வாசுகி! -மும்பை ராமகிருஷ்ணன்

/idhalgal/om/vasuki-mumbai-ramakrishnan

திருவள்ளுவர் தினம்

15-1-2021

நாம் நினைக்கவிருப்பது, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் வேண்டி, மந்தர மலையை மத்தாகக்கொண்டு பாற் கடலைக் கடைய கயிறாகப் பயன்படுத்திய வாசுகிப் பாம்பை அல்ல. இவர் திருவள்ளு வரின் மனைவி.

தமிழ்நாட்டில் திருவள்ளுவரை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இரண்டே வரியில் பல தத்துவங்களைப் புகுத்தி திருக்குறள் என்று அவர் எழுதியதை நாம் சிறுவயதிலிருந்து படித்திருக்கிறோம்.

thiruvaluvar

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று தலைப்புகளில், இரண்டே வரியில், ஏழு சொற்களில், கடினமான தமிழல்லாது எளிமையான தமிழில் குறளை இயற்றியுள்ளார். அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள் என 133 அதிகாரங்கள். ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 பாக்கள். ஆக, 1,330 குறட்பாக்கள், 2,660 வரிகளே! ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டுமென்று விவரிக்கும் பாக்கள்.

இதனை நமது நாடு மட்டுமன்றி, பல வெளிநாட்டினரும் மொழிபெயர்த்துள்ளனர்.

1830-ல் ஐரோப்பிய நாட்டில் மொழி பெயர்த்துப் பரப்பப்பட்டது. இதன்மூலம் திருக்குறளின் ஆழ்ந்த தரம், எந்நாட்டவர்க்கும் பொருந்தும் நற்செயல்கள், நற்குணங்கள் அடங்கியுள்ளன என்பதை உணரலாம்.

(அதன்படிதான் நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்.)

தமிழ்நாட்டு மக்கள்- குறிப்பாக சென்னைவாழ் மக்கள் திருவள்ளுவரை நினைத்து மார்தட்டலாம். ஏனெனில் அவர் பிறந்தது சென்னை மயிலாப்பூரில். தற்போதைய லஸ் பஸ் நிலையம் அருகே, சமஸ்கிருதக் கல்லூரிலுள்ள இடத்தில் திருவள்ளுவர் சிலையைக் காணலாம். சிறிது நடந்து சென்றால் ஒரு கோவிலும் உண்டு.

அவர் நெசவாள வள்ளுவர் வம்சத்தைச் சார்ந்தவர். எனவே, அவர் பெயர் திருவள்ளுவர். என்றாலும் தெய்வப்புலவர், பொய்யாமொழிப் புலவர், ஞானவெட்டியான், ஐயன் என பல பெயர்கள் உண்ட

திருவள்ளுவர் தினம்

15-1-2021

நாம் நினைக்கவிருப்பது, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து அமிர்தம் வேண்டி, மந்தர மலையை மத்தாகக்கொண்டு பாற் கடலைக் கடைய கயிறாகப் பயன்படுத்திய வாசுகிப் பாம்பை அல்ல. இவர் திருவள்ளு வரின் மனைவி.

தமிழ்நாட்டில் திருவள்ளுவரை அறியாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இரண்டே வரியில் பல தத்துவங்களைப் புகுத்தி திருக்குறள் என்று அவர் எழுதியதை நாம் சிறுவயதிலிருந்து படித்திருக்கிறோம்.

thiruvaluvar

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று தலைப்புகளில், இரண்டே வரியில், ஏழு சொற்களில், கடினமான தமிழல்லாது எளிமையான தமிழில் குறளை இயற்றியுள்ளார். அறத்துப்பாலில் 38 அதிகாரங்கள், பொருட்பாலில் 70 அதிகாரங்கள், இன்பத்துப்பாலில் 25 அதிகாரங்கள் என 133 அதிகாரங்கள். ஒவ்வொரு அதிகாரத்திலும் 10 பாக்கள். ஆக, 1,330 குறட்பாக்கள், 2,660 வரிகளே! ஒரு மனிதன் எவ்வாறு வாழவேண்டுமென்று விவரிக்கும் பாக்கள்.

இதனை நமது நாடு மட்டுமன்றி, பல வெளிநாட்டினரும் மொழிபெயர்த்துள்ளனர்.

