"கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறிஉன் புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறிஉன் புதுமை கண்டவர்க்கு
கண்ணுக்கு மூக்கடியோ காரணங்கள் மெத்தவுண்டு!'
(அழுகண்ணிச்சித்தர்)
இன்றைய நாளில் மூச்சிப்பயிற்சி (பிராணாயாமம்), வாசிப்பயிற்சி, யோகப்பயிற்சி செய்தால் மனதை அடக்கலாம்; சகலவிதமான சக்தி களையும் பெறலாம் என பலரும் பலவிதமாகக் கூறி, இதற்குப் பயிற்சி தருகிறேன் என பல பள்ளிகளை அமைத்து, விளம்பரம் செய்து வியாபாரமாக்கி பணம் சம்பாதித்து வருகின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனின் மூச்சுக் காற்றையும், யோகப் பயிற்சி தருபவர்கள் தாங்கள் பணம் சம்பாதிக்கும் வழிமுறையாகச் செய்துகொண்டார்கள். இன்னும் சிலர் தாடி, சடைமுடி வளர்த்து, காவி வேட்டி அணிந்து சந்நியாசி வேடம் தரித்துக்கொண்டு, மடம், பீடம், ஆசிரமங் களை அமைத்து, மிகவும் சக்திவாய்ந்த பெரிய மகான்கள், சித்தர்கள், துறவிகள் என தங்களைப் பற்றி தாங்களே விளம்பரம் செய்துகொண்டு, பாமர மக்களின் கஷ்டத்தைத் தீர்ப்பதாகக்கூறி, அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றிப் பணம் பறித்து இவர்கள் சுகமாக வாழ்கிறார்கள்.
அகத்தியர் முதலான 18 சித்தர்களும், காற்றின்மூலம் பல நன்மைகளை அடைய முடியும் என தங்கள் அனுபவத்தால் அறிந்து கூறிய மூச்சுப் பயிற்சி யோகசாதனை முறையை வடமொழியில் "பிராணாயாமம்' என்று கூறி, அதனைத் தாங்கள் பிழைக்க தொழிலாகக் கொண்டுவிட்டார்கள். இந்த வாசி (காற்று) யோகம்மூலம் மக்கள் உடலை உறுதியாக்கவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், அலைபாயும் மனதை அடக்க வும் சித்தர்கள் அறிந்து கூறினார்கள்.
மூச்சுப் பயிற்சி செய்யும்போது உடலும் மனமும் அசைவற்று இருத்தல் வேண்டும். ஆனால் இப்போது பயிற்சி நிலையங்களில், மடம்
"கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உண்ணாக்கு மேலேறிஉன் புதுமை மெத்தவுண்டு
உண்ணாக்கு மேலேறிஉன் புதுமை கண்டவர்க்கு
கண்ணுக்கு மூக்கடியோ காரணங்கள் மெத்தவுண்டு!'
(அழுகண்ணிச்சித்தர்)
இன்றைய நாளில் மூச்சிப்பயிற்சி (பிராணாயாமம்), வாசிப்பயிற்சி, யோகப்பயிற்சி செய்தால் மனதை அடக்கலாம்; சகலவிதமான சக்தி களையும் பெறலாம் என பலரும் பலவிதமாகக் கூறி, இதற்குப் பயிற்சி தருகிறேன் என பல பள்ளிகளை அமைத்து, விளம்பரம் செய்து வியாபாரமாக்கி பணம் சம்பாதித்து வருகின்றார்கள்.
ஒவ்வொரு மனிதனின் மூச்சுக் காற்றையும், யோகப் பயிற்சி தருபவர்கள் தாங்கள் பணம் சம்பாதிக்கும் வழிமுறையாகச் செய்துகொண்டார்கள். இன்னும் சிலர் தாடி, சடைமுடி வளர்த்து, காவி வேட்டி அணிந்து சந்நியாசி வேடம் தரித்துக்கொண்டு, மடம், பீடம், ஆசிரமங் களை அமைத்து, மிகவும் சக்திவாய்ந்த பெரிய மகான்கள், சித்தர்கள், துறவிகள் என தங்களைப் பற்றி தாங்களே விளம்பரம் செய்துகொண்டு, பாமர மக்களின் கஷ்டத்தைத் தீர்ப்பதாகக்கூறி, அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றிப் பணம் பறித்து இவர்கள் சுகமாக வாழ்கிறார்கள்.
