுத்தியபடி ஸ்ரீமடம் நிர்வகிக்கவும், பணிகள் தொடர்ந்து நடக்கவும் பிராமண குடும்பங்களுக்கான நிரந்தரக்குடில்கள் கட்டிமுடித்தாகிவிட்டன. அதுமட்டுமல்லாது, நிரந்தரமாக அன்னதானம் நடக்கவேண்டுமென்பது சுல்தானின் வேண்டுதல். அதற்கான நிரந்தரக் கூடமும் முடியும் தறுவாயில் இருக்கிறது. இதை எப்போது அர்ப்பணிப்பது என்பதையும் தாங்கள் ஆணையிட்டால்...''
""இனிவரும் காலங்களிலும் அதன் செயல் பாடுகள் இப்படி இப்படி இயங்கவேண்டு மென முன்கூட்டி யோசிக்கும் சுல்தானுக்கு எனது மனமார்ந்த ஆசிகள்'' என்றார் கனிவுட.ன். மேலும், ""இந்த மக்களுக்கான குடில்களையும், போஜன சாலையையும் எனக் குப் பின் பீடம் ஏற்பவர் தீர்மானிக்கட்டும். அதுதானே முறை'' என்று ராயர் கூற, அங்கு கனமான மௌனம் உருவானது. ராயரின் "எனக்குப் பின்' என்ற அந்த வார்த்தை கேட்டு அங்கிருந்த அனைவருமே துயருற்றனர்.
"இதோ, இன்னும் சற்றுத் தொலைவுதான். அவயங்கள் மிகவும் பலமிழந்துவிட்டனவே. குருவே... ராகவேந்திர ஸ்வாமிகளே... உங்கள் சேவைக்காக, உங்கள் திருக்காரியமாகத்தான் நான் இருக்கிறேன். பிச்சாலயா சென்று, கணதாளம் வழியாக நான் திரும்ப இருக்கிறேன். தாங்கள் பிருந்தாவனம் ஏகும்போது நான் அருகிலிருக்க பிரயாசைப்படுகிறேன் என் குருவே. அதை நிறைவேற்றித் தாருங்கள்...' உள்ளுள் பிரார்த்தனை ஓட, கண்களில் கண்ணீர் தானேவழிய, அப்பண்ணா சோர்வைமீறிய ஆத்மபலத்தைத் திரட்டி நடக்கலானார். கெண்டைக்கால் தசை இறுகிவிட்டது. ஒவ்வொரு அடி வைக்கும்போதும் வலி பிராணனை உலுக்கியது. நாவறண்டு, உதடுகள் வெடித்து, நெஞ்சு நிதான சுவாசத்திற்கு ஏங்கியது.
அப்பண்ணா தள்ளாடித் தள்ளாடி நடந்து, தான் மற்றவர்களுக்கு போதிக்கும் நதிக்கரையோரப் பாறையில் மெல்ல மயங்கிக் கவிழ்ந்துவிட்டார். தொலைவே இதைக் கண்ணுற்ற சிலர் ஓடோடி வந்து அப்பண்ணாவைத் தூக்கி, அருகிலிருந்த கயிற்றுக்கட்டிலில் நிதானமாகச் சாய்த்து மல்லாந்து படுக்கவைத்தனர். நதிநீர் முகத்தில் தெளிக்கப்பட, இமைகள் அசைந்தும் அவற்றைத் திறக்க மிகவும் சிரமப்பட்டார். தேனும் பாலும் கலந்து சிறிதே புகட்டப்பட, லேசாக ஸ்திரப்பட்ட அவர் மெல்ல கண் விழித்தார். இருள் சூழ்ந்து இரவாகிவிட்டது. அதற்குள் ஊருக்குள் விˆயம் பரவ, ஆச்சார்யாரைக் காண ஊரே நதியோரம் கூடியது. அவரை இரண்டாவது முறையாகக் கண்டவர்கள் அவர் இன்னும் உருக்குலைந்திருப்பது கண்டு பதறிப்போனார் கள். அப்பண்ணாவின் கண்கள் கூட்டத் தில் எவரையோ தேடியது. வெளிச்சத் திற்குத் தற்காலிகமாய் ஏற்றி வைத்திருந்த தீவட்டிகளின் வெளிச்சத்தில் அனைவரின் உருவமும் துல்லியமாய்த் தெரிந்தாலும் அப்பண்ணாவின் தேடல் மீதமிருந்தது.
""ஸ்வாமி... தாங்கள் யாரைத் தேடுகிறீர்கள்?'' என்றார் பெரியவர் ஒருவர்.

""சீடன் ரகோத்தமன் எங்கே?'' என்றார்.
""கடந்த முறை தாங்கள் இங்கு வந்து சொல்லி, மந்த்ராலயம் சென்று திருப்பணி செய்யுங்கள் என்றவுடனேயே, ஒரு குழுவை அமைத்துக்கொண்டு அவனே தன் தலைமையில் தொண்டுசெய்யக் கிளம்பிவிட்டான் ஆச்சார்யரே'' என்றாள் கூட்டத்திலிருந்த அவனது சகோதரி.
மனது சந்தோˆமானது. தன் சீடன் நிறைவாய்ச் செய்வான் என்ற நம்பிக்கை வந்தது. ""அது சரி... நீங்கள் எப்போது கிளம்பப் போகிறீர்கள்?'' என்றார்.
