"எல்லா மறிந்தவ ரென்றுசொல் லியிந்த
பூமியிலே முழுகுரு ஞானி யென்று
உல்லாசமாக வயிறு பிழைக்கவே பூமியில்
ஓடித் திரிகின்றார் வாலைப் பெண்ணே.'
(கொங்கண சித்தர்)
வான்மீகி: அனைத்தையும் பகுத்தறிவால் அறிந்து, இயற்கையின் இயல்பான செயலைப் புரிந்து, மனிதர்களிடமுள்ள மகத்தான சக்திகளைத் தெரிந்து, பூமியில் இல்லாத, இயற்கை உருவாக்காத, மனிதர்கள் உருவாக்கி உலவவிட்ட மாயை நிலை செயல்களை மக்களுக்குக் கூறிய எங்கள் ஆசானே, தங்கள் திருப்பாதங்களுக்கு வணக்கம்.
நேற்றைய தினம் தமிழ்ச் சபையில், தாவரங்களுக்கும் உடல், உயிர், ஆன்மா உண்டு என்றும்; பறவைகளும் விலங்குகளும் தாவரங்களைக்கொன்று உணவாக உண்டு வாழ்ந்தாலும், அவற்றின் கழிவுகள் தாவரங்களுக்கு உணவாகி, கொன்ற பாவத்தை நிவர்த்திசெய்து விடுகின்றன என்றும் கூறீனீர்கள்.
காடுகளில் வாழும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற மாமிச உணவை மட்டுமே உண்டு வாழும் கொடிய மிருகங்கள், தன்னைவிட பலம் குறைந்த பிராணிகளைக்கொன்று தின்று உயிர் வாழ்கின்றன. இதனால் அவற்றுக்குப் பாவம் உண்டாகாதா?
அகத்தியர்: இத்தமிழ்ச் சபையில் குழுமியிருக்கும் சித்தர் பெருமக்களே, வான்மீகன் கேட்ட கேள்வி எல்லாரிடமுள்ள பொதுவான சந்தேகக் கேள்விதான். இந்த பூமியில் அசையும் பொருள், அசையாப் பொருள் என இரண்டு வகை உண்டு. நிலம், தங்கம், வெள்ளி, இரும்பு போன்ற இன்னும் பல தாதுப் பொருட்கள் அசையாப் பொருட்கள். இவற்றுக்கு உடல் உண்டு. ஆனால் உயிர், ஆன்மா கிடையாது. இவையும் இயற்கையால் பூமியில் உருவானவைதான்.
உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் உள்ளவற்றில் தாவரங் கள் மட்டும் தானே அசைந்து இடம்பெயர்ந்து செல்லமுடியாதவை! மற்ற உயிரினங்கள் அனைத்தும் அசையும்; தானே வேறிடங்களுக்கு நகர்ந்த
"எல்லா மறிந்தவ ரென்றுசொல் லியிந்த
பூமியிலே முழுகுரு ஞானி யென்று
உல்லாசமாக வயிறு பிழைக்கவே பூமியில்
ஓடித் திரிகின்றார் வாலைப் பெண்ணே.'
(கொங்கண சித்தர்)
வான்மீகி: அனைத்தையும் பகுத்தறிவால் அறிந்து, இயற்கையின் இயல்பான செயலைப் புரிந்து, மனிதர்களிடமுள்ள மகத்தான சக்திகளைத் தெரிந்து, பூமியில் இல்லாத, இயற்கை உருவாக்காத, மனிதர்கள் உருவாக்கி உலவவிட்ட மாயை நிலை செயல்களை மக்களுக்குக் கூறிய எங்கள் ஆசானே, தங்கள் திருப்பாதங்களுக்கு வணக்கம்.
நேற்றைய தினம் தமிழ்ச் சபையில், தாவரங்களுக்கும் உடல், உயிர், ஆன்மா உண்டு என்றும்; பறவைகளும் விலங்குகளும் தாவரங்களைக்கொன்று உணவாக உண்டு வாழ்ந்தாலும், அவற்றின் கழிவுகள் தாவரங்களுக்கு உணவாகி, கொன்ற பாவத்தை நிவர்த்திசெய்து விடுகின்றன என்றும் கூறீனீர்கள்.