அகத்தியர் முதலான 18 சித்தர்களும், காற்றின்மூலம் பல நன்மைகளை அடைய முடியும் என தங்கள் அனுபவத்தால் அறிந்து கூறிய மூச்சுப் பயிற்சி யோகசாதனை முறையை வடமொழியில் "பிராணாயாமம்' என்று கூறி, அதனைத் தாங்கள் பிழைக்க தொழிலாகக் கொண்டுவிட்டார்கள். இந்த வாசி (காற்று) யோகம்மூலம் மக்கள் உடலை உறுதியாக்கவும், ஆயுளை நீட்டித்துக் கொள்ளவும், அலைபாயும் மனதை அடக்க வும் சித்தர்கள் அறிந்து கூறினார்கள்.
மூச்சுப் பயிற்சி செய்யும்போது உடலும் மனமும் அசைவற்று இருத்தல் வேண்டும். ஆனால் இப்போது பயிற்சி நிலையங்களில், மடம், ஆசிரமங்களில் சென்று பயிற்சி செய்யும்போது மனம், உடல் அடங்குகின் றதா என்றால் இல்லையென்பதே உண்மை.
இன்றைய நாளில் மூச்சுப் பயிற்சி செய்யும்போது கை, கால்களை மடக்கி, ஆசனமிட்டு அமர்ந்து, கண்களைமூடி, மூச்சை இழுத்துவிட்டு இதுவே யோகநிலை என்று கூறுகின்றார்கள். ஆனால் பயிற்சி செய்யும்போது மனதில் தொழில், கடன், நோய், குடும்பம், திருமணம், எதிரி என இது போன்று, இன்னும் பலவகையான பிரச்சினைகளை நினைத்துக்கொண்டு இருப்பார்களே தவிர, காற்றின் நிலையை கவனிக்கமாட்டார்கள்; மனதை அடக்க மாட்டார்கள். ஏன்- இவர்களுக்குப் பயிற்சி தரும் பல ஆசிரியர்களுக்கும் சாமியார் களுக்கும்கூட மனதை அடக்க வழி தெரியாது.
இந்த க-கால குருமார்களின் குணம், நிலையைப்பற்றி கொங்கணர் அன்றே தெளிவாக-
"பூரணம் நிற்கும் நிலையறியான் வெகு
பொய் சொல்வான் கோடிமந்திரம் சொல்வான்
காரணகுரு அவனும் அல்ல
காரியகுரு பொருள் பறிப்பான்'
என்று கூறியுள்ளார்.
இன்றைய நாளில், "யோகப்பயிற்சி செய்கி றேன்; யோகா வகுப்பிற்குச் செல்கிறேன்' என்று கூறிக்கொள்வதை பலர் பெருமை யாகச் சொல்-க்கொண்டு திரிகிறார்கள். அரசாங்கம்கூட யோகா தினமென்று ஒரு நாளைக் குறிப்பிட்டு, பெரிதாகக் கொண்டாடுகிறது. எல்லாப் படிப்பிற்கும் "நீட்' போன்று நுழைவுத்தேர்வு வைக்கும் அரசாங்கம், இந்த யோகா பயிற்சி குருமார் களுக்கும் ஆசிரியர்களுக்கும், இவர்கள் முறையாக யோகா கற்றவர்களா? மனம், உடல் அசைவற்றிருக்கச் செய்யும் சூட்சுமம் அறிந்தவர்களா என்று நுழைவுத்தேர்வு வைத்து, திறமையறிந்து சான்றிதழ் தந்து, பிறருக்குப் பயிற்சியளிக்கச் செய்யவேண்டும்.
மூச்சுப் பயிற்சி செய்யும் முறையையும், மனதை அடக்கும் சூட்சும ரகசியத்தையும் பற்றி தேரையர் சித்தர் கூறுவதை அறிவோம்.
அகத்தியர்: தேரையர் சித்தரே, மூச்சுப் பயிற்சி செய்யும்போது மனதை அடக்கும் வழிமுறையை இன்று தமிழ்ச் சபையில் கூறுங்கள்.
