மதம் கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து, தேசம் கடந்து நாம் வேறுபட்டிருந்தாலும், அனைவரும் பசி என்னும் நேர்க்கோட்டில்தான் வரவேண்டியிருக்கிறது. உணவும் ருசியும் இடத்திற்கு இடம் மாறினாலும், பட்டினி கிடப்பவன் அறிமுகமில்லாத உணவேயானாலும், ஏதாவது கிடைத்ததே என்று அவசரத்தேவை கருதி ஏற்றேயாகவேண்டும். காரணம் பசி. வெறுமையான வயிறு பசியைப் பிரசவிக்கும்போது ஒரு மனிதனுக்கு வேறெதிலும் மனம் செல்லாது.
இன்றியமையாததான அந்த உணவு சகலருக்கும் தேவையென்று உணர்ந்து, அது அனைவருக்கும் கிடைக்க வழிசெய்பவனே ஞானவான். அதிலும் அவன் ஒரு நாட்டின் மன்னனாய் அமைந்துவிட்டால் உண்மையிலேயே அம்மக்கள் அதிர்ஷ்டசாலிகளே.
அந்த உயர்ந்த மனநிலையில் சுல்தான் இருந்தார். ஸ்ரீராகவேந்திரர்மீது அளவற்ற அபிமானமும் பக்தியும் கொண்டிருந்ததனால், சுவாமிகளை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களுக்கும் வயிறார உணவளிக்க அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளும் மன்னரை நினைத்து சுவாமிகள் ராகவேந்திரர் மனம் மகிழ்ந்தார். தன்மீது அபிமானம் கொண்ட சுல்தான், வெங்கண்ணா, அணுக்க பக்தன் அப்பண்ணா ஆகியோரால் மட்டுமே தனது பிருந்தாவனப் பிரவேச நிகழ்ச்சியை சீராக முன்னெடுத்துச் செல்லமுடியும் என்ற கருத்தி னால், தனது கவனத்தை தன் பூர்வாசிரம உறவினர்கள்மீது செலுத்தினார்.
""சுவாமிகளுக்கு வணக்கம். தமிழகத்திலிருந்து தங்களைக்காண குழுவாக சிலர் வந்திருக்கின்றனர். அவர்களுடன் தங்களின் பூர்வாசிரம...'' என அந்த சீடன் முடிக்கும் முன்பாக, "வரச் சொல்லப்பா அனைவரையும்' என்றார் சுவாமிகள்.
ஒரே ஒருவர் மட்டுமே சுவாமிகளைக்காண முதலில் வந்தார். ஆம் சுவாமிகளின் பூர்வாசிர மத் தமயனார் குருராஜன்தான் அவர். மிகவும் வயதாகித் தளர்ந்திருந்தார் அவர். கைகள் ஒரு சிறு துணிமூட்டையையும், கண்கள் ஏதோ சோகத்தையும் சுமந்திருந்தன.
""வாருங்கள் வாருங்கள். மகனைப் பார்த்து வெகுநாட்கள் ஆனபடியால் பார்த்துச் செல்ல வந்திருக்கிறீர்கள் என்று தோன்று கிறது.''
""ஏன்... நான் சுவாமிகளைப் பார்க்க வரக் கூடாதா? மேலும், காதில் பட்ட செய்தி கதிகலங்கச் செய்துவிட்டது. மதுரையில் இருந்து எனது அத்திம்பேர் குடும்பத்தாரும் வேங்கடம்மாளும் பட்ட மனவேதனை சொல்லிமாளாது. உண்மை நிலவரமறிய ஓடோடி வந்தேன்.''
""அப்படி என்ன கேள்விப்பட்டீர்கள்?''
""தாங்கள் ஜீவ பிருந்தாவனம் ஏகுவதாக...''
""உண்மைதான்'' என்றார் சுவாமிகள் மென்மையாக.
குருராஜன் நிலை குலைந்து போனார்.
""என்ன இது... ஸ்ரீஹரியே! இது நியாயமா? நான் கேட்பது உண்மைதானா?
மூத்தவர் இருவர் உயிரோடிருக்க, எங்களுக்கு முன்பாக...'' என அவர் முடிக்க முடியாமல், தேகம் குலுங்க விம்மலானார். சில நிமிடங்கள் கரைந்தன.