1830-ல் ஐரோப்பிய நாட்டில் மொழி பெயர்த்துப் பரப்பப்பட்டது. இதன்மூலம் திருக்குறளின் ஆழ்ந்த தரம், எந்நாட்டவர்க்கும் பொருந்தும் நற்செயல்கள், நற்குணங்கள் அடங்கியுள்ளன என்பதை உணரலாம்.

(அதன்படிதான் நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்.)

தமிழ்நாட்டு மக்கள்- குறிப்பாக சென்னைவாழ் மக்கள் திருவள்ளுவரை நினைத்து மார்தட்டலாம். ஏனெனில் அவர் பிறந்தது சென்னை மயிலாப்பூரில். தற்போதைய லஸ் பஸ் நிலையம் அருகே, சமஸ்கிருதக் கல்லூரிலுள்ள இடத்தில் திருவள்ளுவர் சிலையைக் காணலாம். சிறிது நடந்து சென்றால் ஒரு கோவிலும் உண்டு.

அவர் நெசவாள வள்ளுவர் வம்சத்தைச் சார்ந்தவர். எனவே, அவர் பெயர் திருவள்ளுவர். என்றாலும் தெய்வப்புலவர், பொய்யாமொழிப் புலவர், ஞானவெட்டியான், ஐயன் என பல பெயர்கள் உண்டு. அவர் வாழ்ந்த நூற்றாண்டு கி.மு. ஒன்று அல்லது இரண்டு என்று சொல்லப்படுகிறது. ஆக, சுமார் 2000 ஆண்டுகளுக்குமுன், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே வாழ்ந்தவர்.

கன்னியாகுமரி ஹிஸ்டாரிகல் கல்சுரல் ரிசர்ச் சென்டர் என்னும் அமைப்பு (ஃ.ஐ.ஈ.த.ஈ) கூறுகிறது- திருவள்ளுவர் கன்னியாகுமரி பகுதிப் பிரதேசங்களை வள்ளுவர் நாடு என்னும் பெயரில் ஆட்சிசெய்தார் என்று. ஆகவேதான் தமிழ்நாடு அரசு கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவிடத் திற்கு அருகில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை அமைத்தது.

அந்த சிலையில் வலக்கை யில் மூன்று விரல்கள் திறந் திருக்கும். அது அறம், பொருள், இன்பம் என்பதைக் குறிப்பதாகும். இதனுடன் நாம் வீடுபேறு அல்லது முக்தி என்று நான்கு புருஷார்த் தங்களைக் குறிப்பிடுவோம்) அவ்வாறு கடைப்பிடித்தால் சுட்டுவிரலான ஜீவாத்மா கட்டைவிரலான பரமனை எய்தும் என்பது தத்துவம். இதற்கு சின்முத்திரை, ஞானமுத்திரை என்று பெயர். தட்சிணாமூர்த்தியின் மௌன உபதேச வலக்கையும் சின்முத்திரை என்பது நீங்கள் அறிந்ததே. திருவள்ளுவர் வீடுபேறு என்பது குறித்து திருக்குறளில் எழுதவில்லை. அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் முறையாகக் கடைப் பிடித்தாலே நான்காவது நிலையான வீடுபேற்றை அடையலாமென்பது அவர் கொள்கையாக இருந்திருக்கலாம்.

இனி நாம் அவரது மனைவியான வாசுகி அம்மையார் பற்றி காண்போம்.

வாசுகி அம்மையார் எங்கு, எப்பொழுது பிறந்தார் என்ற விவரம் கிடைக்கவில்லை. திருவள்ளுவரை எப்போது திருமணம் புரிந்துகொண்டார்- எவ்வளவு ஆண்டுகள் அவருடன் வாழ்ந்தார் என்ற தகவலும் தெரியவில்லை. அவர் திருவள்ளுவரைப்போல் கவிதைகள் எழுதியுள்ளாரா என்னும் விவரங்களும் கிடைக்கவில்லை. ஆனால் கற்புக்கரசியாகத் திகழ்ந்தார். ராமன் மனைவி சீதை, அத்திரி மகரிஷியின் மனைவி அனுசுயாதேவி, சாவித்திரி, அருந்ததி போன்று கற்புக்கரசியாக வாழ்ந்தவர். ஆகவே போற்றப்படுகிறார். அந்த சில சம்பவங்களைச் சிந்திப்போம்.