""நாளை இரவு நாங்கள் அனைவரும் கிளம்பப் போகிறோம்.''
""நல்லது. மிக நல்லது ஜனங்களே. ஒரு மாபெரும் உன்னத நிகழ்வின் அடையாளமாக நாம் திகழப்போகிறோம்.
உங்கள் ஒவ்வொருவரின் கரப்பணி அங்கு நிகழவேண்டும். ராயரின் சஞ்சாரம் நமது கிராமத்தில் நிகழ்ந்திருப்பதால், அவரது பேரருள் இங்கு கனன்று கொண்டேயிருக்கிறது. இந்த மண்ணின் செழுமைக்கும் வளமைக்கும் அதுவே காரணம். எனது ராயருக்கான பயணம் முடியும் தறுவாயிலிருக்கிறது. ராயரின் பிருந்தாவன நிகழ்வின் முழுநேரமும் அவருடனிருக்க வெகுபிரயாசையுடன் வேகமாகப் பயணம் முடிக்கிறேன். இன்னும் ஓரிரு இடங்கள் முடித்து நான் நேரே மந்த்ராலயம் சென்றுவிடுவேன். எனக்கு முன்பாக நீங்கள் அங்கிருக்க வேண்டும்'' என்று சிரமத்துடன் பேசிக் கொண்டிருந்தவர், அசதியினால் மெல்ல கண்ணயர்ந்துவிட்டார். நதியோரக் காற்றின் இதம் பெரியதும் உதவியாக இருந்தது.
அவரை யாரும் தொந்தரவு செய்யாது, அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்து கொண்டு, தங்கள் மரியாதையை வெளிப் படுத்தும்வண்ணம் அவர் துயில் கலையாது மௌனம் காத்தனர்.
ஸ்ரீமடத்து சிற்பக்கூடம் அருகே சிறு குழுவாய் வாளேந்திய குதிரைப் படைசூழ நடுநாயகமாக சுல்தான் அந்த இரவில் வந்ததனால், அனைவரும் பயத்துடனும் வியப்புடனும் கைகட்டி எழுந்து நின்றனர்-
ஒருவரைத் தவிர. அவன் கருமமே கண்ணாக தனது செதுக்கலில் கவனமாயிருக்க, யாரும் சப்தம் செய்யலாகாது என சுல்தான் சைகை செய்துவிட்டு, மெல்ல அவரை நெருங்கினார். மிக நேர்த்தியாக ஒரு அழகான ஆட்டுக்கிடாய்த் தலையினை சிரத்தையுடன் செதுக்கிக்கொண்டிருந்த லஷ்மணனின் செயல், அவர் வீணாகத் தன் உபயோகத்திற்கு விளையாட்டாக ஆட்டுத்தலையினை செதுக்குவதாக எண்ணி சுல்தானின் கோபம் அதிகரித்தது.
""முட்டாளே... மகா உன்னதமான வேளையில் இப்படி மூடத்தனமாய் செய்து நேரத்தை வீணடிக்கிறாயா? இவனுக்கு சவுக்கடி கொடுக்கவேண்டும். யாரங்கே... இவனைத் தூக்கி நிறுத்துங்கள்'' என்றார் இடிகுரலில்!
லஷ்மணன் நடுநடுங்கிப்போனார்.
அவருக்குப் பேச வாய்ப்பளிக்காது காவலர்கள் அவரை இறுகத் தோள்பிடித்துத் தூக்க, அதற்குள் சுல்தான் வந்த விˆயம் கேட்டு, 60 பிராமணக் குடும்பத்தின் குடில்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த திவான் ஓடோடி வந்து லஷ்மணன் முன்பாக நின்றுகொண்டு திவானை வணங்கினார்.
""மன்னிக்கவேண்டும் திவான் அவர்களே. நமது குருராயர் ஸ்வாமி ராகவேந்திரரின் ஆணைப்படியே இவர் நேரம் காலம் பார்க்காது உழைக்கிறான். இவருக்கு தண்டனை தருவது தவறாகிவிடும் மன்னரே...''
சுல்தான் குழம்பிப் போனார்.
""ஸ்வாமிகள் அமரப்போவது பிருந்தாவ னம். அதில் உங்கள் இந்துக் கடவுள்கள் சிற்பம் என்பது பொருந்தும். இங்கு விநோதமாக ஆட்டுக் கிடாய்த் தலை என்பது...''
""மன்னிக்கவேண்டும் சுல்தான் அவர்களே. நம் ராயருக்கு மாஞ்சால எல்லைத் தேவதையான மாஞ்சாலம்மன் காட்சிகொடுத்து இவ்விடம் குடியேற அனுமதியளித்து, அவர் பிருந்தாவனம் எய்தும்போது, அதன் எதிரே ஆட்டுக்கிடாய்த் தலையை நிறுவப் பணித்தாராம். இதுபற்றி இன்று காலை ஸ்வாமிகளுடன் நானும், இதோ இந்த லஷ்மண சிற்பியும் பேசிக்கொண்டிருந்தோம். நாட்கள் குறைவாக இருக்கிறதென்ற காரணத்தால் இரவென்றும் பாராது பொறுப்புணர்வுடன் இடைவிடாது பணிசெய்யும் சிற்பிக்கு நாம் சிறப்பல்லவா செய்யவேண்டும்? என் கருத்து தவறென்றால் மன்னிக்கவேண்டும்.''
