"கும்பிடும்தெய்வ மெல்லாம்குல தெய்வமாய் சோடித்தே
நம்பிநாளும் பூஜைபொங்கல் நற்படிகள் தந்திட
அத்தெய்வம் நீங்கள்வெம்பிட இடியதனில் இடிபட
தம்பிட குடிகெடுக்கும் செத்த தெய்வம் ஆகுமே.'
(சிவவாக்கியர்)
அகத்தியர்: சைவத்தமிழ்ச் சித்தர் பெருமக்களே, இந்த பூமியில் பிறந்துள்ள அனைத்து உயிரினங்களும் தங்கள் உடலிலுள்ள உறுப்புகள்மூலம் இயங்கி, தங்கள் ஆன்மாவை இயங்கச் செய்துகொள்கின்றன. வேறு எந்தவொரு சக்தியாலும் ஒரு ஆன்மாவை இயக்கவும், இயங்கச் செய்யவும் முடியாது என்னும் மிகப்பெரிய உண்மையை தேரையர் சித்தர் இந்த பகுத்தறிவுச் சபையில் தெளிவாகக் கூறிவருகிறார்.
இன்று, மனித உடலிலுள்ள உறுப்பு களில் எந்த உறுப்பு என்னவித மாக செயல்பட்டு, தன் செயல்கள்மூலம் அவன் வாழ்வில் நன்மைலி தீமை, பாவலி புண்ணியப் பதிவுகளை உருவாக்கி அனுபவிக்கச்செய்கிறது என்று அவர் கூறுவதைக் கேட்போம்.
தேரையர் சித்தரே, இன்று எந்த உறுப்பைப் பற்றிக் கூறப்போகிறீர்கள்?
தேரையர்: தமிழ் மொழியைத் தந்தவரே, தமிழின உணர்வைத் தந்த தலைவரே, இந்த பூமியில் தானும் தன் இனத்தவர் மட்டுமே வாழவேண்டுமென்னும் சுயநல கொள்கைகொண்ட யாரோ ஒருவர் கூறிய கதைகளைக் கேட்டு, அதனை உண்மையென நம்பிக்கொண்டு, கனவுகளிலும் கற்பனைகளிலும் மாயை, மடமை, அறியாமை குணங்களால் நடைமுறை வாழ்வில் செயல்பட்டு, அடிமைபோல் உலகில் வாழும் மனிதர்களுக்கு சைவத்தமிழ் சித்தாந்தக் கருத்துகளை ஓங்கி உரைத்த பகுத்தறிவுப் பகலவனே, அகத்தியப் பெருமானே, தங்கள் பாதம் பணிகிறேன்.
இன்று உடலுறுப்புகளில் நாக்கைப் பற்றியும், அதன் செயல்பாட்டின்மூலம் ஒரு மனிதன் தன் வாழ்வில் அடையும் நன்மைலி தீமைகளையும், தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் பாவலி சாபலி புண்ணியப் பதிவுகளைப் பற்றியும் கூறப் போகிறேன்.
உடலிலுள்ள உறுப்புகளில் கண், காது, மூக்கு போன்றவை, இயற்கையில் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டபடி மட்டுமே செயல்படும். கண்கள் காட்சிகளைலி பொருட்களைப் பார்க்கும். காதுகள் ஓசையைலி ஒலியைக் கேட்கும். மூக்கு வெளிப்புறத்திலுள்ள உயிர்க்காற்றை உடலினுள் இழுத்தும், உடலினுள் இருக்கும் காற்றை வெளியேற்றியும் செயல்படும். இவை ஒரு செயலைத்தான் செய்யும். ஆனால் நாக்கு மட்டும் பலவித செயல்களைச் செய்யும்.