ஸ்ரீராகவேந்திரர் மௌனம் கலைத்தார்.
""முன்னவர்கள் நீங்கள். ஏதும் அறியாத தில்லை. லோக தர்மமென்று ஒன்றுண்டு. அது அனைவருக்கும் பொதுவானது. மத்வ பீடத்தின் தலைமை ஏற்றிருந்தாலும் நானும் மனித தர்மத்திற்கு உட்படவே வேண்டும். இந்த தேகத்திற்கு எப்படி ஜனனம் உண்டோ அப்படியே முடிவும் உண்டு. எம்போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தமக்கான ஆயுளை நிர்ண யிக்கும் மனோ நிலை யையும், சக்தியையும் அந்த மூலராமன் அறிவுறுத்துவான்.
அதன்படியே எனக் கான இறுதி நாளை உறுதி செய்து, அந்தத் தகவலை அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுசேர்க்கவும் ஏற்பாடு செய்துள்ளேன். இதில் அதிகப் பிரயாசை அப்பண்ணாவுக்கே உண்டு. நான் உரிய நாளில் பிருந்தாவனம் ஏகுவதை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் சொல்லாமல் மௌன நாடகம் செய்ய எண்ணமில்லை. எல்லாரும் என்மீது அளவற்ற பக்தியும் பிரியமும் கொண்டவர்கள். நானில்லாத வெறுமை அவர்களை நிலைகுலையச் செய்தாலும், இத்தகவலை அவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டிய கடமையும் பொறுப்பும் எனக் குண்டு. இதுவே நான் இந்த பூமிக்கும், எனது பிறப்புக்கும், அந்த பரந்தாமனுக்கும் செய்கிற மரியாதை. எங்களுக்கு இறப் பில்லை. ஆனால், இந்த இறுதிநாளை நிர்ணயிக்கும் விதி சார்ந்த பொறுப்புண்டு. வேதம் கற்றுணர்ந்த தாங்கள் மௌனமாக யோசித்தால் இந்த சிருஷ்டி நியாயம் விளங்கும்'' என்றார்.
குருராஜன் மெல்ல தேற்ற

குருராஜன் மெல்ல தேற்றிக்கொண்டார். ஆனாலும், அவரால் இயல்புக்கு வரமுடிய வில்லை.
""இருப்பினும்... ஸ்வாமிகள் சிறிது யோசித்து...''
சுவாமிகள் புன்னகைத்தார்.
""இந்த பதிலைத்தான் அப்போதும் சொல்லியிருப்பீர்கள். மனம் எப்போதுமே திருப்தியடையாது. காரணம், சம்பந்தப்பட்டி ருப்பவர்கள் உறவாய் அமைந்துவிட்டால் மனம் சமாதானமே கொள்ளாது.''
""என்னை மன்னிக்க வேண்டும். குலையாத, தளராத தங்கள் உறுதி உலக நன்மைக்கே என நினைத்து அமைதி கொள்ளவேண்டி உள்ளது. மேலும்...''
""சற்றுப் பொறுங்கள். நானே சிறிது நேரத் திற்கு முன்பாகத்தான் பூர்வாசிரம சொந்தங்கள் பற்றி யோசனையில் இருந்தேன். தாங்கள் எனக்கு ஒரு உபகாரம் செய்யவேண்டியிருக்கிறது...''
""பெரிய வார்த்தை. தாங்கள் அப்படிப் பேசலாகாது. மத்வ பீடாதிபதி ஆணையல்லவா இடவேண்டும் எனக்கு...''
""சிலவற்றுக்கு விதிவிலக்குண்டு. நான் தங்களிடம் கேட்பது என்னவெனில், நான் ஜீவ பிருந்தாவனம் செல்வதில் தங்களது உறவினர்களுக்கு ஏதாவது மனக்குறையும் மாற்றுக்கருத்தும் உண்டோ என்பதுதான்.