""ஆஹா...எப்பேற்பட்ட தவறிழைக்கவிருந் தேன். நல்ல பணியாளைத் தண்டிக்கவிருந் தேனே. லஷ்மண சிற்பி... ஸ்வாமிகள் மீதிருக்கும் அளவற்ற பக்திகாரணமாக, நீர் அசிரத்தையாக இருக்கிறீர் என்று தவறாக எண்ணிவிட்டேன். திவான்... இந்த சிற்பிக்கு அரண்மனை மரியாதை செய்து அளவற்ற பொன்னும் மணியும் கொடுத்துக் கௌரவம் செய்யுங்கள். சிற்பியே, ஏதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம்...''
திவானுக்கு சுல்தான்மீதான மரியாதை இன்னும் அதிகமானது. ராயர்மீதான பிரியத்தை இச்சம்பவம் மேலோங்கக் காட்டியதாக எண்ணி மகிழ்ந்தார்.
ராயர் தினசரி தன் அன்றாட பூஜா காரியங்களையும், நித்யானுஷ்டானங் களையும் உபதேசங்களையும் நேரந்தவறாது செய்துகொண்டு, தரிசிக்க வருவோருக்கும், வேண்டுதல் புரிவோருக்கும் புன்னகை மாறாது மந்த்ராட்சதை கொடுத்து ஆசிர்வதித்து அருள்புரிந்த வண்ணமிருந்தார்.
ஸ்ரீராகவேந்திரரின் பூர்வாஸ்ரம சகோதரரின் பேரனான வெங்கண்ணாச்சார் யார், ராயரின் ஸ்ரீமடத்தில் பயின்று முதன்மை மாணாக்கராகத் திகழ்கிறவர். அவர் ராயரின் முன்பாக வணங்கி நின்றார்.
""என்ன வெங்கண்ணா?''
""திவான் அவர்கள் ஒரு பெரும் பட்டியல் அனுப்பியுள்ளார்கள் ஸ்வாமி.''
""ம். என்னப்பா இருக்கி றது அதில்?''
""திருநிகழ்வின்போது தேவைப்படும் வாசனைப் பொடிகள், மஞ்சள், சந்தனம், பல வாசனை மலர்கள் மற்றும் மக்கள் தங்கி இளைப்பாற கீற்றுக்கொட்டகைகள், அவர்கள் வயிறார உண்ணவேண்டி அரிசி, தானியம், பழ வகைகள் என்று வரையறுத்திருக்கிறார்
கள். பட்டியலில் கிடைக்காதவற்றைக் கொண்டுவந்து சேர்க்க, பலரை குதிரையுடன் சென்று உடனடியாகக் கொண்டுவருமாறு அவசர ஆணை பிறப்பித்து அனுப்பியுள்ளார். அதுமட்டுமின்றி, அறுபது பிராமணக் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் மாதந்தோறும் அரண்மனை யிலிருந்து அனுப்பிவைக்க, இதற்கென்றே ஓர் அதிகாரியை நியமித்தும் உத்தரவிட்டிருக்கிறார் சுல்தான் அவர்கள்...'' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, திவானும் அங்கு வந்து சுவாமிக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் தெரிவித்து வணங்கி, கடந்த இரவு திவான் ஸ்ரீமடம் வந்துபோன நிகழ்வினைத் தெரிவிக்க, ஸ்வாமிகள் புன்முறுவலானார்.
""எனது பரிபூரண ஆசியினை மன்னருக்குச் சொல்லுங்கள். என்மீது அவர்கொண்ட அளவற்ற பக்தி என் மனதுக்கு உவகையாக இருக்கிறது. நல்லது திவான் அவர்களே. இதோ, என் எதிரிலிருக்கும் வெங்கண்ணாச்சார்யார் சகலமும் இங்கு என்னிடம் கற்றவர். எனக்குப் பிறகு ஸ்ரீமடத்துப் பொறுப்பேற்று நடத்தி, ஸ்ரீமூலராமனின் நித்யபூஜைகளைத் தவறாது கடைப்பிடித்து, நித்யானுஷ்டானங்களை நிறைவேற்றும் தகுதியும் நேர்மையும் கொண்ட இவருக்கு ஸ்ரீயோகீந்திர தீர்த்தர் என்ற தீட்சா நாமம் சூட்டி, பீடத்துப் பொறுப்பளிக்க ஸ்ரீஹரி பணித்துள்ளார். என்மீது எவ்வளவு பக்தியும் பரிவும் மரியாதையும் காட்டு கிறீர்களோ, அவ்வளவும் யோகீந் திரருக்கும் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். என்ன திவான் அவர் களே, செய்வீர்களா?''
""உத்தரவு ஸ்வாமிகளே..'' என்றவரின் கண்கள் பனித்தன. வெங்கண்ணர் உதடு மடித்துத் தன் துயரைக் கட்டுப்படுத்த முயன்றார்.
அப்பண்ணா மெல்லக் கண்விழித்தார். ஜனங்களும் சட்டென்று எழுந்துநின்றனர்.
விடிந்துவிட்டதை உணர்ந்தவர் உடனடியாகப் பதற்றப்பட்டார்.
""அடடா! இரவு கடந்தும் வெகு நேரம் தூங்கிவிட்டேனே. என்னை எழுப்பிவிட லாகாதா?'' என்றவர் தள்ளாடி எழுந்தார். உடனடியாக நதியில் மூழ்கி எழுந்தார். அவசர கதியில் ஈர உடையுடன் வந்தவர், ""அன்பான வர்களே, நான் மந்த்ராலயத்தில் உங்களை சந்திக்கிறேன். வருகிறேன்'' என்றவர், வேகவேக மாக ஓட்ட நடையில் முன்னேறலானார்.