காடுகளில் வாழும் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற மாமிச உணவை மட்டுமே உண்டு வாழும் கொடிய மிருகங்கள், தன்னைவிட பலம் குறைந்த பிராணிகளைக்கொன்று தின்று உயிர் வாழ்கின்றன. இதனால் அவற்றுக்குப் பாவம் உண்டாகாதா?
அகத்தியர்: இத்தமிழ்ச் சபையில் குழுமியிருக்கும் சித்தர் பெருமக்களே, வான்மீகன் கேட்ட கேள்வி எல்லாரிடமுள்ள பொதுவான சந்தேகக் கேள்விதான். இந்த பூமியில் அசையும் பொருள், அசையாப் பொருள் என இரண்டு வகை உண்டு. நிலம், தங்கம், வெள்ளி, இரும்பு போன்ற இன்னும் பல தாதுப் பொருட்கள் அசையாப் பொருட்கள். இவற்றுக்கு உடல் உண்டு. ஆனால் உயிர், ஆன்மா கிடையாது. இவையும் இயற்கையால் பூமியில் உருவானவைதான்.
உடல், உயிர், ஆன்மா ஆகிய மூன்றும் உள்ளவற்றில் தாவரங் கள் மட்டும் தானே அசைந்து இடம்பெயர்ந்து செல்லமுடியாதவை! மற்ற உயிரினங்கள் அனைத்தும் அசையும்; தானே வேறிடங்களுக்கு நகர்ந்து செல்லும். இந்த உயிரினங்களில் அனைத் திலும் அறிவில் ஏற்றத் தாழ்வு, வித்தியாசம் உண்டு. இவை செய்யும் செயல்களால் உண்டாகும் கர்மவினை பாதிப்புகளை அறியமுடியாத அறிவைக் கொண்டவை. இவை அறியாமல் செய்யும் தவறுகள்.
இந்த பூமியில் வாழும் உயிரினங்க ளில், மனிதர்களுக்கு மட்டுமே அனைத்தையும் பகுத்தறியும் ஆறறிவுண்டு. இந்த பூமியில் ஒரு உயிர், ஒரு ஆன்மா முதன் முதலில் ஓரறிவுள்ள தாவரமாகத்தான் பிறக் கும். பின்பு படிப்படியாக பரிணாம வளர்ச்சியால், பல நிலைகளில் புழு, பூச்சி, பறவை, விலங்கு என உடல் தோற்றம்கொண்ட உயிரினங்களாக வளர்ச்சியடைந்து, இறுதியில் ஆறறிவுள்ள மனித நிலையை அடைகின்றன.
ஒரு மனிதனாக இந்த பூமியில் பிறந்த பிறகு, மனிதனாகப் பிறப்பதற்குமுன்பு பிறந்த பல பிறவிகளில் செய்த பாவச் செயல்கள் அனைத்திற்கும் உண்டான தண்டனைகளை அனுபவிக்கிறான். மனிதப் பிறவியால் தான் முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளை அனுபவித்துத் தீர்க்கமுடியும். இதனால்தான் மிருகம், விலங்குகளின் செயல்களால் அவற்றுக்கு பாவம் சேராது. பாவ- சாப- புண்ணியம் பற்றிய விளக்கமும் தெரியாது.
வான்மீகி: ஆசனே, ஒவ்வொரு மனித ஆன்மாவும், முதல் பிறவியிலேயே மனிதனா கப் பிறப்பதில்லை. தாவரங்களாகவும், பறவை, மிருகம், விலங்குகள் என பல உயிரினமாகவும் பிறந்து, இறுதியில் மனிதனாகப் பிறந்து, முற்பிறவிகளின் பாவங்களைத் தீர்த்து, பூமியில் பிறவியை முடித்து மோட்ச நிலையை அடையவேண்டுமென்று கூறுகிறீர் கள். ஒருவன் மனிதனாகப் பிறப்பதற்குமுன்பு எந்த உயிரினமாக இருந்திருப்பான் என்பதை எப்படி அறிந்துகொள்வது?