அப்படி இருப்பின் அவர்களை எதிர்கொண்டு விளக்கும் கடமை எனக்குண்டு. அல்லது அதற்கான காரணங்களை எடுத்துக்கூறி, அவர்களுக்கு இவ்வித நியாயத்தை எடுத்துச்சொல்லும் பொறுப்பேற்று நீங்கள் செய்யமுடியுமா என கேட்கிறேன்...''
குருராஜனுக்கு கண்ணீர் பொங்கியது. எப்பேற்பட்ட நியாயம். தான் ஒரு பீடாதிபதி. இது இப்படித்தான், இதற்கு மாற்றில்லை, உடன்பட்டுத் தீரவேண்டுமென சர்வாதிகார முடிவெடுக்காமல், அதன் நியாயத் தன்மையை மென்மையாக எடுத்துக்கூறி, சிக்கல் ஏற்படின் அதனை சீராக்கும் கடமை உணர்ந்த மாபெரும் ஞானி இந்த மத்வ பீடத்தை அலங்கரிப்பது பெருமையான விஷயம் என்றுணர்ந்தார். உவகையானார்.
""நிச்சயமாக. நான் பொறுப்பேற்று செயல் படுவேன். மேலும் ரத்த உறவுகளிடம் நான் நேரில் கூறினால் அமைதி பெறுவார்கள் என நீங்கள் கூறுவது உண்மைதான்.''
""இருப்பினும் நான் தனிப்பட்டு தங்களிடம் கேட்பதற்கு ஒன்றுள்ளது...''
""சொல்லுங்கள் சுவாமி...''
""தங்களுக்கு இனி இந்த பிருந்தாவன நிகழ்வில் ஏதேனும் மன வருத்தமுண்டா?'' ""நேர்மையாக ஒப்புக்கொள்ள வேண்டு மென்றால் எனக்கு நிரம்பவே வருத்தம் உண்டு.
காரணம், ஒரு அண்ணனின் நிலையில் நான் பார்க்கவேண்டியுள்ளது. பால்யத்தில் தந்தையையும், பிறகு தாயையும் இழந்து, தமயனைப் பிரிந்து, வேதம் கற்று, மண வாழ்க்கை ஏற்று, ஏழ்மையையும் ஏற்று, பின் சந்நியாசம் ஏற்று மனையாளைப் பிரிந்து... இப்படி பலப்பல இழப்புகளையே கடந்த காலத்தில் அதிகம் பெற்றவர். உலகம் போற்றும் ஏற்றமிகு உத்தம ஞானியான பின்னர் உறவு களை விட்டகன்று உயரே போனாலும், ஏதோ அவரை நடமாடி எனும் பார்த்தவாறு மன சந்துஷ்டி அடைந்தோம். ஆனால், அதுவும் இனி இல்லை என்றாகிவிடும் என்பது திண்ண மாகிவிட்டதால், மனம் ஏற்றுக்கொள்ள ஏனோ மறுக்கவே செய்கிறது. பாவம், குழந்தை லக்ஷ்மி நாராயணனின் நிலைதான்... எப்படியோ... அவன் மனநிலையை அறிந்து இந்த நியாயத்தை எடுத்துக்கூற கடமைப்பட்டுள்ளேன். சுவாமி கள் இனி இதுபற்றி சிந்திக்காமல் லோக க்ஷேமம் பொருட்டு தங்களது நிலையைத் தொடருங்கள். மற்ற அனைத்தும் இனி என் பொறுப்பு''என்று அவர் கூறினாலும், மனதுக் குள் குருராஜனுக்கு அழுத்தமும் துக்கமும் கூடியது.
ஸ்ரீராயர் தனது இருகரம் தூக்கி ஆசிர்வதித்து, மந்த்ராட்சதை கொடுக்க, வணங்கிப் பெற்றுக்கொண்டு நகர்ந்தார் குருராஜன்.
