ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்புச் சுடர்கள் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்ற அன்னை பார்வதிதேவி அந்த குழந்தைகளை ஒருசேர அனைத்திட அப்போது நிகழ்ந்தது ஆறுமுகப் பெருமானாகிய முருகக் கடவுள் அவதாரம் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடிய ஒருநாளில் இந்த அற்புதம் நிகழ்ந்தபடி யால் அழகு முருகனின் அவதாரத் திருநாளாய் விசாகத் திருநாள்
ஈசனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய நெருப்புச் சுடர்கள் ஆறு அழகிய குழந்தைகளாகத் தோன்ற அன்னை பார்வதிதேவி அந்த குழந்தைகளை ஒருசேர அனைத்திட அப்போது நிகழ்ந்தது ஆறுமுகப் பெருமானாகிய முருகக் கடவுள் அவதாரம் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரம் கூடிய ஒருநாளில் இந்த அற்புதம் நிகழ்ந்தபடி யால் அழகு முருகனின் அவதாரத் திருநாளாய் விசாகத் திருநாள் முருக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மு- என்றால் முகுந்தன் (திருமாலைக் குறிக்கும்)
ரு- என்றால் ருத்ரன் (சிவபெருமானைக் குறிக்கும்)
க- என்றால் கமலன் (பிரம்மனைக் குறிக்கும்)
ஆக "முருக' என்றால் மூன்று பிரதான தெய்வங்கள் இணைந்த பொருள் ஆகிறது! முருகப் பெருமானை வணங்கினால்- இந்த மூன்று தெய்வங்களை வணங்கிட்ட பலன்கள் கிடைக்கின்றன என்று உறுதியாக நம்பலாம். இதைத்தான்-
"கந்தன் காலடியை வணங்கினால்
கடவுள் யாவரையும் வணங்குதல் போல்''
என்று ஒரு திரைப்பாடல்
அறுதியிட்டுக் கூறுகிறது.
மகாபாரதப் போரில் ஈடு பட்டிருந்த அர்ஜுனன் சிவ பெருமானை பூஜித்து வணங்கி பாசுபத ஆயுதத்தைப் பெற்றது.
சுவாமி மலை முருகனை மனமுருகி வேண்டி நலிவடைந்து போயிருந்த தேவலோகத் தலைவனாகிய இந்திரன் தன்னுடைய ஆற்றலை வளர்த்துக்கொண்டது. இவை நிகழ்ந்தது ஒரு வைகாசி விசாகத் திருநாளில்தான்.
சரவணப் பொய்கையில் ஆறு கமல மலர்கள்மீது அழகிய குழந்தை முருகன் காட்சிதந்ததாக புராணங்கள் கூறுகின்றன. வைகாசி விசாகத் திருநாளில் முருகக் கடவுள் தோன்றிய அவதாரத் திருநாளில் அருகிலுள்ள முருகன் ஆலயம் சென்று வழிபடுவது மிகுந்த நன்மை பயக்கும் என்பது ஐதீகம்.
வைகாசி விசாகத் திருநாளில் வையம் போற்றும் தமிழ்க் கடவுளான கந்தப் பெருமானை பூஜித்து வணங்கினால்-
ப் எதிரிகள் பயம் அகலும்.
ப் தீராத நோய்கள் நீங்கும்.
ப் புத்திர பாக்கியம் கிட்டும்.
ப் வாழ்வில் வெற்றிகள் வந்துசேரும்.
ப் பதினாறு பேறுகள் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
தீராத வினைதீர்க்கும் முருகக் கடவுளை இந்நாளில் பூஜித்து வணங்கி நலம் பெறுவோம்! வளம் பெறுவோம்!