விருச்சிகம்

/idhalgal/om/viruchigam-guru-peyarchi-2021

விருச்சிகம் என்பது காலபுருஷனின் எட்டாவது ராசி. இதன் அதிபதி செவ்வாய். இங்கு சந்திரன் நீசமடைவார்.

குடும்ப விவரம்

விருச்சிக ராசிக்காரர்களில் பலர் வெளியில் அமிர்தமும், நெஞ்சில் வஞ்சமும் கொண்டவர்கள். உள்ளுக்குள் ஆயிரம் கோபதாபம் இருப்பினும், வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்கள். இவர்களின் குடும்பம் ஆன்மிகப் பற்றுக்கொண்ட குடும்பமாக இருக்கும். இளைய சகோதரர் இவரது வாழ்க்கையின் உயர்வு கண்டு மனதுக்குள் புழுங்கித் தீர்ப்பார். இவர்களுடைய தாய் பற்றற்ற பெண்ணாக, எதிலும் ஈடுபாடு காட்டாமல் இருப்பார். இவர்களது பரம்பரை, பூர்விகம் மெச்சத்தக்கதாக அமைந்திருக்கும். இவர்களது வேலை மலை, வெப்பம் சார்ந்து அமையும். வாழ்க்கைத் துணை எவ்வளவு அன்பாக இருப்பினும், இவர்களது குணசீர்கேட்டால் அவ்வப்போது மனக்கசப்பு வந்து வந்துபோகும். சிலருடைய கோள் சொல்லுதலும், குறும்புத் தனமும், சில அவசர செயல்களும் அவமானத் திற்குக் காரணமாகும். தந்தை மதிக்கத் தக்கவராக, அமைதி யான குணமுடையவராக இருப்பார். இவர்களது தொழிலில் கண்டிப்பாக அரசு சார்பிருக்கும். இவர் அரசியலில் பெருவிருப்பம் உடையவராக இருப்பார். வியாபார சம்பந்த பயணங்கள் மற்றும் வாழ்க்கைத் துணையோடு கசந்து அவ்வப்போது இடம் மாறுவது நடக்கும். இவை பொதுவான பலன்கள். அவரவர் பிறப்பு ஜாதகத்தைப் பொருத்து சற்று முன்பின் மாறுபடும்.

குரு இருக்குமிடப் பலன்

விருச்சிக ராசிக்கு இதுவரையில் 3-ஆமிடமான மகரத்தில் இருந்துவந்த குரு பகவான், இப்போது 4-ஆமிடமான கும்பத்தில் அமர்கிறார். குரு உங்களுக்கு 2, 5-ன் அதிபதி.

4-ஆமிட என்பது சுகஸ்தானம். எனவே இந்தக் காலகட்டத்தில் உங்கள் ஆரோக்கிய மேம்பாட்டிற்காக நிறைய செலவு செய்வீர்கள். சிலர் இதற்காக வேறிடம் செல்வர். வேறுசிலர் தங்கள் சொந்த ஊர் செல்வர். பிறர் தங்கள் வீட்டிலேயே உடல்நல மேம்பாட்டுக்காக முயற்சி செய்வர்.

உங்கள் வாரிசுகள் கல்வியின் பொருட்டு வேறிடம் செல்வர். சில வாரிசுகள் சொந்த வீட்டுக்குத் திரும்புவர். பூர்வீக சொத்தை விற்க அலைச்சல் உண்டு. திரைப்படம், தொலைக்காட்சிக் கலைஞர்கள், பின்னணி பேசுவோர், பாடகர்கள் சிறுசிறு அலைச்சல், அசதிமூலம் நன்கு பணம் சம்பாதிக்க முடியும்.

சொந்த வீட்டு முதலீடு உண்டு. அது பழைய வீடாக இருக்கும்

சொந்த வீட்டு முதலீடு உண்டு. அது பழைய வீடாக இருக்கும். பங்கு வர்த்தகம், பூமி, வாகனம், தொலைதொடர்பு சார்ந்த இனங்களில் மட்டும் லாபம் தரும்.

இந்தக் காலகட்டத்தில் அபூர்வப் பொருட்களை விற்பது, வாகனம், நிலம், பூமி சார்ந்தவை, பண்ணைகள் பராமரிப்பு, பரம்பரை சொத்துகளை மேற்பார்வை செய்வது, தண்ணீர் விற்பனை, பழங்காலப் பயிர் செய்வது, நாட்டு மாடுகள், பழைய மூலிகைகள், பெட்ரோல் போன்றவைமூலம் அல்லது இவற்றை குத்தகைக்கு எடுப்பதன்மூலம் பணவரவு மேம்பாடடையும்.

