சித்தர்கள் அருளிய வாசி யோகம் 41 - சித்தர்தாசன் சுந்தர்ஜி

/idhalgal/om/vasi-yoga-by-siddharthas-41-siddharthasan-sundarji

"குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்

குட்டினை நீக்கா குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருடாட்ட மாடிக்

குருடும் குருடும் குழிவிழு மாறே.'

-திருமூலர்

உரோமரிஷி தன் ஆயுள் கணக்கை மகாவிஷ்ணு விடமும் பிரம்மாவிடம் கூறத்தொடங்கினார்.

""லட்சுமி மணிமார்பனே, என் ஆயுள் காலத்தையும், பிரம்மனின் ஜீவித காலத்தையும் கூறுகிறேன், கேளுங்கள்.

தேவரீர், என் உடம்பில் மூன்று கோடியே ஐம்பது லட்சம் உரோமங்கள் உள்ளன. நான் மனிதர்களுக்கு முடிதிருத்தி, இன்னும் நானாவித தொழில்களைச் செய்யும் "நாவிதர்' இனத்தில் பிறந்திருந்தபோதும், என் உடம்பிலுள்ள ரோமத்தை மழித்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், என் உடம்பிலுள்ள ஒவ்வொரு ரோமமும் ஒரு காரணத்திற்காக வளர்ந்துள்ளது. என் உடம்பில் இவ்வளவு ரோமங்கள் இருப்பதால்தான் என்னை மற்றவர்கள் "உரோமரிஷி' என்று அழைக்கிறார்கள். உரோமரிஷி என்பது என் காரணப்பெயர்.

siddhar

என் உடம்பிலிருந்து ஒரு முடி உதிர்ந்து விழுந்தால், அப்போது உயிரினங்களைப் படைக்கும் தொழிலைச் செய்துகொண்டிருக்கும் பிரம்மதேவர் இறந்துவிடுவார்.

இதுபோன்று மூன்று கோடியே ஐம்பது லட்சம் பிரம்மதேவர்கள் மரணமடைந்தால், என் உடம்பிலுள்ள அனைத்து ரோமங்களும் உதிர்ந்துவிடும். என் ஆயுள் முடிந்து என் உயிர் பிரித்துவிடும். இவரைப்போன்று பல பிரம்மாக்களின் மரணத்தை நான் பார்த்துவிட்டேன். என் உடம்பிலிருந்து, அடுத்த முடி உதிர்ந்தவுடன். இப்போது உயிர்களைப் படைக்கும் இந்த பிரம்மதேவன் இறந்து விடுவார்.''

""உரோமரிஷியே, இவ்வளவு ஆயுளுடன், பூமியில் வாழும் விதிபெற்ற உங்களுக்கு வயது கூடக்கூட, தேகம் நலிவடைந்து, நரை, திரை, மூப்பு உண்டாகிவிடுமே? நீங்கள் தேகத்தை திடமாக எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்? முதுமையை எப்படி தடுத்துக்கொள்வீர்கள்?''

""அனந்தசயனா, ஆதிமூலமே, தேவலோகத்திலிருக்கும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தத் தைக் குடித்து, இளமையாகவும், இறப் பில்லாமலும்மரண

"குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்

குட்டினை நீக்கா குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருடாட்ட மாடிக்

குருடும் குருடும் குழிவிழு மாறே.'

-திருமூலர்

உரோமரிஷி தன் ஆயுள் கணக்கை மகாவிஷ்ணு விடமும் பிரம்மாவிடம் கூறத்தொடங்கினார்.

""லட்சுமி மணிமார்பனே, என் ஆயுள் காலத்தையும், பிரம்மனின் ஜீவித காலத்தையும் கூறுகிறேன், கேளுங்கள்.

தேவரீர், என் உடம்பில் மூன்று கோடியே ஐம்பது லட்சம் உரோமங்கள் உள்ளன. நான் மனிதர்களுக்கு முடிதிருத்தி, இன்னும் நானாவித தொழில்களைச் செய்யும் "நாவிதர்' இனத்தில் பிறந்திருந்தபோதும், என் உடம்பிலுள்ள ரோமத்தை மழித்துக் கொள்ளக்கூடாது. ஏனென்றால், என் உடம்பிலுள்ள ஒவ்வொரு ரோமமும் ஒரு காரணத்திற்காக வளர்ந்துள்ளது. என் உடம்பில் இவ்வளவு ரோமங்கள் இருப்பதால்தான் என்னை மற்றவர்கள் "உரோமரிஷி' என்று அழைக்கிறார்கள். உரோமரிஷி என்பது என் காரணப்பெயர்.

siddhar

என் உடம்பிலிருந்து ஒரு முடி உதிர்ந்து விழுந்தால், அப்போது உயிரினங்களைப் படைக்கும் தொழிலைச் செய்துகொண்டிருக்கும் பிரம்மதேவர் இறந்துவிடுவார்.