அப்பண்ணா நடந்து நடந்து களைத்துப் போயிருந்தார். அவரது கெண்டைக்கால் தசை கல்போன்று இறுகிவிட்டது. பாதங்களில் வெடிப்பு கண்டு சற்று ரத்தம் வடியத் தொடங்கி யிருந்தது. நகக்கண்களில் மண் துகள் ஏறி அது இன்னும் வலியைக்கூட்டியது. பாதையோர முட்கள் அவர் மேனியைக்கீறி நீலநிறக் காயத்தை உருவாக்கியிருந்தன. உதடுகள் உலர்ந்துவிட்டன. நடக்க இயலாமல்போக, ஒரு மரத்தின்மீது தன்னை மெல்ல சாய்த்துக்கொண்டார். "ஓம் ஸ்ரீ ராகவேந்திராய நமஹ' என்று மட்டும் உச்சரித்துக்கொண்டே இருந்தார். அரை மயக்கத்தில் இருந்தார் அவர். சில நிமிடங்களில் தன் உதடுகளில் திரவ இனிப்பை உணர்ந்தார். மெல்லியதான சக்தி தன்னுள் உருவாவதை அவரால் உணரமுடிந்தது. மேனியின் கீறல்களிலிருந்து லேசான அனல் வலியை உணரமுடிந்தாலும், ஏனோ இதம் இருந்தது. முகத்தில் மழைச் சாரல் பட்டு கண் விழித்தார்.
தன் எதிரே ஆறடி உயரத்தில், திடகாத்திரமாக, முறுக்கிய மீசையுடன், முரட்டு கேசத்தைத் தூக்கிக்கட்டி, தோலாலான உடையணிந்திருந்த ஒருவனைக் கண்டார். நெற்றியில் குங்குமம் இருந்தது. பாதங்களிலிருந்து கெண்டைக்கால்வரை தோலாலான பட்டையைமூடிச் சுற்றியிருந்தான். அவன் காலருகே கிடந்த வில்லும் அம்பறாத் தூணியும் கண்டு அவன் வேடனாகத்தான் இருக்கக்கூடும் என்று யூகித்தார். அவன் கைகளில் தாமரை இலைக் குழிவில் தளும் பிக்கொண்டிருந்த நீர்தான் தனது முகத்தில் பட்டிருக்கக்கூடும் என்பதையும் உணர்ந்தார்.
""மன்னிக்கணும் சாமி. உங்களைத் தொடக் கூடாதுன்னுதான் தாமரை இலையில தண்ணி கொண்டுவந்து முகத்துல தெளிச் சேன். தப்பிருந்தா மன்னிக்கணும்.''
அப்பண்ணா புன்னகைத்தார்.
""சக மனிதரிடம் காட்டும் பரிவு ஆண்டவனுக்கே செய்யும் பணிவிடையப்பா.''
""நல்லது சாமி. இருந்தாலும் நீங்க ஐயர் சாமி. நாங்க உங்களைத் தீண்டக்கூடாது சாமி. நீங்க களைச்சுப் போயிருந்தீங்க. அதனால மயிலிறகால உங்க வாயில தேன்விட்டு, காயத்துக்கு மலைத்தேன் தடவினேன்.''
""மகிழ்ச்சியப்பா. உன் பெயர்?''
""குகன்''
""ஆஹா! அந்த ராமனுக்குப் பிரியமான சகா அல்லவா அவர். அந்த நல்ல பெயரை உனது தகப்பனார் உனக்கு சூட்டியிருக்கிறார்.''
""ஆமா சாமி. எங்க அப்பாவுக்கும் தாத்தா வுக்கும் ராமர்மேல பக்தி அதிகம். அப்பா பேரு லவன். தாத்தா பேரு ராமசாமி.''
""அடடா! ராம குடும்பம் என்று சொல். குகன், லவன், ராமசாமி... எனது குரு ராக வேந்திரரின் பிரிய கடவுள் அல்லவா ராமன்!''
""என்ன சொன்னீங்க... ராகவேந்திரர சாமியோட பேரை சொல்றீங்களே... நீங்க?''
""நான் அப்பண்ணா. ராகவேந்திர சுவாமிகளின் சீடன்.''
""ஆஹா! வணங்குகிறேன் சாமி. நீங்க எங்க ராகவேந்திரரோட சீடரா? உங்களுக்குப் பணிவிடைசெய்தது என்னோட பாக்கியம் சாமி... பாக்கியம்...''