குரு விருச்சிக ராசியின் தனாதிபதி. அவர் சனியின் வீடான கும்பத்தில்- அது நான்காம் வீடாகவும் இருப்பதால், அநேகமாக பழைமை சம்பந்தமான இனங்கள்மூலமே பணவரவைத் தருவார். ஆதலால் கூடியமட்டும் இந்த குருப்பெயர்ச்சி முடியும் வரையாவது "பழசு' என எதையும் ஒதுக்கித்தள்ளாமல், அதனை பதவிசாகப் பார்த்துக்கொண்டால், உங்கள் மணிபர்ஸ் நிறைந் திருக்கும். கார்டில் தேய்க்கத் தேய்க்க பணம் இருந்துகொண்டே இருக்கும்.

உங்கள் வாக்கில் அறிவும், சிந்தனையும் பரிமளிக்கும். விருச்சிக ராசி குழந்தைகள் கற்றலில் சிறந்து விளங்குவர். உங்களில் சிலர் பூர்வீக இடத்தில் குழந்தைகள் கல்வி அல்லது உணவு சம்பந்த அமைச்சராகலாம். உங்களில் பல ஜாதகர்கள் வஸ்திர தானம் எனும் ஆடைகளை இலவசமாக வழங்குவீர்கள். உங்கள் இல்லம் சார்ந்த நம்பிக்கைகள் பெருகும்.

5-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 5-ஆம் பார்வையால் விருச்சிக ராசியின் எட்டாமிடத்தை எட்டி நோக்குகிறார். எப்போதும் குரு பார்க்குமிடம் விருத்தியாகும். 8-ஆமிடம் என்பது ஆயுள் ஸ்தானம். அவ்விடத்தில் குரு பார்வை படரும்போது, ஆயுள் விருத்தி ஏற்படும். யாருக்காவது உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்தாலும், இந்த காலகட்டத்தில் குரு பகவான் அவர்களை கண்டத்திலிருந்து காத்துப் பாதுகாப்பார்.

8-ஆமிடம் என்பது புதையல் ஸ்தானம். அதனைப் பார்வையிடும் குரு, விருச்சிக ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பெரும் தனப்பிராப்தியைக் கொடுப்பார்.

இதுவல்லாது 8-ஆமிடம் என்பது அவமான ஸ்தானம். எனினும், குரு உங்களை பெரு அவமானப்படாமல், குடைபோல் பாதுகாத்து விடுவார். இளம்பெண்களிடம் கவனம்தேவை. வாழ்க்கைத் துணையிடம் பேசும்போது வார்த்தைகளில் கனம் கூடாது; கவனம் தேவை. இல்லையெனில் பிரிவுக்கு வழிவகுத்துவிடும்.

ஏன்- வாரிசுகளிடமும் பண விஷயத்தில் சற்று கவனமாக நடந்துகொள்ளுங்கள். பூர்வீக சொத்தின் பண வரவு- செலவில் ஒரு கண் வைத்திருக்கவும். மந்திர உச்சாடனை, வைதீக வேலை, வேதம் ஓதுவார்கள் போன்றவர்கள் அவமானமடைய வாய்ப்புள்ளது; கவனம்தேவை. எனினும், இந்த குருப்பெயர்ச்சியில் கடன் அடையும்; எதிரிகள் மறைவர்; நோய் குணமாகும். இந்த நல்ல செயல்களையும் 5-ஆம் பார்வை தரும்.

7-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 7-ஆம் பார்வையால் விருச்சிக ராசியின் 10-ஆமிடமான தொழில் ஸ்தானத்தைப் பார்க்கிறார். இதனால் அரசு, அரசியல் சார்ந்த விருச்சிகத்தார் வெகு மேன்மை பெறுவர். உயர்பதவிகள் தேடிவரும். சட்டத்துறையில் வெகுமதிப்பு கிடைக்கும். அரசு கௌரவம் கிடைக்கும்.

சொந்தத் தொழில் விஷயமாக பின்னடைவை சந்தித்துக் கொண்டிருந்தவர்கள் மிக முன்னேற்றம் காண்பர். வெளிநாட்டுப் பங்குதாரர் கிடைக்க வாய்ப்புண்டு. வெளிநாடு சம்பந்த சந்திப்புகள் நிகழும். சிலருக்குத் திருமணம் கூடிவரும். மிக உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளவருடன் சம்பந்தம் ஏற்படும்.