"அடடா... நேரமாகிவிட்டதே. இன்றிரவுக் குள் மந்த்ராலயம் சென்றுவிடவேண்டும். வழியிலிருக்கும் கிராமங்களில் தகவல் சொல்லிக்கொண்டே போய்விடவேண்டும்' என்று நினைத்தபடியே ஓடலானார்.
அன்று உலகத்தின் உன்னதமான நாள். வாழ்வின் அன்றைய பொழுதில் ஸ்ரீராக வேந்திரரைப் பரிபூரண தரிசனம் கண்ட ஒவ்வொருவருமே பாக்கியசாலிகள்! அன்றைய நாள் விரோதிகிருது வருடம், 1,593, ஆவணி மாதம், கிருஷ்ணபட்சம், துவிதியைத் திதி, வியாழக்கிழமை அதிகாலை நேரம். இவை அந்த நாளை உன்னதமாக்கிக்கொண்டன. காரணம், ஸ்ரீராகவேந்திரர் தனது புண்ணிய தேகத்துடன் ஜீவபிருந்தாவனம் எய்தும் நாளாகும்.
இருள்பிரியாத அந்தக் காலை நேரத்தி லேயே துங்கபத்ரா நதிக்கரையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நதி கடலில் சங்கமிக்கும் என்பது போய், மக்கள் கடலாய் நதியில் தங்களை சங்கமித்துக்கொண்டு புனித நீராடி, ஸ்ரீமடத்தில் பூஜை நடக்கும் திடலில் அமரத் தொடங்கினர். "இன்றுதான்... இன்று மட்டும்தான் நம் ராகவேந்திரரை ஜீவனோடு தரிசிக்கமுடியும். நாளையிலிருந்து அந்த தேக தரிசனம் எத்தனை தவமிருந்தாலும் கிடைக்காது' என்ற எண்ணம் மேலோங்க, முண்டியடித்தனர் ஜனங்கள். ஒவ்வொருவர் மனதிலும் அழுத்தம் கூடிக்கொண்டேயிருந்தது.
பொன்னிறக் கதிர்களால் சூரியன் அன்று மந்த்ராலயத்தை மகோன்னதமாக்கி விட்டிருந் தான். ஸ்ரீராயர் ஜீவபிருந்தம் எய்தும் பீடம் சுற்றி மக்கள் சற்றுத் தள்ளி அமர ஏற்பாடாகி யிருந்தது. பெருங்கற்களால் கனமான கல் பலகை கள் அழகுற வளைவுகளுடன் செதுக்கப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. பூமிக்குள் படிகளுடன் கூடிய, சற்று இறக்கமாய் அமைக்கப்பட்ட இடத்தினுள்ளேதான் ஸ்வாமிகள் கண்மூடி அமரப்போகிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பலர், ஸ்வாமிகள் நடந்துவரும் பாதை இதுவாக இருக்கலாம் என்ற அனுமானத்தில் இடம்பிடித்து அமர போட்டிபோட்டனர்.
ஸ்வாமிகள் எல்லாருக்கும் முன்பாகவே தனது துங்கா ஸ்நானம் முடித்து பூஜைகளையும் ஜெபங்களையும் பூர்த்தியாக்கியிருந்தார். ஸ்ரீமடத்திலிருந்து மெல்ல வெளியில் வந்தார்.
நெடிய தோற்றத்தில், சிவந்த சூரியன் காவி போர்த்தி நடந்து வந்தது. கழுத்தில் மணிமாலைகள் அசைந்தாட, மேனி முழுக்க சந்தனத்தால் திருச்சின்னங்கள் இடப்பட்டு, புன்னகையோடு எந்த சலனமுமின்றி, மக்கள் கூட்டத்தின் நடுவில் இணைந்துகொண்டார்.
மக்கள் கண்ணீருடன் கோˆமிட்டனர்.
"ஓம் ஸ்ரீராகவேந்திராய நமஹ, ஓம் ஸ்ரீராகவேந்தி ராய நமஹ' என்னும் கோˆம் விண்ணும் குனிந்து பார்க்குமளவு உயர்ந்தெழுந்தது!
பாதக்குறடுகள் இன்றி தனது தாமரைப் பாதங்களால் நடந்து வந்தவர், எல்லாரையும் இருகரம் தூக்கி ஆசிர்வதித்தார். கூட்டம் மௌனமானது. ஸ்வாமிகள் உரையாற்றப் போகிறார் என்ற குறிப்பறிந்து சட்டென்று அமைதியானார்கள்.
""என் அருமை ஜனங்களே. இவ்வுலகில் ஜனிக்கும் ஒவ்வொரு ஜீவனுமே பவித்ரமானது.