தேரையர்: பகுத்தறிவுப் பெரியாரே, சித்தர்களின் ஈஸ்வரனே! இந்த சுவாசப் பயிற்சி செயல்முறையும், அதனால் மனிதர்கள் பாவ- சாப- தோஷப் பதிவுகள். நீங்கி முக்தியடைய வழிமுறைகளும் உங்களால் சித்தர்களுக்குக் கூறப்பட்டதுதானே. நீங்கள் போதனை செய்த வழிமுறைகளைக் கடைப்பிடித்து பயிற்சிசெய்து, பல சக்திகளைப் பெற்று, இன்று இந்த தமிழ்ச் சங்கத்தில் கூடியிருக்கும் மற்ற சித்தர்கள் கூறியதைத்தான் நானும் கூறப் போகிறேன்.
ஆசானே, மனதை இயக்கி செயல்பட வைப்பது, அவரவர் மூச்சுக் காற்று. சுவாசம் இயங்கினால் மனம் இயங்கும். எவர் ஒருவரால் மூச்சுக் காற்று கட்டப்படுகின் றதோ. அவரின் மனமும் அசையாமல் கட்டப்படுகின்றது. எவரது மனம் இயங்கா மல் கட்டப்படுகின்றதோ, அவருக்குத்தான் சுவாசம் கட்டப்படும்.
மனதிற்கும், சுவாசக் காற்றுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இவையிரண்டும், ஒன்றி-ருந்து ஒன்று உருவாவது. மனம், காற்று இவையிரண்டில் ஒன்றைக் கட்டினால், மற்றொன்று தானே கட்டுப்பட்டு விடும். ஏதாவது ஒன்று நசிந்தால் மற்றொன்று தானே நாசமடையும். மனதிற்குக் காற்று நாதனாகவும், காற்றுக்கு மனம் தலை வனாகவும் செயல்படுகின்றன.
மனிதர்களின் மனமே அவர்களின் வாழ்வில் பாவ- சாப தோஷங்கள் உண்டாகக் காரணமாக உள்ளது. மனதை அடக்கி, கட்டுப்படுத்தி வாழும்போது அவர்களுக்கு பாவ- சாபப் பதிவுகள் உண்டாகாது. முற் பிறவி பாவ- சாபங்களும் நசிந்து முக்தி நிலையைத் தந்துவிடுகின்றது. மனிதர்கள் மூச்சுப் பயிற்சி செய்து, கொஞ்சம் கொஞ்ச மாக மனதை அடக்க முயற்சி செய்ய வேண்டும்.
மகாசித்தர் திருமூலர், "கல்லும் மண்ணும் கலந்து கட்டி, இடிந்து அழிந்துபோகும் ஒரு கட்டடம் பாவ சாபப் பதிவுகளை நீக்கும் வணங்கத்தக்க கோவில் அல்ல. ஒரு மனிதனின் உடலே அவனுக்குக் கோவில். உடம்பினுள்ளே இருந்து செயல்பட வைக்கும் அவன் மனமே இறைவன். அந்த மனமிருக்கும் இடமே இறைவன் இருக்கும் கர்ப்பக்கிரகம். அவனது வாய்தான் அந்த கோவி-ன் கோபுர வாயில். அந்த வாயினுள்ளே இருக்கும் நாக்குதான் கொடி மரம்' என்று கூறுகிறார்.