அப்போது ஒரு அழகான சத்தம் எழுந்தது. அதில் பெரும் சோகம் இருப்பதை உணர்ந்த அப்பண்ணாவின் கவனம் அந்த திசையில் திரும்பியது. காட்டுக்கொடிகளால் அமைக்கப்பட்ட முரட்டுத்தனமான கூண்டில், மிகப்பெரிய காட்டுக்கிளி ஒன்று தனது சிறகுகளைப் படபடத்து, அதிலிருந்து வெளிவந்துவிடமாட்டோமா என்ற பயத்தில் இருந்தது. அந்த சோகக் கூச்சல் அதனிடமிருந்துதான் வந்தது.
""அது ஒரு பெண் காட்டுக்கிளி. அதனோட ஜோடி தப்பி ஓடிடுச்சு. என் மகனுக்கு இதை விளையாடக் கொடுக்கப்போறேன். கொஞ்ச நாள் பார்ப்பேன். இதனோட ஜோடி கிடைச்சா நல்ல விலைக்கு வித்துடுவேன். இல்லன்னா சாப்பிட்டுட வேண்டியதுதான்'' என்று வெள்ளந்தியாக சிரித்தான் அவன்.
""என்னப்பா இப்படி பேசுகிறாய்'' என்றார் பதட்டமாய்.
""சாமி, இந்த கிளிங்க தங்களோட எடையில பாதி எடையைத் தங்களோட அலகால தூக்கி வீசுற சக்தி கொண்டவை. ஒரு பலாப் பழத்தைக்கூட அலகால கொத்தித் தூக்கி வீசும் சக்தி உண்டு. வித்தா ஆச்சு. இல்லன்னா சாப்பாடுதான்'' என்றான் சிரிப்புடன்.
அப்பண்ணாவுக்குக் கோபம் வந்தது.
""இரக்கம் என்பது சிறிதுகூட உன்னிடம் இல்லையே. இப்படி பாவச்செயல் புரிந்தவனா எனக்கு உதவியது? உண்மையிலேயே இப்போதுதான் எனக்கு மேனி எரிகிறது. உயிர்க்கொலை பெரும் பாவமல்லவா?''
""இது என்னோட முப்பாட்டனுக்கு முப்பாட்டன்னு பரம்பரையா ஜீவனுக்காக செய்யறது சாமி. இது எப்படி பாவமாகும்?''
""இங்குள்ள எல்லாமே ஆண்டவனால் உருவாக்கப்பட்டவை. அனைத்துக்கும் உயிர் என்பது பொதுவானது. படைக்கத் தகுதியில்லாத உனக்கு அதன் உயிரைப் பறிக்க என்ன உரிமை இருக்கிறது? பார் அந்தக் கிளியை. அதன் கண்களைப் பார். அதில் தெரியும் பயத்தைப் பார். அது தனது குஞ்சுகளைப் பிரிந் திருக்கிறது. அவை தன் தாயின் வருகைக்காக ஏங்கிக்கொண்டிருக்குமே. அவை பசியோடு இருக்குமே. மூடனே... முதலில் அந்தக் கிளியை விடுதலை செய். இல்லையேல் நானே இங்கிருக்கும் கல்லால் அடித்து உன்னை வீழ்த்தி கிளியை விடுவிப்பேன்...''
அப்பண்ணா தடுமாறி விழுந்து சரிந்தார். குகன் மௌனமானான். பிறகு மெல்ல கூண்டு அருகே சென்று கிளியை விடுவித்தான். தத்தித்தத்தி வெளிவந்த கிளி மெல்ல தாழப்பறந் தெழும்பி அப்பண்ணா அருகே சென்று அமர்ந்தது. தன் தலையை சாய்த்து சில நொடிகள் அவரைப்பார்த்து, பின் அவரது தோளில் அமர்ந்தது. அவரது காதருகே தன் முகத்தைக்கொண்டு கோதி பிறகு பறந்து சென்றது.
குகன் அதிசயமாய்ப் பார்த்தான். அவனால் தன்னை அடக்கிக்கொள்ள முடியவில்லை.
அவரை விழுந்து வணங்கினான்.