ஜீவன் என்பது பாரபட்சமின்றி தாவரம், ஜந்துகள், விலங்குகள் என்று அனைத்துமே ஆண்டவன் படைப்பில் சரிசமமானவை. ஆனால் ஒன்றைச் சார்ந்து ஒன்றிருந்து இயங்கி, அதன்மூலம் உலகியல் நடைபெற இறைவன் நியதி வகுத்திருக்கிறான். நியதி மீறப்படும்போது சத்தியம் தவறுகிறது. நேர்மை அங்கு காணாமல் போய்விடுகிறது. தர்மம் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
அதனால் அக்கிரமமும் பித்தலாட்டமும் பெருகி வஞ்சகம், சூழ்ச்சிகளால் ஒருவரையொருவர் அழித்துக்கொள்ள முற்படுகின்றனர். அதுவும் கலி நடந்துகொண்டிருப்பதால் இது இன்னும் அதிகமே. புராண, இதிகாச காலங்களில் சத்தியத்தையும் தர்மத்தையும் காக்க ஞானி களும் முனிவர்களும் யோகிகளும் இருந்தனர்.
யாகங்களும் ஹோமங்களும் மக்களின் க்ஷேமத்துக்காக நடத்தப்பட்டன. பல பிரயாசைகளை மக்களுக்காக முனிவர்களும் அவதார புருˆர்களும் தங்களை வருத்திச் செய்தனர். லோக க்ஷேமமே அவர்களின் எண்ணமாக இருந்தது. யாகங்களின் தேவதைகளை மந்திரத்தால் அழைத்து ஆகுதி கொடுக்கப்பட்டு, தேவதைகள் திருப்திப் படுத்தப்பட்டனர். வேதங்கள் வாழ்ந்தன. வளர்க்கப்பட்டன. ஆனால், இப்போது அத்த கைய முனிபுங்கவர்கள் இல்லை. வேதம் வளர்க்க என்போன்றோர் வந்து மக்களுக்கு போதிக்க இனி அந்த ஸ்ரீஹரிதான் அருளிச் செய்தல் வேண்டும். ஆரம்பம் என்பது இருக்கையில் முடிவும் இருக்கிறதென்பது நிதர்சனம். என் பிரிய ஜனங்களே, எனக்கான கால நிர்ணயத்தை நான் நிர்மாணிக்கும் தகுதியையும் சக்தியினையும் அந்த மூலராமன் எனக்கருளியுள்ளான். உங்கள் நலனுக்காக, உங்கள் க்ஷேமத்திற்காகத்தான் அந்த ஸ்ரீஹரி என்னை ஜனிக்கச் செய்துள்ளான். பிறந்தவர் மறையத்தான் வேண்டும். அந்த புராண புருˆர் களும் இதில் விதிவிலக்கல்ல என்னும்போது, நானும் அதற்குப் பொருந்துபவன்தானே?
இதோ, என் பிரதான மாணவரான வெங்கண்ணாச்சார்யார் இனி இந்த பீடமேற்பார். அவருக்கு ஸ்ரீயோகீந்திர தீர்த்தர் என்ற நாமமளித்து, இன்றிலிருந்து ஸ்ரீமடக் காரியங்களுக்கு அவர் பொறுப் பேற்கிறார்'' என்ற ஸ்ரீராகவேந்திரர் அவருக்கு தனக்குப் பின் பட்டமேற்க வைத்து, அதற்கான அனைத்து நிகழ்வுகளையும் மக்கள் முன்னிலையில் செய்வித்தார். யோகீந்திர தீர்த்தர் ஸ்ரீராகவேந்திரர் பாதம் பணிந்து எழ, அவருக்கு ராயரால் மந்த்ராட்சதை அளிக்கப் பட்டது. இருகரம் கூப்பி கண்கலங்க ஸ்ரீயோகீந்திர தீர்த்தர் ஸ்வாமிகள் முன்நின்றி ருக்க, இவ்வளவையும் தொலைவில் இருந்த வாறு லஷ்மி நாராயணன் கண்கலங்கப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"போய்வாருங்கள்' என்று கூற, இது தினசரி நிகழ்வல்லவே ஸ்வாமி. நீங்கள் எனது பூர்வாஸ்ரம தந்தை. என்றாலும் "அப்பா' என்று வாய்விட்டு அழைக்கமுடியாத துர்பாக்கிய நிலையிலிருக்கும் என் நிலை இனி யாருக்கும் வரலாகாது. ஏதோ, நடமாடும் தங்களை ஜீவனோடு பார்த்துக்கொண்டிருந்தேன். இப்போது இன்றோடு அதுவுமில்லை என்ற நிலையில் நான் அநாதையல்லவா ஆகப்போகிறேன். என் புரியாத வயதில் அன்னை இறந்தது எனக்கு உணரப்படாத பருவம். இன்றோ ரத்தமும் சதையுமாக, என் கண் எதிரிலேயே என் தந்தை ஜீவனுடன் பிருந்தாவனப் பிரவேசம் செய்வதும், அதை நான் கண்களால் காண்பதும் எப்பேற்பட்ட துர்பாக்கிய நிலை. ஹே ராமா... உன்னையே பூஜிக்கும் ஸ்ரீராயரின் பதியன் நான். பதியனுக்கென்று ஒரு தண்டனையுண்டோ ராகவனே. என் குருராயர் என்மீது நயன ஸ்பரிசம் செய்தாவது எனக்குத் திருப்தி தரலாகாதா...' என உள்ளுள் அழ, அவன் தேகம் குலுங்கத் தொடங்கியதைத் தொலைவிலிருந்து கண்ணுற்ற திவான் வேகமாகச் சென்று அவன் தோள்பற்றி தன் தோள் சாய்த்தார்.
விரைந்து வந்துகொண்டிருந்த அப் பண்ணாவை நதிப் பிரவாகம் தடை போட்டது.