உடல் வலிமையுடன் இருக்க, உண்ணும் உணவை உமிழ்நீருடன் கலந்து உடலினுள் அனுப்புவதும், உணவிலுள்ள சுவையை அறியச் செய்வதும், தனக்கு ருசிக்காத உணவை வாயிலிருந்து வெளியே உமிழச் செய்வதும் இந்த நாக்குதான். நாக்கில் அனுமதியின்றி உணவு, நீர், மருந்து என எதுவும் உடலினுள் செல்ல இயலாது. நாக்கிலுள்ள பஞ்சுபோன்ற தன்மையுடையலி மென்மையான சுவை நரம்புகள், உண்ணும் உணவிலுள்ள அனைத்து சுவைகளையும் மூளைக்குத் தெரியச் செய்து உணரவைத்துவிடும். வாயினால் உண்ணும் அனைத்தையும் உடலினுள் செல்ல அனுமதிப்பது, வெளியே உமிழச் செய்வது என எல்லா செயல்களையும் மூளையின் கட்டளைப்படியே நாக்கு செய்யும்.
நாக்கின் அடுத்த ஒரு செயலையும் அறிவோம். ஒரு மனிதன் தன் கண்களால் பார்த்தது, காதுகளால் கேட்டது, தொடுவதால் உண்டாகும் உணர்வுகள், நோயின் தாக்கம், வலி, இன்பம் அனுபவிப்பதால் உண்டாகும் சுகம், மகிழ்ச்சி, தனக்கு உண்டாகும் ஆசை, பாசம், அன்பு, கோபம், ஆவேசம், துக்கம், பயம், தான் செய்ய நினைப் பது, செய்யாமல்போனது, செய்து கொண்டிருப்பது, இவ்வுலகில் உண்மையில் இருப்பதை இல்லையென்று கூறுவது, இல்லாததை இருப்பதாகக் கூறி ஏமாற்றுவது, தான் அறிந்ததைக் கூறுவது, தனது கேள்விகளால் உண்மைகளை அறிந்து பகுத்தறிவு ஞானத்தை வளர்த்துக் கொள்வது, மனதில் தோன்றுவதைலி உணர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது என அனைத்தையும் மனிதன் செய்வது இந்த நாக்கின் செயல்மூலம்தான்.
ஒருவனது எண்ணம், உணர்வுகள் என அனைத்தையும் அவனது பேச்சாலும் சொல்லாலும் மட்டுமே மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடியும். அவன் பேச்சுக்குலி அதனால் உண்டாகும் ஓசைக்கு ஆதாரமாக உள்ளது நாக்குதான். இந்த பிரபஞ்சம் வெளிப்புறத்தில் எப்படி காற்றினால் ஒலியை உண்டாக்கி வெளிப்படுத்துகிறதோ, அதேபோன்று மனிதனுள்ளே உருவாகும் எண்ண அலைகள், உடலினுள் இருக்கும் காற்றினால், நாக்கின் சுழற்சியால் பேச்சாகலி பாடலாக அந்தந்த உணர்வுகளுக்கு ஏற்றாற்போல வெளிப்படுத்தப்படுகிறது.
உடலின் புற உறுப்புகளென்று கூறப்படும் கண், காது, மூக்கு, கைகள், கால்கள், விரல்கள் என அனைத்து உறுப்புகளும் கண்களால் காணும் வண்ணம் வெளிப்படையாக உள்ளன. உடலினுள் இருக்கும் அக உறுப்பு கள் எனக் கூறப்படும் மூளை, உணவுக்குழாய், இதயம், ரத்தக் குழாய்கள், குடல், சிறுநீரகம், எலும்புகள், நரம்புகள் என இன்னும் அனைத்து உறுப்புகளும் கண்களால் காணமுடியாத வண்ணம் தசை, தோல் ஆகிய வற்றால் கவசம்போல் மூடப்பட்டுள்ளன.
நாக்கு மட்டும், ஒரு கத்தி உறையில் பாதுகாப்பாக இருப்பதுபோல உதடுகள், பற்களின் பாதுகாப்பில், குகைபோன்ற வாயினுள்ளே பாதுகாப்பாக மறைந்தே இருக்கும். கொடிய விஷமுள்ள பாம்பு புற்றில் பதுங்கி இருப்பதுபோல மறைக் கப்பட்டே இருக்கும். ஒரு பாம்பானது எப்படி வேண்டுமானாலும் வளைந்து, நெளிந்து செயல்படும். அதுபோல நாக்கும் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல வளைந்து, நெளிந்து, சுருண்டு செயல்படும்.