""உங்களால நான் இன்னிக்கு ஒரு உயிரோட வலியை உணர்ந்தேன். எத்தனை உயிருங்களைக் கொன்னு தின்னுருப்பேன். எனக்கு விமோச னமே கிடையாதா? நான் இன்னைல இருந்து வேட்டையாடுறத விட்டுடறேன். இதுக்கும் மாத்தா என் ஜீவனுக்கு ஒருவழிய காட்டுங்க.''
அப்பண்ணாவுக்கு அவன்மேல் கனிவு பிறந்தது. சொன்னவுடன் கேட்ட அவனது புரிதலுடனான பணிவு அவரை என்னவோ செய்தது.
""நல்லதப்பா. மலைத்தேனை சேகரித்து விற்கலாம். தினையைப் பயிர்செய்து தேனுடன் விற்கலாம். அரியவகை வாசனைப் பொருட்களை உருவாக்கி சேகரித்து அவற்றை விற்க முயற்சிசெய். கனிகளையும் கிழங்கு களையும் உண்ணப் பழகு.''
""சாமி. இதையெல்லாம் நான் செய்ய ரொம்ப நாள் ஆகுமே. அதுவரை என்னோட குடும்பம் பசி தாங்குமா?''
""ம்... கட்டுமஸ்தான உன் உடல் நீ நன்றாக உழைப்பாய் என்பதை உறுதி செய்கிறது. நிச்சயம் நீ திம்மண்ணருக்குத் தேவைப்படுவாய். நான் சொன்னதாய் நீ போய்...''
""சாமி... திம்மண்ணர் யாரு'' என்றான் குகன்.
""அடடா நான் எனது சிந்தனையின் வேகத் திலேயே பேசிவிட்டேன்'' என்றவர், பூர்வ நிகழ்ச்சிகள் முழுதும் கூறி, தான் ராயரின் பிருந்தாவன நிகழ்வுக்குப் புறப்பட்டதுவரை கூற, குகன் கண்களில் கண்ணீர் கரைபுரண் டோடியது.
""சுவாமி ராகவேந்திரரை நான் கேள்விப் பட்டதுண்டு. பார்த்ததில்லை. எங்கோ ரொம்ப தூரத்தில் இருந்த நான் அஞ்சு நாள் பயணப் பட்டு இங்க வந்து, கிளியைப் பிடிக்க வைத்து, உங்களையும் பார்க்க வைத்து, என்னையும் உணரவைத்து... அந்த ஆண்டவன் இருக்கான் சாமி இருக்கான்...''
""உண்மைதான் குகனே. ஆண்டவனாய் இருந்து அந்த ராகவேந்திரர்தான் உன்னை இங்கு வரவைத்து, உனது பாவத்தொழிலை விடச்செய்து உன்னை ஸ்ரீமடம் வரச்செய்ய வேண்டுமென என்மூலம் திருவுளம் கொண்டார் என்பதே நிஜம். ஆஹா! எப்பேற்பட்ட நிகழ்விது.
இன்றே நீ ஸ்ரீமடம் சென்று திம்மண்ணரைப் பார்த்து நான் சொன்னதாகக் கூறு. அவர் உனக்கு சிறந்த பணியைத் தருவார். வால்மீகியும் வேடுவர்தான். அப்படிப்பட்டவர் பின்னாளில் ரிஷியாகி ராமாயணக் காவியம் படைக்க ராமர் திருவுளம் கொண்டார். நீயும் வேடுவனே. உன்னை அந்த ராமபூஜை செய்யும் ராயர்தான் அழைத்திருக்கிறார்போலும். போய்ப் பார். ஸ்ரீமடத்திற்கு வெளியிலான பல வசதிகளை உருவாக்கும் பணியை நான் தரக்கூறியதாக திம்மண்ணரிடம் சொல். நானும் ஓரிரு நாட்களில் அங்கு வந்து சேர்வேன்''என்றார். குகன் அவரை மறுபடி வணங்கி எழுந்தான். தனது வில், அம்புகளை உடைத்தெறிந்தான். கத்தி களை பார்வையில் குத்தி மடக்கி வீசினான்.
""உனது மாற்றம் நல்ல விஷயம். அதோ தெரியும் அந்த நதியில் மூழ்கிக் குளித்துக் கிளம்பு. தேக அழுக்குடன் உனது பாவமும் கழுவப்படட்டும். உனது குடும்பத்துடன் ஸ்ரீமடம் கிளம்பு'' என்றவர் புதுப்பொலிவுடன் எழுந்து நடக்கலானார்.