இதுபோன்று மூன்று கோடியே ஐம்பது லட்சம் பிரம்மதேவர்கள் மரணமடைந்தால், என் உடம்பிலுள்ள அனைத்து ரோமங்களும் உதிர்ந்துவிடும். என் ஆயுள் முடிந்து என் உயிர் பிரித்துவிடும். இவரைப்போன்று பல பிரம்மாக்களின் மரணத்தை நான் பார்த்துவிட்டேன். என் உடம்பிலிருந்து, அடுத்த முடி உதிர்ந்தவுடன். இப்போது உயிர்களைப் படைக்கும் இந்த பிரம்மதேவன் இறந்து விடுவார்.''

""உரோமரிஷியே, இவ்வளவு ஆயுளுடன், பூமியில் வாழும் விதிபெற்ற உங்களுக்கு வயது கூடக்கூட, தேகம் நலிவடைந்து, நரை, திரை, மூப்பு உண்டாகிவிடுமே? நீங்கள் தேகத்தை திடமாக எப்படி வைத்துக்கொள்கிறீர்கள்? முதுமையை எப்படி தடுத்துக்கொள்வீர்கள்?''

""அனந்தசயனா, ஆதிமூலமே, தேவலோகத்திலிருக்கும் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தெடுத்த அமிர்தத் தைக் குடித்து, இளமையாகவும், இறப் பில்லாமலும்மரணத்தைவென்று வாழ்ந்துகொண்டு இருக்கின்றார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த தென்புலமான தமிழ்நாட்டிலுள்ள இந்த சதுரகிரிமலைத் தொடரில், பாற்கடல் அமிர்தத்தைவிட, நரை, திரை, மூப்பு, பிணி இவற்றைத் தடுத்து, சரீரத்தை என்றும் இளமையுடன் வைத்துக்கொள்ளும் அபூர்வ "காயகல்ப மூலிகைகள்' ஏராளமாக இருக்கின்றன. அந்த மூலிகைகளை சாப்பிட்டுதான் தமிழ்ச் சித்தர்களும், ரிஷிகளும் எங்கள் சரீரத்தை வலிமையாகவும் இளமையாகவும் வைத்துக்கொள்கிறோம்.''

""முனிவரே, தேவர்கள் உண்ட அமிர்தத்தை விட, பூமியில் விளையும் மூலிகைகள் அவ்வளவு சக்தியுடையவையா?''

""மதுசூதனா, இந்த மண்ணில் விளையும் மூலிகைகள் உயிருள்ளவை. ஒரு உயிரால்தான் மற்றொரு உயிரை உருவாக்கமுடியும்; காப்பாற்றமுடியும். சில குறிப்பிட்ட மூலிகைகளின் "ரசசத்து' மனிதனின் சரீரத்தை வளர்த்து, வயது ஆக, ஆக தேய்ந்துபோகும் உடல் பாகங்களையும், அதிலுள்ள திசுக்களையும் மறுபடியும் புதுப்பித்து, இளமையாக இருக்கச் செய்யும் சக்தியுடையவை. அதனால்தான் சித்தர்களும், ரிஷிகளும் இந்த மலைத்தொடரைத் தங்கள் வாசஸ்தலமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

பரந்தாமா, என் விதிப்படி உடம்பிலிருக்கும் மூன்று கோடி ஐம்பது லட்சம் உரோமங்கள் உதிர்ந்தாலும், எனக்கு மரணம் உண்டாகாது. நான் வாசியோக மந்திரம் கூறி, வாசியோகம் செய்து, என் மூச்சுக்காற்றை என் உடம்பில் கட்டி சேமித்து, ஆயுளை நீட்டித்துக்கொண்டு வாழ்வேன். மரண விதியைத் தடுத்துக்கொள்வேன்.

குண்டலிணி யோகம் செய்து, பத்துவிதமான சக்தி (தீட்சை)களைப் பெற்று, "சாகாக் கால்', "வேகாத் தலை', "போகப் புனல்' என்ற நிலையில் வாழ்பவன் நான்.

சாகாக் கால் (காற்று)

"கால்' என்ற உயிர்க்காற்று என் உடலை விட்டு வெளியேறாமல் கட்டி, என் சுவாசம் சாகாமல் தொடர்ந்து உயிருடன் வைத்து கொள்வேன்.

siddhar

வேகாத் தலை (அக்னி)

என் சரீரத்திலுள்ள அக்னி சக்தி குறையாமல், "வேகாத் தலை' என்ற நிலையில் வைத்துக்கொள்வேன்.