தொழில் முதலீடுகள் நிறைய, எளிதாகக் கிடைக்கும். சிலருக்கு அரசு ஒப்பந்தம், தொழில்புரிய சப்-டெண்டர்கள்போல்- அதாவது வெளியே உங்கள் பெயர் தெரியாத அளவுக்கு தொழில் வாய்ப்பு உருவாகும்.

விவசாயம் சார்ந்தவர்கள், விதைகளை மேன்மையான அளவில் பெறுவதால், மகசூல் அபரிமிதமாக இருக்கும். மருத்துவம் சம்பந்தப்பட்ட துறையினர் அரசு வகையில் பதவி உயர்வும், இடமாற்றமும் பெறுவர்.

கலைத்துறையினர் அரசு உதவி பெற்று படம் துவக்குவர். சிலர் ஆன்மிகம் அல்லது பாம்பு சம்பந்த டாக்குமென்டரி எடுப்பார்கள். வெளிநாடு சம்பந்த சினிமாவில் பங்குபெறுவர். சிலர் பெரும் பொருட்செலவில் பழமையான படங்களை எடுப்பர். சில மாணவர்கள் மருத்துவப் படிப்பு கிடைக்கப் பெறுவர். வியாபாரிகள், தங்கள் வணிகக் கிளைகளைப் பல இடங்களில் தொடங்குவர்.

அரசு வேலைக்குக் காத்திருப்பவர்கள் இந்த காலகட்டத்தில் கொடுக்கவேண்டியதைக் கொடுத்தால் கண்டிப்பாக அரசு வேலை நிச்சயம்.

9-ஆம் பார்வைப் பலன்

குரு தனது 9-ஆம் பார்வையால் விருச்சிக ராசியின் 12-ஆமிடமெனும் விரய ஸ்தானத்தை வீறுகொண்டு நோக்குகிறார்.

குரு பார்த்தால் அது சுபம்தான். விரய ஸ்தானத்தைப் பார்த்தாலும் அது சுப விரயமாகத்தான் அமையும்.

தாய்மாமன் சீர் செய்யவேண்டி இருக்கும். வேலை சம்பந்தமாக கொஞ்சம் அப்படி- இப்படி செய்யவேண்டியிருக்கும். கல்யாணச் செலவு கண்டிப்பாக உண்டு.

வெளிநாட்டுப் பயண டிக்கெட் எடுக்கும் செலவு வரும். கொஞ்சம் ஜாலி செலவுகள் செய்வீர்கள். குடும்பத்திற்காக செலவுண்டு. குலதெய்வக் கோவில் பயணம் வரும். மனை வாங்குவீர்கள். நெருப்பு, மின்சாரம், செப்புக்கம்பி சார்ந்த சாதனங்கள் வாங்கும் செலவுண்டு.

சிலர் சிறையிலிருந்து திரும்பிவருவர். வரி பிடித்தம் செய்யாமலிருக்க நன்கொடை வழங்கும் செலவு செய்வீர்கள். ஏனோ இந்த குருப்பெயர்ச்சி, நல்ல விஷயங்களைக்கூட ரகசியப் பயணங்கள்மூலம் செய்யவைக்கும்.

உங்களை வீழ்த்த பிறர் செய்த சூழ்ச்சி முறியடிக்கப்படும். வேலையின் பொருட்டு தூர இடங்களுக்குச் செல்வீர்கள். உங்களில் சிலர் பினாமி பெயரில் நிறைய நிலம், வாகனம், விவசாய பூமி போன்றவற்றை வாங்குவீர்கள்.

குரு பார்க்கும் 12-ஆமிடத்தில் ராகு சார நட்சத்திரமான சுவாதி இருப்பதால் சில செலவுகள், சில பயணங்கள், சில முதலீடுகள், சில தொடர்புகள் வெளியில் தெரியாமல் ரகசியமாக அமைய வாய்ப்புண்டு.

பொதுப் பலன்கள்

இந்த குருப்பெயர்ச்சி, விருச்சிக ராசிக்காரர்களின் 8, 12-ஆமிடத்துக்குப் பார்வையைக் கொடுத்திருக்கிறது. 10-ஆமிடப் பார்வை மட்டுமே வெகு நன்மையும், பயனும் தரக்கூடியது. என்னதான் 8, 12-ஆமிடத்தைப் பார்த்து அதன் கெடுபலன்களிலிருந்து காப்பாற்றினாலும், அவை நல்ல பலன் தர இயலாத நிலை ஏற்படுகிறது. 10-ஆமிடத்தைப் பார்ப்பதால் தொழில், கௌரவம், முன்னேற்றம் மிகச் சிறப்பாக அமையும். பெரிய பதவியில் உள்ளவர்கள் அல்லது பெரிய தொழிலதிபர்கள் செய்யும் அட்டூழியம், வீண் செலவுகள் வெளியே வருகிறதா என்ன? பூசி மெழுகி மறைத்து விடுகிறார் கள். இதைத்தான் இந்த குரு தருவார். உங்களுக்கு குரு 50 சதவிகித நற்பலன் தருவார்!