நதி கடந்தாலன்றி மந்த்ராலயம் செல்லமுடியாத படிக்கு பெரும் பிரவாகம். எங்கும் நீர்ப்பரவல். பொங்கி சுழித்து வேக மெடுத்த நதி நோக்கி இருகரம் கூப்பி வேண்டினார்.
""ஹே துங்கபத்ரா! புண்ணிய நதியே. கங்கைக்கு இணையானவளே. என் குரு ராகவேந்திரர் மேனி ஸ்பரிசித்து மேலும் புண்ணியம் சேர்த்துக்கொண்டு அமைதியான வழி சென்றவளே... இப்படி என்னை வழி மறிப்பது நியாயமா? ம்... வழிவிடு. நான் என் குருவை தரிசிக்க கடைசி நொடியிலாவது செல்ல வேண்டும்'' என வேண்டினார். ம்ஹூம். அதன் ஆக்ரோˆ சலனத்தில் ஒரு மாற்றமும் இல்லை.
""இந்த எளிய பிராமணன் கொண்ட அசாத் திய குருபக்தி உண்மையானால், எனது குரு பயணம் சத்தியமானது என்றால், நான் இதன்படிக்கு அவரை சரணாகதிசெய்து நதியே உன்னுள் நுழைகிறேன். ஒன்று எனக்கு வழிவிடு. அல்லது என்னை வழித்து துடைத் தெறிந்து விடு'' என அப்பண்ணா நதியில் இறங்கி விட்டார். ஸ்ரீராகவேந்திரரிடம் அவர் மனமும் எண்ணங்களும் சரணாகதியாகிவிட, அவரது திருவாயிலிருந்து-
"ஸ்ரீ பூர்ணபோத குரு தீர்த்த பயோப்தி பாரா
காமாரி மாˆ விˆமாˆ சிரஸ்ரு சந்தீ!'
என்ற குரு ஸ்தோத்திரம் ஆரம்பமானது.
மளமளவென்று அவர் நதியில் இறங்கி நடக்க, அந்த சுத்த சத்திய பிராமணனின் வேண்டுகோளுக்கு நதி பணிந்தது. தன்னை இரண்டாகப் பிரித்துக்கொண்டு வழிவிட, மூடிய விழிகள் மூடியபடியே, நதி பிளந்ததும் தெரியாது நடக்கலானார் அப்பண்ணா. அதுவே படிப்படியே ஓட்டமானது.
அங்கே ஸ்ரீராகவேந்திரர் தன் திருவிழி மலர்ந்தார். குறிப்பறிந்து யோகீந்திரர் பவ்யமாகக் குனிந்து வாய்பொத்திக் கேட்க, ஸ்ரீராகவேந்திரர் அவரிடம் கூறியதைக் கேட்டவர் கண்ணீர்வழிய நிமிர்ந்தார். ராகவேந்திரர் தன் சிஷ்யர்களை அழைத்து தான் எழுதிய பாஷ்யங்களையும், ஸ்ரீ மத்வர் அருளிய கிரந்தங்களையும் விளக்க நூல்களையும் ஒருசேரப் பாராயணம் செய்யக் கூற, ஆச்சார்யார் அனைவரும் சப்தமாய்ப் பாராயணம் செய்ய, அங்கு பெருத்த வேதகோˆமே எழுந்தது. மந்த்ராலயம் பெரும் நாம அதிர்வலையில் திகழ்ந்தது. ஸ்ரீயோகீந்திர தீர்த்தர் ஸ்ரீராகவேந்திரரின் பிருந்தவனம் அமையப்பெற்ற இடத்துக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கும் கூற, அவர் களும் குழிக்குள் போடவேண்டிய மங்கலப் பொருள்களைப்போட்டு வேத கோˆத்தில் இணைந்துகொண்டனர்.
1,200 சாளக்கிரமங்கள் பல தாம்பாளங்களில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. ஸ்வாமி கள் பிருந்தாவனத்தில் இறங்கும்வகையில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த அந்தப் பாதையின் இருமருங்கிலும் ஸ்ரீராகவேந்திர ருக்கு பிருந்தாவன சேவையாற்றவும், பூஜைக் காரியங்களுக்காகவும் நியமிக்கப்பட்ட 60 பிராமணக் குடும்பத்தார் நின்றிருந்தனர். அழகுற மெழுகிக் கோலமிடப்பட்டிருந்த அந்தப் பாதை முழுக்கப் பூத்தூவி அழகுற வைத்திருந்தனர்.
அங்கும் வேதகோˆம் எழ, ஸ்வாமிகளின் பிருந்தாவனப் பிரவேசம் நிகழ்வதற்கான நேரம் நெருங்கியது.
ஸ்வாமிகள் ஸ்ரீமூலராமப் பூஜைக்கு ஆயத்தமாக, யோகீந்திரர் உடனிருந்து உதவினார். ஸ்ரீமூலராமர், ஸ்ரீஜெயராமர், ஸ்ரீஆஞ்சனேயர் மற்றும் தேவதா சக்தியாகத் திகழும் சாளக்கிரமங்களையும் அடுக்கி தனது பூஜையினைச் செய்யலானார். ஏனோ அன்று பூஜையிலிருந்த கோபாலகிருஷ்ண விக்ரகம் தேஜோமயமாக விளங்கியது. ஸ்வாமிகள் செய்யும் கடைசிப்பூஜை இதுவென்பதால் அனைவரின் கவனமும் அங்கே ஒருங்கே குவிந்திருக்க, ஸ்வாமிகள் தூபதீபம் காட்டி தனது பூஜையை நிறைவுசெய்தார். பின் மெல்ல எழுந்திருந்து பிருந்தாவனம் அருகே செல்ல, மக்கள் "ஹே' என்று கூக்குரலிட்டு "ஸ்ரீராகவேந்தி ராய நமஹ' என்று கோˆமிட கோˆமிட, சூழ்நிலையில் மாற்றம் தோன்றியது.