valluar

வாசுகி அம்மையாரும் உயர்ந்த நெசவாளர் குலத்தில் உதித்தவர். இருவருக்கும் திருமணம் நடந்து மயிலாப்பூரியே இன்பமாக மணவாழ்வு நடத்தினர். இருவருமே சிவன்மீது பக்தி கொண்டவர்கள். "சக்தி இல்லையேல் சிவம் சவம்' என்பார்கள். இரு கைகள் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். அது போல வாசுகியின் நற்குணம், நற்பண்பு, பொறுமை, சாந்தம் போன்றவையே, திருவள்ளுவருக்குத் திருக்குறளில், உலகில் பிறந்த எவரும் அன்புடன் ஆனந்தமாக வாழவேண்டுமென்று எழுதத் தோன்றியது என்பர். "ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே' என்று கூறுவார்கள். எனவே, திருவள்ளுவரின் திருக்குறளுக்கு வாசுகியின் குணமே மூலகாரணமென்று சொல்லலாம். எனவே வாசுகி அம்மையாரைப் போற்றவேண்டியது நமது கடமை.

சித்தர்கள் வாழ்க்கையே அலாதியானது. சித்தர்கள் புத்தியைக் கட்டுப்படுத்துபவர்கள். யோகம், தியானம்மூலம் எதையும் செய்யக்கூடிய வர்கள். எங்கும் செல்ல வல்லவர்கள் என்று கூறுவர். பொதுவாக சித்தர்கள் 18 பேர்.

கருவூரார் எழுதிய அட்டமாசித்து, நிஜானந்த போதம் மற்றும் அபிதான சிந்தாமணி போன்ற நூல்கள் யாவும் கொங்கனரை ஒரு சித்தராகக் குறிப்பிடு கின்றன. இவர் மச்சமுனி யின் மாணவர். சேணிய வகுப்பைச் சேர்ந்தவர். கூடுவிட்டுக் கூடுபாயும் கலையும் பயின்றவர். இவர் கற்பம், முக்திநெறி, அட்டகர்மம், வகார சூத்திரம், மூலிகை பற்றிய நூல்கள் எழுதியுள்ளார் என்றும் கூறுவர். அகத்திய முனிவரின் சீடரான இவர் இவ்வாறு கூறுகிறார்-

"மூலமதை அறிந்தக்கால் யோகமாச்சு

முறைமையுடன் கண்டக்கால் வாதமாச்சு

சாலமுடன் கண்டவர்முன் வசமாய் நிற்பர்

சாத்திரத்தை சுட்டெறிந்தால் அவனே சித்தன்.'

கொங்கணர் உட்பட எல்லா சித்தர்களும் பாலாதேவி என்னும் வாலையை ஆழ்ந்து வணங்குபவர்கள். "வாலையடி சித்தர் தெய்வம்' என்பது பழமொழி. "சித்தனோடு சேர்ந்தாலே சித்தாந்தம்' என்பது மஸ்தான் பாடல்.

கொங்கணச் சித்தர், திருவள்ளுவர்- வாசுகி தம்பதியரின் நற்குணங்களறிந்து அவர்களை சந்திக்க மயிலாப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்தார். நடுவே வானில் கொக்குகள் பறந்தன. ஒரு கொக்கு இட்ட எச்சம் அவர் தலையில் விழுந்தது. அதனால் அவர் கோபத்துடன் அந்தக் கொக்கை நோக்கிப் பார்த்தார்- சிவன் மன்மதனை நெற்றிக் கண்ணால் பார்த்ததுபோல. கொக்கு எரிந்தது; அவருக்கு மனம் சாந்தமாயிற்று.