அகத்தியர்: ஐந்தறிவுள்ள உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு குணமுண்டு. மனிதனாகப் பிறப்பதற்குமுன்பு எந்த உயிரினமாக இருந்ததோ, அதன் குணம் மனிதனா கப் பிறந்தபின்பும் தொடர்ந்துவந்து, அந்த குணத்துடன் அவனை வாழ்வில் செயல்படச் செய்யும். அவன் நடைமுறை செயல்கள்மூலம் இதனை அறிந்துகொள்ளலாம்.
"மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு
கல்லுண்டு மரமு முண்டு
மனிதரிலும் நீர்வாழுஞ் சாதியுண்டே
அனேக குண மனிதருண்டு
மனிதரிலும் மனிதருண்டு வானவரும்
மனிதராய்ப் பிறப்பதுண்டு
மனிதரிலே பிறப்ப றுக்க வந்ததே
அருமை யெனஅறிந் திடாயே.'
முற்பிறவியில் சிங்கம், புலி, சிறுத்தை போன்ற கொடிய மிருகங்களாக இருந்து, மனிதப் பிறவியெடுத்துப் பிறந்தவனுக்கு முன்கோபம், போர்க்குணம், பிறரை அடக்கி யாளும் குணம் இருக்கும். தான் சொல்வதை தான் பிறர் கேட்கவேண்டும்- செய்ய வேண்டும்; இல்லையென்றால் அவர்களை அடித்துத் துன்புறுத்துவான். கொலை செய்வான். பறவை, மிருகங்களை வேட்டை யாடுவான். மாமிச உணவு வகைகளை விரும்பி அதிகமாக உண்பான். இன்னும் இதுபோன்ற இந்த விலங்குகளுக்கு உண்டான அறிவும் குணங்களும் கொண்டு வாழும் மனிதனாக இருப்பான்.
பசு, யானை, ஆடு, மான் போன்ற சாதுவான விலங்குகளாக இருந்து பிறந்த மனிதர்கள், தங்கள் வாழ்க்கையில் எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் அமைதியாக வும், சாந்தமாகவும், பிறர்சொல்வதைக் கேட்டுப் புரிந்து செயல்படுபவர்களாகவும் இருப்பார்கள். தனக்கு எது நன்மை தரும்- எது தீமை தரும் என்பதை அறிவால் அறிந்து பயன்படுத்திக்கொள்வார்கள். தாய், தந்தை, மனைவி, குழந்தைகள், உறவு கள், மற்ற மனிதர்களிடம் அன்பாக, பாசம் கொண்டவர்களாக, குடும்பத்தினரைக் காப்பாற்றுபவர்களாக, பகைமை குணமில்லாமல், ஒற்றுமையை விரும்புபவர் களாக, எதிலும் சமாதானப் போக்கினைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். தன் வாழ்வின் எதிர்காலத்திற்கும், தன் வம்ச வாரிசுகளின் வாழ்க்கை நல்லதாக அமையவும் தேவையான பொருள், சொத்து களை உழைத்து, சம்பாதித்து சேமித்து வைப்பவர்களாகவும், இன்னும் இதுபோன்று பல குணங்களைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
காளைமாடு, குதிரை, கழுதை போன்ற விலங்குகளாக இருந்து மனிதனாகப் பிறப்பவர்கள், எப்போதும் உழைத்துக் கொண்டே இருப்பார்கள். உழைத்துப் பொருள் சம்பாதித்து குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள். பிறர் சொத்திற்கு ஆசைப்பட மாட்டார்கள். குடும்ப மேன்மைக் காக தன் சுகத்தைத் துறந்து பாடுபட்டுக் கொண்டிருப்பார்கள். உழைப்பாளிகள். உலகின் அனைத்து செயல்களும் இவர் களால்தான் நிறைவேற்றப்படும்; உலகைக் காப்பாற்றுபவர்கள். இதுபோன்று இன்னும் பல குணங்களைக் கொண்டிருப்பார்கள்.