அகத்தியர் பெருமானே, உங்களின் உயிர்த் தோழர் புலஸ்தியர்-
"ஊணை யுண்ணாக்கி அண்ணாக்கை உள்தூக்கி
உள்ளடக்கி உயர்ந்தவர்கள் கோடி'
என்கிறார். படைப்புத் தொழில் செய்யும் பல பிரம்மாக்களின் ஆயுள்காலத்தை நிர்ணயம் செய்யும் அரிய சக்திபெற்ற உரோம ரிஷி-
"உச்சிக்கு மேலாக உண்ணாக்கு மேல்நிதம்
வைத்த விளக்கு எரியுதடி'
"செலுத்து முண்ணாக்கில் அண்ணாக் கையா சென்றேறிப் பிடரிவழி தியானம் தோன்றும்'
கூறுகிறார். பிரளய காலங்களில் இந்த பூமி அழிந்து, மறுபடியும் உயிர்கள் தோன்றுவதைக் கண்டவரான காகபுசுண்ட ரிஷி-
"வீரமடா அண்ணாக்கின் நேரே மைந்தா
மேலடா மனந்தனையும் செலுத்தும்போது'
என்கிறார். கிரகங்களின் நிலையை மாற்றியமைக்கும் வல்லமை பெற்ற இடைக்காட்டுச் சித்தர் இவ்வாறு கூறுகிறார்:
"அண்ணாக்கை ஊடே அடைத்து
அமுதுண்டேன்
அந்தரத்தை அப்போதே அறிந்து கொண்டேன்.'
"இருவினையான மாடுகளை ஏகவிடு கோனே- உன்
அடங்கு மன மாடொன்றை அடக்கிவிடு கோனே.'
"மனமென்னும் மாடடங்கிட தாண்டவக் கோனே- முத்தி
வாய்த்ததென் றென்னடா தாண்டவக் கோனே!'
சுவாசக் காற்று, மனம் ஆகிய இரண் டில் ஏதாவது ஒன்றை அடக்கிக் கட்டும் போது முக்திநிலையை அடையலாம் என்கிறார்.
சித்தர்களின் ஈசனே, அகத்தியர் ஆசானே, தாங்கள்கூட எங்களுக்கு யோகப் பயிற்சியினை போதிக்கும்போது-
"தேரப்பா அண்ணாக்குள் நின்று கொண்டு
தியங்காமல் வாசி சுழு முனைக்குள்
அடங்கும்பாரு'
என்று கூறித்தான் கற்றுக் கொடுத்தீர்கள்.
சைவத்தமிழ்ச் சித்தர் பெருமக்கள் அனைவரும் காற்று, மனம் இரண்டையும் அடங்கச் செய்வதற்கு நாக்கின் செயல் பாடு நிலையே முக்கியம் என்று அனுபவத் தில் அறிந்துதான் கூறியுள்ளார்கள்.
மூச்சுப் பயிற்சி செய்யும்போது, மூக்கின் வலது- இடது துவாரங்களில் காற்றினை உள்ளே இழுத்தவுடன், நாக்கினை உள் பக்கம் மடித்து மேலே வைத்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட அளவு காற்றை உள்ளே அடக்கி வைத்து, பின் வெளி விடும்போது, நாக்கின் மடிப்பை எடுத்து இயல்பான நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு முறையும் மூச்சை உள்ளே செலுத்தி காற்றைக் கட்டும் போது, நாக்கினை மடித்து இதுபோல் செய்து கொள்ளவேண்டும்.
மூச்சுப் பயிற்சி (பிராணாயாமம்)
செய்யும்போதெல்லாம், இது போன்று உள் நாக்கினை மடித்து அண்ணாக்கில் வைத்துக்கொள்ளும் போது மனம் இயங்காது. வேறு சிந்தனைகள், எண்ணங்கள் மனதில் தோன்றாது. மனம் கட்டுப்படும்.
ஆசானே, அனைத்து சித்தர்களும், தங்களின் வழிகாட்டுதல்படி செயல் பட்டு, மனதையும் காற்றையும் அடக்கும் வழி முறையை அறிந்தோம். மூச்சுப் பயிற்சிக்கு அகத்தியர் தாங்களே ஆதிகர்த்தா ஆவீர்கள். நாளை மூக்கின் செயல்பாடு பற்றிக் கூறுகிறேன்.
"ஆச்சப்பா இதுவல்லோ பிராணாயாமம்
அறிந்தவனார் சிவயோகி யறியார் மற்றோர்
ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே
ஒன்றையுந்தான் மனத்தினுள்ளே சங்கி யாமல்
வாச்சப்பா வந்ததென்ற காரணமாக
மருவியதோர் ஞானமென்ற மார்க்கத் தூடிக்
கூச்சப்பா காமியத்தை நரகென் றெண்ணிக்
கூறான கர்மமெல்லாம் விடுக்க நன்றே!'
(சட்டைமுனிச் சித்தர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)