அவர் சந்நியாசி என்பதால், கையில் ஓடு ஏந்தி, "அம்மா தாயே, பிச்சை இடுங்கள்' என்றார். இவ்வாறு யார் குரல்கேட்டாலும் உடனே வெளிவந்து முடிந்ததைப் பரிமாறி விடுவார் வாசுகி. ஆனால் அன்றோ தன் கணவருக்கு அன்னம் பரிமாறிக்கொண்டிருந்த தால் வெளிவருவதற்கு சற்று நேரமாயிற்று. கொங்கணருக்குக் கோபம் வந்தது. அவர் கோபக் கனலுடன் வாசுகியைப் பார்க்க, அந்த அம்மை யார், "நான் கொக்கல்லவே' என்றதும், கொங்கணர், எங்கோ நடந்த சம்பவம் இந்த மாது எவ்வாறு அறிந் தாள் என்று வெட்கப்பட்டு, சாந்த மடைந்து மன்னிப்பு கேட்டார். "உங்கள் மண வாழ்க்கையை உணரவே வந்தேன்;

இதுவே போதும்' என்றார். திருவள்ளுவர் வாசலுக்கு வந்து, அவரை வீட்டிற்குள் அழைத்தார். அவருடன் சிலகாலம் தங்கி அவரது சொற்கள், திருக்குறள் கேட்டுணர்ந் தாராம் கொங்கணச் சித்தர்.

ஒருசமயம் வாசுகி அம்மையார் கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்தபொழுது, திருவள்ளுவர் அவரை அழைக்க, கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்தாராம் அம்மையார். குடம் அப்படியே நின்றதாம்.இதைக்கண்டு வியந்தாராம் கொங்கணர்.

valluvar

அதுவே கற்பின் மகிமை.

ஒருநாள் காலையில் திருவள்ளுவர் பழையது சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் சூடு தணிக்க விசிறி வேண்டுமென்று வாசுகியிடம் கேட்டார். பழைய சாதம் எப்படி சுடுமென வாசுகி குறுக்குக் கேள்வி கேட்க வில்லை. அவர் விசிறி வீச, அன்னத்திலிருந்து ஆவி வருவதைக் கண்டு கொங்கணர் அதிசயித்தாராம்.

திருவள்ளுவர் உணவருந்தும்போது தினமும் ஒரு சிறிய பாத்திரத்தில் நீரும் ஒரு ஊசியையும் வைக்கச் சொல்வார். அவ்வாறே வாசுகி அம்மையார் செய்து வந்தார். ஆனால் அவற்றை ஒருநாளும் அவர் உபயோகப்படுத்தவில்லை. வாசுகியும் ஏனென்று கேட்கவில்லை. ஒருநாள், "தாங்கள் கூறியபடிதான் வைக்கிறேன்; ஆனால் அதைத் தாங்கள் பயன்படுத்தவில்லையே. காரணம் என்ன?' என்று கேட்டார். அதற்கு வள்ளுவர், "உணவு பரிமாறும்போது அது வெளியே சிதறக்கூடாது. அவ்வாறு சிதறினால் அதை ஊசியால் குத்தி நீரில் நனைத்து தட்டில் இடலாம். ஆனால் உனது உகந்த பரிமாறலில் ஒருநாள்கூட சாதம் சிந்தவில்லை. எனவே ஊசியையும் நீரையும் உபயோகிக்கவில்லை' என்றாராம். இதைக்கேட்ட வாசுகி அம்மை யார் கண்களை மூடினார். இறைவனடி சேர்ந்தார்.

அப்போது திருவள்ளுவர், "அன்புள்ள வளே, என் வார்த்தைக்கு ஒருபோதும் மறு வார்த்தை பேசியதில்லை. இரவு நான் தூங்கியபின் தூங்கி, நான் விழிப்பதற்குமுன் விழித்தெழுந்து பணிவிடைகளைச் செய்துவந்தாய். இப்போது நீ இறைவனடி சேர்ந்துவிட்டாய். இதன்பின் இரவில் என் கண்கள் எப்படி மூடும்' என்றாராம்.

கற்புக்கரசியாகத் திகழ்ந்து, கணவன் சொல் லுக்கு மறுசொல் பேசாத வாசுகியின் தாள் பணிந்து, நாமும் வள்ளுவர்- வாசுகி தம்பதி போல் சாந்தமுடன் சுமுகமாக வாழலாமே.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடுகிறோம். திருக்குறள் திருநாளாக தமிழ்நாடு கொண்டாடுவதைப் பாராட்ட வேண்டும். அச்சமயம் வாசுகி அம்மையாரை யும் மறக்காமல் நாம் நினைக்கவேண்டும். வாசுகி இல்லாவிடில் திருக்குறள் கிடைத் திருக்குமா என்பது சந்தேகமே.

om010121
இதையும் படியுங்கள்
Subscribe