விசாகம் 4-ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு:

முன்பு எப்படி இருந்தாலும் சரி; இந்த காலகட்டத்தில் பேசும்போது- பண விஷயத்திலும், நட்பு பாராட்டுபோதும், பூர்வீக சொத்து விஷயத்திலும், வீடு, வாகன விஷயத்திலும் கவனமாக, அதிக கவனமாக யோசித்து செயலாற்றுவீர்கள். சிந்தனை முழுவதும் பணம் ஈட்டுவதில் லயித்திருக்கும். இதனால் அறிவு கூர்மைபெறும். கல்வி மேம்படும். அறிவின் செயல்பாடும் ஆற்றலும் மிக அதிகரிக்கும். வாழ்க்கையின் அஸ்திவாரத்தை, இந்த குருப்பெயர்ச்சியில் ஆழமாக அமைத்துக்கொள்வீர்கள். குறுகிய- பள்ளமான இடத்திலுள்ள சிவனை வணங்கவும்.

அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உங்களின் ஞாபக சக்தி அதிகரிக்கும். அதனால் எந்த விஷயத்தையும் மறந்துவிட்டுவிடாமல், முறையாக, ஒழுங்காகச் செய்வீர்கள். கல்வி கற்கும் மாணவர்களுக்கு இதுவொரு வரப் பிரசாதமாகும். நீங்கள் எந்த வாழ்வு நிலையில் இருப்பினும், நிறைய பயிற்சி, முயற்சி எடுத்துக்கொள்வீர்கள்.

தினப்படி வேலைகளின் திறமை, திறன் அதிகரிக்கும். பிறர் கையை எதிர்பாராமல் சுயசார்புடன் பணியாற்றுவீர்கள். இது உங்களுக்கு, உங்களின் மீதே நம்பிக்கை உணர்வை அதிகரிக்கச் செய்யும். "யானைக்குத் தும்பிக்கை- மனிதனுக்கு நம்பிக்கை' என்று அனைத்து விஷயங்களையும் எளிதாகக் கையாள்வீர்கள். பாதாள பைரவரை வணங்கவும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

இந்தக் காலகட்டத்தில் உங்களுக்கு அழகான ரோஜா கிடைக்கும். அதே சமயம் அதிலுள்ள முள் கையைக் கிழித்துப் புண்ணாக்கக் கூடும். முன்னேற் றப் பாதையில் சிறு கூரான கற்கள் காலைப் பதம் பார்க்கும். இந்த குருபகவான், "கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என போய்க்கொண்டே இரு' என்று ஆசுவாசப்படுத்துவார்.

சிலருக்கு அரசியல்பதவி கிடைக்கும்போது, ஊழல் வழக்கு போனஸாகக் கிடைக்கும். அரசுப் பதவி உயர்வு வந்தால், கூடவே லஞ்ச ஒழிப்புக் கடிதமும் வரும். ஆசைகள் நிறைவேறும்போது, சிலருக்கு அவமானங்களும் தலைகாட்டும். வெளிநாட்டுக் கார் வாங்கி மகிழும்போது, வரி கட்டாமல் ஏமாற்றிவிட்டதாக தாக்கல் தலைநீட்டும். இவ்வாறு நல்ல ருசியான உணவை சாப்பிடும்போது, பல்லில் கல் தட்டுப்படும். இதுதான் குருப்பெயர்ச்சி நிலைமை. பள்ளத்தாக்கில் அமைந்துள்ள பெருமாளை வணங்கவும்.

பரிகாரங்கள்

சிவன், தர்மசாஸ்தா, திருச்செந்தூர் முருகனை வணங்கவும். பள்ளி செல்லும் குழந்தைகளின் சைக்கிள் பழுதை நீக்க உதவுங்கள். வயது முதிர்ந்த பெரியவர்களின் மூட்டுவலிக்கு மாத்திரை வாங்கிக் கொடுங்கள். மனநிலை சரியில்லாதவர்களுக்கு முடிந்தால் உதவவும். வீடு மாற்றும் தரகர்களுக்கு சற்று உதவுங்கள்.

"எந்தை எந்தாய் சுற்றம் முற்றும்' எனத் தொடங்கும் பஞ்ச புராணப் பாடலைப் பாடித் துதிக்கவும்.

om011021
இதையும் படியுங்கள்
Subscribe