அருகிலிருந்த வெங்கண்ணரிடமும் யோகீந்திரரிடமும் ஸ்ரீராகவேந்திரர், தான் பிருந்தாவனத்துள் அமர்ந்து, தன் கைகளில் ஸ்ரீகிருஷ்ண துவைபாயனர் வான மார்க்கத்தில் அருளிய ஜெபமாலையுடன் நிஷ்டையில் ஆழ்வேன் என்றும், கையில் உருளும் ஜெப மாலை நின்று பின் விழுந்தவுடன் பிருந்தா வனத்தை பந்தம் செய்துவிடுமாறும் கூறியவர், பிறகு மறுபடி மூலராமப் பூஜை நடந்த இடத் திற்கு வந்து, முதலில் யோகீந்திரருக்கும் பிறகு வெங்கண்ணருக்கும் மந்த்ராட்சதை கொடுத்து ஆசிர்வதிக்க, பிறகு நவாப் சித்திக் மசூத்கானும் மந்த்ராட்சதை பெற்றுக்கொள்ள, தாங்கொணா துயரத்தில் நவாப் சாஷ்டாங்கமாக விழுந்து அழுது தொழுதார். பிறகு அனைவருக்கும் தன் திருக்கரங்களாலேயே மந்த்ராட்சதை கொடுக்க, லஷ்மி நாராயணனும் வரிசையில் பெற்றுக்கொள்ள, ஒரு கணம் ஸ்ரீராயர் பார்வை அவன்மீது பட்டாலும், அதில் சிறிதும் சலனமில்லை. மாறாக, லஷ்மி நாராயணனுக்கு தேகத் தில் சிலிர்ப்பு பெருக்கெடுத்தது. அருகிலிருந்த சீடனிடம் ஸ்ரீராயர் சமிக்ஞை செய்ய, அவன் ஓடோடிச்சென்று வீணை கொணர்ந்து சமர்ப்பித்தான். ஸ்ரீராகவேந்திரர் அதை மெல்ல மடியில் கிடத்தி கண்மூடி மீட்டலானார். "இந்து எனகே கோவிந்தா' என அவரே ஸ்ரீஹரியின்மீது பூபாள ராகத்தில் பாடிய பாடல் அந்தப் பிராந்தியம் முழுக்க இசைக்கவசத்தால் மூடியது. கிளிகளும் குயில்களும் மயில்களும் நெருங்கிவந்து உருகின.
"ஹே முகுந்தா! இன்று உனது திவ்ய பாதங்களைக் காண்பித்து அருள்வாய்' என பாடிக்கொண்டே ஸ்ரீஹரியின் பாதத்தை மனதுள் தரிசிக்க... அப்போது அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பூஜையில் வைக்கப்பட்டிருந்த கோபாலகிருஷ்ண விக்ரகம் நர்த்தனமாடியது. நின்றது, தவழ்ந்தது, சுழன்றது. இசைக்கேற்ப அதன் அசைவுகள் கூடிக் காண்போரை ஆச்சரியப்படுத்த, வீணா கானம் முடிவுக்குவர ஸ்ரீராகவேந்திரரின் திருநயனங்கள் திறந்தன.
""மஹாஜனங்களே, யாரும் அழக் கூடாது. நான் உங்களைவிட்டு எங்கும் செல்லப் போவதில்லை. இந்த கல்கூட்டில் அமர்ந்து தவமிருப்பேன். இனி என்னை நாடிவருவோரின் துயர்துடைப்பேன். இன்றைய நாளை இனி வருடந்தோறும் சமாராதனையாகக் கொண்டாடுங்கள். சந்தோஷமாக போஜனமருந்தி இல்லம் திரும்புங்கள். இங்கு இனிவரும் பொதுஜனங்களுக்காக எப்போதும் போஜனம் இருக்கும். என் மூலராமன் உடனிருந்து ஆசிர்வதிப்பான்'' என்றுகூறி, மக்களுக்கு மேலும் நல்லுபதேசங்களை அருளியவர் உறுதியுடன் எழுந்து நிற்க, இறுதிக்கட்டம் வந்ததை மக்கள் உணர்ந்து "ஹோ' என்று கூக்குரலிடத் தொடங்கினர். விண்ணைமுட்டும் வேதகோஷம் எழுந்தது. ஸ்ரீராகவேந்திரர் யோகீந்திரரின் கரம் பிடித்து பிருந்தாவனம் நோக்கி நடக்கலானார்.
மங்கல வாத்தியம் முழங்க, கந்தம் கமழும் பொடிகளும் மலர்களும் தூவப்பட்டன.