அப்பண்ணாவின் தோளில் அமர்ந்து, பின் வானில் பறந்த அந்தக் கிளி வெகுதூரம் பறந்து சென்று, துல்லியமாய் ஸ்ரீமடத்தின் சுவரில் அமர்ந்து குரல் எழுப்பியது. மூலராமர் பூஜைமுடித்து நடந்துவந்துகொண்டிருந்த சுவாமிகள் அந்தக் கிளியைப் பார்த்துப் புன்னகைத்து, கைகளை உயரத் தூக்கி அப்பண்ணா இருந்த திசை நோக்கி ஆசிர்வதித்தார்.
""வாருங்கள் பெரியப்பா. எப்போது வந்தீர்கள்? அம்மா எப்படி இருக்கிறார்கள்? அனைவரும் நலமா?'' லக்ஷ்மி நாராயணன் குருராஜனைக் கண்டவுடன் மரியாதையுடன் வணங்கினான்.
""எல்லாரும் நலமப்பா. ஸ்ரீமடத்தில் உனது இருப்பு பொறுப்பு நிறைந்ததாக இருக்கிறது போலுள்ளதே''என உள்ளர்த்த புஷ்டியுடன் பேச்சை ஆரம்பித்தார்.
""இல்லை பெரியப்பா. நான் எந்த சலுகையும் பெற்றதில்லை. ஸ்ரீராயரின் மாணாக்கர்களில் நானும் ஒருவன். அவரிடம் படிப்பதற்காகப் படைக்கப்பட்ட பாக்கியமாய் என்னை உணர்கிறேன். பெரும்பாலும் ஓரமாக நின்றோ, இருளில் நின்றோதான் அவரை தரிசித்து திருப்தியடைகிறேன். சுவாமிகளின் நயனங்களை நேரில் பார்க்கும் திராணி எனக் கில்லை'' என்றவன் முடிக்க இயலாது குலுங்கி அழலானான். மெல்ல அருகே சென்று அவனை அணைத்துக் கொண்டவர் அழுது முடிக்கட்டும் என்று காத்திருந்தார்.
""பார், லக்ஷ்மிநாராயணா. நீ ஒரு பவித்திரத்தின் பதியன். இந்த பரந்த உலகத்தில் என்போன்ற ரத்த சொந்தங்கள் ஆறுதல் சொல்வதுகூட சம்பிரதாயம் என்றாகி விடும். ஆனால், சுவாமி ராகவேந்திரரின் வாழ்க்கை என்பது வருங்காலத்தவருக்கான வாழ்வியல் நெறிமுறை. அடுக்கடுக்கான தியாகங்களைச்செய்து, ஆண்டவனாய் இருந்து அவதாரம் செய்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைப்போலவே இருந்தாலும், ஸ்ரீராயரும் அடுத்தடுத்து பல இழப்புகளைச் சந்தித்தாலும், மனம் பிசகாது புவி தர்மத்துக்குக் கட்டுப்பட்டு இல்லறத்தையும் உரித்து, துறவறத்தை ஆண்டவனின் கட்டளை யைக்கொண்டு ஏற்றவர். ஆண்டவன் இதுபோன்ற ஞானிகளை உலகத்தை உஜ்ஜீவிக்க அவதாரமெடுக்க அருள்பாலித்து அனுப்புவார். அது இருமுறை நமது சாஷ்டிக வம்சத்திற்குக் கிடைத்த பெரும் வரம். அவ்வம்சத்தில் வந்த நமது ராயர் நம்முடன் வாழ்ந்து, நம்முடன் சம்பாஷிப்பது எப்பேற்பட்ட பேறு! இதனை நாம் பரிபூரணமாக உணர்ந்து, நாம் மனமுவந்தல்லவா இந்த பிருந்தாவனப் பிரவேசத்திற்கு ஆமோதிக்க வேண்டும் செல்வா...''
""நீங்கள் என்ன கூற வருகிறீர்கள்?''