ஒரு கத்தியால் உண்ணுவதற்குப் பழத்தை யும் வெட்டலாம். உணர்வுகளின் உந்துதலால் கழுத்தையும் வெட்டலாம். தன்னைத் தாக்க வரும் எதிரியை அழிக்கலாம். எதிரிகளிட மிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ளலாம். ஒரு மனிதனை சிக்கல்களில்லி சிரமங்களில் அகப்பட்டுக்கொள்ளச் செய்வதும், அவற்றி லிருந்து தப்பித்துக்கொள்ளச் செய்வதும் இந்த நாக்குதான்.
இந்த உலகத்தில் மனிதர்கள் பயன்படுத் தும் ஆயுதங்கள்லி கல், மரம், உலோகங்களால் செய்யப்பட்ட பலவிதமான ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால் இவை அனைத்தையும் விட பயங்கரமான ஆயுதம் மனிதனின் நாக்குதான். தீயினால் சுட்ட புண் ஆறிவிடும். மனம் வருந்தும்படியாக வாயினால் சொன்ன சொற்களால் மனதில் உண்டான புண் ஆறாது; மறையாது.
உடலுறுப்புகளில் நாக்கு செயல்பட வில்லை என்றால், உடல் சக்திபெற உணவு, நீர் போன்றவை உடலினுள் செல்லமுடியாது. ஒரு ஆன்மாவின் உணர்வு களை வெளிப் படுத்தவும் முடியாது. உடலுறுப்புகளில் நாக்கு மட்டுமே உள்ளும் புறமுமுள்ள உறுப்பாகும்.
ஒரு மனிதன் தன் எண்ணங்களாலும், பேசும் பேச்சாலும், உடலால் செய்யும் செயல் களாலும் என தன் மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினாலும் பிறருக்குச் செய்யும் செயல்கள்மூலம் தனக்குத்தானே நன்மைலி தீமைகளையும், பாவலி புண்ணியப் பதிவுகளை யும், இந்த பூமியில் பிறவித் தொடர்ச்சியையும் உருவாக்கிக்கொள்கிறான்.
இந்த உலகத்தில் முனிவர்கள், ரிஷிகள் மற்றும் மனிதர்கள் என அனைவரும் தியானம், தவமென்று கூறி கால்களை மடக்கி, கை விரல்களைப் பிடித்துக் கொண்டு, கண்மூடி அமர்ந்து தங்கள் மனதை அடக்க முயற்சி செய்கின்றனர். ஆனால் இது போன்ற செயல்களால் மனம் அடங்கியதாலி அடக்கமுடிந்ததா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. மனதை அடங்க விடாமல் செய்வதும் அலைபாய வைப்பதும் நாக்குதான். தவம், தியானம் செய்யும்போது மனதை அடக்கும் வழியைக் கூறுகிறேன்.
அகத்தியர்: தேரையர் சித்தரே, இன்று சித்தர்கள் யோகப் பயிற்சிசெய்யும் நேரம் நெருங்கிவிட்டது. எனவே தாங்கள் கூறும் கருத்துகளை நாளைய தமிழ்ச் சங்கத்தில் கூறுங்கள். இன்று சபையின் செயல்பாட்டை முடித்துக் கொள்வோம்.
"வேதமென்ற ஆகமங்க ளாறு சாத்திரம்
வெவ்வேறு மதபேதம் சாதிசமய பேதம்
காதமென்ற சாதியும் நூல் பதினெட்டாகக்
கவுத்துவமா யுலகோரை மயக்கங் காட்டி
கீதமென்றா லரிகீதம் சிவகீத மென்றும்
இருமையுடன் வெவ்வேறாய்ப் பிரித்துக் காட்டி
பாதமென்று சாவதுவே நிசந்தான் என்று
பாடினார் சாத்திரத்தைப் பாடினாரே.'
(பாதம்லி கடைசியில்).
(அகத்தியர்)
சித்தர்களைப் பற்றி வாழுங்கள்; வாழ்வில் வெற்றி நிச்சயம்!
(மேலும் சித்தம் தெளிவோம்)