குரங்காய் இருந்து மனிதனாகப் பிறப்பவர் கள். தன்னிடமுள்ள பணம், பொருள்களை யும், தன் முன்னோர்கள் தேடிவைத்த சொத்துகளையும் அழித்துவிடுவார்கள். குடும்ப ஒற்றுமையைக் குலைப்பவர்கள். தன் நலமே பெரிதென எண்ணம் கொண்டவர்கள். மனம் ஒரு நிலையில் இராது. தெளிவான எண்ணம் இராது. மனநோயாளிபோல் ஏதாவது பேசிக்கொண்டும், செய்துகொண்டும் இருப்பார்கள். இதுபோன்று இன்னும் பல குணங்களைக் கொண்டிருப்பார்கள்.
நரியாய் இருந்து மனிதனாகப் பிறப் பவர்கள் திருட்டு புத்தி, தந்திர குணம், பிறரை ஏமாற்றிப் பொருள்பறிந்து வாழ்தல், கோள் சொல்லுதல், ஒருவருக்கொருவரிடையே பகையை உண்டாக்குதல், அமைதியைக் குலைப்பது, காரியவாதி, சுயநலகுணம், நன்றியில்லாமை, நிலையான நட்புறவு கொள்ளாத குணம் என இதுபோன்ற குணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இதுபோன்று, ஒவ்வொரு விலங்கின் குணங்கள் எவருக்கு உள்ளதோ, அதனை ஆராய்ந்து அறிந்துகொண்டால், அவன் ஐந்தறிவுள்ள எந்த விலங்கிலிருந்து மனிதனாகப் பிறந்துள்ளான் என்று தெரிந்துகொள்ளலாம்.
வானவர்கள் எனக் கூறப்படும் இந்திராதி தேவர்களும், பெண் தெய்வங்களும் தேவலோக சட்டவிதிகளை மீறி செயல்பட்டு பாவ- சாபங்களைப் பெற்று, அந்த சாபங்களை நிவர்த்திசெய்ய இந்த பூமியில் மனிதர்களாகப் பிறந்து, தாங்கள் செய்த பாவங்களுக்கு உண்டான தண்டனைகளை அனுபவித்து முடித்து, பின் தேவலோகம் அடைவார்கள். தெய்வங்களும், தேவர்களும் தங்களின் பாவ- சாபங்களைத் தீர்த்துமுடிக்க மனிதனாக பூமியில் அவதாரம் எடுத்துப் பிறக்கும்போது, தங்களின் அனைத்து கடவுள் சக்தியையும் இழந்து, சாதாரண மனிதர்களைப்போல் கஷ்டங்களை அனுபவித்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு மனித ஆன்மாவும் தன் முற்பிறவி பாவ- சாபப் பதிவுகளைத் தீர்த்து முடிக்கும்வரை மறுபடியும் மறுபடியும் மனிதனாக இந்த பூமியில் பிறக்கவேண்டிய நிலைதான். மிருகங்களிலிருந்து மனிதனாகப் பிறப்பவன், மறுபடியும் மிருகங்களாக தன் பழைய நிலையை அடையமுடியாது.
இந்த பூமியில் ஒரு ஆன்மா தன் பிறவி நிலையைத் தடுத்து, பிறவியில்லாத மோட்ச நிலையை அடையும் வண்ணம், தன்னையறிந்து வாழ்வதே பெருமையான வாழ்க்கையாகும்.
வான்மீகி: ஆசானே, இந்த பூமியில் ஒரு ஆன்மாவின் முதல் தொடக்கம் எங்கு தொடங்கியது- இறுதியில் மனிதனாகப் பிறக் கக் காரணத்தை அறிந்து கொண்டோம். மனிதர்கள் வாழ்க்கையில் பாவ- சாப- புண்ணிய கர்மவினைப் பதிவுகள் எவ்வாறு உண்டாகிறது? அதனைத் தீர்க்க சரியான வழிமுறைகளைக் கூறுங்கள்.
அகத்தியர்: என் அருமை சித்தர் பெருமக்களே, வான்மீகியின் இந்தக் கேள்விக்கு உண்டான பதிலை நாளை பகுத்தறிவு சபையில் கூறுகிறேன். இன்று சபை கலையட்டும்.
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)