போகாப் புனல் (நீர்)

"புனல்' என்ற நீர்சக்தி உடம்பினைவிட்டு விலகாமல் இருக்கச்செய்யும் சக்தி பெற்றவன் நான். இதனால் எனக்கு உயிர் போகாது; உடல் அழியாது; மரணம் நெருங்காது.

இந்த பூமியில் உயிரினங்களைப் படைக்கும் பிரம்மனுக்கு மரணம் உண்டு. ஆனால் பிரம்மனால் படைக்கப் படுபவர்கள் எனக் கூறப்படும் மனிதர் களாகிய எங்களிடமுள்ள சக்தியால், மரணத்தைவென்று வாழ்ந்துவருகிறோம்.

இதற்கு இந்த தமிழ்மண்ணில் பிறந்து மரணத்தை வென்று வாழும் சித்தர்களும், ரிஷிகளுமே சாட்சி.''

""உரோமரிஷியே, இந்த வாசி யோகம், குண்டலிணி யோகம், மரணத்தை வெல்லும் சக்தி, அஷ்டமா சக்திகளை அடையும் வழிமுறைகளை எவ்வாறு அறிந்தீர்கள்?''

""ஜனார்த்தனா, இந்த தென்தமிழ் மண் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்களின் ஆசான் அகத்தியர், தன்னறிவு சக்தியால், அனுபவத்தால் அறிந்து அவரால் எங்களுக்கு போதிக்கப்பட்டு, அவர் கூறியபடி நாங்கள் வாசி யோகம், குண்டலினி யோகப் பயிற்சிகளை முறையாகச்செய்து, எங்களுள் மறைந்திருந்த இந்த சக்திகளைப் பெற்றோம்.

மனிதனுக்குள்ள அளப்பரிய இன்னும் பல சக்திகளைக் கண்டறிந்து, எங்களுக்கு போதித்தவர் ஆசான் அகத்தியர். அவரே எங்கள் தமிழ்மக்களுக்கு ஆசானாக, ஆண்டவராக, அனைத்துமாக உள்ளார்.''

""உரோமரிஷியே, நீங்கள் கூறியது உண்மையென்று ஒப்புக்கொண்டோம். உங்களை சந்தித்ததில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. நான் உங்களுக்கு ஏதாவது வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேளுங்கள்.''

""வைகுந்தவாசா, சித்தர்கள், ரிஷிகளாகிய எங்களிடம், ஆக்கல், காத்தல், அழித்தல், தோன்றுதல், மறைத்தல், அட்டமகாசக்திகள், மரணத்தைவென்று வாழும் சக்தி என அனைத்து சக்திகளும் பூரணமாக உள்ளன. இனி புதிதாக அடையவேண்டிய சக்திகள் ஏதுமில்லை.

தாங்கள் எனக்கு வரம் தருகிறேன் என்று கூறியதும், பிரம்மனும் நீங்களும் என்னைத்தேடி வந்ததும், உங்கள் தரிசனம் கிடைத்ததும் எனக்குப் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் எங்கள் சுய அறிவாலும், எங்கள் உழைப்பு, சக்தியாற்றலாலும் வாழ்கின்றவர்கள். வரமேதும் வேண்டாம்.

பாற்கடலில் பள்ளிகொண்ட பெருமானே, என்னைவிட இந்த பூமியில் அதிக காலம் வாழும் ஆயுள் உள்ளவர் எண்கோண முனிவர். (அஷ்ட வக்ர ரிஷி). அவரையும் கண்டுசெல்லுங்கள்.''

உரோமரிஷியிடம் விடைபெற்றுக் கொண்டு, எண்கோண முனிவர் வசிக்கும் வனத்திற்கு பிரம்மனும், மகாவிஷ்ணுவும் வந்தனர்.

இருவரையும் கண்ட எண்கோண முனிவர் அவர்களைப் பலவித நாமங்களால் துதி செய்து வணங்கினார்.

""தேவகி நந்தனா, தேவரீர் இவ்வளவு தூரம் என்னைத்தேடி வந்து, அடியேனுக்கு தரிசனம் தந்ததில் பெருமகிழ்ச்சி. அடியவனால் உங்களுக்கு ஆகவேண்டிய காரியம் ஏதாகில் இருந்தால், ஒரு வார்த்தை சொல்லியனுப்பி இருந்தால், நான் உங்கள் இருப்பிடம் வந்து நிறைவேற்றி வைத்திருப்பேனே? தேவரீர் என்னைத் தேடிவந்த காரியம் என்னவோ?''

""ரிஷிகுலத் திலகமே, எங்களைவிட அதிக சக்திபெற்ற, உங்களைப்போன்ற பெரியார்களை நாங்கள்தான் வந்து காணவேண்டும்.