""ஸ்ரீராயர் போன்றவர்கள் மகத்தான ஞானிகள். அவர் நம் போன்றோரிடமும், பூர்வாசிரம உறவுகளிடமும் இதற்கான ஆமோதிப்பை... மனமுவந்த பரிபூரண சம்மதத்தைக் கேட்கிறார். அவர் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அனைவரும் இதுபோன்று கேட்கவேண்டிய அவசியமில்லை என்றா லும், அவரின் அணுகுமுறையைப் பாரேன். எவ்வளவு திவ்யமானது. இருப்பினும் நான் முன்பு கூறியது போன்று, நீ நேரடியான பவித்திரமான பதியன். உனது ஆமோதிப்பையே நான் பெரிதாக எண்ணுகிறேன். காரணம் உன்னுடைய இழத்தல் உயரியதப்பா. உனது சஞ்சலம்கூட, உனது நியாயமான துக்கம்கூட, உனது ஆத்மார்த்தமான அழுகைகூட அந்த ஞானியின் பாதையை இடற வாய்ப்புண்டு. எனவே...''
""போதும் பெரியப்பா. எப்படியோ... என் அன்னையும் நான் இருக்கும் உணர்வே இல்லாது, பர்தாமீது கொண்ட அன்பை மட்டுமே பிரதானமாகக் கொண்டு என்னை அநாதையாக்கிவிட்டாள். பாருங்கள்... இப்போது பூர்வாசிரமப் பிதாவையே வாய்விட்டு அழைக்கமுடியாத துர்பாக்கியம். இது என்னையன்றி இனி யாருக்கும் வரக்கூடாது. இதில் எந்த முகாந்திரத்தில் பிருந்தாவனப் பிரவேசத்திற்கு நான் மறுப்பாய் இருப்பேன்...''என்றவன் அதற்குமேல் தொடர இயலாது முகம் கவிழ்ந்து அழலானான்.
இந்த அவலை மகனின் பரிதாபச் சூழல் யாருக்கும் வரக்கூடாதுதான். இந்தக் குழந்தை இவ்வளவு தெளிவாய் யோசித்தும், துக்கத்தை உள்ளே சுமந்து இதுநாள்வரை வலம்வந்திருக்கிறான் என்பதே பெரும் சோகம்தானே. குருராஜன் வருத்தம் மேலோங்க அவன் முதுகு தடவி தன்மீது சாய்த்துக்கொண்டார்.
""பாரப்பா என் அருமைக் கண்ணே. நாட்கள் சுருங்கிவிட்டன. ராயர் நம்மை பிரிந்து எங்கும் செல்லப்போவதில்லை. அவர் கண்மூடி அமர்ந்துவிட்டாலும், அவரது நயனப் பிரம்மாண்டத்தில் நம் அசைவுகள் அவர் அறியாததல்ல. நீ அவரோடு மானசீகமாகப் பேசலாம். வேண்டலாம். மன்றாடலாம். எந்தத் தடங்கலும் இல்லை. இந்தப் புனித நிகழ்வுக்கு உனது ஆமோதிப்பென்பது...''
""நான் எப்படி குறுக்கே வர இயலும்? எனது உரிமைகள் அவரது பூர்வாசிரம காலத்தோடு, லட்சுமண ரேகை போன்று அப்பாலேயே நின்றுவிட்டதே. இருப்பினும் சொந்தம் கொண்டாடமுடியாத சொந்தம் மீது எனது பந்தத்தை நான் மனதளவில் விருட்சமாக வளர்த்துக்கொண்டேன்.
அந்தப் பிரம்மாண்டம்கூட அவர்தான். எனது வழிமறித்தல் ஒரு புள்ளியளவுகூட வராது பெரியப்பா...'' என்றவன் தன் கண்களைத் துடைத்துக்கொண்டான். தான் தெளிவானதாக அவரிடம் காட்டிக்கொண்டான்.
அவன் தனது பேச்சுக்கு நாசுக்காக விலகாமல், கண்ணியம் காத்து, தனக்கே எதார்த்தத்தை வகுப்பெடுத்த அவனது விசால ஞானத்தைக்கண்டு குருராஜன் வியந்தார்.
(தொடரும்)