ஸ்ரீராகவேந்திரர் மக்களைப் பார்த்தவண்ண மாய் நடந்தவர் கண்களில் கருணையும் அமைதி யும் மிகுந்திருந்தது. "ஓம் நமோ நாராயணா' என்று அவர் உச்சரித்துக்கொண்டே நடந்து வந்ததை யோகீந்திரர் செவிமடுத்திருந்தார். பிருந்தாவனமருகே வந்தவர் தோளில் தண்டம் ஏந்தி, கையில் துளசி மாலையுடன் கமண்டலத் தையும் தாங்கி, தெற்கு முகமாக பிருந்தா வனத்துள் இறங்கத் துவங்கி, கிழக்கு நோக்கிப் பத்மாசனமிட்டு அமர்ந்தார். உதடுகள் ஸ்ரீஹரி யின் நாமாவை உச்சரிக்க, நடுவிரல்களுக்கும் கட்டை விரல்களுக்குமிடையில் ஜெபமாலை உருளத் தொடங்க, உள்ளே எட்டிப் பார்த்த லஷ்மி நாராயணன் துக்கம் தாளாது உடைந்து அழுதான். வெங்கண்ணர் முகம் பொத்திக்கொள்ள, யோகீந்திரரும் தன்னிலை மறந்து தனது காவி வஸ்திரத்தால் வாய் பொத்தி அழுகையை அடக்கலானார்.
பிராந்தியமே அமைதி யாய் இருந்தது. மாலை உருண்டுகொண்டே இருந் தது. மணிகள் நகர்ந்து கொண்டே இருக்க, ஸ்ரீராக வேந்திரர் திருக்கரம் உருளாது நிறுத்தம் கண்டது. மாலை நின்று பின் விழுந்தது. அழுகையும் விம்மலும் வெடித்தெழ, சட்டென்று சுதாரித்த வெங்கண்ணர், கற்பலகைகள் கொண்டு பிருந்தாவனத்தை மூட ஆரம்பித்தார். மளமளவென்று மூடி பந்தம் செய்தபிறகு 1,200 சாளக்கிரமங்கள் பிருந்தாவனத்தின்மேல் பரப்பப்பட்டன. பிறகு அதற்கும் மேலாக ஸ்ரீமூலராமர் விக்ரகங்கள் வரிசையாக அடுக்கப் பட்டு தூப தீபாராதனையைக் காட்டி, ஸ்ரீயோகீந்திர தீர்த்தர் தன் குருவுக்கான முதல் சமர்ப்பணப் பூஜையைச் செய்துமுடித்தார். மகா அமைதியான அந்த நேரத்தில்...
""ஐயோ ஸ்வாமி. என்ன இது. என்னைவிட்டுப் போய்விட்டீர்களா!'' என்ற ஓலம் எழ, அங்கு ஈரம் சொட்ட உடலெங்கும் கீறலுடன் பாதங்கள் வெடித்த நிலையில், அழுத கோலத்தில் அப்பண்ணாவைக் கண்டவர்களின் ஓலம் இன்னும் அதிகமானது.
""ஐயோ! என் ஐயனே! போய் வா அப்பண்ணா என்று அருளினீர்களே. இப்போது உங்களைப் பார்க்கக் கூடாத படி கண்மூடி பிருந்தாவனத்துள் அமர்ந்து விட்டீர்களே... நியாயமா குருவே!'' என்று அழுதவர், தான் கூறிவந்த ஸ்லோகத்தை "கீர்த்திர் திக்விகிதா விபூதிரதுலா' என முடிக்கமுடியாது விம்மிநிற்க, ஸ்ரீராகவேந்திரர் குரல் பிருந்தாவனத்துள்ளிருந்து, "ஸாஷீ ஹயாஸ் யோத்ரஹி' என்று கணீரென்று எழுந்து நிறைவுசெய்தது. இந்த திவ்ய சுலோகத்தின் மேன்மைகளுக்கு ஸ்ரீஹரியின் வித்யாரூபமான ஹயக்ரீவரே சாட்சி என்று தனது வார்த்தைகளால் ஆசிர்வதித்து நிறைவு செய்தார். ஸ்ரீராகவேந்திரர் அப்பண்ணாவை அன்றே மேம்படுத்தி உலகின் முதல் உன்னதமாக்கிவிட்டார். பிருந்தாவனமருகே அழுதுநின்ற அப்பண்ணா பிறகு அங்கேயே கண்மூடி அமர்ந்துவிட்டார். அவர் மனம் ஸ்ரீராகவேந்திரரை முதலில் கண்டதுமுதல் ஆரம்பித்து, அவருடன் சஞ்சரித்த நிகழ்வுகளில் பயணப்பட்டுக் கொண்டி ருந்தது.
"பூஜ்யாய ராகவேந்திராய
சத்யதர்ம ரதா யஸா பஜதாம்
கல்ப விருட்சாய நமதாம்
காமதேனவே'
என அவர் ராகவேந்திரரைப் போற்றும் சுலோகம், இன்றும் ராகவேந்திரரை வணங்கும் ஒவ்வொரு பக்தனுக்கும் அவர் அர்ப்பணித்தது. இந்த ஜெகம் முழுக்கப் பரவியிருக்கும் ஜகத்குரு ராகவேந்திரர் பக்தர்களின் உதடுகள் இந்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டு தானிருக்கும்.
"ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ!
மூகோபியத் பிரஸாதன முகுந்த சயனாயதே
ராஜராஜாயதே ரிக்தோ ராகவேந்ரம்
தமாஸ்ரயே'
ஸ்ரீ கிருஷ்ணார்ப்பண மஸ்து.
குருவே சரணம் குருவே போற்றி!
(நிறைந்தது)