இந்த பூமியில் உங்கள் ஆயுள்காலம் எவ்வளவென்று அறிந்துகொள்ளவே இங்கு வந்தோம். அந்த விவரத்தை எங்களுக்குத் தெரியச் செய்யவேண்டும்.''

""தேவ தேவோத்தமா, சகல லோகத்தையும் காக்கும் சக்தியாக உள்ள உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. ஆயினும் நீங்கள் கேட்பதைக் கூறுவது என் கடமை.

என் தேகத்தில் எட்டு வளைவுகள் உள்ளன. மூன்று கோடியே ஐம்பது லட்சம் பிரம்மதேவர்கள் மரணமடைந்தால், உரோமரிஷியின் ஆயுள் முடியும். உரோமரிஷி ஒருமுறை மரணமடைந்தால், என் உடம்பிலுள்ள ஒரு வளைவு நிமிரும். இதுபோல் உரோமரிஷி எட்டுமுறை பிறந்து மரணமடைந்தால், என் உடம்பிலுள்ள எட்டு வளைவுகளும் நிமிர்ந்துவிடும்.

அவ்வாறு நேராகிவிட்டால் என்விதிப்படி எனக்கு ஆயுள்முடியும்.

மாயவரே, விதிப்படி என் ஆயுள் நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், என் ஆசான் அகத்தியரின் வழிகாட்டுதலால். வாசி யோகம், குண்டலிணி யோகம் செய்து, என் உயிர்க்காற்றைக்கட்டி வாழ்வதால், நான் விரும்பினால்தான் மரணமடைவேன். என் மரணத்தை நான்தான் தீர்மானிக்கவேண்டும்.''

""எண்கோண முனிவரே, தமிழ் மக்களின் ஆசான் அகத்தியரின் ஆயுள் எவ்வளவென்று அறிய அவரை நாங்கள் சந்திக்கவேண்டுமே... அவரை எங்கு காணலாம்?''

""அரவிந்த நயனா, எங்கள் ஆசான் அகத்தியர் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என இதுபோன்று நான்கு யுகங்கள் பலவற்றைக் கடந்து வாழ்ந்துகொண்டிருக்கிறார். அகத்தியர் இதுவரை வாழ்ந்த காலத்தையும், இனி வாழப்போகும் காலத்தையும் கணித்துக்கூற யாராலும் முடியாது.

இந்த பூமியில் உயிரினம் தோன்றிய காலத்தை அறிந்தால், தமிழ் மக்களும், அவர்களின் ஆசானுமான அகத்தியர் தோன்றிய காலத்தை அறியமுடியும். இந்த சதுரகிரிமலைத் தொடரில் வாழும் சைவத்தமிழ்ச் சித்தர்கள், ரிஷிகளுக்கு வாசி யோக, குண்டலிணி யோகப் பயிற்சி முறைகளைக் கற்பித்து, மரணத்தைவென்று வாழும் சக்தியை அளித்தவர் ஆசான் அகத்தியர்.

நாரயணா, அகத்தியரை யாரும் காண முடியாது. மூவருக்கும், தேவருக்கும் அவர் தரிசனம் கிடைக்காது. ஏன்? சித்தர்கள், ரிஷிகளாகிய- அவரின் மாணாக்கர்களாகிய நாங்கள்கூட "சைவத் தமிழ் பகுத்தறிவு சங்கம்' கூடும்போது தான் அவரை தரிசிக்கமுடியும். நீங்கள் அகத்தியரை தரிசனம் செய்ய விரும்பினால் அவர் அனுமதிபெற்று, சித்தர் பெருமக்கள் சங்கமிக்கும் தமிழ்ச் சபையில் வந்து சந்தியுங்கள்.

ஜகன்நாதா, உங்களுக்காகதான் நானே வெளிப்பட்டேன். இந்த மலைத்தொடரில் வாழும் சித்தர்களும், ரிஷிகளும் யார் கண்களுக்கும் தெரிய மாட்டோம்;

மறைந்தே இருப்போம்.''

எண்கோண முனிவரிடம் விடை பெற்றுக்கொண்டு பிரம்மனும் விஷ்ணுவும் புறப்பட்டனர்.

""பிரம்மதேவரே, இப்போது உங்கள் ஆயுள் பற்றிய கர்வம் நீங்கியதா? மும்மூர்த்திகளாகிய நம்மைவிட சக்திபெற்ற அறிவுப் பெரியார்கள், இந்த தமிழ் மண்ணில் வாழ்கின்றார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.''

சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!

(மேலும் சித்தம் தெளிவோம்)

om011220
இதையும் படியுங்கள்
Subscribe